Saturday, March 14, 2026
Sponsored advertisementspot_img
Home Blog Page 207

சிறிய,நடுத்தர ஏற்றுமதியாளர்களுக்கு விழிப்புணர்வு!

0

தெற்காசிய சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை (SAFTA) பயன்படுத்தி சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகர்களின் தயாரிப்புகளை அதிகமாக ஏற்றுமதி செய்வது தொடர்பில் வழிவகைகள் பற்றிய குழுவின் கவனத்திற்கு.

வர்த்தகர்களை பதிவு செய்யும் போது வெளிநாட்டுச் சந்தை தொடர்பில் அறிவுறுத்துவதன் அவசியத்தை குழு வலியுறுத்தியது

ஏற்றுமதி தொடர்பாக சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகர்களுக்கு அறிவூட்ட டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் அவசியத்தை குழு சுட்டிக்காட்டியது

தெற்காசிய சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை (SAFTA) பயன்படுத்தி சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகர்களின் தயாரிப்புகளை அதிகமாக ஏற்றுமதி செய்வது தொடர்பில் பாராளுமன்ற வழிவகைகள் பற்றிய குழுவில் கவனம் செலுத்தப்பட்டது.

பாராளுமன்ற வழிவகைகள் பற்றிய குழு கௌரவ பிரதி அமைச்சர் (கலாநிதி) ஹர்ஷண சூரியப்பெரும தலைமையில் அண்மையில் (07) பாராளுமன்றத்தில் கூடிய போதே இந்த விடயம் கலந்துரையாடப்பட்டது.

இங்கு தெற்காசிய சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் போன்ற ஒப்பந்தங்கள் மூலம் நாட்டில் உள்ள சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகங்களால் பொருட்களை ஏற்றுமதி செய்வதை ஊக்குவிப்பது குறித்து பிரதானமாகக் கலந்துரையாடப்பட்டது. ஏற்றுமதியில் ஈடுபட்டுள்ள அனைத்து வர்த்தகர்களும் ஏற்றுமதி அபிவிருத்தி சபைக்கு வருவதால், தேவையான விழிப்புணர்வு ஏற்கனவே அங்கு வழங்கப்பட்டு வருவதாக கூட்டத்தில் கலந்துகொண்ட அதிகாரிகள் தெரிவித்தனர். எனினும், அதற்கு அப்பாலும் விழிப்புணர்வை அதிகரிக்க வேண்டுமானால், அதற்கான நடவடிக்கைகளை எடுக்க முடியம் என்றும் அவர்கள் மேலும் சுட்டிக்காட்டினர்.

வர்த்தகங்களைப் பதிவு செய்யும் போதே இது தொடர்பான விழிப்புணர்வை வழங்க வேண்டும் என்று குழுவின் தலைவர் இதன்போது தெரிவித்தார். அதற்கு அரச அதிகாரிகள் பாரம்பரிய முறைகளுக்கு அப்பால் பணியாற்ற வேண்டும் எனச் சுட்டிக்காட்டிய குழுவின் தலைவர், இதற்காக டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

ஏற்றுமதியை ஊக்குவிப்பது தொடர்பில் ஒரு திட்டத்தை வகுக்க வேண்டியதன் அவசியத்தை குழுவில் கலந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர். விசேடமாக தேவையான அளவு அந்நியச் செலாவணியை அடைவதற்கு இந்த விழிப்புணர்வு மிகவும் முக்கியமானது என்றும் அதிகாரிகளுக்குக் குழு தெரிவித்தது. அத்துடன், கிராமப்புற மட்டத்தில் இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த பாராளுமன்ற உறுப்பினர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குழுவின் தலைவர் கேட்டுக் கொண்டார்.

இந்தக் கூட்டத்தில் கௌரவ பிரதி அமைச்சர்களான எரங்க வீரரத்ன மற்றும் (பேராசிரியர்) ருவன் ரணசிங்க, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான அர்கம் இல்யாஸ், சட்டத்தரணி நிலந்தி கொட்டஹச்சி, விஜேசிரி பஸ்நாயக்க, சுனில் பியன்வில, ருவன் மாபலகம, திலிண சமரகோன் மற்றும் சம்பிக ஹெட்டிஆரச்சி ஆகியோர் கலந்துகொண்டனர்.

அத்துடன், நிதி, திட்டமிடல், மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு மற்றும் வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு என்பவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தி அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

திரிபோலி ஆயுதப் படை செய்த கொலைகள்!

0

பாராளுமன்றத்தின் பாதுகாப்பு அமைச்சு சார் முதலாவது ஆலோசனைக் கூட்டமானது பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் கடந்த 20 ஆம் திகதி ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றது.

பாதுகாப்பு அமைச்சின் ஆலோசனைக் குழுவின் குழு உறுப்பினர் என்ற வகையில் கலந்து கொண்ட சாணக்கியன் மட்டக்களப்பில் உள்ள பல பிரச்சனைகள் தொடர்பாக முன்வைத்த கோரிக்கைகளை அன்றைய தினமும் புதிய அரசிடம் எடுத்துரைத்திருந்தார்.

அதன் அடிப்படையில்,

மட்டக்களப்பில் உள்ள கையகப்படுத்தப்பட்ட இராணுவ முகாங்களான முறக்கொட்டான் சேனை, பாலையடி வட்டை, குருக்கள் மடம், காயங்கேணி, மற்றும் விமானப்படையினரால் கையகப்படுத்தப்பட்ட புதூர் மக்களுக்கு சொந்தமான நிலம், தாண்டியடி துயிலும் இல்லம், அதனுடன் களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையம், மக்களுக்கு வழங்கப்படவேண்டிய மற்றும் மக்களுக்கு சொந்தமான வாகரை பிரதேச அரச காணிகளில் அநேகமானவை இரானுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டு காணப்படுகின்றது.

இவை உட்பட்ட பல பொது மக்களுக்கு சொந்தமான நிலங்கள் விடுவிக்கப்பட வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டதுடன் அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளவும் ஜனாதிபதியிடம் வலியுறுத்தப்பட்டது.

அதற்கு பதிலளித்த ஜனாதிபதி அதற்கான குழு ஒன்றினை நியமிப்பது தொடர்பில் ஆராய்வதாக உறுதி அளித்தார்.

அதனுடன் கடந்தகாலத்தில் திரிபோலி ஆயுத படைப்பிரிவினால் Tripoli Platoon இனால் மேற்கொள்ளப்பட்ட கொலைகள் தொடர்பான சாட்சிகளை விசாரிக்க புதிய குழு அமைக்க வேண்டுமென கோரிக்கை முன்வைத்திருந்தேன் அதனையும் உடனடியாக விசாரிக்க நடவடிக்கை எடுப்பதாக கூறியிருந்தார்.

இக் கூட்டத்தில் அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள், படைத்தளபதிகள் என்று பலரும் கலந்து கொண்டனர்.

மீண்டும் கப்பல் சேவை ஆரம்பம்!

0

காங்கேசன்துறை – நாகப்பட்டினம் துறைமுகங்கள் இடையிலான இந்திய, இலங்கை பயணிகள் போக்குவரத்து கப்பல் சேவையானது இன்று மீண்டும் ஆரம்பமானது. 

இதன்படி இன்று (22) காலை நாகப்பட்டினத்தில் இருந்து பயணத்தை ஆரம்பித்த கப்பலானது மதியம் காங்கேசன்துறையை வந்தடைந்தது. 

83 பயணிகள் குறித்த கப்பலில் இந்தியாவிலிருந்து நாட்டுக்கு வருகை தந்ததுள்ளதுடன், 83 பேர் இலங்கையிலிருந்து அங்கு செல்லவுள்ளனர். 

பிற்பகல் 1.30 அளவில் காங்கேசன்துறையில் இருந்து பயணத்தை ஆரம்பிக்கும் பயணிகள் போக்குவரத்து கப்பல் நாகபட்டினத்தை சென்றடையவுள்ளது. 

இந்த பயணிகள் போக்குவரத்து கப்பல் சேவையானது செவ்வாய்க் கிழமை தவிர்ந்து வாரத்தின் 6 நாட்களும் இடம்பெறும் என சிவகங்கை கப்பல் சேவை நிறுவனத்தின் தலைவர் சுந்தரராஜ் பொன்னுசாமி தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு செயலாளர் வெளியிட்ட பகீர் தகவல்!

0

ஆயுதப் பயிற்சி பெற்ற பின்னர் சட்டவிரோதமாக இராணுவத்தை விட்டு வெளியேறும் பல நபர்கள் பாதாள உலக குழுக்களுடன் தொடர்பு கொள்ளும் போக்கு அதிகரித்து வருவதாக பாதுகாப்பு செயலாளர் ஏர் வைஸ் மார்ஷல் (ஓய்வு) சம்பத் துய்யகொந்தா தெரிவித்துள்ளார். 

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (22) காலை நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். 

அத்தகைய நபர்களைக் கைது செய்ய சிறிது காலத்திற்கு முன்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகவும் பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்தார். 

ஆயுதப் பயிற்சி பெற்று இராணுவத்திலிருந்து தப்பிச் சென்றவர்களை மிகக் குறுகிய காலத்தில் கைது செய்யும் திறன் இராணுவத்திற்கும் பொலிஸாருக்கும் இருப்பதாக அவர் மேலும் கூறினார். 

இதற்கிடையில், இந்த ஊடக சந்திப்பின் போது, ​​சேவையில் உள்ள இராணுவ வீரர்கள் குற்றவாளிகளுடன் தொடர்பில் இருக்கிறார்களா? என்று ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர். 

இதற்கு பதிலளித்த பாதுகாப்பு செயலாளர், பொருளாதார நெருக்கடி மற்றும் போதைப்பொருள் பழக்கம் காரணமாக இராணுவ வீரர்கள் குற்றவாளிகளுடன் தொடர்பில் இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளதாக கூறினார். 

அதன்படி, எதிர்காலத்தில் அவர்களை அடையாளம் கண்டு கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாதுகாப்பு செயலாளர் மேலும் தெரிவித்தார்.

கடற்படைக்கு 16 அதிகாரிகள் நியமனம்!

0
கடற்படைக்கு நேரடி ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட 16 அதிகாரிகளுக்கு நியமனக் கடிதம் வழங்குதல்

இலங்கை கடற்படைக்கு 2024/03 நேரடி ஆட்சேர்ப்பு அணுகலின் கீழ் நேரடி ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட பதினாறு (16) அதிகாரிகளுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு இன்று (2025 பெப்ரவரி 21) கடற்படைத் தலைமையகத்தில் கடற்படைத் தளபதி தலைமையில் இடம்பெற்றது.

அதன்படி, நிறைவேற்றுப் பிரிவுக்கு நான்கு (04) அதிகாரிகளும், வழங்கல் பிரிவுக்கு நான்கு (04) அதிகாரிகளும், மின்சாரம் மற்றும் மின்னணுப் பிரிவுக்கு ஒரு (01) அதிகாரியும், தகவல் தொழில்நுட்பப் பிரிவுக்கு ஒரு (01) அதிகாரியும், தன்னார்வ நிர்வாகப் பிரிவுக்கு ஆறு (06) அதிகாரிகள் உட்பட இரண்டு (02) பெண் அதிகாரிகளுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டது.

இங்கு உரையாற்றிய கடற்படைத் தளபதி நேரடி ஆட்சேர்ப்பில் இருந்து கடற்படையின் முதல் ஆட்களாக இணைந்து கொண்ட புதிய அதிகாரிகளுக்கு வாழ்த்து தெரிவித்தார். அங்கு, மேலும் கருத்து தெரிவித்த கடற்படை தளபதி, கடற்படையினரின் பெற்றோர்கள் மற்றும் அன்புக்குரியவர்களினால் கடற்படை அதிகாரிகள் மற்றும் பெண் அதிகாரிகள் இணைந்து நாட்டுக்கு சேவையாற்றியதாகவும் கடற்படையில் வெற்றிகரமான எதிர்கால வாழ்க்கையை வாழ அவர்களை ஊக்குவிப்பதாகவும் கூறினார்.

கடற்படை சேவை என்பது வெறும் வேலையல்ல, நாட்டிற்கான உன்னத சேவை, அதையும் தாண்டி, பலவிதமான அனுபவங்களையும், தொடர்ந்து மாறிவரும் அனுபவங்களையும் பெறக்கூடிய ஒரு தொழில்முறை துறையாகும், மேலும் புதிய அதிகாரிகளும், பெண் அதிகாரிகளும் அதிலிருந்து சிறந்த பெறுபேறுகளைப் பெற்று தங்கள் கடமையை நிறைவேற்ற உறுதியளிக்க வேண்டும். கடற்படை வாழ்வின் நான்கு முக்கிய தூண்களாக நேர்மை, விசுவாசம், அர்ப்பணிப்பு மற்றும் தைரியம் ஆகியவற்றைக் கருதுவதன் மூலம், புதிய அதிகாரிகளின் தொழில் வாழ்க்கை வெற்றியடைவது மட்டுமல்லாமல், பெருமை வாய்ந்த இலங்கை கடற்படையின் பெருமைமிக்க பாரம்பரியத்தையும் பாதுகாக்க முடியும் என்றும் கூறினார்.

மேலும், 2024/03 நேரடி ஆட்சேர்ப்பு அணுகலின் கீழ் புதிதாக நியமிக்கப்பட்ட அதிகாரிகளுக்கான நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வில் கடற்படைத் தளபதி மற்றும் கடற்படை நிர்வாகக் குழுவின் சிரேஷ்ட அதிகாரிகள், மேற்கு கடற்படை ‍கட்டளை தளபதி மற்றும் புதிதாக நியமிக்கப்பட்ட அதிகாரிகளின் பெற்றோர்கள் மற்றும் பல அன்புக்குரியவர்களும் கலந்துகொண்டனர்.

சாரணர் இயக்கத்தின் தந்தைக்கு மரியாதை!

0

பேடன் பவல் அவர்களின் 168 வது பிறந்த தினத்தை முன்னிட்டு இலங்கையில் கிளீன் ஸ்ரீலங்கா வேலைதிட்டம் நடைபெற்றது.

22.02.1857 ஆண்டு இங்கிலாந்தில் பிறந்த ராபர்ட் பேடன் பவல், பிரிடிஷ் நாட்டின் முன்னாள் இராணுவ வீரராக கடமையாற்றியதுடன், ஆண்கள் சாரணர் இயக்கத்தை உருவாக்கி தனது 83ஆவது வயதில் 1941ஆம் ஜனவரி மாதம் எட்டாம் திகதி இறந்தார்.

அவரின் 168 வது பிறந்த தினத்தை முன்னிட்டு கிளீன் ஸ்ரீலங்கா வேலைதிட்டமானது நாடளாவிய ரீதியில், புகையிரத நிலைய இலங்கை சாரணர் அணியினருடன் ஒன்றிணைந்து சிரமதான பணியினை மேற்கொண்டுள்ளனர்.

இன் நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் திட்டமிடல் பணிப்பாளர் மோகனபவன் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு கிளீன் ஸ்ரீலங்கா வேலை திட்டத்தை ஆரம்பித்து வைத்தார்.

கிளிநொச்சி நிருபர் ஆனந்தன்

எக்ரி டெக் 2025 விவசாய மாநாடு யாழில்!

0

யாழ்ப்பாண பல்கலைக்கழக விவசாய பீடத்தின் ஒரு முற்சியாக விவசாயிகளையும் பல்கலைக்கழக மாணவர்களையும் இணைத்து விவசாயிகளின் பிரச்சனைகளை கேட்டறிந்து அவற்றிற்கு தீர்வு காணும் விவசாய மாநாடு இன்று இடம்பெற்றது.

எக்ரி டெக் 2025 (Agri tech 2025) விவசாய மாநாடு எனும் தொனிப்பொருளில் குறித்த மாநாடு இன்று யாழ் பல்கலைக்கழக விவசாய பீட கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

விவசாய பீட பீடாதிபதி பேராசிரியர் கே.பகீரதன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், பல்கலைக்கழக விவசாயம் சார்ந்த பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், வடமாகாண விவசாயப்பணிப்பாளர் ,விவசாய துறை சார்ந்த உத்தியோகத்தர்கள், விவசாய துறைசார்ந்த நிறுவனங்களின் உத்தியோகத்தர்கள், விவசாயிகள், என பலரும் கலந்து கொண்டனர்.

குறித்த நிகழ்வில் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக கல்லூரி மாணவர்களின் புத்தாக்க கண்காட்சியும் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கிளிநொச்சி செய்தியாளர் ஆனந்தன்

இலங்கையும் ஒரு போட்டியாளராக மாறும்!

0

இலங்கையை உலகில் இணையான போட்டியாளராக மாற்றுவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும் – The Innovation Island Summit – 2025 மாநாட்டில் ஜனாதிபதி தெரிவிப்பு

புத்தாக்கத் துறையில் இணையான போட்டியாளராக இல்லாத இலங்கையை, ஏனைய நாடுகளுடன் இணையான போட்டியாளராக மாற்றுவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என்றும், இந்த இலக்கை அடைவதில் டிஜிட்டல் மயமாக்கல் முக்கிய பங்கு வகிக்கும் என்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

இதற்காக புத்தாக்கத் துறையில் ஒரு பெரிய மாற்றம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.கொழும்பில் உள்ள ITC ரத்னதீப ஹோட்டலில் நேற்று (20) நடைபெற்ற The Innovation Island Summit – 2025 மாநாட்டில் உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.

இலங்கையில் Innovation Island Summit – 2025 மாநாட்டை நடத்துவதால், இந்த நாட்டில் புதிய தொழில்முனைவோரின் புத்தாக்க ஆர்வத்தையும் எதிர்பார்ப்பையும் பிரதிபலிப்பதாகத் தெரிவித்த ஜனாதிபதி, மனித நாகரிகத்தின் பல்வேறு நிலைகளை நாம் அடையாளம் கண்டுள்ளோம் என்றும், அந்த மனித நாகரிகத்தின் ஒவ்வொரு புதிய அத்தியாயமும் புத்தாக்கத்தின் மூலம் எழுதப்படுகிறது என்றும் குறிப்பிட்டார்.

கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு விடுமுறை!

0

மஹா சிவராத்திரி தினத்தினை முன்னிட்டு, கிழக்கு மாகாணத்திலுள்ள அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் மஹா சிவராத்திரி தினத்திற்கு மறுநாள் வியாழக்கிழமை (27.02.2025) விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகர அறிவித்துள்ளதாக ஆளுநர் செயலகம் வெளியிட்டுள்ள ஊடக அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

அதற்கான பதில் பாடசாலையானது 01.03.2025 சனிக்கிழமை நடைபெறும் எனவும் அத்துடன் கிழக்கு மாகாணத்திலுள்ள சிங்கள மற்றும் முஸ்லிம் பாடசாலைகள் வழமை நடைபெறுமெனவும் தெரிவித்துள்ளதாக அவ்வறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

யாழுக்கு விரைந்த சுகாதார சேவைகள் பணிப்பாளர்!

0

யாழ்ப்பாண வைத்தியசாலைகளில் காணப்படும் குறைபாடுகள் தொடர்பாக உடனடித் தீர்வு

யாழ்ப்பாண மாவட்டத்தில் வாழும் மக்களுக்கு உயர் தரத்திலான, செயற்திறனாக நோய்களுக்கான சிகிச்சை சேவைகளை வழங்கும் நோக்கில் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள அரசாங்க வைத்தியசாலைகளில் காணப்படும் ஆளணி மற்றும் பௌதீக வளங்களை முன்னேற்றும் நோக்கில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன அண்மையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் அமைந்துள்ள வைத்தியசாலைகள் சிலவற்றிற்கு விசேட மேற்பார்வை விஜயத்தில் ஈடுபட்டார்.

இவ்விசேட மேற்பார்வையில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உட்பட்ட அதிகாரிகள் ஊர்காவற்துறை ஆதார பைத்தியசாலை, வேலனை பிரதேச வைத்தியசாலை, வேலனை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம், ஊர்காவற்துறை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை, சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை மற்றும் மாங்குளம் ஆதார வைத்தியசாலை, ஆகிய வைத்தியசாலைகளில் உள்ள ஆளணி மற்றும் பௌதீக வளங்களில் காணப்படும் குறைபாடுகளை கண்டறிந்து அப்பிரச்சனைகளுக்கு குறுகிய காலத்தில், நடுத்தர மற்றும் நீண்ட காலத் தீர்வுகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதன் போது யாழ்ப்பாண மாவட்டத்தில் மக்களைப் பாதிக்கும் தொற்று மற்றும் தொற்றா நோய்க் கட்டுப்பாடு, சிறுவர்கள் மற்றும் தாய்மார்களின் தற்போதைய போசனை மட்டம், எதிர்கால போஷாக்கு திட்டங்கள், திரிபோஷா கிடைத்தல், கள உத்தாயோகத்தர்களின் போக்குவரத்து சிக்கல் மற்றும் சகல ஊழியர்களும் தமது கடமைகளை நிறைவேற்றுவதில் பணியாளர் குழுவிற்கு ஏற்படும் நடைமுறை சிக்கல் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் நீண்ட கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்டதுடன் அங்கு ஏற்பட்ட சில பிரச்சனைகளுக்கு அதே சந்தர்ப்பத்தில் தீர்வு வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.