போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத பொருட்கள் நாட்டிற்குள் வருவதை தடுத்தல், விமான நிலையம், சுங்கத் திணைக்களத்திற்குள் நடக்கும் ஊழல்,மோசடிகளை மட்டுப்பத்தல்,சட்டவிரோதமான முறையில் நபர்கள் நாட்டிலிருந்து வௌியேறுவதை தடுப்பது குறித்து ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்பு
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் குடிவரவு குடியகல்வு திணைக்களம், இலங்கை சுங்கம் மற்றும் விமான நிலையம் மற்றும் விமான சேவை நிறுவனத்தின் பிரதானிகளுக்கு இடையிலான கலந்துரையாடல் இன்று (28) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.
போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத பொருட்கள் நாட்டிற்குள் வருவதை தடுத்தல், விமான நிலையம், சுங்கத் திணைக்களத்திற்குள் நடக்கும் ஊழல்,மோசடிகளை மட்டுப்பத்தல்,சட்டவிரோதமான முறையில் நபர்கள் நாட்டிலிருந்து வௌியேறுவதை தடுப்பது குறித்து இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டது.
அதற்காக, குடிவரவு குடியகல்வு திணைக்களம், இலங்கை சுங்கம் மற்றும் விமான நிலையம் மற்றும் விமான சேவை நிறுவனம் ஆகிய மூன்று நிறுவனங்களிலும் இணை கமரா கட்டமைப்பு மற்றும் கண்காணிப்பு நிலையத்தை ஸ்தாபிக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஆலோசனை வழங்கினார்.
அதேபோல், தற்போதுள்ள ஸ்கேன் இயந்திரங்களுக்குப் பதிலாக மேம்படுத்தப்பட்ட நவீன ஸ்கேன் இயந்திரங்களைப் பயன்படுத்தி இந்த நிறுவனங்கள் ஊடாக நடக்கும் கடத்தல்களை தடுப்பதற்கு நடைமுறை சாத்தியமான புதிய செயல்முறையை ஆரம்பிக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
மேலும், நாட்டு மக்கள் மத்தியில் சுஙகம் தொடர்பில் தற்போது காணப்படும் தவறான புரிதல்கள் களையப்பட வேண்டும் எனவும், அதற்காக கடுமையான ஒழுக்காற்று மற்றும் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பதையும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இதன்போது வலியுறுத்தினார்.
வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, சுங்கப் பணிப்பாளர் நாயகம் சரத் நோனிஸ், குடிவரவுக் கட்டுப்பாட்டாளர் நாயகம் (பதில்) பீ.எம்.டி. நிலுஷா பாலசூரிய, நிதி அமைச்சின் பணிப்பாளர் நாயகம் (தேசிய வரவு செலவு) ஜூட் நிலுக் ஷான், விமான நிலையம் மற்றும் விமான சேவை நிறுவனத்தின் தலைவர் எயார் சீப் மார்ஷல் ஹர்ஷ அபேவிக்ரம உள்ளிட்ட அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
கிழக்கு மாகாண திணைக்களத் தலைவர்கள் மற்றும் நிறுவனங்களின் புதிய தலைவர்களை கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜெயந்தலால் ரத்னசேகர நேற்று (27) நியமித்து அவர்களுக்கான கடிதத்தையும் வழங்கி வைத்தார்.
கிழக்கு மாகாண திணைக்களங்களில் தலைவர்களாக கடமையாற்றிய உத்தியோகத்தர்களுக்குளேயே இந்தப் பணியிடங்கள் மாற்றியமைத்து நியமிக்கப்பட்டுள்ளனர். அதற்கமைவாக, நிர்வாக பிரதிப்பிரதம செயலாளராக திரு விமலரத்னம் அவர்களை பதில் கடமைக்காக நியமித்துள்ளார்.
மேலும், முதலமைச்சின் சிரேஷ்ட உதவி செயலாளராக என். சிவலிங்கம்,
மாகாண உள்ளுராட்சி ஆணையாளராக ஏ.எல்.எம். அஸ்மி,
கிழக்கு மாகாண கிராமிய கைத்தொழில் திணைக்கள பணிப்பாளராக என்.மணிவண்ணன்,
கிழக்கு மாகாண காணி ஆணையாளராக வளர்மதி ரவீந்திரன்,
ஐ.எம். றிக்காஸ் அவர்கள் கிழக்கு மாகாண மேலதிக கல்வி பணிப்பாளராகவும்,
என்.எம். நௌபீஸ் அக்கரைப்பற்று மாநகர சபை ஆணையாளராகவும்,
என். தனஞ்சயன் மட்டக்களப்பு மாநகர சபை ஆணையாளராகவும்,
ஏ.ரீ.எம். ராபீ கல்முனை மாநகர சபை ஆணையாளராகவும்,
எம்.ஆர். பாத்திமா ரிப்கா ஆளணி மற்றும் பயிற்சி பிரிவு பணிப்பாளராகவும்,
எஸ்.. பிரகாஷ் மாகாண விளையாட்டு திணைக்கள பணிப்பாளராகவும்,யூ. சிவராஜா மாகாண சமூக சேவைகள் திணைக்கள பணிப்பாளராகவும்,
எஸ். வருணி மோட்டார் போக்குவரத்து ஆணையாளராகவும்,வீ. தேவநேசன் மட்டக்களப்பு மாவட்ட உதவி உள்ளுராட்சி ஆணையாளராகவும், கே. இளம்குமுதன் கிராமிய அபிவிருத்தி திணைக்கள பணிப்பாளராகவும்
புதிய காத்தான்குடி அல்-அக்ஸா பெரிய ஜும்ஆ பள்ளிவாயலுக்கு பல குரலில் அல்-குர்ஆனை ஓதும் சவூதி அரேபியா இமாம் அஷ்-ஷெய்க் காரி முகம்மத் சஆத் நுமானி விஜயமொன்றை மேற்கொண்டார்.
புதிய காத்தான்குடி அல்-அக்ஸா பெரிய ஜும்ஆ பள்ளிவாயலில் அஷ்-ஷெய்க் காரி முகம்மத் சஆத் நுமானிக்கு மகத்தான வரவேற்பு அளிக்கப்பட்டதுடன் இன்றைய ஜூம்ஆ குத்பா மற்றும் தொழுகையினையும் நடத்தி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து அஷ்-ஷெய்க் காரி முகம்மத் சஆத் நுமானி பல குரலில் அல்-குர்ஆனை ஓதிக்காட்டினார்.மேலும் அஷ்-ஷெய்க் காரி முகம்மத் சஆத் நுமானிக்கு மகத்தான கௌரவம் வழங்கப்பட்டது.
நாட்டில் எதிர்காலத்தில் அரச சேவையில் சுனாமி தாக்கம் ஏற்படக்கூடும் என விவசாய அமைச்சர் கே.டி.லால்காந்த தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று (27) நடைபெற்ற கூட்டமொன்றில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
இந்த நாட்டில் தூரநோக்கற்ற அரசியலை அகற்றுவதற்கு தேவையான அரசியல் சுனாமியை மக்கள் தேர்தலில் வழங்கியிருந்தனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரச சேவையில் நிலவி வரும் குறைபாடுகளை களைவதற்கு அரச சேவையிலும் இவ்வாறான ஓர் சுனாமி ஏற்படக்கூடிய சாத்தியங்கள் மிக அதிகம் என அவர் தெரிவித்துள்ளார்.
மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்யக் கூடிய வகையில் அரச பணியாளர்கள் தங்களது கடமைகளை முன்னெடுக்க வேண்டுமென அமைச்சர் கே.டி.லால்காந்த தெரிவித்துள்ளார்.
மக்களுக்கு சேவைகளை வழங்கக் கூடிய வகையில் அரச சேவையை மாற்றியமைப்பதற்கு தேவையான எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்கத் தயங்கப் போவதில்லை என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்
காட்டு யானைகள் கிராமங்களுக்குள் நுழைவதைக் கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை
காட்டு யானைகள் ஊருக்குள் நுழைவதைக் கட்டுப்படுத்துவதற்காக சோதனைச் சாவடிகளை அமைக்கும் நடவடிக்கை அனுராதபுரம் மகவிலச்சிய பிரதேச செயலாளர் பிரிவில் ஆரம்பிக்கப்பட்டது.
அதன்படி மகாவிலச்சிய பிரதேச செயலாளர் பிரிவில் காட்டு யானைகளின் ஆபத்தை எதிர் நோக்கும் கிராம சேவகர் பிரிவுகள் சிலவற்றில் 12 சோதனைச் சாவடிகளை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், இச்சாவடிகள் சமூக மற்றும் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் ஒத்துழைப்புடன் அமைக்கப்படவுள்ளன.
இந்நிருமாணப் பணிகள் முடிவடைந்ததன் பின்னர் உடனடியாக சிவில் பாதுகாப்பு படையினரை இச்சாவடிகளில் பணியில் ஈடுபடுத்தி காட்டு யானைகள் கிராமங்களுக்குள் நுழைவதைக் கட்டுப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அனுராதபுர மாவட்ட ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்நிகழ்வு தொடர்பாக கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்ட வடமத்திய மாகாண ஆளுநரின் செயலாளர் டபிள்யு.ஜி.டபிள்யு.வணசிங்க குறிப்பிடுகையில்; இவ்வேலைத் திட்டம் வெற்றியளித்தால் ஏனைய மாவட்டங்களிலும் எதிர்வரும் வருடத்தில் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக ஆளுநரின் செயலாளர் குறிப்பிட்டார்.
இஸ்ரேலில் விவசாயத் துறையில் சட்டப்பூர்வமாக வேலைக்குச் சென்று மீண்டும் இஸ்ரேலில் பணிபுரியும் இலங்கையர் குழுவிற்கான விமானப் பயணச்சீட்டுகள் வழங்கும் நிகழ்வு அண்மையில் இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தில் இடம்பெற்றது.
79 இளைஞர்களுக்கு இவ்வேலைவாய்ப்புக் கிடைத்ததுள்ளதுடன், அவர்களுக்கு 5 வருடங்கள் 3 மாதங்களுக்கு அங்கு பணிபுரிவதற்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, இஸ்ரேலில் வேலைவாய்ப்பிற்காக விண்ணப்பித்துள்ள தொழிலாளர்களுக்கு தமது கோவையினைப் பரீட்சிப்பதற்காக www.slbfe.lk பணியகத்தின் இணையதளத்தில் பணியகம் ஒரு புதிய போர்ட்டலை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தத் தகவலைப் பெற, பணியகத்தின் இணையதளத்தை “ஆட்சேர்ப்பு” ~இஸ்ரேல்| என்பதைத் தெரிவு செய்து தங்கள் தேசிய அடையாள அட்டை இலக்கம், தொலைபேசி இலக்கம் மற்றும் ஏனைய தொடர்புடைய தரவுகளை உள்ளிடுவதன் மூலம் தேவையான தகவல்களைப் பெற்றுக்கொள்ளலாம் என்றும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது.
நிதி மோசடி செய்து படகு மூலம் இந்தியாவுக்கு தப்பிச் சென்ற நிலையில் நேற்று (26) கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்ட தம்பதியினர் எதிர்வரும் ஜனவரி 06 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
பிரைவெல்த் குளோபல் பிரைவேட் லிமிடெட் என்ற நிதி நிறுவனம் வர்த்தக நிறுவனங்களுக்கு ஈவுத்தொகை தருவதாக கூறி 160 கோடி ரூபாயை மோசடி செய்துள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு பல முறைப்பாடுகள் கிடைத்திருந்தன.
அதன் பணிப்பாளர், தனது மனைவி மற்றும் குழந்தையுடன் 2021 இல் படகில் சட்டவிரோதமாக இந்தியாவுக்கு தப்பிச் சென்றுள்ளமை விசாரணைகளின் ஊடாக தெரியவந்தது.
பின்னர் சர்வதேச பொலிஸாரின் ஊடாக சந்தேக நபர்களுக்கு எதிராக சிவப்பு எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டதுடன், விசாரணையின் போது, சந்தேகநபர் தனது குடும்பத்தினருடன் இந்தியாவின் வேதநாயகம் பகுதியில் தரையிறங்கிய போது அந்நாட்டு பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டதாக தெரியவந்தது.
பின்னர் சுமார் மூன்று வருடங்கள் அந்நாட்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அவர்கள் நேற்று (26) இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டனர்.
முதலில் குறித்த நிறுவனத்தின் உரிமையாளரும் அவரது 14 வயது மகனும் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டனர்.
எனினும், அவரது மனைவி இலங்கை வரமுடியாது என்று அங்கு அலைக்கழித்ததைத் தொடர்ந்து, அவரும் வேறு விமானம் மூலம் நாட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.
அதன்படி, அவரும் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.
பின்னர், மேலதிக விசாரணைகளுக்காக சந்தேகநபர்கள் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் நிதிக் குற்றப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
விசாரணையின் போது, சம்பந்தப்பட்ட நிதி நிறுவனம் மத்திய வங்கியில் பதிவு செய்யப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது.
தொழிலில் நட்டம் ஏற்பட்டதால், ஈவுத்தொகையை செலுத்தாமல், நாட்டை விட்டு தப்பிச் சென்றதாக அவர்கள் கூறியுள்ளனர்.
சம்மாந்துறை, கல்முனை மற்றும் அம்பாறை பிரதேசங்களில் முஸ்லிம்களை குறிவைத்து மேற்படி மோசடி நடவடிக்கைகளை மேற்கொண்டதாக சந்தேகநபர்கள் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று காலை UL 403 என்ற விமானத்தில் பேங்கொக்கில் இருந்து பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த மூன்று பேர் கொண்ட குழுவைச் சேர்ந்த பிரசாந்த் என்பவர், இந்த ஆண்டு நாட்டிற்கு வருகை தந்த இருபது இலட்சமாவது சுற்றுலாப் பயணி ஆவார்.
இருபது இலட்சமாவது சுற்றுலா பயணியை வரவேற்பதற்காக சுற்றுலாத் துறை பிரதி அமைச்சர் கலாநிதி ருவன் ரணசிங்க மற்றும் சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்தின் தலைவர் புத்திக ஹேவாவசம் ஆகியோர் விமான நிலையத்தில் பிரசன்னமாகியிருந்தனர்.
இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகம், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சுற்றுலா பயணிகளை வரவேற்கும் வகையில் விசேட வைபவமொன்றை ஏற்பாடு செய்திருந்தது.
ஆண்டொன்றிற்கு 20 இலட்சத்தை தாண்டிய சுற்றுலா பயணிகளின் வருகை இது நான்காவது முறையாகும்.
ஒரு காலகட்டத்தில், கிறிஸ்தவ மதத்திற்கு ஒவ்வாதது எனக் கருதப்பட்ட ஒரு செயலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியத்தை ஆங்கிலேயர்கள் உணர்ந்தனர்.
அதாவது ஒவ்வொரு டிசம்பர் மாதமும், மக்களிடையே ஒரு மிதமிஞ்சிய கொண்டாட்ட சூழல் இருந்தது. எனவே ஏதாவது செய்தாக வேண்டும் என்ற நிலை.
மக்களிடம் ஆடம்பர அல்லது கட்டுப்பாடில்லாத நடத்தை கிறிஸ்தவ வாழ்க்கை முறைக்கு எதிரானதாக பார்க்கப்பட்டது.
மது வகைகளை பரிமாறும் உணவகங்கள் உற்சாகம் கொண்ட மக்களால் நிரம்பியிருந்தன, கடைகள் மற்றும் வணிகங்கள் சீக்கிரமாகவே மூடப்பட்டன, நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் விஷேச உணவுகளை சாப்பிடுவதற்காக ஒன்று கூடினர், வீடுகள் தாவரங்களால் அலங்கரிக்கப்பட்டன, அப்போது தெருக்களில் பாடுவது என்பது உலகின் மிகவும் சாதாரண விஷயமாகத் தோன்றியது.
‘உண்மையான’ கிறிஸ்தவர்கள் யார்?
1644இல் ஆங்கிலேய ப்யூரிடன்கள் (Puritans) கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒழிக்க முடிவு செய்தனர். பியூரிடன்கள் என்பவர்கள் கடுமையான மத விதிகளின் மீது நம்பிக்கை கொண்ட புரோடஸ்டன்ட் (Protestant) கிறிஸ்தவர்கள்.
இயேசு கிறிஸ்து டிசம்பர் 25 அன்று பிறந்ததற்கு பைபிளில் ஆதாரம் இல்லை என கூறி ப்யூரிடன் அரசாங்கம் கிறிஸ்துமஸை ஒரு பேகன் (Pagan- கிறிஸ்தவம், இஸ்லாம், யூதம் போன்ற ஆபிரகாமிய சமயங்களைச் சாராதவர்கள்) விடுமுறையாகக் கருதியது.
நாட்காட்டியைப் பற்றிய விஷயத்தில் அவர்கள் ஓரளவு தெளிவாக இருந்தனர்.
கிறிஸ்துமஸ் பண்டிகையை விட்டுக் கொடுங்கள் என்பது தான் பிரச்னையாக இருந்தது. இங்கிலாந்தில் 1660 வரை கிறிஸ்துமஸ் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் தடை செய்யப்பட்டன.
இதனால் டிசம்பர் 25 அன்றும், கடைகள் மற்றும் சந்தைகளைத் திறக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதே நேரத்தில் பல தேவாலயங்கள் தங்கள் கதவுகளை மூட வேண்டியிருந்தது. கிறிஸ்துமஸ் சிறப்பு வழிபாடுகள் சட்டவிரோதமானதாக இருந்தன.
படக்குறிப்பு,ஒரு ப்யூரிடன், கிறிஸ்துமஸ் சடங்குகளில் ஈடுபட்டதற்காக குழந்தைகளைக் கண்டிப்பதை சித்தரிக்கும் ஓவியம்
ஆனால், மக்களால் அந்தத் தடையை அவ்வளவு எளிதாக ஏற்க முடியவில்லை.
மீண்டும் ஒன்று கூடி மது அருந்த, விருந்து உண்ண, பாடல்கள் பாட, என தங்களின் சுதந்திரங்களை மீட்டெடுக்க மக்கள் போராட்டங்கள் நடத்தினர்.
மன்னர் இரண்டாம் சார்லஸ் ஆட்சிப் பொறுப்பை ஏற்கும் வரை, கிறிஸ்துமஸ் எதிர்ப்புச் சட்டம் திரும்பப் பெறப்படவில்லை.
அமெரிக்க ப்யூரிடன்களும் விருந்து மற்றும் கொண்டாட்டங்களை வெறுத்தனர்.
இங்கிலாந்தில் சொல்லப்பட்ட அதே காரணங்களுக்காக, அமெரிக்காவின் மாசசூசெட்ஸிலும் 1659 மற்றும் 1681க்கு இடையில் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படவில்லை.
கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களைத் தடைசெய்யும் சட்டம் நீக்கப்பட்ட பிறகும் கூட, பல ப்யூரிடன்கள் ‘டிசம்பர் விடுமுறையை’ பேகன் நம்பிக்கைகளுடன் தொடர்புபடுத்தி வெறுத்தனர்.
படக்குறிப்பு,இயேசு பிறப்பைச் சித்தரிக்கும் ஓவியம்
இயேசுவின் உண்மையான பிறந்த தேதி என்ன?
உண்மை என்னவென்றால், இயேசு கிறிஸ்து எப்போது பிறந்தார் என்பதில் ஒருமித்த கருத்து இல்லை.
சில இறையியலாளர்கள், ‘வயல்களில் மேய்ப்பர்கள் தங்கள் ஆட்டு மந்தைகளை இரவில் கண்காணித்துக் கொண்டிருந்தார்கள்’ என்ற பைபிள் குறிப்பை மேற்கோள் காட்டி, அது வசந்த காலமாக இருக்கலாம் என்று நினைக்கிறார்கள். டிசம்பர் மாதத்தில் அவர்கள் தங்கள் ஆடுகளுக்கு அடைக்கலம் தேடியிருக்கலாம்.
அல்லது அது இலையுதிர்காலமாக இருந்திருக்கலாம். ஆடுகளின் இனச்சேர்க்கை காலம் எனும்போது, ஏற்கனவே இனச்சேர்க்கையில் ஈடுபட்ட ஆடுகளை மற்றவற்றிலிருந்து பிரிக்கும் நோக்கில் மேய்ப்பர்கள் தங்கள் மந்தைகளை கண்காணித்துக் கொண்டு இருந்திருக்கலாம்.
ஆனால் பைபிளில் தேதி எதுவும் குறிப்பிடப்படவில்லை.
பேகன் சடங்குகள்
படக்குறிப்பு,இந்த 19ஆம் நூற்றாண்டு ஆங்கில கார்ட்டூன் சித்தரிப்பு போல, ரோமானியர்கள் மது விருந்துகளை விரும்பினர்
ரோமானிய காலத்திலிருந்தே, டிசம்பர் மாத இறுதியில் பண்டிகையைக் கொண்டாடுவது என்பது பேகன் பாரம்பரியத்தின் அங்கமாக இருந்தது.
அடிப்படையில், அது ஒரு அறுவடை திருவிழா. பரிசுகள் பகிரப்பட்டன, வீடுகள் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டன, உண்பதற்கு ஏராளமான உணவு வகைகள் இருந்தன மற்றும் அளவுக்கு அதிகமாக மது அருந்துவது அந்த விடுமுறை காலத்தின் தவிர்க்க முடியாத அம்சமாக இருந்தது.
வரலாற்றாசிரியர் சைமன் செபாக் மான்டிஃபியோரின் கூற்றுப்படி, “பேகன் மரபுகளில், சில ‘கேளிக்கை செயல்பாடுகளில்’ ஈடுபட மக்களுக்கு அனுமதி இருந்தது. இது ஆரம்பகால கிறிஸ்தவர்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தியது. போட்டி உணர்வை அதிகரித்தது.”
ரோமானியர்கள் படிப்படியாக பேகன் நம்பிக்கைகளை கைவிட்டு கிறிஸ்தவத்தை ஏற்றுக்கொண்டனர். இந்த மாற்றத்தில், கிறிஸ்தவ நாட்காட்டி படிப்படியாக பேகன் நாட்காட்டியின் இடத்தை எடுத்துக் கொண்டது.
ஒரு காலகட்டத்தில், ரோமானியர்கள் இரண்டு மரபுகளிலும் பங்கெடுத்தனர். 4ஆம் நூற்றாண்டின் இறுதியில், பேகன் சடங்குகள் மற்றும் கிறிஸ்தவச் சடங்குகள் ஒரே சமயத்தில் (டிசம்பர் மாதத்தில், 14 நாட்களுக்கு) நடத்தப்பட்டன.
ஆனால் இரு மரபுகளுக்கிடையே மோதல் இல்லாமல் இல்லை.
வென்றவர்களும் தோற்றவர்களும்
படக்குறிப்பு,இந்த 19 ஆம் நூற்றாண்டு பிரிட்டிஷ் கார்ட்டூனின் படி, கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது மிதமிஞ்சிய உணவுகள் உட்கொள்ளப்பட்டன
இறுதியில், கிறிஸ்தவம் வெற்றி பெற்றது.
17 ஆம் நூற்றாண்டில் கிறிஸ்துமஸ் பண்டிகை மீது நடத்தப்பட்ட போர் என்பது, பேகன் பாரம்பரியத்தின் எச்சங்கள் என்று எதையெல்லாம் ப்யூரிட்டன்கள் கருதினார்களோ, அதை அழிப்பதற்கான அவர்களின் முயற்சியாகவே பார்க்கப்பட்டது.
ஆனால் இப்போது நம்மைச் சுற்றி நடக்கும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களைப் பார்த்தல் அவர்கள் தோற்றுவிட்டார்கள் என்பது தெளிவாகப் புரியும்.
இந்த பண்டிகை நாட்களில், உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவர்கள், வீட்டில் அலங்கரிக்கப்பட்ட கிறிஸ்துமஸ் மரத்தை வைப்பார்கள், இறைச்சியை மகிழ்ச்சியோடு சாப்பிடுவார்கள், மதுவை உற்சாகமாக அருந்துவார்கள்.
அவர்களின் இந்த பண்டிகைக் கொண்டாட்டங்களுக்கு பின்னால், சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலான பழமையான வரலாறு உள்ளது.
மெல்போர்னில் இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையிலான பாக்ஸிங் டே டெஸ்டின் முதல் நாளிலேயே, பெரும் சர்ச்சை வெடித்துள்ளது.
பும்ரா உள்ளிட்ட இந்திய பந்துவீச்சாளர்களைத் திணற வைத்த ஆஸ்திரேலியாவின் இளம் வீரருக்கும் இந்தியாவின் விராட் கோலிக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
மைதானத்துக்கு உள்ளேயே உடல் ரீதியாகவும், வார்த்தைகளாலும் நடந்த மோதலை முடிவுக்குக் கொண்டுவர கள நடுவர் தலையிட வேண்டியிருந்தது.
இந்த மோதல் தொடர்பாக பெரும்பாலும், விராட் கோலி மீது கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.
இதைத் தொடர்ந்து விராட் கோலிக்கு போட்டியின் சம்பளத்தில் 20 சதவிகிதம் அபராதமாக விதிக்கப்பட்டது. ஒரு தகுதிக் குறைப்பு புள்ளியும் தண்டனையாக வழங்கப்பட்டுள்ளது.
பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான 4-வது டெஸ்ட் வியாழக்கிழமை மெல்போர்னில் தொடங்கியது. ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய முடிவெடுத்தார்.
சாம் கான்ஸ்டாஸ் மற்றும் உஸ்மான் கவாஜா ஆஸ்திரேலியாவுக்காக இன்னிங்ஸை தொடங்கினர். இது சாம் கான்ஸ்டாஸின் முதல் டெஸ்ட். 19 வயதான அவர், தனது பேட்டிங் திறனுக்காக உள்ளூர் போட்டிகளில் பிரபலமானவர்.
சாம் கான்ஸ்டாஸ் ஆரம்பத்தில் இருந்தே இந்திய பந்துவீச்சை திறமையாகச் சமாளித்து ஆடினார். ஜஸ்ப்ரீத் பும்ராவின் பந்துகளையும் அவர் விட்டு வைக்கவில்லை.
ஆறாவது ஓவரில் பும்ராவின் பந்தில் 2 பவுண்டரிகளும் ஒரு சிக்சரும் அடித்து இந்திய அணியை அச்சுறுத்தினார் கான்ஸ்டாஸ். இந்த சிக்சருக்கு முன்புவரை டெஸ்ட் போட்டிகளில் 4,562 பந்துகளை சிக்சர் விட்டுக்கொடுக்காமல் வீசியிருக்கிறார் பும்ரா. அதனால் பும்ராவின் பந்தில் சிக்சர் அடிக்கவே முடியாது என்ற பெருமை அவருக்கு இருந்தது. இதற்கு முன் 2021-ஆம் ஆண்டில் சிட்னியில் நடந்த டெஸ்டில் கேமரன் கிரீன் சிக்சர் அடித்திருந்தார்.
தான் ஆடிய டெஸ்ட் போட்டிகளிலேயே ஒரு ஓவரில் அதிக ரன்களை பும்ரா விட்டுக் கொடுத்ததும் இந்த ஓவரில்தான். அதில் 18 ரன்கள் எடுக்கப்பட்டன.
“பும்ராவை சமாளிக்க என்னிடம் திட்டம் இருக்கிறது” என்று போட்டிக்கு முன்னரே கூறி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தார் கான்ஸ்டாஸ்.
கான்ஸ்டாஸின் ஆக்ரோஷமான பேட்டிங் காரணமாக இந்தியா தரப்பில் பரபரப்பு ஏற்பட்டது. கான்ஸ்டாஸின் விக்கெட்டை வீழ்த்த கேப்டன் ரோஹித் சர்மா எடுத்த ஒவ்வொரு முயற்சியும் தோல்வியடைந்தது.
பத்தாவது ஓவர் முடிந்த பிறகு கான்ஸ்டாஸ் தனது சக வீரர் உஸ்மான் கவாஜாவை நோக்கிச் சென்று கொண்டிருந்தார். அப்போது ஸ்லிப்பில் நின்று கொண்டிருந்த கோலி, கான்ஸ்டாஸின் தோளில் மோதினார். பின்னர் இருவரும் கோபமாக வார்த்தைகளைப் பரிமாறிக் கொண்டனர். அதைத் தொடர்ந்து, நடுவர் தலையிட்டு இருவரையும் கலைந்து போக வைத்தார்.
பத்தாவது ஓவர் முடிந்த பிறகு கான்ஸ்டாஸ் தனது சக வீரர் உஸ்மான் கவாஜாவை நோக்கிச் சென்று கொண்டிருந்தார். அப்போது ஸ்லிப்பில் நின்று கொண்டிருந்த கோலி, கான்ஸ்டாஸின் தோளில் மோதினார். பின்னர் இருவரும் கோபமாக வார்த்தைகளைப் பரிமாறிக் கொண்டனர். அதைத் தொடர்ந்து, நடுவர் தலையிட்டு இருவரையும் கலைந்து போக வைத்தார்.