82 பிரண்ட்ஸ் போறேவேர் அமைப்பின் இணை அனுசரணையில் ஹஜ் விழா 2022 நிகழ்வுகள் புத்தளம் எருக்கலம்பிட்டியில் மிகவும் கோலாகலமாக இடம்பெற்றது.
புனித ஹஜ்ஜுப்பெருநாளை முன்னிட்டு கடந்த 11,12 மற்றும் 13 ஆகிய மூன்று தினங்களாக இடம்பெற்ற ஹஜ் விளையாட்டு விழா 2022 நிகழ்வுகள் நேற்று மாலையுடன் நிறைவுக்கு வந்தது.
தொடர்ச்சியாக மன்னார் எருக்கலம்பிட்டியில் இடம்பெற்றுவந்த ஹஜ் விழா நிகழ்வுகள் இம்முறை எரிபொருள் சிக்கல் மற்றும் போக்குவரத்து பிரச்சினை காரணமாக புத்தளம் எருக்கலம்பிட்டியில் நடத்தப்பட்டது.
நாகவில்லு முஸ்லீம் காங்கிரஸ் ஏட்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வுகளை 82 பிரண்ட்ஸ் போறேவேர் அமைப்பினர் மிகவும் சிறப்பாக நடாத்தி முடித்ததுடன் நிகழ்வுக்கு இணை அனுசரணையும் வழங்கினர்.
சுமார் இருபதுக்கும் அதிகமான கழகங்கள் பங்குபற்றிய உதைப்பந்தாட்ட போட்டிகள் மூன்று தினங்களும் விழாவை அலங்கரித்தன.
பாரிய சிரமங்களுக்கு மத்தியில் மன்னாரில் இருந்து வருகை தந்து போட்டியில் கலந்துகொண்ட எருக்கலம்பிட்டி யங் ஹீரோஸ் அணியினர் அரையிறுதி போட்டியுடன் வெளியேறினார்
EYMA மற்றும் எருக்கலம்பிட்டி யூத் அணிகளுக்கிடையில் இடம்பெற்ற அரையிறுதி போட்டியில் பெனால்டி முறையில் EYMA அணி வெற்றிபெற்றதுடன் இறுதிப்போட்டிக்கு முன்னேறினர்.
எருக்கலம்பிட்டி யங் ஹீரோஸ் மற்றும் எருக்கலம்பிட்டி யங் யூனைடெட் அணிகளுக்கிடையில் இடம்பெற்ற இரண்டாவது அரையிறுதி போட்டியில் பெனால்டி முறையில் எருக்கலம்பிட்டி யங் யூனைடெட் அணி வெற்றிபெற்றதுடன் இறுதிப்போட்டிக்கு முன்னேறினர்.
EYMA மற்றும் எருக்கலம்பிட்டி யங் யூனைடெட் அணிகளுக்கிடையில் இடம்பெற்ற இறுதிப்போட்டியில் EYMA அணியினர் 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று கிண்ணத்தை சுவீகரித்தனர்.

மேலும் பார்வையாளர்களை கவரும் விதத்தில் ஏட்பாடு செய்யப்பட்டிருந்த கண்காட்சிப் போட்டி ஒன்றும் இம்மைதானத்தை மேலும் அலங்கரித்தது.

இதேவேளை இரண்டு தினங்களாக மின்னொளியில் இடம்பெற்ற கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் எருக்கலம்பிட்டி யூத் அணியினர் இறுதிப்போட்டிக்கு முன்னேறி கிண்ணத்தை சுவீகரித்தனர்.
இறுதி தினமான நேற்றைய தினம் இடம்பெற்ற மைதான நிகழ்ச்சிகள் வருகை தந்திருந்த அனைவரையும் வெகுவாக கவர்ந்ததுடன் பரிசளிப்பு நிகழ்வுகளுடன் நிகழ்வுகள் யாவும் நிறைவுக்கு வந்தது.
குறித்த நிகழ்வில் பள்ளிவாசல் நிர்வாக உறுப்பினர்கள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் 82 பிரண்ட்ஸ் போறேவேர் அமைப்பினர் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.













