Friday, March 13, 2026
Sponsored advertisementspot_img
Home Blog Page 249

முட்டைக்கு போன காலம்!

0

முட்டையின் சில்லறை விலை மீண்டும் உயர்ந்துள்ளது.

அண்மைக்காலமாக 30 ரூபாவாக குறைந்திருந்த முட்டை ஒன்றின் விலை மீண்டும் 40 ரூபாவிற்கு மேல் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முட்டை விலை அதிகரிப்புக்கு பல காரணிகள் காரணமாக உள்ளதாக இலங்கை கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார்.

“பெரும்பாலான மொத்த வியாபாரிகள் முட்டைகளை எடுத்துச் சென்று முட்டைகளை விற்பனை செய்தனர். இதனால் வாடிக்கையாளர்களுக்கு பாரிய நிவாரணம் கிடைத்தது. தற்போது, ​​உபரி உற்பத்தி பொருட்கள் சந்தையை விட்டு வெளியேறியுள்ளன. தற்போது உற்பத்தியாகும் தினசரி முட்டைகள்தான் சந்தைக்கு வருகின்றன. ஆனால் விலையில் பெரிய ஏற்ற இறக்கம் ஏற்பட்டுள்ளது. இது செயற்கையாக நடக்கிறதா என்ற கேள்வி எங்களுக்கு உள்ளது..”

தற்போது சந்தையில் வெள்ளை நிற முட்டை ஒன்று 40-45 ரூபாவுக்கும் பழுப்பு நிற முட்டை ஒன்று 45-48 ரூபாவுக்கும் விற்கப்படுகின்றது.

உபுல் தரங்கவுக்கு நேர்ந்த சோகம்!

0

ஆட்ட நிர்ணய சம்பவம் தொடர்பான சாட்சியங்களை வழங்குவதற்கு நீதிமன்றில் ஆஜராகாத காரணத்தினால் கிரிக்கெட் தெரிவுக்குழுவின் தலைவர் உபுல் தரங்கவிற்கு மாத்தளை மேல் நீதிமன்றம் இன்று (08) பிடியாணை பிறப்பித்துள்ளது.

பல்லேகல மைதானத்தில் இவ்வருடம் மார்ச் மாதம் நிறைவடைந்த “லெஜண்ட்ஸ் லீக்” என்ற கிரிக்கெட் போட்டித்தொடரின் போது பணத்திற்கு ஆட்ட நிர்ணயத்தில் ஈடுபடுமாறு தனக்கு அழுத்தும் கொடுக்கப்பட்டதாக உபுல் தரங்க செய்த முறைப்பாட்டிற்கு அமைய விசாரணையில் உள்ள வழக்கொன்றிற்கு உபுல் தரங்க நீதிமன்றில் ஆஜராகாத காரணத்தால் இவ்வாறு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்றத்திற்கு அறிவிக்காமல் உபுல் தரங்க வெளிநாடு சென்ற காரணத்தினால் விமான நிலையத்தில் வைத்து கைது செய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அவர் வெளிநாட்டில் உள்ளதால், நாடு திரும்பிய பின்னர் நீதிமன்றத்தில் ஆஜராவதாக சீராக்கல் மனு ஊடாக நீதிமன்றிற்கு  அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹம்பாந்தோட்டை மாவட்டம் பெரும் அதிர்ச்சியில்!

0

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் எயிட்ஸ் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் மாத்திரம் 87 எயிட்ஸ் நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதிகளவான எயிட்ஸ் நோயாளர்கள், அம்பாந்தோட்டை மாவட்டத்தின் சூரியவெவ மற்றும் திஸ்ஸமஹாராம ஆகிய பிரதேசங்களிலிருந்து பதிவாகியுள்ளனர்.

மேலும், எயிட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆரம்ப கட்டங்களிலேயே உரிய சிகிச்சைகளை அளிப்பதினால் அவர்களைக் குணப்படுத்த முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

முன்னாள் எம்.பிக்களுக்கு அடிக்கு மேல் அடி!

0

சகல நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், இலவசமாக வழங்கப்பட்டிருந்த 5 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள முத்திரைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக அஞ்சல் மா அதிபர் ஆர்.சத்குமார தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான அறிவுறுத்தல் சகல அஞ்சல் நிலையங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதன் பின்னர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களால், அதனைப் பயன்படுத்துவதற்கு அனுமதியில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தேர்தலில் போட்டியிட முடியாது.6 கட்சிகளுக்கு தடை!

0

செயலாளர் பதவியில் பிரச்சினைகள் உள்ள 6 அரசியல் கட்சிகள் இம்முறை பொதுத் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை இழந்துள்ளன.

இதன்படி 77 அரசியல் கட்சிகளுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

நவம்பர் 14-ம் திகதி நடைபெற உள்ள பொதுத்தேர்தலில் போட்டியிடக்கூடிய அரசியல் கட்சிகள் மற்றும் அதற்கென ஒதுக்கப்பட்ட சின்னங்களை தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இதன்படி, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, ஐக்கிய லங்கா மகாசபா கட்சி, ஐக்கிய லங்கா பொதுஜன கட்சி, லங்கா மக்கள் கட்சி, இலங்கை முற்போக்கு முன்னணி மற்றும் ஈழவர் சனநாயக முன்னணி  ஆகிய கட்சிகள் இந்த தேர்தலில் போட்டியிட முடியாது என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

முன்னாள் அமைச்சர் ரிஷாட் எடுத்த அதிரடி முடிவு!

0

கட்சியில் இருந்து விலக்கப்பட்டவர்கள் மற்றும் இருபதாவது திருத்தத்துக்கு ஆதரவளித்தவர்கள் உள்ள கூட்டணியில் இணையப்போவதில்லை என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்திக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் நேற்று (06) மன்னார், மாந்தை பிரதேசத்தில் இடம்பெற்றது.

இக்கூட்டத்தில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கிண்ணியாவைச் சேர்ந்த கட்சியின் உயர்பீட உறுப்பினர் ஒருவர் கட்சியிலிருந்து விலகிவிட்டதாகவும் இவ்வாறு பலர் உங்களது கட்சியிலிருந்து விலகிச் செல்வதற்கு காரணம் என்ன? எனவும் மற்றும் தனித்தா அல்லது இணைந்தா போட்டியிடுவது? எனக் கேட்கப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளித்த தலைவர் ரிஷாட் தெரிவித்ததாவது,

“தவறு செய்தமைக்காக கட்சியிலிருந்து விலக்கப்பட்ட சிலர், இன்று தாமாகவே கட்சியிலிருந்து வௌியேறியதாகக் கூறித் திரிகின்றனர். தவறு செய்தவர்கள் உடனடியாக கட்சியிலிருந்து நீக்கப்படுவர். இவ்வாறு தவறு செய்த மூன்று எம்.பிக்களை எமது கட்சி நீக்கியுள்ளது.

இதுபோலவே, கிண்ணியாவைச் சேர்ந்த ஒருவரையும் நாம் நீக்கியுள்ளோம். இன்று அவர் ரணிலுடன் இணைந்துள்ளார். மட்டுமல்ல கட்சியிலிருந்து அவர்தான், வௌியேறியதாக ஊடகங்களுக்கு கூறுகிறார். மக்கள் ஆணையை மீறியவர்களுக்கு மக்களே பாடம்புகட்டுவர்.

எதிர்வரும் பொதுத் தேர்தலில் எமது கட்சி அம்பாறை மாவட்டம் உட்பட பல மாவட்டங்களில் போட்டியிடும். சில மாவட்டங்களில் தனித்தும் இன்னும் சில மாவட்டங்களில் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்தும் போட்டியிடும். எம்மால் நீக்கப்பட்டவர்களைச் சேர்த்து உருவாக்கப்படும் கூட்டணியில் நாம் சேரமாட்டோம்.

இருபதாவது திருத்தத்துக்கு ஆதரவளித்து, ஜனாஸாக்களை எரிப்பதற்கு உதவியவர்கள் உள்ள கூட்டணியிலும் எமது கட்சி இணையாது. அம்பாறை மாவட்டத்தில், இவ்விடயம்தான் இழுபறியில் உள்ளது. இருபதாவது திருத்தத்துக்கு ஆதரவளித்த ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எம்.பிக்கள் உள்ள அணியில், நாம் இணையப்போவதில்லை.

இவர்களைச் சேர்த்தால் அம்பாறையில் தனித்தே மயில் சின்னத்தில் போட்டியிடுவோம். புத்தளம் மாவட்டத்திலும் இந்த நியதியே பின்பற்றப்படும். இது குறித்து தீர்க்கமான முடிவை எடுக்குமாறு கட்சியின் புத்தளம் மாவட்ட உயர்பீடத்துக்கு அறிவித்துள்ளோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் குறித்து வெளியான போலி செய்தி!

0

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் முற்றிலும் பொய்யானவை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டுள்ள பொலிஸ் விசேட அதிரடிப்படையின் 50 அதிகாரிகள் உட்பட பாதுகாப்பு தரப்பினர் தொடர்ந்தும் செயற்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் தொடர்பில் பதிலளிக்கும் போதே பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி நிஹால் தல்துவ மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், முன்னாள் ஜனாதிபதிக்கு வழங்கப்படவுள்ள அதிகாரிகளின் எண்ணிக்கை விரைவில் தீர்மானிக்கப்பட்டு நிறுவப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தற்போதைய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவை ஸ்தாபிப்பதற்கு தேவையான அதிகாரிகளின் எண்ணிக்கை தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக அதிகாரிகள் நீக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

முட்டை உற்பத்தி தொழிலை கைவிடும் அபாயம்!

0

தற்போதுள்ள மூலப்பொருட்களின் விலையின்படி, ஒரு முட்டையின் விலை 36 முதல் 37 ரூபாய் வரை பராமரிக்கப்படாவிட்டால், அத்தொழில் துறை நலிவடையும் அபாயம் உள்ளதாக விவசாய அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

அந்த அமைச்சின் செயலாளர் எம்.பி.நிஷாந்த விக்கிரமசிங்க  இன்று (06) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

கோழி தீவன விலையை குறைக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

அந்த செலவுகள் குறைக்கப்பட்டவுடன் முட்டை ஒன்றை 29 முதல் 30 ரூபாய் வரையிலான விலையில் சந்தைக்கு விநியோகிக்க முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

“எப்படியும் ஒரு முட்டை உற்பத்தி செய்ய சுமார் 32 முதல் 33 ரூபாய் வரை செலவாகும். இந்த செலவில் பெரும்பாலானவை கோழி தீவனம் ஆகும். 80% மக்காச்சோளத்தின் விலையைப் பொறுத்தது.

மக்காச்சோளத்தின் விலையை நிர்ணயிப்பதில் சில சிக்கல் நிலைகள் உள்ளன. அதனைத் தீர்க்கும் முயற்சியில் தற்போது ஈடுபட்டுள்ளோம். 

எவ்வாறாயினும், சந்தையில் ஒரு முட்டைக்கு 36 முதல் 37 ரூபாய் வரை விலை கிடைக்காமல் போனால், இது கோழிப்பண்ணை தொழிலை பாதிக்கும்.

எதிர்காலத்தில், கோழித் தீவனத்துக்கான உற்பத்திச் செலவு, குறிப்பாக சோளத்தின் விலை சுமார் 165 ஆக உள்ளது. அதனை 140 ஆக குறைக்கலாம்.

அதைச் செய்த பிறகு, நாட்டில் முட்டை விலை 29 முதல் 30 ரூபாய் வரையில் இருக்கும்” என்றார்.

ரணிலுக்கு ஆதரவளித்தவர்களின் நிலை?

0

இம்முறை பாராளுமன்றத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளித்த அனைத்து அரசியல் கட்சிகளும் மற்றும் குழுக்களும் அரசியல் கூட்டணியின் கீழ் போட்டியிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் இதுவரையில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை எனவும், இன்று (26) கலந்துரையாடல்கள் சில இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிநிதிகளுக்கும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் இது தொடர்பில் இன்று காலை விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் விதம் மற்றும் சின்னம் தொடர்பில் இங்கு கலந்துரையாடப்படவுள்ளதோடு, கூட்டணி அமையுமாயின் அதற்கு தேவையான அடிப்படை செயற்பாடுகள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் கடந்த ஜனாதிபதி தேர்தலில் அவருக்கு ஆதரவளித்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் குழுவினருக்கும் இடையில் இன்று மாலை 4.00 மணிக்கு கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.

இதன்போது, பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் விதம் குறித்து இறுதி உடன்பாடு எட்டப்படும் என்று கூறப்படுகிறது.

ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு விஷேட உரை

0