Thursday, May 7, 2026
Sponsored advertisementspot_img
Home Blog Page 263

மதவாச்சி பொருளாதார மத்திய நிலையத்தின் நிலை!

0

மதவாச்சி பொருளாதார மத்திய நிலையத்தை மீள ஆரம்பிப்பது குறித்து ஆராய்வு

பயன்பாடின்றி சேதமடைந்து வரும் மதவாச்சி பொருளாதார மத்திய நிலையத்தை மீள ஆரம்பிப்பது குறித்து ஆராய்வதற்காக வர்த்தகம், வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க கண்காணிப்பு விஜயத்தை மேற்கொண்டிருந்தார்.

பொருளாதார மத்திய நிலையத்தின் தற்போதைய நிலை மற்றும் அதை மீளக் கட்டியெழுப்புவதற்கான திட்டங்கள் குறித்து இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

இந்த பொருளாதார மத்திய நிலையத்தை இங்கு ஆரம்பிக்க வேண்டியதன் முக்கியத்துவம் குறித்து, மதவாச்சி பிரதேச செயலாளர் சந்திரிகா மலேவியாராச்சி அமைச்சருக்கு விளக்கமளித்தார்

இதில் மதவாச்சி பாரளுமன்ற உறுப்பினர் சுசந்த குமார நவத்தன்ன அவர்களும் கலந்துகொண்டார்.

இந்த ஜனாதிபதியுமா நாட்டை விட்டு ஓடப்போகிறார்?

0

வங்கதேசத்தில் கடந்த 2009 முதல் அவாமி லீக் கட்சியின் ஆட்சி நடந்து வந்தது. அந்த கட்சியின் தலைவரான ஷேக் ஹசீனா பிரதமராக செயல்பட்டு வந்தார்.

இதற்கிடையே கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு வழங்கும் இடஒதுக்கீட்டுக்கு எதிராக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் காரணமாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி ஷேக் ஹசீனா பிரதமர் பதவியை ராஜினாமா செய்து உயிருக்கு பயந்து இந்தியா சென்று தஞ்சமடைந்தார்.

அதன்பிறகு வங்கதேசத்தில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டுள்ளது. இதில் மொத்தம் 16 பேர் இடம்பெற்றுள்ளனர். இடைக்கால அரசின் தலைவராகவும், தலைமை ஆலோசகராகவும் நோபல் பரிசு பெற்ற பேராசிரியர் முகமது யூனுஷ் செயல்பட்டு வருகிறார்.

ஷேக் ஹசீனா அரசுக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் நடத்தி அவரது ஆட்சியை கவிழ்த்தனர். அதன்பிறகு மாணவர்கள் தான் புதிய ஆட்சியை அமைப்பதாக கூறினர். ஆனால் அனுபவசாலி வேண்டும் என்ற நிலையில் முகமது யூனுஷ் வெளிநாட்டில் இருந்து வரவழைக்கப்பட்டு அவரது தலைமையில் இடைக்கால அரசு செயல்பட்டு வருகிறது.

ஆனால் அவரது அரசில் இடம்பெற்றுள்ள போராட்டக்குழுவினரின் தலையாய நோக்கம் என்பது வங்கதேசத்தின் அரசியலமைப்பை மாற்றம் செய்வதுதான். அதாவது வங்கதேசத்தின் அரசியலமைப்பை நீக்கிவிட்டு அதற்கு பதில் Revolutinary government அமைப்பதாகும். இதனை மேற்கொள்ள வேண்டும் என்று முகமது யூனுஷ்க்கு கோரிக்கை வைக்கப்பட்டது.

அதோடு கடந்த டிசம்பர் 31ம் தேதி வரை காலக்கெடு வழங்கப்பட்டது. ஆனால் அந்த காலக்கெடுவுக்குள் முகமது யூனுஷ் இதனை நிறைவேற்றவில்லை. இதையடுத்து மீண்டும் 15 நாட்கள் அதாவது ஜனவரி 15ம் தேதிக்குள் தற்போதைய அரசியலமைப்பை நீக்கி புதிய விதிகளுடன் ஆட்சியை கொண்டு செல்ல வேண்டும் என்று காலக்கெடு விதித்துள்ளனர்.

ஆனால் முகமது யூனுஷ் அதனை விரும்பவில்லை என்று சொல்லப்படுகிறது. இதனால் மீண்டும் வங்கதேசத்தில் போராட்டம் வெடிக்கலாம். அதைத்தொடர்ந்து ஷேக் ஹசீனா போல் முகமது யூனுஷ் நாட்டில் இருந்து விரட்டப்படலாம் என்ற பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.

அமெரிக்க ஜனாதிபதியின் மனைவியை சொக்கவைத்த மோடி!

0

அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மனைவிக்கு பிரதமர் நரேந்திரமோடி வழங்கிய ரூ.17லட்சம் மதிப்புள்ள வைரமானது வெளிநாட்டு தலைவர்கள் வழங்கியதிலேயே அதிக விலை உயர்ந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபர், அவரது மனைவி ஜில் பைடன் மற்றும் முக்கிய தலைவர்கள் கடந்த 2023ம் ஆண்டு பெற்ற பரிசு பொருட்கள் குறித்த விவரங்களை அந்நாட்டு வெளியுறவு துறை அமைச்சகம் நேற்று முன்தினம் வெளியிட்டது. இதில் பிரதமர் மோடி கடந்த 2023ம் ஆண்டு அதிபரின் மனைவி ஜில் பைடனுக்கு 20ஆயிரம் டாலர் சுமார் ரூ.17லட்சம் மதிப்புள்ள வைரத்தை பரிசாக வழங்கியுள்ளார். ஜில் பைடன் வெளிநாட்டு தலைவர்களிடம் இருந்து பெற்றதிலேயே பிரதமர் மோடி வழங்கியது தான் அதிக விலை உயர்ந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து உக்ரைன் நாட்டின் தூதர் 4510 டாலர் ( ரூ.3.8லட்சம்) மதிப்புள்ள பிரேஸ்லெட், ப்ரூச், புகைப்பட ஆல்பத்தை அமெரிக்க அதிபரின் மனைவிக்கு வழங்கியுள்ளார்.

அதிபர் ஜோ பைடனும் விலைமதிப்பு மிக்க பல்வேறு பரிசு பொருட்களை வெளிநாட்டு தலைவர்களிடம் இருந்து பெற்றுள்ளார். சமீபத்தில் பதவி நீக்கம் செய்யப்பட்ட தென்கொரிய அதிபரின் யூன் சுக் இயோலிடம் இருந்து 7100 டாலர் மதிப்புள்ள நினைவு புகைப்பட ஆல்பம், மங்கோலிய பிரதமரிடம் இருந்து 3,495டாலர் மதிப்புள்ள மங்கோலிய வீரர்களின் சிலை, வெள்ளிக் கிண்ணம் உட்பட பல்வேறு விலையுயர்ந்த பரிசு பொருட்களை அதிபர் பெற்றுள்ளார்.

ஜனாதிபதியின் தலைமையில் முக்கிய கண்காட்சி!

0

சர்வதேச “FACETS Sri Lanka – 2025” இரத்தினக்கல் மற்றும் ஆபரண கண்காட்சியில் ஜனாதிபதி பங்கேற்பு

சர்வதேச “FACETS Sri Lanka – 2025” இரத்தினக்கல் மற்றும் ஆபரண கண்காட்சி ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று (04) சினமன் கிராண்ட் ஹோட்டலில் ஆரம்பமானது.

இதன்போது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த இரத்தினக்கல் மற்றும் ஆபரணக் கூடங்களை பார்வையிட்டார்.

இலங்கை இரத்தினக்கல் மற்றும் ஆபரணச் சங்கம் (SLGJA), தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகாரசபை மற்றும் ஏற்றுமதி ஊக்குவிப்புச் சபை (EDB) என்பன இணைந்து ஏற்பாடு செய்திருக்கும் FACETS Sri Lanka சர்வதேச இரத்தினக்கல் மற்றும் ஆபரண கண்காட்சி இன்று முதல் (06) திகதி வரை நடைபெறவுள்ளது.

ஆசியாவின் முதன்மை இரத்தினக்கல் மற்றும் ஆபரண கண்காட்சியான FACETS Sri Lanka இம்முறை 31 ஆவது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், சீனா,இந்தியா, ஐக்கிய அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் பல நாடுகளின் பிரதிநிதிகளும் இந்த கண்காட்சியில் கலந்துகொண்டுள்ளனர்.

கல்பிட்டியில் சிக்கிய கிலோ கணக்கு தங்கம்!

0

கற்பிட்டி – பத்தலண்குண்டுவ கடற்பகுதியில் 11 கிலோ 300 கிராம் நிறையுடைய தங்கத்துடன் சந்தேக நபர்கள் மூவர் இன்று (04) கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட தங்கம் 28 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடையது என தெரிவிக்கப்படுகிறது.

மேலும், கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 40 முதல் 45 வயதிற்கு இடைப்பட்ட கற்பிட்டி பகுதியைச் சேர்ந்தவர்கள் என கடற்படையினர் தெரிவித்தனர். 

கற்பிட்டி – பத்தலண்குண்டுவ கடற்பகுதியில் சந்தேகத்திற்கு இடமான டிங்கி இயந்திர படகு ஒன்றினை கடற்படையினர் சோதனை செய்தனர்.

இதன்போதே, குறித்த இயந்திர படகில் தங்கம் கடத்தப்பட்டமை தெரியவந்துள்ளது. குறித்த தங்கத்தை பறிமுதல் செய்த கடற்படையினர், அந்த இயந்திர படகில் பயணித்த மூவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டனர்.

அத்துடன், குறித்த தங்கம் கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படும் இயந்திர படகு ஒன்றும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மற்றும் அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட தங்கம் என்பன மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளதாகவும் கடற்படையினர் மேலும் குறிப்பிட்டனர்.

ஒரு வருசத்துல இத்தனை பேரையா நாய் கடிக்கணும்!

0

ஆண்டுக்கு சுமார் 3 இலட்சம் நாய் கடி சம்பவங்கள் பதிவாவதாக பொது சுகாதார கால்நடை வைத்திய சேவை தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக, கடந்த ஆண்டில் மட்டும் சுமார் இரண்டு இலட்சம் மனித விசர்நாய்க்கடி தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

மேலும், கடந்த வருடம் ரேபிஸ் நோயினால் 20 பேர் உயிரிழந்துள்ளதாக பொது சுகாதார கால்நடை சுகாதார சேவையின் வைத்திய அதிகாரி வைத்தியர் யேஷான் குருகே தெரிவித்துள்ளார்.

இதில் 11 பேர் விசர்நாய்கடியால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும் கலவத்தான் கடித்ததில் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

மீதமுள்ள 8 இறப்புகளில், விலங்கு தெளிவாக அடையாளம் காணப்படவில்லை.

இவ்வாறு, நடுத்தர வயதுடையவர்கள் அதிகமாக விலங்கு கடிக்கு உள்ளாவதாகவும்,  அவர்களில் 2 பேரில் ஒருவர் ஆண்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

நாய்க்கடி அதிகமாகப் பதிவாகியிருந்தாலும், கடந்த பத்து வருடங்களில் படிப்படியாகக் குறைந்துள்ளது. இருப்பினும், குரங்கு கடி அதிகரித்துள்ளது.

மனித ரேபிஸ் தடுப்பூசிகளுக்காக வருடாந்தம் 600 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான பணம் செலவிடப்படுவதாக வைத்தியர் யேஷான் குருகே தெரிவித்தார்.

சில இடங்களில் இன்று பலத்த மழைவீழ்ச்சி!

0

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இந்தப் பிரதேசங்களில் சில இடங்களில் 100மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

மீண்டும் சீனாவில் வேகமாக பரவும் புதிய வைரஸ்!

0

சீனாவில் உருவான கோவிட் வைரஸ் காரணமாக உலகமே முடங்கிய நிலையில், தற்போது அங்கு எச்எம்பிவி வைரஸ் வேகமாக பரவி வருவது மக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 2020ம் ஆண்டு சீனாவில் உருவான கோவிட் வைரஸ் உலகம் முழுவதும் பரவியது. இதில் உலகளவில் கோடிக்கணக்கான பேர் உயிரிழந்தனர். இதனால், அனைத்து நாடுகளும் ஊரடங்கை அமல்படுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இதனால், பொருளாதார பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டன. இதில் இருந்து தற்போது தான் பல நாடுகள் மீண்டு வருகின்றன.

இந்நிலையில், சீனாவில் புதிய வைரஸ் ஒன்று வேகமாக பரவி வருகிறது. ஹியூமன் மெடா நிமோ வைரஸ் எச்எம்பிவி ( Human MetaPneumo Virus) என்று பெயரிடப்பட்டு உள்ள இந்த வைரஸ், குழந்தைகள் மற்றும் முதியவர்களை அதிகம் தாக்குகிறது. இதனால், மருத்துவமனைகள் நிரம்பி வழிவதாக கூறப்படுகிறது. எச்எம்பிவி எனப்படும் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுபவர்களுக்கு கடுமையான காய்ச்சல், நுழையீரல் தொற்று பாதிப்பு ஏற்படுவதாகவும் தெரிகிறது.

இந்த வைரஸ் பரவலை பரவக்கூடிய தொற்று நோயாக சீனா சுகாதாரத்துறையினர் இன்னும் அறிவிக்கவில்லை. ஆனால், குளிர்காலங்களில் மூச்சு மற்றும் சளி தொந்தரவுகள் அதிகரிக்கும் என்பதால், அதிகமானோர் மருத்துவமனைகளில் குவிந்து வருவதை கண்காணித்து வருவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எச்எம்பிவி வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கு இருமல், தும்மல், தொண்டை எரிச்சல் , மூச்சுவிடுவதில் பிரச்னை உள்ளிட்டவை முதலில் ஏற்படும். குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு இது கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும். நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதவர்களுக்கும் பாதிப்பு அதிகமாக இருக்கும்.

இந்த வைரஸ் கடந்த 2001ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது., பொதுவாக சுவாசப்பாதை மற்றும் தொண்டையில் தான் தொற்றை ஏற்படுத்தும். ஒரு சிலருக்கு நிமோனியா, ஆஸ்துமா உள்ளிட்டவற்றை உண்டாக்கும். இந்த வைரஸ் காரணமாக 3 முதல் 6 நாட்கள் வரை பாதிப்பு இருக்கும். அதேநேரத்தில் வைரஸ் தொற்றின் தாக்கத்தை பொறுத்து இது மாறுபடும்.

தடுப்பது எப்படி

எச்எம்பிவி வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாக்க கைகளை சோப் மற்றும் தண்ணீர் மூலம் 20 நொடிகள் கழுவ வேண்டும். கைகளை கழுவாமல், கண்கள், மூக்கு மற்றும் வாய் ஆகியவற்றை தொடக்கூடாது. இந்த வைரஸ் பாதிப்பு உள்ளவர்களுடன் தொடர்பு கூடாது. வெளியில் செல்லும்போது மாஸ்க் அணிய வேண்டும்.

தடுப்பூசி

தற்போது வரை இந்த வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை அளிக்க எந்த சிகிச்சையும் இல்லை. தடுப்பூசிகளும் இல்லை. சாதாரணமாக அளிக்கப்படும் சிகிச்சையே அளிக்கப்படுகிறது. இப்பிரச்னை உலக நாடுகள் இடையே கவலையை ஏற்படுத்தி உள்ளது. அந்நாட்டை உன்னிப்பாக கவனித்து வருகின்றன.

தினமலர் – இந்திய ஊடக அறிக்கை

சாரதி அனுமதிப்பத்திரங்களை அச்சிடுவதில் தாமதம்!

0

அச்சிடுவதில் ஏற்பட்டிருந்த தாமதம் காரணமாக, தற்போது நிலுவையில் உள்ள சாரதி அனுமதிப்பத்திரங்களை ஒரு மாதத்திற்குள் அச்சிட்டு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குமார குணசேன தெரிவித்தார்.

அதற்கமைய, அச்சிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ள சுமார் 1,30,000 சாரதி அனுமதிப்பத்திரங்களை ஜனவரி மாதத்திற்குள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

அண்மையில் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் வேரஹெர அலுவலகத்திற்கு திடீர் விஜயமொன்றை மேற்கொண்டிருந்த போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்நிகழ்வில் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் பிரதியமைச்சர் ஜனித ருவன் கொடித்துவக்குவும் கலந்துகொண்டார்.

நிறுவனத்தில் இணையவழி முறை மூலம் சேவைகளை பேணுவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் அமைச்சர் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

அலுவலகத்தின் கட்டமைப்பு மற்றும் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்த பிரதியமைச்சர்கள், தற்போதைய தொழில்நுட்ப முறைகளுக்குப் பதிலாக, அதிக திறன் வாய்ந்த நவீன முறைகளைப் பயன்படுத்தி, வினைத்திறனான பொதுச் சேவையை வழங்கும் ஒரு அரச நிறுவனமாக மாற்றத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றனர்.

ஊடக சுதந்திரம் ஒடுக்கப்படுகிறதா?

0

தற்போதைய அரசாங்கம், ஒரு அரசாங்கமாக ஊடக சுதந்திரத்தை அதிகபட்சமாக பாதுகாப்பதாகவும் ஊடக சுதந்திரத்திற்காக பொய்ப் பிரச்சாரங்களை மேற்கொள்ளாதிருக்க வேண்டும் என்றும் சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயத்திஸ்ஸ தெரிவித்தார்.

இன்று (03) அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற அரசாங்கத்தின் விசேட ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டார்.

தற்போதைய அரசாங்கம் தகவல்களை மக்களுக்குத் தெரிவிக்கும் போது ஊடகவியலாளர்களுக்கு அதிகூடிய சந்தர்ப்பம் வழங்குவதாகவும் ஊடக சுதந்திரத்தில் கை வைப்பதற்கு எவ்விதத்திலும் தயார் இல்லை என்றும் சுகாதார ஊடகத்துறை அமைச்சர் இதன்போது மேலும் சுட்டிக்காட்டினார்.

கருத்து மற்றும் பேச்சு வெளிப்படுத்தும் சுதந்திரம் உயர் மட்டத்தில் பாதுகாப்பதற்காக செயற்படுவதுடன் ஜனநாயகத்தை உயர்ந்த மட்டத்தில் பாதுகாப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

ஏதேனும் சிறு இலக்குகளை இலக்குகளுடன் மிகவும் முரண்பாட்டுடன் மற்றும் தீங்கிழைக்கும் யாருக்கேனும் தமது வர்த்தக அல்லது அரசியல் நோக்கங்களுக்காக ஊடகத்துறையைப் பயன்படுத்துவதாயின் அல்லது அதற்காகத் தமது செய்தித்தாள் அல்லது அலைவரிசையைப் பயன்படுத்துவதாயின் அது தொடர்பாக நடவடிக்கை எடுப்பதற்கு மக்களுக்காக அரசாங்கத்திற்கு உரிமை உள்ளதாகவும் வலியுறுத்தினார்.

முதலாவதாக நாட்டில் மக்கள் மற்றும் மக்களின் பாதுகாப்பு அரசாங்கத்திற்கு முக்கியமானது என குறிப்பிட்ட வெகுசன ஊடக அமைச்சர், மக்களின் ஒற்றுமை, நாட்டின் பிராந்திய ஒருமைப்பாடு, ஒற்றுமை என இவை அனைத்தையும் பாதுகாப்பதாக யாரேனும் அல்லது குறிக்கோளுடன் நிறைவேற்றும் பொய்யான திரிபுபடுத்தப்பட்ட செய்திகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்குத் தயார் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

நாடு சுவாசிப்பதற்கு ஆரம்பித்துள்ள சந்தர்ப்பத்தில் அதனை நாசப்படுத்துவது நாட்டுக்கு செய்யும் துரோகம் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.