Tuesday, June 30, 2026
Sponsored advertisementspot_img
Home Blog Page 310

தெலுங்கானாவில் போட்டியிட்ட நடிகர் பாலகிருஷ்ணாவின் நிலை!

0

18வது மக்களவைத் தேர்தல் இந்தியா முழுவதும் ஒவ்வொரு மாநிலமாக 7 கட்டங்களாக நடைபெற்ற நிலையில் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகி வருகின்றன. மாலை 6.30 நிலவரப்படி மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் 294 தொகுதிகளில் பாஜக முன்னிலை வகித்து வருகிறது. காங்கிரஸ் 231 இடங்களிலும், மற்றவை 18 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகிறது.

இதனிடையே ஆந்திராவில் நாடாளுமன்றத் தேர்தலோடு சட்டமன்ற தேர்தலும் நடந்தது. அதற்கான வாக்கு எண்ணிக்கையும் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்தத் தேர்தலில் ஆட்சியில் இருந்த ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி ஒரு அணியாகவும், காங்கிரஸ் ஒரு அணியாகவும், பா.ஜ.கவோடு தெலுங்கு தேசம், ஜன சேனா உள்ளிட்ட கட்சிகள் ஒரு அணியாகவும் களம் கண்டனர். ஆந்திராவில் மொத்தம் 175 சட்டசபை தொகுதிகளுக்கும், தெலுங்கு தேசம் 142 தொகுதிகளில் முன்னிலையில் வகித்து ஆட்சியைப் பிடிப்பதற்கான வாய்ப்பிருக்கிறது. 

இதில் நடிகரும் ஜன சேனா கட்சி தலைவருமான பவன் கல்யாண், பிதாபுரம் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். இவருக்கு சிரஞ்சீவி, அல்லு அர்ஜுன் உள்ளிட்ட திரை பிரபலங்கள் எக்ஸ் வலைத்தளம் வாயிலாக வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் தெலுங்கு தேசம் கட்சி சார்பில் இந்துப்பூர் தொகுதியில் போட்டியிட்ட நடிகர் பாலகிருஷ்ணா 1,07,250 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இந்துப்பூர் தொகுதியில் ஏற்கெனவே 2014 மற்றும் 2019 ஆகிய சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

தம்பி ஓரமா உட்காரு உனக்கெல்லாம் இடம் இல்லை..

0

2024 டி20 உலகக் கோப்பை தொடருக்கான உத்தேச அணியில் அதிரடி ஆட்டம் ஆடக் கூடிய துவக்க வீரர் ஜெய்ஸ்வால் இடம் பெற்று இருந்தார்.

அவர் இடது கை பேட்ஸ்மேன் ஆவார். டி20 உலகக்கோப்பை சாம்பியன் இந்தியாவுக்கு நேர்ந்த கதி..

டாப் அணிகளை காலி செய்த பாகிஸ்தான் எப்போதும் இந்திய அணி துவக்க ஜோடியாக ஒரு வலது கை பேட்ஸ்மேன் மற்றும் ஒரு இடது கை பேட்ஸ்மேனை பயன்படுத்தும். அந்த வகையில் அவருக்கு டி20 உலகக் கோப்பை தொடரில் போட்டிகளில் ஆட வாய்ப்பு கிடைக்கும் என முதலில் கருதப்பட்டது. ஆனால், விராட் கோலி இந்திய டி20 அணியில் இடம் பெற்ற பின் அவரை துவக்க வீரராகவும் களமிறங்க வைக்க திட்டம் உருவானது.

ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி துவக்க வீரர்களாக களம் இறங்கும் வகையில் இந்திய அணி திட்டமிடப்பட்டு வருவதால் ஜெய்ஸ்வாலுக்கு போட்டிகளில் விளையாட வாய்ப்பு கிடைக்காத நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் பயிற்சிப் போட்டியிலாவது அவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என ரசிகர்கள் நம்பினர்.

வங்கதேச அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் இந்தியா 14 வீரர்களுடன் களமிறங்கியது. பயிற்சிப் போட்டியில் பேட்டிங்கில் 11 வீரர்களும் பவுலிங்கில் 11 வீரர்களும் விளையாடலாம் என்பதால் இந்திய அணி அதை பயன்படுத்தி 14 வீரர்களுடன் களம் இறங்கியது.

விராட் கோலிக்கு மட்டும் ஓய்வு அளிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் துவக்க வீரராக விராட் கோலியின் காலியாக இருந்ததை அடுத்து ஜெய்ஸ்வால்-க்கு துவக்க வீரராக விளையாட வாய்ப்பு கிடைக்கும் என அனைவரும் நம்பினர். ஆனால், ரோஹித் சர்மாவுடன், சஞ்சு சாம்சன் துவக்க வீரராக களம் இறங்கினார். இது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இந்த போட்டி முழுவதும் ஜெய்ஸ்வாலுக்கு பேட்டிங் செய்ய வாய்ப்பு அளிக்கப்படவில்லை. “பயிற்சி போட்டியில் கூடவா ஜெய்ஸ்வாலுக்கு வாய்ப்பு அளிக்கக்கூடாது” என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ஒருவேளை உலகக்கோப்பை தொடரின் இடையே விராட் கோலி பேட்டிங் வரிசை மாற நினைத்தால் அல்லது காயம் காரணமாக பேட்டிங் வரிசையை மாற்ற வேண்டி வந்தால் அப்போது ஜெய்ஸ்வால் அணியில் இடம் பெற வேண்டிய நிலை ஏற்படும்.

அந்த நோக்கத்திலாவது அவருக்கு பயிற்சிப் போட்டியில் வாய்ப்பு கொடுத்து இருக்கலாம். அதையும் செய்யவில்லை கேப்டன் ரோஹித் சர்மா.

டி20 உலகக்கோப்பை வரலாற்றில் பிரம்மாண்ட சாதனை

0

2024 டி20 உலகக் கோப்பை தொடரின் முதல் போட்டியிலேயே மாபெரும் வரலாற்று சாதனை படைத்தது அமெரிக்க அணி. அந்த அணியின் அதிரடி ஆட்டக்காரர் ஆரோன் ஜோன்ஸ் ஆடிய ஆட்டத்தால் தோல்வியை நோக்கி சென்று கொண்டிருந்த அமெரிக்க அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஆரோன் ஜோன்ஸ் 10 சிக்ஸர் அடித்து டி20 உலக கோப்பை வரலாற்றில் மிகப்பெரும் சாதனையை செய்தார். அதில் 103 மீட்டருக்கு மேல் அடித்த ஒரு சிக்ஸ் மைதானத்தை விட்டு வெளியே சென்றது. இதை அடுத்து ஆரோன் ஜோன்ஸ் அமெரிக்காவின் நாயகனாக மாறினர்.

T20 World Cup Indian national cricket team Cricket 20 2024

இந்தப் போட்டியில் கனடா அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியில் நவ்நீத் 61, நிக்கோலஸ் கிர்ட்டன் 51. ஸ்ரேயாஸ் மவ்வா 32 ரன்கள் சேர்த்தனர். அந்த அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 194 ரன்கள் சேர்த்தது. மிகப்பெரிய இலக்கை நோக்கி அமெரிக்க அணி சேஸிங் செய்தது. அந்த அணி முதல் 8 ஓவர்களில் 48 ரன்கள் மட்டுமே எடுத்து இரண்டு விக்கெட்களை இழந்து இருந்தது.

அப்போது ஆரோன் ஜோன்ஸ் மற்றும் ஆண்ட்ரியாஸ் களத்தில் இருந்தனர். இருவரும் அதிரடியாக ரன் குவிக்கத் துவங்கினர். ஆண்ட்ரியாஸ் 46 பந்துகளில் 65 ரன்கள் சேர்த்தார். ஆரோன் ஜோன்ஸ் முதலில் நிதான ஆட்டம் ஆடினாலும், அதன் பின் சிக்ஸர் மழை பொழிந்தார். அவரது அதிரடியால் 13 மற்றும் 14 ஆவது ஓவர்களில் மொத்தமாக 53 ரன்கள் குவித்தது அமெரிக்க அணி.

ஆரோன் ஜோன்ஸ் 40 பந்துகளில் 94 ரன்கள் அடித்து கடைசி வரை ஆட்டம் இழக்காமல் இருந்தார். அவர் நான்கு ஃபோர், பத்து சிக்ஸ் அடித்து இருந்தார். இதை அடுத்து வெற்றி பெற வாய்ப்பில்லை என கருதப்பட்ட அமெரிக்கா அணி 17.4 ஓவர்களில் இலக்கை எட்டி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 10 சிக்ஸ் அடித்த ஆரோன் ஜோன்ஸ் டி20 உலகக் கோப்பை தொடரில் ஒரே போட்டியில் அதிக சிக்ஸ் அடித்த வீரர்கள் பட்டியலில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார்.

கிறிஸ் கெயில் ஒரு முறை ஒரே போட்டியில் 11 சிக்ஸர்களும், மற்றொரு போட்டியில் 10 சிக்ஸர்களும் அடித்து இருந்தார். அந்த சாதனையை நெருங்கிய ஆரோன் ஜோன்ஸ் 10 சிக்ஸர்கள் அடித்து இரண்டாம் இடத்தை பிடித்தார்.

உலகக்கோப்பை வரலாற்றில் வெற்றிகரமாக நடத்தப்பட்ட ரன் சேஸ்களில் துவக்க வீரராக அல்லாத வீரர் ஒருவர் அடித்த அதிக ரன்கள் என்ற சாதனையை செய்து இருக்கிறார் ஆரோன் ஜோன்ஸ். மேலும், உலகக் கோப்பையில் ஒரே போட்டியில் அதிக சிக்ஸ் அடித்த துவக்க வீரர் அல்லாத வீரர் என்ற வரலாற்று சாதனைகளையும் நிகழ்த்தினார்.

மாணவர்கள் மத்தியில் அதிகரித்த அபாயகரம்

0

இலங்கையில் பாடசாலை மாணவர்கள் மத்தியில் புகையிலைப் பொருட்களின் பாவனை அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் தலைவர், வைத்தியர் ஷாக்கிய நாணயக்கார இதனைத் தெரிவித்துள்ளார்.

புகையிலைப் பொருட்கள் தற்போது பாடசாலைகளில் பெருகி வருகின்றமை அவதானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் சர்வதேச ரீதியாக இ-சிகரெட்டுக்களின் பாவனை அதிகரித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இ-சிகரெட்டுக்கள் மூலம் நிகோடின் பழக்கம் அதிகரிப்பதுடன் இது உடலிற்கு பாதகமான விளைவுகளை ஏற்படுத்துகிறது.

நிகோடின் பயன்பாட்டால் தலைச்சுற்றல், வாந்தி மற்றும் பொதுவான உடல் அசௌகரியம் போன்ற பாதகமான விளைவுகள் ஏற்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, நிகோடினின் ஆபத்துக்கள் குறித்து சிறுவர்களுக்கு தெளிவுப்படுத்த வேண்டிய பொறுப்பு பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு உள்ளதாக தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் தலைவர், வைத்தியர் ஷாக்கிய நாணயக்கார தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதிக்கு ஆப்பு வைக்க தயாராகும் மொட்டுக்கட்சி

0

ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முயற்சிப்பாராயின் அரசாங்கத்தில் இருந்து விலகவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது. 

நெலும் மாவத்தையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று (31) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்துரைத்த அந்த கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 

ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல் என்பவற்றை 2 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்க வேண்டும் என, ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித்த ரங்கே பண்டார யோசனை ஒன்றை முன்வைத்திருந்தார். 

இந்த நிலையில் தேர்தலை பிற்போடுவதற்கு தங்களது கட்சி ஒத்துழைப்பு வழங்காது என, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். 

அத்துடன் கட்சி என்ற ரீதியில் தங்களது தரப்பினர் குறித்த யோசனைக்கு எதிர்ப்பை வெளியிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

அரசியலில் அதிசயத்தை நிகழ்த்தியவர் ரணில்

0

இலங்கையில் ஒரு அரசியல் அதிசயத்தை அதிபர் ரணில் விக்ரமசிங்க நிகழ்த்தியுள்ளதாக நோர்வேயின் முன்னாள் காலநிலை மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் (Erik Solheim) தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தை அவர் தனது எக்ஸ் தள(twitter) பக்கத்தில் இட்ட பதிவொன்றிலேயே குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக குறித்த பதிவில் அவர் மேலும் தெரிவிக்கையில், “18 மாதங்களுக்கு முன்பு நாடு அதன் ஆழமான பொருளாதார நெருக்கடியில் இருந்தது.

தொடர்ந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டு எரிபொருளை வாங்க நீண்ட நெடுந்தொலைவுகள் இருந்ததுடன் பணவீக்கம் வானளவாக உயர்ந்ததோடு பெரும்பாலான வணிகங்கள் சரிவின் விளிம்பில் இருந்தன.

அப்போதைய அதிபரை மக்கள் வீழ்த்தியதுடன் தற்போது நிலத்தில் ஸ்திரத்தன்மை திரும்பி பணவீக்கம் குறைவாக உள்ளதுடன் மின்வெட்டு மற்றும் எரிபொருளுக்காக அணிவகுத்து நிற்பது கடந்த கால விடயங்கள்.

பொருளாதார துன்பங்கள்

பல இலங்கையர்களுக்கு வாழ்க்கை இன்னும் கடினமாக உள்ளதுடன் பொருளாதார ரீதியில் பல துன்பங்கள் உள்ளன ஆனால் இலங்கை முன்னோக்கிப் பார்க்க ஆரம்பிக்கலாம்.

அரசியலில் அதிசயத்தை நிகழ்த்தியவர் ரணில் : எரிக் சொல்ஹெய்ம் பெருமிதம் | Eric Solheim S Twitter Post On Gotabaya

சிறந்த எதிர்காலத்திற்கான அனைத்து வாய்ப்புகளுக்கும் நெருக்கடி நிலை ஏற்பட்ட போது அதிபர் ரணில் விக்ரமசிங்க தப்பி ஓடாதவர். 

கொழும்பில் எனது பழைய நண்பர்களான ரணில் மற்றும் அவரது மனைவி மைத்திரியுடன் சுவையான இரவு உணவு அருந்தியது அருமையாக இருந்தது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா தடுப்பூசி ஆபத்தானது-ஒப்புக்கொண்ட தயாரிப்பு நிறுவனம்

0

கோவிஷீல்டு (Covishield) தடுப்பூசியானது பக்கவிளைவை ஏற்படுத்துவதாக அதன் நிறுவனமான இங்கிலாந்தின் அஸ்ட்ரா ஜெனெகா நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் சீனாவில் உருவான கொரோனா (Corona) வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து கொரோனா தடுப்பூசியை பல்வேறு நாடுகள் கண்டுபிடித்த நிலையில் இதில் இங்கிலாந்தை சேர்ந்த அஸ்ட்ரா ஜெனெகா (AstraZeneca) நிறுவனம் மற்றும் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் (University of Oxford) இணைந்து தடுப்பூசியை உருவாக்கின.

கோவிஷீல்டு தடுப்பூசி

இந்த தடுப்பூசி இந்தியாவில் கோவிஷீல்டு என்ற பெயரில் விநியோகிக்கப்பட்டது.

இந்த நிலையில் அஸ்ட்ரா ஜெனெகா நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியை செலுத்திய பிறகு மூளையில் பாதிப்பு ஏற்பட்டதாக கூறி ஜேமி ஸ்காட் என்பவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இதேபோல் 51 வழக்குகள் நஷ்டஈடு கேட்டு தொடரப்பட்ட நிலையில் இவ்வழக்குகள் மீது விசாரணை நடந்து வந்ததது.

பக்க விளைவு

அஸ்ட்ரா ஜெனெகா நிறுவனம் இது தொடர்பான ஆவணத்தில் கொரோனா தடுப்பூசி ஒரு அரிய பக்க விளைவை ஏற்படுத்தும் என்று ஒப்புக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பக்கவிளைவை ஏற்படுத்தும் கோவிஷீல்டு தடுப்பூசி: ஒப்புகொண்ட நிறுவனம் | Uk Approves Corona Vaccine Impact

கொரோனா தடுப்பூசி அரிதான சந்தர்ப்பங்களில் இரத்த உறைவு மற்றும் குறைந்த பிளேட்லெட் எண்ணிக்கைக்கு(டி.டி.எஸ்.) வழிவகுக்கும் நிலையை ஏற்படுத்துமென சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஆனால் இது மிகவும் அரிதான சந்தர்ப்பங்களில் மட்டுமே நடக்குமெனவும் எனவே பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லையெனவும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாளை இந்திய பொதுத் தேர்தல்-சுவரஷ்யமான தகவல் இதோ

0

உலகின் மிகப்பெரிய ஜனநாயக தேர்தல் நடவடிக்கையாக கருதப்படும் இந்திய பொதுத்தேர்தல் நாளை (19) ஆரம்பமாகவுள்ளது.

இந்திய நாடாளுமன்றம் பிரதிநிதிகள் சபை (லொக்சபா) மற்றும் மேல் சபை (ராஜ்யசபா) ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

543 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19) பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளதுடன் இரண்டரை மாதங்களுக்கு 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது.

970 மில்லியன் மக்கள் வாக்களிக்க

முதல் கட்ட தேர்தல் நாளையும் (19), 2ஆவது கட்டம் ஏப்ரல் 26ஆம் திகதியும், மூன்றாம் கட்டம் மே 7ஆம் திகதியும், நான்காம் கட்டம் மே 13ஆம் திகதியும், ஐந்தாம் கட்டம் மே 20ஆம் திகதியும், ஆறாம் கட்டம் மே 25ஆம் திகதியும், ஏழாவது கட்டம் ஜூன் 1ஆம் திகதியும் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

நாளை ஆரம்பமாகவுள்ளது! இந்திய பொதுத்தேர்தல் | Indian General Election Starts Tomorrow

இந்தநிலையில் ஜூன் 4ஆம் திகதி வாக்கு எண்ணிக்கை மற்றும் முடிவுகள் வெளியிடப்படும் எனவும் இந்த பொதுத் தேர்தலில் 970 மில்லியன் மக்கள் வாக்களிக்க பதிவு செய்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

நரேந்திர மோடி கடந்த 2014ஆம் ஆண்டு முதல் இந்தியாவுக்கு வலுவான தலைமையை வழங்கி வரும்நிலையில் மோடியின் பாஜக தங்களுக்கு நட்பான அரசியல் கட்சிகளுடன் கூட்டணி அமைத்துள்ளது. இந்தக் கூட்டணிக்கு தேசிய ஜனநாயகக் கூட்டணி என்று பெயர்.

நாடாளுமன்ற தேர்தலில் களமிறங்கும் தமிழ் திரைப்பட பிரபலங்கள்!

கட்சி அறிக்கை வெளியீடு

இந்தப் பொதுத் தேர்தலில் மோடியின் பாஜக தனித்து 370 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும். ஒட்டுமொத்தமாக, பாஜக உள்ளிட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணி 400க்கும் மேற்பட்ட இடங்களைக் கைப்பற்றும் என்று இந்திய அரசியல் ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.

நாளை ஆரம்பமாகவுள்ளது! இந்திய பொதுத்தேர்தல் | Indian General Election Starts Tomorrow

2019 பொதுத் தேர்தலில் மோடி இரண்டாவது முறையாக பிரதமரானார். அந்தத் தேர்தலில் பாஜக 303 இடங்களில் வெற்றி பெற்றது. இது ஒரு மகத்தான சாதனை. 1980இல் பாஜக இந்து தேசியவாதக் கட்சியாக அரசியல் களத்தில் இறங்கிய பிறகு, இவ்வளவு பெரிய வாக்குகளைப் பெற்றது இதுவே முதல் முறை.

நாளை (19) நடைபெறவுள்ள பொதுத் தேர்தலையொட்டி இந்தியா முழுவதும் ஒரு மில்லியன் வாக்களிப்பு நிலையங்கள் நிறுவப்படவுள்ளதுடன்15 மில்லியன் தேர்தல் அதிகாரிகள் கடமைகளில் ஈடுபடுத்தப்படுவார்கள் என தேர்தல்கள் ஆணைக்குழு தெளிவுபடுத்தியுள்ளது.

பொதுத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் நடந்து வரும் நிலையில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும், அவரது ‘பாரதிய ஜனதாவும்’ தங்களது கட்சி அறிக்கையை சமீபத்தில் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நீதிமன்றில் அவமானப்பட்ட இளையராஜா

0

பாடல் காப்புரிமை தொடர்பான வழக்கில், அனைவருக்கும் மேலானவர் தான் இந்த இளையராஜா என்று சென்னை மேல் நீதிமன்றத்தில் இளையராஜா தரப்பு சட்டத்தரணி; வாதம் ஒன்றை முன்வைத்தார் எனினும் இந்த வாதத்தை ஏற்க மேல் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக இளையராஜா திகழ்கிறார்.

இந்தநிலையில் இளையராஜா இசையமைத்த 4 ஆயிரத்து 500 பாடல்களை, எக்கோ மற்றும் அகி உள்ளிட்ட இசை நிறுவனங்கள் ஒப்பந்த காலம் முடிந்த பிறகும் காப்புரிமை பெறாமல் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.

மேன்முறையீடு செய்த இளையராஜா

இதற்கு எதிராக சென்னை மேல் நீதிமன்றத்தில் இளையராஜா வழக்கை தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் தயாரிப்பாளர்களிடம் உரிமையை பெற்று இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்த இசை நிறுவனங்களுக்கும் உரிமை உள்ளது என உத்தரவிட்டது.

இதனையடுத்து மேல் நீதிமன்றத்தன் இந்த உத்தரவை எதிர்த்து இளையராஜா மேன்முறையீடு செய்தார்.

இந்தநிலையில் இரண்டு நீதிபதிகள் அமர்வில் இந்த மேல்முறையீடு விசாரிக்கப்பட்டு, பாடல்களைப் பயன்படுத்த இசை நிறுவனங்களுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது.

எனினும் தயாரிப்பாளரிடம் உரிமையை பெற்றுள்ளதால் பாடல்களை பயன்படுத்த உரிமை உள்ளதாக கூறி எக்கோ நிறுவனம் சார்பில் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இது தொடர்பான வழக்கு கடந்த 10ம் திகதி மேல் நீதிமன்றில் விசாரணைக்கு வந்தது.

இதன்போது இசை நிறுவனம் தரப்பில் முன்னிலையான சட்டத்தரணி, ‛திரைப்படத்துக்காக தயாரிப்பாளரிடம் ஊதியம் பெறும் இசையமைப்பாளர், ரோயலிட்டி என்ற அறிவுசார் சொத்துரிமையை தவிர மற்ற அனைத்து உரிமைகளையும் இழந்துவிடுகிறார்.

இளையராஜா மேலானவர்

எனவே இந்த விடயத்தில் இளையராஜாவுக்கு உரிமை இருக்கிறதா? இல்லையா? என்பதை இறுதி விசாரணையில் தான் முடிவு செய்ய முடியும் என்ற வாதத்தை முன்வைத்தார்.

இளையராஜா தான் தான் அனைவருக்கும் மேலானவர் என நினைக்கிறார் என்றும் சட்டத்தரணி இதன்போது தெரிவித்தார்.

இதன்போது குறுக்கிட்ட இளையராஜாவின் சட்டத்தரணி, ‛‛ஆம் இளையராஜா அனைவருக்கும் மேலானவர் தான்’ எனக்கூறினார். வீம்புக்காக இதனை சொல்வதாக நினைக்க வேண்டாம்’ என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்தநிலையில் நேற்று குறித்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மேல் நீதிமன்ற நீதிபதி மகாதேவன், ‛‛இசை மூர்த்திகளான முத்துஸ்வாமி தீக்சீதர், தியாகராஜர் மற்றும் சியாமா சாஸ்திரிகள்” ஆகியோர் எல்லோருக்கம் மேலானவர்கள் என்று கூறலாம். ஆனால், இளையராஜாவை அப்படி கூறுவதை ஏற்கமுடியாது என்று குறிப்பிட்டார்.

எனினும் இளையராஜா தரப்பு சட்டத்தரணி, ‛‛எல்லோருக்கும் மேலானவன் எனக்கூறியது, பாடல்கள் மீதான காப்புரிமை விவகாரத்தில் மட்டுமே. மற்றபடி இளையராஜா, தன்னை அப்படி கூறிக்கொண்டது இல்லை என்பது உங்களுக்கே தெரியும்’ என்று நீதிபதியிடம் தெரிவித்தார்.

இதனையடுத்து நீதிமன்றம் விசாரணையை எதிர்வரும் 24ம் திகதிக்கு ஒத்திவைத்தது.

COPE இலிருந்து அதிரடியாக விலகிய 8 எம்.பி.க்கள்

0

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி எம்.பி. சரித்த ஹேரத், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எம்.பி. இராசமாணிக்கம் சாணக்கியன், ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி.க்களான எஸ்.எம். மரிக்கார், ஹேஷா விதானகே, நளின் பண்டார உள்ளிட்டோர், அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவான, (CoPE) கோப் குழுவில் இருந்து இராஜினாமா செய்துள்ளதாக அறிவித்துள்ளனர்.

கோப் குழுவின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன கடந்த மார்ச் 07ஆம் திகதி தெரிவு செய்யப்பட்டிருந்தார். அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அதில் அங்கம் வகிக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் தற்போது ஒவ்வொருவராக இராஜினாமா செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பில் தனது உத்தியோகபூர்வ X கணக்கில் பதிவிட்டுள்ள சரித்த ஹேரத், குறித்த முடிவை உத்தியோகபூர்வமாக சபாநாயகருக்கு அறிவித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, எஸ்.எம். மரிக்கார் எம்.பி தனது இராஜினாமா குறித்து தனது பேஸ்புக் பக்கத்தில் இடுகையொன்றை இட்டுள்ளார்.

அதில் குறிப்பிட்டுள்ள அவர்,

இலங்கையின் அரச நிறுவனங்களில் இடம்பெற்று வரும் ஊழல் மோசடிகள் தொடர்பில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளாமை மற்றும் குழுவின் தலைவர் பதவிக்கு பொருத்தமற்ற ஒருவரை நியமித்தமை போன்ற காரணங்களால், எதிர்காலத்தில் ஊழல் மோசடிகள் தொடர்பாக நடவடிக்கை எடுப்பதில் நம்பிக்கை வைக்க முடியாது என்பதால், இன்று முதல் கோப் குழுவிலிருந்து விலக தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளார்.

இதேவேளை, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எம்.பி. இராசமாணிக்கம் சாணக்கியன் தனது இராஜினாமா குறித்து தனது பேஸ்புக் பக்கத்தில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இன்று நான் கோப் குழுவில் இருந்து இராஜினாமா செய்தேன், ஏனெனில் அது அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு அல்ல, மாறாக அது ரோஹித அபேகுணவர்தனவை தலைவராக கொண்ட மொட்டு எண்டர்பிரைஸ் குழுவாகும்.

தமது இராஜினாமா குறித்து, பாராளுமன்ற உறுப்பினர்களான தயாசிறி ஜயசேகர, ஹேஷா விதானகே, நளின் பண்டார,  இராசமாணிக்கம் சாணக்கியன் ஆகியோர் இணைந்து கூட்டாக ஊடகவியலாளர் சந்திப்பொன்றையும் முன்னெடுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில், நேற்றையதினம் (18) ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் இரான் விக்ரமரத்ன விலகிய நிலையில், இன்றையதினம் விலகிய தயாசிறி ஜயசேகர, சரித்த ஹேரத், எஸ்.எம். மரிக்கார், ஹேஷா விதானகே, நளின் பண்டார உள்ளிட்ட 8 பேர் இதுவரை கோப் குழுவிலிருந்து விலகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.