Tuesday, March 24, 2026
Sponsored advertisementspot_img
Home Blog Page 45

2025 Recap | பேரிடரைச் சந்தித்த 10 உலக நாடுகள்!

0

அமெரிக்காவில் ஏற்பட்ட காட்டுத் தீ, இன்னும் சில நாடுகளில் வீசிய சூறாவளிப் புயல்கள், பெருவெள்ளம், நிலநடுக்கம் என நடப்பாண்டில் இயற்கை பேரிடர்களைச் சந்தித்த நாடுகள் குறித்து இங்கே விரிவாகக் காண்போம்.

2026ஐ வரவேற்க இன்னும் சில தினங்களே இருக்கும் நிலையில், ஒவ்வொரு புத்தாண்டையும் நாம் இனிதாகத்தான் வரவேற்கிறோம். ஆனால், இயற்கையால் சூழப்பட்டிருக்கும் இந்த உலகம் அவற்றின் எதிர்பாராத சீற்றங்களால் பாதிப்புக்குள்ளாகின்றன. நிலநடுக்கம், சுனாமி, பெருவெள்ளம், காட்டுத் தீ, மண்சரிவு உள்ளிட்ட இயற்கைச் சீற்றங்கள் எப்போது வரும் எனத் தெரியாது;

ஆனால், வந்துவிட்டால் பேரழிவை நிகழ்த்தாமல் நகராது. அப்படியான இயற்கைச் சீற்றங்களை நடப்பாண்டும் மக்கள் சந்தித்தனர். அமெரிக்காவில் ஏற்பட்ட காட்டுத் தீ, இன்னும் சில நாடுகளில் வீசிய சூறாவளிப் புயல்கள், பெருவெள்ளம், நிலநடுக்கம் என நடப்பாண்டில் இயற்கை பேரிடர்களைச் சந்தித்த நாடுகள் குறித்தும் அவை எத்தகைய பாதிப்புகளைச் சந்தித்தன என்பது குறித்தும் இங்கே விரிவாகக் காண்போம்.

1. கலிபோர்னியாவில் காட்டுத் தீ

2025 Rewind top 10 world countries disaster incidents

காட்டுக்கு ராஜாவாக சிங்கம் இருந்தாலும் தனக்கென ஒரு வலி வரும்போது அதை எதிர்கொண்டுதான் ஆக வேண்டும். அதுபோல் உலகத்துக்கே மிகப்பெரிய வல்லரசாக அமெரிக்கா திகந்தாலும் தன் நாட்டுக்கு ஒரு பாதிப்பு என வரும்போது சற்று தடுமாறுவதென்பதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை. அந்த வகையில், அமெரிக்கா நடப்பாண்டில் மிகப்பெரிய காட்டுத் தீயை எதிர்கொண்டது. அமெரிக்கா அவ்வப்போது காட்டுத் தீயை எதிர்கொள்ளும் என்றாலும், கடந்த ஜனவரி்யில் தெற்கு கலிபோர்னியாவில் வரலாறு காணாத வகையில் ஏற்பட்ட காட்டுத் தீ, மோசமான சேதத்தை விளைவித்தது. மழையில்லாமல் வறண்டு புதர் மண்டிய நிலப்பரப்பு மற்றும் மலைப் பகுதியில் இருந்து கடலை நோக்கி வீசிய கடுமையான காற்று ஆகியவை காட்டுத் தீ பற்ற காரணமாகின. இந்தக் காட்டுத் தீயில் சுமார், 3,000 ஏக்கர் பகுதிகள் அழிந்து நாசமாகின. 10,000க்கும் மேற்பட்ட வீடுகள், கடைகள், அலுவலக கட்டடங்கள் சேதமடைந்தன. இதனால், சுமார் 1.76 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர். இந்தக் காட்டுத் தீ அமெரிக்கா மட்டுமல்ல, உலக நாடுகளின் அனைத்துத் தலைப்புச் செய்திகளிலும் இடம்பிடித்திருந்தன.

2. டெக்சாஸில் பெருவெள்ளம்

காட்டுத்தீ தொடர்பான நினைவலைகளையே அமெரிக்கா மக்கள் முழுமையாக மறந்திருக்காத நிலையில், அடுத்த சில மாதங்களில் அந்த நாடு இன்னொரு பேரழிவை எதிர்கொண்டது. அமெரிக்காவின் மத்திய பகுதியின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள கெர்கவுண்டியில் கடந்த ஜூலை மாதம் பெய்த கனமழை, அங்கிருந்த குவாடலுாப் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வழிவகுத்தது.

2025 Rewind top 10 world countries disaster incidents

கெர்கவுண்டியின் சராசரி ஆண்டு மழைப்பொழிவில் மூன்றில் ஒரு பங்கு மழை அதாவது, 30 செ.மீ., மழை ஒரே இரவில் அங்கு பெய்ததே நிலைமை மோசமாக காரணமானது. குவாடலூப் நதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக 131 பேர் பலியாகினர். பலர் காணாமல் போனதாக செய்திகள் வெளியாகியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

3. மியான்மரில் நிலநடுக்கம்

காட்டுத் தீயையும் பெருவெள்ளத்தையும் அமெரிக்கா கடந்தது என்றால், இன்னும் சில நாடுகள் கடுமையான நிலநடுக்கத்தையும் எதிர்கொண்டன. அதில் தென்கிழக்கு ஆசிய நாடான மியான்மரும் ஒன்று. 50 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வசிக்கும் மியான்மரில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும் என்றாலும், கடந்த மார்ச் 28ஆம் தேதி நண்பகல் 12.50 மணியளவில் அடுத்தடுத்து நிகழ்ந்த சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் பேசுபொருளாகின. தரையில் இருந்து 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவில் 7.7 மற்றும் 6.4 ஆக பதிவாகின.

2025 Rewind top 10 world countries disaster incidents

இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக கட்டடங்கள் பயங்கரமாகக் குலுங்கின. வானுயர்ந்த கட்டடங்கள் இடிந்து விழுந்தன. அப்போது, மிக உயர்ந்த கட்டடத்தின் மேல் தளத்தில் அமைக்கப்பட்டிருந்த நீச்சல் குளத்தில் இருந்த நீர், குலுங்கி வெளியே கொட்டிய வீடியோ இணையத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தின. மியான்மரில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தில் 3,500 பேர் பலியானதாகத் தகவல் வெளியானது. 5 ஆயிரத்திற்கும் அதிகமானோர் படுகாயமடைந்ததாகவும் அந்நாட்டு அரசு தெரிவித்தது.

4. சூடானில் நிலச்சரிவு

மியான்மர் கடுமையான நிலநடுக்கத்தைச் சந்தித்த நிலையில், சூடான் அதைவிடக் கொடுமையான நிலச்சரிவைச் சந்தித்தது. வடகிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள, ’கறுப்பு மக்களின் நிலம்’ எனப் பொருள்படும் சூடான் நாடானது, ராணுவத்துக்கும் துணை ராணுவத்துக்கும் இடையே உள்ளூர் அதிகாரப் போட்டியை எதிர்கொண்டு வருகிறது.

2025 Rewind top 10 world countries disaster incidents

இந்த நிலையில்தான் சூடானின் மேற்குப் பகுதியான மர்ரா மலையில் உள்ள டார்பரில் கடந்த செப்டம்பர் மாதம் பெய்த தொடர் கனமழையால், அப்பகுதியில் பெரியளவில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், தராசின் என்ற கிராமமே மண்ணில் புதைந்ததுடன், அங்கிருந்த 1,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக, அப்பகுதியை கட்டுப்பாட்டில் வைத்துள்ள கிளர்ச்சியாளர் குழுவான சூடான் விடுதலை இயக்க ராணுவம் தெரிவித்திருந்தது. சூடான் உள்நாட்டுப் போருக்கு மத்தியில் இது பெரும் பாதிப்பைச் சந்தித்தது கவனிக்கத்தக்கது.

5. பாகிஸ்தானில் பெருவெள்ளம்

நிலநடுக்கத்தால் மியான்மரும், நிலச்சரிவால் சூடானும் பாதிக்கப்பட்ட நிலையில், நமது அண்டை நாடான பாகிஸ்தான் அமெரிக்காவைப் போன்று பெருவெள்ளத்தைச் சந்தித்தது. பாகிஸ்தானில் கடந்த ஆகஸ்ட் மாதம் பெய்த வரலாறு காணாத மழையால், பஞ்சாப் மற்றும் அங்குள்ள முக்கிய நதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. மொத்தம் 13 கோடி மக்கள்தொகை உள்ள இந்த பஞ்சாப் மாகாணத்தில் 3,100-க்கும் மேற்பட்ட கிராமங்கள் வெள்ள நீரில் மூழ்கின. இவை தவிர, 2,900 சிறு கிராமங்களும் வெள்ள நீரில் மூழ்கியதாகச் செய்திகள் வெளியாகின.

2025 Rewind top 10 world countries disaster incidents

இந்த வெள்ளப்பெருக்கால், சுமார் 24 லட்சம் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். இந்த வெள்ளப்பெருக்கால், சுமார் 40 லட்சம் மக்கள் வீடுகளைவிட்டு வெளியேற்றப்பட்டு, நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். முன்னதாக, ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலுக்குப் பிறகு இந்தியா – பாகிஸ்தான் உறவில் மேலும் விரிசல் அடைந்த நிலையில், இந்திய அரசு தொடர்ந்து மூன்று முறை பாகிஸ்தானுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்தது குறிப்பிடத்தக்கது.

6. இந்தியாவிலும் பெருவெள்ளம்

பாகிஸ்தானுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்த இந்தியாவும், இதே வெள்ளப்பெருக்கை எதிர்கொண்டது வேதனையான விஷயம். ஆம், இந்தத் துயரம் வடகிழக்கு மாநிலங்களில் நிகழ்ந்தது. கடந்த ஜூன் மாதம் பெய்த தென்மேற்குப் பருவமழையின் தாக்கத்தை வடகிழக்கு மாநிலங்கள் எதிர்கொண்டன. அசாமில் தொடர்ந்து பெய்த கனமழையால், பிரம்மபுத்திரா, பராக் உள்ளிட்ட 10 நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

2025 Rewind top 10 world countries disaster incidents

இதனால் அருகிலிருந்த அருணாச்சல் பிரதேசமும், மேகாலயாவும் பாதிப்பைச் சந்தித்தன. காரணம், அங்கேயும் தொடர் மழை பெய்தது. இந்த வெள்ளப் பெருக்கால் அசாமின் 15 மாவட்ட மக்கள் பெரும் பாதிப்பை எதிர்கொண்டனர். மூன்று மாநிலங்களும் உயிரிழப்புகளையும் சந்தித்தன. லட்சக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்தனர். சாலைகளும், வீடுகளும் சேதமடைந்தன. இதே பாதிப்பை மணிப்பூர், உத்தரகாண்ட், இமாச்சல் பிரதேசம், ஜம்மு – காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்களும் சந்தித்தன.

7. இலங்கையைச் சூறையாடிய ‘டிட்வா’!

இரு துருவங்களாக விளங்கும் இந்தியாவும் பாகிஸ்தானும் பெருவெள்ளத்திற்கு இரையான நிலையில், இன்னொரு அண்டைநாடான இலங்கை, கடந்த நவம்பர் மாதம் உருவான ’டிட்வா’ புயலுக்கு இரையானது. கடந்த 20 ஆண்டுகளில் இலங்கையை தாக்கிய மிக மோசமான இயற்கைப் பேரிடர் எனக் கூறப்படுகிறது. ஏமனால் அரபு மொழியில், ’தீவு’ எனப் பெயர் சூட்டப்பட்ட அந்தப் புயல், தீவு நாட்டையே காவு வாங்கியது. வங்கக்கடலில் உருவான ‘டிட்வா’ புயல் இலங்கையை புரட்டிப் போட்டது. வரலாறு காணாத வகையில் பெய்த பெருமழையால் அந்நாட்டில் உள்ள பதுளை கண்டி, நுவரெலியா, மாத்தளை மற்றும் புத்தளம் உள்ளிட்ட மாவட்டங்கள் கடும் பாதிப்பை சந்தித்தன.

2025 Rewind top 10 world countries disaster incidents

புயலின் கோரத்தாண்டவத்தால் மொத்தம் 600க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி 150க்கும் மேற்பட்டோர் மாயமாகினர். இந்த புயலால், இலங்கையில் சுமார் 18 லட்சம் பேரின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. சுமார் 53 ஆயிரம் வீடுகள் சேதமடைந்தன. இந்தப் புயலால், இலங்கை முழுவதும் சுமார் 1,200 இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டிருப்பதாகக் கூறப்பட்டது.

8. இந்தோனேஷியாவைச் சீர்குலைத்த ’சென்யார்’!

‘டிட்வா’ புயல் இலங்கையைச் சின்னாபின்னமாக்கியது என்றால், ‘சென்​யார்’ புயல் இந்தோனேஷியாவையே சீர்குலைத்தது. தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேஷியா ஒரு தீவுக்கூட்ட நாடாக அறியப்படுகிறது. அதேநேரத்தில், இது கடல்கள், மலைகள், காடுகள் கொண்ட அழகான ஒரு நாடாகவும் காட்சியளிக்கிறது. இந்த நாடும் அடிக்கடி நிலநடுக்கங்களால் அழிவைச் சந்திக்கிறது. இந்நாடு, ‘பசிபிக் நெருப்பு வளையம்’ என்ற புவியியல் மண்டலத்தில் அமைந்துள்ளதால், உலகின் நிலநடுக்கங்களில் 90 சதவீதம் இந்த பகுதியில்தான் நிகழ்கின்றன. இது நடப்பாண்டில், ஒரு மாதத்தில் மட்டும் 1,400 நிலநடுக்கங்களை எதிர்கொண்டுள்ளது.

2025 Rewind top 10 world countries disaster incidents

இந்த நிலையில், இந்தோனேஷியாவின் மலாக்கா ஜலசந்தி பகுதிகளில் நில​விய காற்​றழுத்தத் தாழ்வு மண்​டலம் சென்​யார் புய​லாக வலுப்​பெற்று கடந்த நவம்பர் 26-ஆம் தேதி வடக்கு சுமத்ரா பகு​தி​யில் கரையைக் கடந்​தது. இதன்​காரண​மாக அங்கு கனமழை பெய்​து, பல்​வேறு இடங்​களில் நிலச்​சரிவு ஏற்​பட்​டது. இதனால், வடக்கு சுமத்ரா, மேற்கு சுமத்ரா மற்றும் அசே ஆகிய 3 மாகாணங்களில் உள்ள 14 லட்சம் பேர் பாதிப்பை எதிர்கொண்டனர். தவிர, ‘சென்யார்’ புயலால் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவுகளில் சிக்கி இறந்தவர்களின் எண்ணிக்கை 900-ஐ கடந்தது. மேலும், 218 பேர் மாயமாகி இருப்பதாகவும் கூறப்படுகிறது. இவை தவிர, ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள், 200-க்கும் மேற்பட்ட சுகாதார நிலையங்கள் மற்றும் 581 கல்வி நிலையங்கள் வெள்ளப் பாதிப்புகளால் சேதமடைந்தன. சுமார் 3.11 பில்​லியன் டாலர் அளவுக்குப் பொருட்சேதம் ஏற்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.

9. தாய்லாந்தைத் தாக்கிய புயல்

இந்தோனேஷியாவை சீர்குலைத்த ‘சென்யார்’ புயல், இன்னொரு தென்கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்தையும் அது விட்டுவைக்கவில்லை. இதேபுயல், தாய்லாந்திலும் தனது கோரமுகத்தைக் காட்டியது. இந்தப் புயலின்போது தாய்லாந்து நாட்டில் பெய்த கனமழையால் அந்நாட்டின் தெற்குப் பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டது. அந்நாட்டின் 12 தெற்கு மாகாணங்களைச் சேர்ந்த 39 லட்சம் பேர் தொடர் கனமழையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர்.

2025 Rewind top 10 world countries disaster incidents

கனமழையால் 15 லட்சம் வீடுகளை நீர் சூழ்ந்தது. இதனை தொடர்ந்து ஏற்பட்ட நிலச்சரிவிலும் பல வீடுகள் இடிந்து விழுந்தன. பல பகுதிகள் நீரில் மூழ்கின. கார்கள் நீரில் அடித்து செல்லப்பட்ட காட்சிகள் இணையத்தில் வைரலாகின. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. தாய்லாந்தில் கனமழை எதிரொலியாக ஏற்பட்ட பாதிப்பில் சிக்கி 181 பேர் பலியாகினர். இவற்றில் சாங்கிலா மாகாணத்தில் மட்டுமே 110 பேர் பலியாகி உள்ளனர் என அரசு தெரிவித்தது. இந்தப் புயலால் மலேசியாவும் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

10. சீனாவில் மண்சரிவு – வெள்ளம்

இந்தியாவின் அண்டை நாடுகளில் சீனாவும் ஒன்றாக உள்ளது. இதுவும், இயற்கைச் சூழல்களைக் கொண்டிருந்தாலும் அவ்வப்போது இந்நாடும் பேரிடர்களுக்குப் பலியாகிறது. வடக்கு சீனாவின் கான்சு மாகாணத்தில் கடந்த ஜூலை மாத இறுதியில் ஏற்பட்ட மோசமான வானிலை காரணமாக திடீர் வெள்ளம் மற்றும் மண்சரிவு ஏற்பட்டது. இந்த வெள்ளம், சீன தலைநகரை பல ஆண்டுகளில் தாக்கிய மிக மோசமான வெள்ளங்களில் ஒன்றாகப் பதிவாகி இருக்கிறது. இந்த வெள்ளத்தால், 80,000க்கும் மேற்பட்டோர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டனர். இதில், குறைந்தது 60 பேர் உயிரிழந்தனர். அதிலும் பெய்ஜிங்கின் மலைப்பாங்கான மியுன் மாவட்டத்தில் உள்ள ஒரு முதியோர் பராமரிப்பு இல்லத்தில் 31 பேர் உயிரிழந்தனர். 33 பேர் காணாமல் போயுள்ளதாகவும் தகவல் வெளியாகின.

2025 Rewind top 10 world countries disaster incidents

உலகில் எத்தகைய இடங்களில் மக்கள் வாழ்ந்தாலும் இயற்கைப் பேரிடர்களைச் சந்தித்தே ஆகும் வாய்ப்பு உள்ளது. ஆகையால், அதுகுறித்து விழிப்புடன் இருப்பதும், அந்த ஆபத்து வந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும் என்பதை அறிந்து வைத்திருப்பது அவசியம்.

வவுனியா, வீரபுரத்தில் கத்திக்குத்து: சிகிச்சையிலிருந்த நபர் உயிரிழப்பு!

0

வவுனியா – செட்டிகுளம் – வீரபுரம் பிரதேசத்தில் நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டமையினால் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக செட்டிகுளம் பொலிஸார் தெரிவித்தனர். 

இவ்வாறு உயிரிழந்தவர் வவுனியா, தவசிக்குளம் பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதான இளைஞர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொலைபேசி உரையாடல் ஒன்றின் காரணமாக ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில் குழுவொன்றினால் குறித்த நபர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டமை ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 

இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் 19 மற்றும் 22 வயதுடைய மூன்று சந்தேக நபர்களை செட்டிகுளம் பொலிஸார் கைது செய்துள்ளனர். 

அத்துடன், மற்றுமொரு சந்தேக நபரை கைது செய்வதற்காக செட்டிகுளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தேசிய இளைஞர் விளையாட்டு விழாவில் கண்டி மாவட்டம் சாதனை!

0

தேசிய இளைஞர் விளையாட்டு விழா 2025 இன் நிறைவு விழா நேற்று (21 ஆம் திகதி) நடைபெற்றது. இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே, இளைஞர் விவகார பிரதி அமைச்சர் தினிந்து சமன் ஹேன்னாயக்க மற்றும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சுகத் திலகரத்ன ஆகியோரின் தலைமையில் இவ்விழா இடம்பெற்றது.

26 மாவட்டங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி இளைஞர், யுவதிகள் இப்போட்டிகளில் பங்கேற்றனர். இதில் கண்டி மாவட்டம் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றது. கம்பஹா மாவட்டம் இரண்டாம் இடத்தையும், கொழும்பு மாவட்டம் மூன்றாம் இடத்தையும் பெற்றுக்கொண்டன.

விளையாட்டு விழாவின் சிறந்த வீராங்கனையாக கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்த சயுரி லக்ஷிகா மென்டிஸ் தெரிவு செய்யப்பட்டார். சிறந்த வீரராக கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்த K.A.D. மல்ஷான் தெரிவு செய்யப்பட்டார். சிறந்த வீரர் மற்றும் வீராங்கனைக்கு யமஹா (YAMAHA) நிறுவனத்தின் அனுசரணையுடன் தலா ஒரு மோட்டார் சைக்கிள்கள் பரிசாக வழங்கப்பட்டன.

திம்பில்லா குளக்கட்டுக்கு நிரந்தரத் தீர்வு எப்போது?

0

ஜூட் சமந்த

கடந்த வெள்ள அனர்த்தத்தில் சிலாபம்-திம்பில்லா குளக்கட்டு இடிந்ததினால் மணல் மூட்டைகளால் பாதுகாக்கப்பட்டுள்ளதாகவும், இருப்பினும் அபாயம் இன்னும் நீங்கவில்லை என்றும் என்று விவசாயிகள் கூறுகின்றனர்.

பால்குலம, சுருக்குளம மற்றும் திம்பில்லா ஆகிய மூன்று குளங்களிருந்தும் பெரும்பாலான நீர் திம்பில்லா வான் கதவுகளினால் வெளியேற்றப்படுகிறது. எல்லங்கா திட்டத்தை சேர்ந்த மூன்று குளங்களும் தெதுரு ஓயா மற்றும் மழைநீரால் நிரப்பப்படுகின்றன. இந்த திட்டத்தின் கீழ் 250 ஏக்கருக்கும் அதிகமான நெல் பயிரிடப்படுகிறது, இது சுமார் 400 ஏக்கர் பரப்பளவு கொண்டது.

கடந்த காலத்தில், திம்பில்லா குளத்தில் அதிகப்படியான நீரை கட்டுப்படுத்தப்பட்ட முறையில் வெளியேற்ற 04 வான்கதவுகள் இருந்தன. காலப்போக்கில், இந்த 04 வான்கதவுகளும் பாழடைந்துவிட்டன. பாழடைந்த நீர் வாயில்களை சரிசெய்ய ஒரு அற்புதமான வேலை செய்யப்பட்டுள்ளது. பாழடைந்த நீர் வாயில்களுக்கு நீர் ஓட்டத்தை கட்டுப்படுத்த “T” அணையை அமைத்து அருகில் ஒரு மதகைப் பயன்படுத்துவதே தீர்வு. இந்த அணை கடந்த காலத்திலும் உடைந்து ஆபத்தான சூழ்நிலையாக மாறியது. அந்த நேரத்தில் இருந்த ஆபத்தை கட்டுப்படுத்த மணல் மூட்டைகள் பயன்படுத்தப்பட்டன. ஆபத்தை நீக்க தற்காலிகமாக பயன்படுத்தப்பட்ட மணல் மூட்டைகள் ஒரு நிரந்தர தீர்வாக மாறியது, மேலும் அவை இன்னும் அந்த இடத்தில் காணப்படுகின்றன.

கடந்த மழைக்காலத்தில் அணையிலிருந்து போதுமான நீர் ஓட்டம் இல்லாததால், திம்பில்லா குளக் கரை உடைந்தது. சுமார் 50 அடி நீளமுள்ள குளக் கரையின் ஒரு பகுதி சுமார் 30 அடி ஆழத்தில் உடைந்தது. உடைந்த பகுதியை மணல் மூட்டைகளை வைத்து தற்காலிகமாக சரிசெய்ய விவசாயிகள் நடவடிக்கை எடுத்தனர். திம்பில்லா குளக் கரை பல இடங்களில் சேதமடைந்துள்ளதாக விவசாயிகள் சுட்டிக்காட்டுகின்றனர். குளக் கரையில் சில இடங்கள் அரிப்பு ஏற்பட்டுள்ளன, மேலும் பல இடங்கள் உடைந்துள்ளன.

திம்பில்லா ஏரி எந்த வகையிலும் வெடித்தால், அது பெரும் அழிவை ஏற்படுத்தும் என்று விவசாயிகள் கூறுகின்றனர். அது நடக்கும் முன், திம்பில்லா ஏரியில் வெடிப்பு மற்றும் அரிப்பு ஏற்பட்டுள்ள பகுதிகளை உடனடியாக சரிசெய்ய வேண்டும் என்றும் அப்பகுதி விவசாயிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

கிளிநொச்சி ஏ35 வீதியின் பிரதான பாலம் துரித கதியில் புனரமைப்பு!

டிற்வா பேரிடர் மற்றும் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தின் ஏ35 பிரதான வீதியில் 11 ஆம் மைக்கல் பகுதியில் அமைந்துள்ள பிரதான பாலம் கடும் வெள்ளம் காரணமாக பெரும் பாதிப்புக்குள்ளானது.

இந்நிலையில் சேதமடைந்த பாலத்தை புனரமைக்கும் பணியில் இந்திய இராணுவம் மற்றும் இலங்கை இராணுவம், வீதி அபிவிருத்தி திணைக்களம் இணைந்து துரித கதியில் இயங்கி புனரமைப்பு பணிகள் நேற்றைய தினம் நிறைவு பெற்றது.

குறித்த பாலத்தினை புனரமைப்புக்க இலங்கை வந்த இந்திய இராணுவத்தினர் மற்றும் இலங்கை இராணுவத்தினரும் இணைந்து நேற்றைய தினம் 20.12.2025 பாலத்தின் அபிவிருத்தி பணிகளை முழுமையாக நிறைவு செய்துள்ளனர்.

பாலத்தின் நிறைவுப்பணிகளை இந்திய துணைத் தூதர் சாய் முரளி நேரில் சென்று பார்வையிட்டதுடன், எதிர்வரும் தினங்களில் பொதுமக்கள் பாவனைக்காக பாலம் திறக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

வடக்கில் கெளரவிக்கப்பட்ட சிறப்பு சித்திபெற்ற உயர்தர மாணவர்கள்!

குறிப்பட்ட ஒரு சிலருக்கு மாத்திரம் வசதி வாய்ப்புகளை வழங்குவது அரசாங்கத்தின் கொள்கையல்ல. மக்களுக்குப் பயனுள்ள வகையில் பயன்படுத்தக்கூடிய விதத்தில் அரசாங்கம் பொருளாதார முகாமைத்துவத்தை முன்னெடுத்து வருகின்றது என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

2024 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற வட மாகாண மாணவர்களைக் கௌரவிக்கும் வகையில், இன்று டிசம்பர் 21 ஆம் திகதி கிளிநொச்சி, இரணைமடு இராணுவ முகாமின் ‘நெலும் பியஸ’ மண்டபத்தில் நடைபெற்ற புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அத்தோடு 2026 ஆம் ஆண்டில் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கும் ஏனைய அரச உத்தியோகத்தர் வெற்றிடங்களைப் பூர்த்தி செய்வதற்கும் நாம் நடவடிக்கை எடுத்து வருகின்றோம் எனவும், அரசாங்கத்தின் புதிய வேலைத்திட்டத்திற்கு அமைச்சுகளிடமிருந்தும் மாகாண மட்டத்திலிருந்தும் சிறந்த ஒத்துழைப்புத் தேவைப்படுகின்றது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

குறித்த நிகழ்வில் சபாநாயகர் டாக்டர் ஜகத் விக்ரமரத்ன, மீன்வளம், நீர்வாழ் உயிரினங்கள் மற்றும் கடல் வள அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், கூட்டுறவு பிரதியமைச்சர் உபாலி சமரசிங்க, பாராளுமன்ற உறுப்பினர்களான க.இளங்குமரன், சிறீபவானந்தராஜா, ஜனாதிபதி நிதியத்தின் செயலாளர் ரொஷன் கமகே உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.

06 பாடப் பிரிவுகளில் மாவட்டங்களில் 1-10 இடங்களைப் பெற்ற மாணவர்களுக்கு ரொக்கப் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பேருந்து ஊழியர்களுக்கு கசிப்பு விற்ற 19 வயதுடைய பெண்!

0

நீண்ட தூர பேருந்து ஊழியர்களுக்கு சட்டவிரோத மதுபானம் அல்லது கசிப்பு விற்பனை செய்ததாகக் கூறப்படும் ஒரு கர்ப்பிணிப் பெண் வென்னப்புவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 20 ஆம் தேதி போலீசார் இந்த அதிரடி சோதனையை நடத்தினர்.

வென்னப்புவ, வாய்க்கால் பகுதியில் வசிக்கும் 19 வயதுடைய பெண் ஒருவரையே போலீசார் இவ்வாறு கைது செய்துள்ளனர்.

போலீசார் சோதனை நடத்தியபோது சந்தேக நபர் தனது கணவருடன் மதுபானம் பொட்டலம் கட்டிக்கொண்டிருந்ததாகவும், அவரிடம் இருந்து 96 கசிப்பு பாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

கர்ப்பிணிப் பெண் ஒருவர் நீண்ட தூர பேருந்து ஊழியர்களுக்கு மதுபானப் பொட்டலங்களை விற்பனை செய்வதாக காவல்துறை புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரும் அவரது வசம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட கசிப்புத் தொகையும் மாரவில நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளன.

15 வயது சிறுமியை இழுத்துக்கொண்டு ஓடிய காதலன்!

0

ஜூட் சமந்த

பெற்றோரின் அரவணைப்பில் இருந்த 15 வயது நிரம்பிய பள்ளி மாணவி ஒருவரை கடத்தியதற்கு துணை போன 19 வயது இளைஞரை கைது செய்துள்ளதாக மாதம்பே போலீசார் தெரிவித்துள்ளனர்.

மாதம்பே – கலஹிடியாவ பகுதியைச் சேர்ந்த ஒருவரையே போலீசார் இவ்வாறு கைது செய்துள்ளனர். சிறுமியை கடத்த பயன்படுத்தியதாகக் கூறப்படும் சிறிய ரக லாரியும் போலீசாரின் காவலில் எடுக்கப்பட்டுள்ளது.

கடத்தப்பட்ட சிறுமி அப்பகுதியில் உள்ள ஒரு பாடசாலையில் 10 ஆம் வகுப்பில் கல்வி கற்று வருவதுடன், கடந்த 18 ஆம் தேதி காலை பாடசாலையில் நடைபெறும் கருத்தரங்கில் கலந்து கொள்வதாகக் கூறி வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். இருப்பினும், பள்ளியில் நடைபெறும் கருத்தரங்கில் கலந்து கொள்ளவில்லை என்று சிறுமியின் தாயார் தெரிந்துகொண்டார்.

அதனை தொடர்ந்து போலீசுக்கு விரைந்த மாணவியின் தாய், மாதம்பே, பொத்துவில பகுதியைச் சேர்ந்த 18 வயது இளைஞருடன் தனது மகள் காதல் உறவில் இருந்ததாகவும், தற்போது இவ்விருவரும் காணவில்லை என்றும் மாணவியின் தாய் மாதம்பே போலீசில் புகார் அளித்துள்ளார்.

விசாரணை நடத்திய போலீசார், சிறுமியுடன் காணாமல் போன இளைஞனின் நண்பருக்கு சொந்தமான ஒரு சிறிய லாரியை, 18 ஆம் தேதி காலை அவர் படித்து வந்த பாடசாலைக்கு அருகில் மீட்டுள்ளனர்.

சிறுமியும் அவரது காதலன் என்று கூறப்படும் இளைஞனும் ஏற்கனவே காணாமல் போயுள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.

மாதம்பே போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கல்பிட்டி பிரதேச செயலக கிராம அலுவலர்கள் வேலைநிறுத்தத்தில்!

0

ஜூட் சமந்த

கல்பிட்டி பிரதேச செயலகத்தின் அனைத்து கிராம அலுவலர்கள் மற்றும் பொருளாதார மேம்பாட்டு அலுவலர்களும் பேரிடர் நிவாரண உதவி விநியோகத்திலிருந்து விலகி, வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

20ஆம் தேதி முதல் பேரிடர் நிவாரண உதவி விநியோகத்திலிருந்து விலகுவதாக கல்பிட்டி பிரதேச செயலகத்திற்கு தெரிவிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கல்பிட்டி பிரதேச செயலகத்தில் 31 கிராம அலுவலர் பிரிவுகள் உள்ளன, ஆனால் 22 கிராம அலுவலர்கள் மட்டுமே சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

வன்னிமுந்தலம கிராம அலுவலர் மற்றும் ஆலங்குடாவ பொருளாதார மேம்பாட்டு அலுவலர் ஆகியோர் கல்பிட்டி காவல்துறையில் புகார் அளித்துள்ளனர், அவர்கள் பேரிடர் நிவாரண உதவிகளை விநியோகித்துக் கொண்டிருந்தபோது ஒரு குழு தங்களைத் தாக்க முயன்றதாகக் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதற்கிடையில், புத்தளம் – வேப்பமடுவ பகுதியிலும், 20 ஆம் தேதி புத்தளம் – மதுரங்குலிய பகுதியிலும், தங்களுக்கு இன்னும் பேரிடர் நிவாரண நிதி கிடைக்கவில்லை என்று கூறி இரண்டு போராட்டங்கள் நடத்தப்பட்டன.

பேரிடர் நிவாரண உதவிகளை வழங்குவதற்காக அரசாங்கத்தால் வழங்கப்பட்ட வழிகாட்டுதல்களை செயல்படுத்துவதில் பல சிக்கல்கள் எழுந்துள்ளதாகவும், கிராமவாசிகள் தவறான தகவல்களை வழங்குவதாலும் இவ்வாறான பிரச்சினைகள் உருவாகியுள்ளனாகவும் கிராம அலுவலர்கள் கூறுகின்றனர்.

இது நடக்காவிட்டால் இங்கு வசிக்கும் அனைவரும் இறந்துவிடுவார்கள்!

0

ஜூட் சமந்த

“புதிய கழிமுகம்” உருவாக்கப்பட்டதால், ஆரச்சிகட்டுவ-முத்துபந்தியா தீவில் வசிப்பவர்கள் தங்கள் வாழ்க்கை தலைகீழாக மாறத் தொடங்கியுள்ளதாகக் கூறுகின்றனர்.

மேற்கு பெருங்கடல் மற்றும் கிழக்கு ஹாமில்டன் கால்வாய் பகுதியில் வசிப்பவர்களின் முக்கிய வாழ்வாதாரம் மீன்பிடித்தல் ஆகும். சிலர் பெருங்கடல் அல்லது ஹாமில்டன் கால்வாயில் மீன் பிடித் தொழிலில் ஈடுபட்டு வருவதுடன் மற்றவர்கள் இறால் தொழிலில் ஈடுபடுகிறார்கள். தீவின் வடக்குப் பகுதியில் 120 குடும்பங்களும், தெற்குப் பகுதியில் 26 குடும்பங்களும் உள்ளன. இந்தக் குடும்பங்களின் குழந்தைகள் அனைவரும் முத்துபந்தியா ஜூனியர் கல்லூரியில் கல்வி கற்கின்றனர்.

தீவின் கிழக்கு எல்லையான ஹாமில்டன் கால்வாய், கருகுபன கிராமத்திற்கு அருகிலுள்ள கலப்புடன் இணைகிறது. இருப்பினும், சமீபத்திய மழையால், ஹாமில்டன் கால்வாய் வழக்கத்தை விட அதிக நீரால் நிரம்பியதால் ஹாமில்டன் கால்வாயால் வழக்கம் போல் கருகுபன வரை தண்ணீரை எடுத்துச் செல்ல முடியவில்லை. ஹாமில்டன் கால்வாயின் நீர் முத்துபந்தியா தீவைப் பிரித்து திறந்த கடலுக்குள் பாய்ந்தததால் ஒரு புதிய கழிமுகத்தை உருவாகியுள்ளது.

தான் வசிக்கும் தீவில் புதிய கழிமுகம் உருவாக்கப்படுவது குறித்து திரு. ரோஷன் பெர்னாண்டோ கூறியதாவது:

“எங்களுக்கு புதிய கழிமுகம் தேவையில்லை. புதிய கழிமுகம் உருவாக்கப்பட்டதால் எங்களுக்கு புதிய சிக்கல்கள் ஏற்படத் தொடங்கியுள்ளன. முத்துபந்தியா தீவில் வசிக்கும் பலர் இறால் வளர்ப்பில் ஈடுபட்டுள்ளனர். இறால் வளர்ப்புக்குத் தேவையான தண்ணீரை ஹாமில்டன் கால்வாயிலிருந்து பெறுகிறார்கள். புதிய கழிமுகம் உருவாக்கப்பட்டதால், கடல் நீர் ஹாமில்டன் கால்வாயுடன் கலக்கிறது, இதனால் இறால் வளர்ப்பு செய்ய இயலாது.

இன்னொரு பிரச்சினை என்னவென்றால், கிராமத்தில் குடிநீர் திட்டத்தில் உப்பு நீர் இப்போது சேர்க்கத் தொடங்கியுள்ளது. எங்களுக்கு இருக்கும் மிகப்பெரிய பிரச்சனை என்னவென்றால், கிராம கல்லறை இருந்த இடத்தில் புதிய கழிமுகம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையால், கிராமம் அதன் கல்லறையையும் இழந்துவிட்டது.

எங்களுக்கு கழிமுகம் வேண்டாம் என்று நாங்கள் அரசாங்கத்திடம் கூறுகிறோம். இந்த இடத்தை முன்பு இருந்தபடியே மீட்க விரும்புகிறோம்.”

முத்துபந்தியா தீவை இரண்டாகப் பிரித்த புதிய கழிமுகம் இருந்த இடத்தில் அமைந்திருந்த ஒரு வீடும் முற்றிலுமாக இடிந்து விழுந்துள்ளது. வீட்டின் உரிமையாளர் திரு. நிஹால் ஆரியவன்சவையும் நாங்கள் சந்தித்தோம். அவர் இவ்வாறு கூறினார்.

“முன்பு இல்லாத அளவுக்கு மழை பெய்தது. திடீரென்று, ஹாமில்டன் கால்வாயில் இருந்து வந்த தண்ணீர் என் வீட்டை அடித்துச் சென்று கடலில் கலந்தது. இந்த இடிந்து விழுந்த வீட்டில் 3 குடும்பங்கள் இருந்தன. இப்போது எங்களுக்கு தங்க இடமில்லை. குழந்தைகள் ஒரு இடத்தில் இருக்கிறார்கள். நான் வேறொரு இடத்தில் கூடாரம் அமைத்துக் கொண்டிருக்கிறேன்.”

முத்துபந்தியா கிராமத்தில் வசிக்கும் சமன் குமாரவும் பின்வருமாறு கூறினார்.

“இந்த கிராமத்தின் தெற்குப் பகுதியில் வசிக்கும் குழந்தைகள் முத்துபந்தியா ஜூனியர் கல்லூரியில் பள்ளிக்குச் செல்கிறார்கள். அந்தக் குழந்தைகள் இன்று பள்ளிக்குச் சென்ற சாலையைக் கூடக் கண்டுபிடிக்க முடியவில்லை. புதிய கழிமுகம் உருவாக்கப்பட்டதால், மின்சார கம்பிகள் உடைந்து விழுந்தன. குடிநீர் வழங்குவதற்காக தோண்டப்பட்ட குழாய் அமைப்பு சேதமடைந்தது. கிராமத்தின் தெற்குப் பகுதியில் வசிப்பவர்களுக்கு இன்று மின்சாரமோ தண்ணீரோ இல்லை.

புதிதாக உருவாக்கப்பட்ட கழிமுகம் விரைவில் சரிசெய்யப்படாவிட்டால், அந்த மக்கள் தாகத்தால் இறந்துவிடுவார்கள். அது நடக்கும் முன் ஒரு தீர்வைக் கண்டுபிடிக்குமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.”