Wednesday, February 5, 2025
Sponsored advertisementspot_img
Home Blog Page 56

அதிகர்க்கவுள்ள எரிபொருள் ஒதுக்கீடு

0

தேசிய எரிபொருள் அனுமதிச் சீட்டில் (QR) தற்போது அனுமதிக்கப்பட்டுள்ள எரிபொருள் ஒதுக்கீட்டினை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தனது உத்தியோகப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்படி, எதிர்வரும் மாதம் எரிபொருள் விலை திருத்தம் மேற்கொள்ளப்படுவதுடன், எரிபொருள் ஒதுக்கீடும் அதிகரிக்கப்படும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

நேற்று (மே 25) இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் (CPC) சந்தைப்படுத்தல், நிதி மற்றும் வர்த்தகப் பிரிவுகளுடன் நடைபெற்ற கூட்டத்தின் போது இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

வாகன இறக்குமதிக்கு பச்சை கொடி

0

மிக விரைவில் மீண்டும் ஜப்பானிய வாகனங்களை இலங்கைக்கு இறக்குமதி செய்ய ஆரம்பிக்கவுள்ளதாக ஜப்பானிய வாகன நிறுவன பிரதிநிதிகள் இலங்கை வாகன இறக்குமதியாளர்களுக்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை அரசாங்கத்துடனான கலந்துரையாடலின் போது இது தொடர்பில் சாதகமான உடன்பாடுகள் ஏற்கனவே எட்டப்பட்டுள்ளதாக அவர்கள் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தங்களின் பிரகாரம் இந்த வாய்ப்பு கிடைக்கும் என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

எவ்வாறாயினும், வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு மீண்டுமொரு சந்தர்ப்பம் வழங்குமாறு இலங்கையின் வாகன இறக்குமதியாளர்கள் பல தடவைகள் இலங்கை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும் உரிய பதில் கிடைக்கவில்லை.

இதேவேளை கொழும்பில் உள்ள ஜப்பானிய தூதுவரும் கொழும்பில் அண்மையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் சுதந்திர வர்த்தகம் தொடர்பில் கருத்து வெளியிட்டிருந்தார்.

ஐஸ் போதைப் பொருட்களுடன் நாகவில்லில் மூவர் கைது

ஐஸ் மற்றும் கஞ்சா போதை பொருட்களுடன் நேற்று இரவு நாகவில்லு பகுதியில் மூன்று இளைஞர்கள் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டனர்.

நாகவில்லு போதை ஒழிப்புக்குழுவின் நேற்றை விசேட சுற்றிவளைப்பில் நாகவில்லு பகுதியை சேர்ந்த மூன்று இளைஞர்கள் ஐஸ் மற்றும் கஞ்சா போதை பொருட்களுடன் சிக்கினர்.

ஐஸ் மற்றும் கஞ்சா போதை பொருட்களை பயன்படுத்துவதற்காகவும், அவற்றை சில்லறை விற்பனைக்கான  தயார்படுத்தலில் ஈடுபட்டுக்கொண்டிருந்த நிலையிலும் நாகவில்லு போதை ஒழிப்புக்குழுவின் விசேட சுற்றிவளைப்பில் இம்மூவரும் பிடிபட்டனர்.

குறித்த சுற்றிவளைப்பின்போது ஐஸ் போதை பொருட்களின் அளவை நிறுக்கும் இலத்திரனியல் தராசும் கைப்பற்றப்பட்டது.

கைப்பற்றப்பட்ட ஐஸ் போதை பொருட்கள் எங்கிருந்து பெறப்பட்டது என்றும், யாரினால் விற்பனை செயப்பட்டது என்ற மேலதிக விபரங்களும் நாகவில்லு போதை ஒழிப்புக்குழுவினால் பெறப்பட்டதுடன், ஐஸ் மற்றும் கஞ்சா போதை பொருட்களுடன் பிடிப்பட்ட மூவரும் புத்தளம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

மேலதிக விசாரணைகளை புத்தளம் போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை நாகவில்லு போதை ஒழிப்புக்குழுவின் நேற்றைய மற்றுமொரு விசேட சுற்றிவளைப்பில் நாகவில்லு பகுதியில் லேகியம் (குளி) வாங்குவதற்காக கல்பிட்டி பகுதியில் இருந்து வந்திருந்த இருவர் பிடிபட்டனர்.

இவர்கள் பலமுறை நாகவில்லு பகுதியில் லேகியம் (குளி) வாங்குவதற்காக வந்தவர்கள் என்பது விசாரணையின் பின்னர் தெரியவந்துள்ளது.

மேலும் கஞ்சா போதைப்பொருளுடன் நேற்றைய தினம் நாகவில்லு பகுதியில் மற்றுமொரு நபரும் புத்தளம் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

நேற்றைய தினம் போதைப்பொருட்களுடன் கைதுசெய்யப்பட்ட இந் நால்வரும் இன்று புத்தளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆன்லைன் வியாபாரிகளே மிக அவதானம்

0

இணையத்தளம் ஊடாக பொருட்களை விற்பனை செய்வதை ஒழுங்குபடுத்துவதற்கான வர்த்தமானி அறிவித்தலை, நுகர்வோர் விவகார அதிகார சபை வெளியிட்டுள்ளது.

இதற்கமைய, இணைய சந்தை தளத்தை இயக்குபவர்கள், பொருட்களை விளம்பரப்படுத்தும் போது எந்தவொரு பிரதிநிதித்துவத்தையோ அல்லது தகவல் புறக்கணிப்பையோ செய்யக் கூடாது.

அத்துடன், ஏமாற்றும், தவறாக வழிநடத்தும் அல்லது போட்டிக்கு எதிரான எந்தவொரு செயற்பாடுகளிலும் ஈடுபடக்கூடாது என அந்த வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பொருளின் உண்மை விலையானது குறித்த பொருளுக்காக, இணைய சந்தை தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விலையாகும் என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

அத்துடன், முன்பதிவை உறுதிப்படுத்தல், போக்குவரத்து மற்றும் விநியோகத்தை ஒருங்கிணைத்தல் மற்றும் முன்பதிவை இரத்துச் செய்யும் உரிமை என்பன குறித்த வர்த்தமானி மூலம் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன.

இலங்கை தொடர்பில் கனேடிய பிரதமர் அதிருப்தி

0
யுத்த வெற்றியின் 14 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நேற்று வெளியிட்ட அறிக்கை தொடர்பில் இலங்கை அரசாங்கம் மீண்டும் கனடாவுடனான இராஜதந்திரப் போரில் இறங்கியுள்ளது.

நேற்றைய தினம் கனடா பிரதமர் “14 வருடங்களுக்கு முன்னர் இலங்கையில் தமிழர் இனப்படுகொலை நினைவு தினம் மற்றும் யுத்தம் நிறைவடைந்த தினத்தை நினைவுகூரும் வகையில்” அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தார்.

இதனையடுத்து, உள்நாட்டில் நல்லிணக்கச் செயற்பாட்டிற்கு உதவாது எனக் கருதும் கனேடிய பிரதமரின் அறிக்கையை இலங்கை கண்டிப்பதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

கனேடிய பிரதமர் தனது அறிக்கையில், “இலங்கையில் 14 ஆண்டுகளுக்கு முன்பு முடிவுக்கு வந்த ஆயுதப் போரின் போது ஏற்பட்ட துயரமான உயிர் இழப்புகளை இன்று நாம் நினைவுகூருகிறோம்.

முள்ளிவாய்க்கால் உயிரிழப்புகள் உட்பட, மேலும் பலர் காணாமல் போயுள்ளனர்.

காயமடைந்தவர்கள், இடம்பெயர்ந்தவர்கள், பாதிக்கப்பட்டவர்கள், உயிர் பிழைத்தவர்கள் மற்றும் அவர்களின் அன்புக்குரியவர்கள், இந்த அர்த்தமற்ற வன்முறையால் ஏற்படும் வலியுடன் தொடர்ந்து வாழ்கிறார்கள்,” என்று குறிப்பிட்டிருந்தார்.

மோதலில் பாதிக்கப்பட்ட தமிழ்-கனேடியர்களின் கதைகள் – நான் பல ஆண்டுகளாக நாடு முழுவதும் உள்ள சமூகங்களில் சந்தித்த பலர் உட்பட – மனித உரிமைகள், அமைதி மற்றும் ஜனநாயகம் ஆகியவற்றை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ள முடியாது என்பதை ஒரு நிலையான நினைவூட்டல்.

மோதலில் பாதிக்கப்பட்ட தமிழ்-கனடியர்களின் கதைகள் உட்பட, கடந்த பல ஆண்டுகளாக நான் நாடு முழுவதும் உள்ள சமூகங்களை சந்தித்து அவர்களின் பிரச்சினைகள் குறித்து கவனத்தில் எடுத்துக் கொண்டேன்.

இதன்காரணமாகவே, கடந்த ஆண்டு மே 18 ஆம் திகதியை தமிழ் இனப்படுகொலை நினைவு தினமாக அனுசரிக்கும் பிரேரணையை நாடாளுமன்றம் ஏகமனதாக நிறைவேற்றியது.

மோதலில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிர் பிழைத்தவர்களின் உரிமைகளுக்காகவும், அத்துடன் இலங்கையில் தொடர்ந்து இன்னல்களை எதிர்நோக்கும் அனைவருக்காகவும் கனடா வாதிடுவதை நிறுத்தாது” என்று குறிப்பிட்டுள்ளார்.

பிள்ளைகளை பாடசாலை அனுப்ப வேண்டாம்!

0
நாட்டில் சிறுவர்கள் மத்தியில் இன்புளுவென்சா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருவதாக கொழும்பு சீமாட்டி சிறுவர் மருத்துவமனையின் (லேடி ரிட்ஜ்வே மருத்துவமனை) வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

இதனால், அதிக காய்ச்சல், இருமல், தலைவலி மற்றும் சுவாசப் பிரச்சினைகளால் சிறுவர்கள் பாதிக்கப்பட்டலாம் என அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த வைரஸ் தொற்று பரவல் தற்போது பாடசாலைகள், தனியார் வகுப்புகளில் அதிகம் பரவி வருகின்றது.

எனவே, தமது பிள்ளைகளுக்கு காய்ச்சல், இருமல், தலைவலி அல்லது சுவாசப் பிரச்சினைகள் இருப்பின், அவர்களை பாடசாலைகளுக்கு அனுப்பாமல் இருப்பது சிறந்தது என வைத்தியர் தீபால் பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், தமது பிள்ளைகள் நோய் வாய்ப்பட்டால் பெற்றோர் உடனடியாக அவர்களை வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதேபோல், தற்போது ஏற்படக்கூடிய காய்ச்சல் ஏனையவர்களிடமும் விரைவில் பரவக்கூடிய தன்மையைக் கொண்டதனால், வீட்டில் உள்ள ஏனையவர்கள் முகக்கவசம் அணிவது சிறந்ததாக இருக்கும் எனவும் வைத்திய நிபுணர் தீபால் பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

இன்புளுவென்சா வைரஸ் தொற்று கிட்டத்தட்ட கொவிட் தொற்றை போன்றது, அது மக்களிடையே விரைவாக பரவக்கூடியது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

புத்தர் இயேசுநாதரை தேடினார்! பரபரப்பு கருத்து.

0

புத்தர் பௌத்தமதம் தொடர்பில் போதகர் ஜெரோம் பெர்ணாண்டோ தரக்குறைவான  வார்த்தைகளை பயன்படுத்தியுள்ள நிலையில் எவரும் எந்த மதத்தையும் அவமதிப்பதற்கு அனுமதிக்க கூடாது என கருத்து தெரிவித்துள்ள அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க அவ்வாறான தனிநபர்களிற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என தெரிவித்துள்ளார்.

கடந்தவாரம் போதகர் ஜெரோம் பெர்ணான்டோ புத்தர் பௌத்தமதம் குறித்து போதனை செய்யும் வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகியிருந்ததை தொடர்ந்து பெரும்பான்மை பௌத்தசமூகத்தினர் மத்தியில் சீற்றம் உருவானது.

தன்னைத்தானே இறைதூதராக பிரகடனப்படுத்திய ஜெரோம் பெர்ணாண்டோவிற்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கவேண்டும் என்ற வேண்டுகோள்கள் வெளியாகின.

ஜெரோம் பெர்ணான்டோ ஒருபோலி என சமூக ஊடகங்களில் கருத்து தெரிவித்திருந்த சிலர் அவர் மன்னிப்புகோரவேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர்.நாட்டில் மதஐக்கியத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தியமைக்காக அவரை கைதுசெய்யவேண்டும் என்ற வேண்டுகோள்களும் எழுந்தன.

குறிப்பிட்ட வீடியோவில் ஜெரோம் பெர்ணான்டோ பௌத்தர்களின் மனது என்பது புத்தரின் அன்பை ஒருபோதும் செவிமடுப்பதில்லை  அவர்கள் ஞானம் குறித்தே சிந்திக்கின்றனர் என தெரிவித்திருந்தார்.

ஆனால் ஞானம் பெற ஒளிவேண்டும்,புத்தர் என்ற பெயருக்கு ஞானம் பெற்றவர் என பொருள் அப்படியானால் எது பெரியது ஒளி அல்லது ஞானம் என ஜெரோம் பெர்ணான்டோ குறிப்பிட்ட வீடியோவில் கேள்வி எழுப்பியிருந்தார்.

நான் உலகத்தின் ஒளி என இயேசு கூறியிருந்தார்,நான்; உங்களிற்கு சொல்கின்றேன் இயேசு தான் ஞானம் பெற்றவன் என குறிப்பிடவில்லை எனவும் தெரிவித்திருந்த ஜெரோம் பெர்ணான்டோ இயேசு நான் ஒளி என தெரிவித்தார் எனவும் குறிப்பிட்டிருந்தார்.

ஆகவே நான் சொல்கின்றேன் புத்தர் உண்மையில் ஒளியை தேடினார் புத்தர் இயேசுநாதரை தேடினார்,புத்தருக்கு இயேசுநாதர் தேவை எனவும் ஜெரோம் பெர்ணாண்டோ  தெரிவித்திருந்தார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அமைச்சர் விதுரவிக்கிரமநாயக்க நாட்டில் சட்டவிரோத மதவழிபாட்டுத்தலங்கள் உள்ளன அவ்வாறான ஒன்றிலேயே  தன்னைத்தானே இறைதூதர் என அழைத்துக்கொள்ளும் ஜெரோம் பெர்ணான்டோ மதநிந்தனை கருத்துக்களை தெரிவித்துள்ளார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

புதிய ஆளுநர்கள் பதவிப்பிரமாணம்

0

வடக்கு, கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் இன்று (17) பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.

கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் இன்று முற்பகல் புதிய ஆளுநர்கள் பதவிப் பிரமாணம் செய்து கொண்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி, வடமேல் மாகாண ஆளுநராக முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனவும், வடமாகாண ஆளுநராக தேர்தல் ஆணைக்குழுவின் முன்னாள் உறுப்பினர் பி.எஸ்.எம்.சார்ள்ஸும், கிழக்கு மாகாண ஆளுநராக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமானும் பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளனர்.

முன்னதாக, பி.எஸ்.எம்.சார்ள்ஸ் 2019 – 2021 வரையான காலப்பகுதியிலும் வடக்கு மாகாண ஆளுநராக பதவி வகித்திருந்தார்.

மரணப்படுக்கையில் கிரிக்கெட் வீரர்

0

ஸிம்பாப்வேயின் முன்னாள் கிரிக்கெட் அணித் தலைவரும் அந் நாட்டின் கிரிக்கெட் ஜாம்வனுமான ஹீத் ஸ்ட்ரீக், புற்றுநோயினால் பீடிக்கப்பட்டு மரணப்படுக்கையில் இருப்பதாக சில செய்திகள் தெரிவிக்கின்றன.

ஆனால், அவர் நலமாக இருப்பதாக இன்னும் ஒரு செய்தி கூறுகிறது.

அவரது நோய் குறித்த விபரங்கள் சரியாக வெளியிடப்படாத போதிலும்  அவர் தென் ஆபிரிக்காவில் சிகிச்சை பெற்றுவருதாகக் கூறப்படுகிறது.

அவர் கடும் சுகவீனமுற்றிருப்பதாக வெளியான செய்திகளைத் தொடர்ந்து அவர் விரைவாக நலம்பெற வேண்டும் என இரசிகர்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

ஸிம்பாப்வேயின் முன்னாள் கல்வி, கலை மற்றும் கலாசசார அமைச்சர் டேவிட் கோல்ட்டார்ட் தனது ட்விட்டர் மூலம் இந்த செய்தியை உறுதிப்படுத்தினார்,

இதேவேளை, புகழ்பூத்த கிரிக்கெட் வீரர் ஹீத் ஸ்ட்ரீக்கை ஓர் அற்புதத்தால் மட்டுமே காப்பாற்ற முடியும் என விளையாட்டுத்துறை ஊடகவியலாளர் மைக் மெடோடா கூறியுள்ளார். ஸ்ட்ரீக் நலம் பெற அனைவரும் பிரார்த்திக்கவேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

‘ஹீத் ஸ்ட்ரீக் கடைசிப் பயணத்தில் உள்ளார். அவரது குடும்பத்தினர் இங்கிலாந்தில் இருந்து தென் ஆபிரிக்கா சென்றுள்ளனர். இப்போது ஒரு அற்புதம் மட்டுமே அவரை காப்பாற்றும் என்று தெரிகிறது. பிரார்த்தனைகள் அவசியம்’ என மெடோடா தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, 49 வயதான ஹீத் ஸ்ட்ரீக் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் நல்ல மன நிலையில் இருப்பதாகவும் மற்றொரு செய்தி கூறுகிறது.

இந் நிலையில், ‘கிரிக்கெட் அரங்கில் ஹீத் ஸ்ட்ரீக் உச்ச நிலையில் இருந்தபோது அவரது பந்துவீச்சை எதிர்கொள்வதில் எதிரணி வீரர்கள் எவ்வாறு சிரமங்களை அனுபவித்தார்களோ அதே போன்று நோயை ஹீத் ஸ்ட்ரீக் எதிர்த்துப் போராடுவார்’ என அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.

‘ஹீத் ஸ்ட்ரீக் புற்றுநோயினால் பீடிக்கப்பட்டுள்ளார். தென் ஆபிரிக்காவில்  பிரபல புற்றுநோயியல் நிபுணர் ஒருவரிடம் அவர் சிகிச்சை பெற்று வருகிறார்’ என்று அவரது குடும்பத்தினர் ஒரு அறிக்கையில் தெரிவித்தனர்.

‘அவர் நல்ல மனநிலையில் இருக்கிறார், கிரிக்கெட் அரங்கில் அவர் உச்ச நிலையில் இருந்தபோது அவரது எதிரிகள் எதிர்கொண்டதைப் போன்றே இந்த நோயை அவர் எதிர்த்துப் போராடுவார். அவரது உடல்நிலை குறித்து இப்போதைக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் இல்லை. எந்த செய்தியும் உண்மையாகவும் உறுதியாகவும் வெளியிடப்பட வேண்டும். ஏனையவை வதந்தியாகவே கருதப்படும்’ என அவரது குடும்பத்தினர் கூறினர்.

ஸிம்பாப்வே கிரிக்கெட் அணியில் 1990களின் பிற்பகுதியிலும் 2000களின் முற்பகுதியிலும் பிரதான வீரராக இடம்பெற்றார்.

65 டெஸ்ட் போட்டிகளில் ஒரு சதம் உட்பட 1990 ஓட்டங்களைப் பெற்றதுடன் 216 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

189 சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 2943  ஓட்டங்களைப்   பெற்றுள்ளார். அத்துடன் 239 விக்கெட்களையும் கைப்பற்றியுள்ளார்.

ஸிம்பாப்வே கிரிக்கெட் சபையினருடன் ஏற்பட்ட முறுகல் நிலை காரணமாக 2004 இல் அணித் தலைவர் பதவியில் இருந்து விலகினார். ஒரு வருடம் கழித்து தனது 31ஆவது வயதில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.

ஐசிசியின் 5 ஒழுக்க விதிகளை மீறியதாக ஓப்புக்கொண்டதை அடுத்து 2021 ஆம் ஆண்டில், 8 வருட தடைக்குட்பட்டார்.

கிரிக்கெட் விளையாட்டிலிருந்து வீரராக ஓய்வுபெற்ற பின்னர் ஹீத் ஸ்ட்ரீக் பல்வேறு அணிகளுக்கு பயிற்றுநராக இருந்துள்ளார். பங்களாதேஷ, கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சமர்செட் ஆகிய அணிகளின் பந்துவீச்சு பயிற்றுநராக அவர் பதவி வகித்தார்.

வைத்தியர் ஷாஃபியின் மனு உயர்நீதிமன்றினால் நிராகரிப்பு!

0
தம்மைக் கைதுசெய்து தடுத்து வைத்தமை சட்டவிரோதமானது என  உத்தரவிடக் கோரி குருணாகல் வைத்தியசாலையின் மகப்பேறு வைத்தியர் ஷாஃபி ஷிஹாப்தீன் தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனுவை உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

நீதியரசர்களான விஜித் மலல்கொட, யசந்த கோதாகொட மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகிய மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் இது தொடர்பான விடயங்களை நீண்ட காலம் பரிசீலித்ததன் பின்னர் இந்த தீர்மானத்தை இன்று வழங்கியுள்ளது.

குருணாகல் காவல்துறை உத்தியோகத்தர்களால் பயங்கரவாதத் தடைச் சட்டம் மற்றும் பணச்சலவை சட்டத்தின் கீழ் தம்மைக் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைப்பட்டிருந்தமை சட்டவிரோதமானது என உத்தரவிடக்கோரி வைத்தியர் ஷாஃபி ஷிஹாப்தீன் இந்த அடிப்படை உரிமைகள் மனுவை தாக்கல் செய்திருந்தார்.