Thursday, February 6, 2025
Sponsored advertisementspot_img
Home Blog Page 59

1200 புத்தளம் மாணவர்களுக்கு இலவச மூக்குக்கு கண்ணாடி

0

புத்தளம் பொதுச் சுகாதார திணைக்களத்தின் ஏற்பாட்டில் முதல் கட்டமாக 1200 பாடசாலை மாணவர்களுக்கு இலவச கண் பரிசோதனை மற்றும் மூக்குக் கண்ணாடி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

புத்தளம் பொதுச் சுகாதார திணைக்களத்திற்குட்பட்ட புத்தளம் பிரதேச செயலகம்  மற்றும் வண்ணாத்தவில்லு பிரதேச செயலகத்திற்குட்பட்ட சுமார் 44 பாடசலைகளில் கல்வி கற்கும் மாணவர்களில் முதல் கட்டமாக 1200 மாணவர்களுக்கு இலவச மூக்குக்கண்ணாடி வழங்கப்பட உள்ளது.

இதில் முதல் கட்டமாக புத்தளம் பிரதேச செயலகத்திற்குட்பட்ட 30 பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்களில், பார்வை குறைபாடுடைய மாணவர்கள் புத்தளம் பொதுச் சுகாதார திணைக்களத்தின் அதிகாரிகளினால் இனம்காணப்பட்டு, அவர்களுக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் இலவச மூக்குக்கண்ணாடி வழங்கும் நிகழ்வு எதிர்வரும் 16.05.2023 செவ்வாய்க்கிழமை காலை 08.00 மணி முதல் புத்தளம் நகர மண்டபத்தில் இடம்பெற உள்ளது.

இரண்டாம் கட்டமாக வண்ணாத்தவில்லு பிரதேச செயலகத்திற்குட்பட்ட 14 பாடசாலைகளில் கல்வி கற்கும் பார்வை குறைபாடுடைய மாணவர்கள் புத்தளம் பொதுச் சுகாதார திணைக்களத்தின் அதிகாரிகளினால் இனம்காணப்பட உள்ளத்துடன், அவர்களுக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் இலவச மூக்குக்கண்ணாடி வழங்கும் நிகழ்வு எதிர்வரும் வாரங்களில் இடம்பெறும் என புத்தளம் பொதுச் சுகாதார திணைக்களத்தின் தலைமை அதிகாரி திரு. சுரேஷ் எமது செய்திச் சேவைக்கு தெரிவித்தார்.

இதற்கான சகல நடவடிக்கைகளும் பூர்த்தியடைந்துள்ள நிலையில் பார்வை குறைபாடுடைய மாணவர்கள் கல்வி கற்கும் பாடசாலைகளுக்கு இது குறித்த தகவல்கள் வழங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

பாகிஸ்தானில் மோதல்களால் 8 பேர் பலி

0

பாகிஸ்தானில், முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைது செய்யப்பட்ட பின்னர் நடந்த மோதல்களால், குறைந்தபட்சம் 8 பேர் உயிரிழந்துள்ளதுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பிரிஐ கட்சியின் தலைவரான இம்ரான் கான், லஞ்சக் குற்றச்சாட்டு தொடர்பில் நேற்றுமுன்தினம் கைது செய்யப்பட்டார். அதையடுத்து அவரின் ஆதரவாளர்கள் நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் மோதல்களும் ஏற்பட்டுள்ளன.

இந்நிலையில், குறைந்தபட்சம் 8 பேர் உயிரிழந்துள்ளதுடன்  290 பேர் காயமடைந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேவேளை சுமார் 1900 பேர் கைது செய்யப்பட்டுள்னர்;.

பாகிஸ்தான் பிரதமர் ஷெரீப்பின் லாகூர் இல்லமும் பிரிஐ கட்சி ஆதரவாளர்களால் தாக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, பிரிஐ கட்சியின் உபதலைவர் பவாத் சௌத்தி, செயலாளர் நாயகம் அசாத் உமர் ஆகியோரும் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.

வட்ஸ்எப்பில் மோசடி அழைப்புகள்!

0
“வட்ஸ்எப் மெசேஞ்சர்” தளத்தை மீண்டும் குறி வைத்து மோசடியாளர்கள் பயனர்களின் தரவுகளை களவாடுவதற்கு முயற்சிப்பதாக தெரியவந்துள்ளது.

மோசடியாளர்கள் ‘+84, +62, +60, +234’ மற்றும் பல நாடுகளின் இலக்கங்களில் இருந்து அழைப்புகள் மற்றும் குறுந்தகவல்களை மேற்கொண்டு பயனர்களின் ஆர்வத்தை தூண்டும் வகையில் செயற்படுவதாக ட்விட்டர், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இதிலிருந்து பயனர்கள் தற்காத்துக் கொள்ள வேண்டும் என்று சமூக ஊடக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கடந்த காலங்களில் இதே போன்று மோசடிகளுக்கு வட்ஸ் எப் தளம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஏனெனில் இந்த தளத்தின் மூலம் பயனர்களை தொடர்பு கொள்வது எளிது என்பதாகும்.

அதன் ஊடாக தங்கள் கைவரிசையை மோசடியாளர்கள் இலகுவாக காண்பிக்க முடியும்.

இந்த நிலையில் மாதந்தோறும் சுமார் 2 பில்லியன் செயற்படு பயனர்களை கொண்டுள்ள வட்ஸ் எப் தள பயனர்கள் மீண்டும் மோசடி அழைப்புகளை பெற்று வருகின்றனர்.

இப்போதைக்கு மலேசியா, வியட்நாம், நைஜீரியா, கென்யா, எத்தியோப்பியா போன்ற நாடுகளின் இலக்கங்களில் இருந்து இந்த அழைப்புகள் வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது போன்ற அழைப்புகள் ஏன் வருகின்றன என்பது தெரியவில்லை. சிலருக்கு வேலைவாயப்பு சார்ந்த செய்திகளும் வருகின்றன. அதனால் பயனர்கள் உண்மைத்தன்மையை அறிந்து கொள்ள வேண்டியது அவசியம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

16 மாணவிகளை துஷ்பிரயோகம் செய்த ஆசிரியர்!

0
சுமார் 16 பாடசாலை மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கியதாக கூறப்படும் தனியார் வகுப்பு ஆசிரியரொருவர் இன்று (11) கைது செய்யப்பட்டதாக களுத்துறை சிறுவர் மற்றும் மகளிர் துஷ்பிரயோக தடுப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

களுத்துறை வடக்கு பகுதியை சேர்ந்த 30 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

களுத்துறை வடக்கு – காலி வீதியில் தனியார் வகுப்புகளை நடத்தும் சந்தேகநபரான ஆசிரியர், சிறுமிகளை துஷ்பிரயோகம் செய்துள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனது கணவரின் மடிக்கணினியை பரிசோதித்தபோது அதில் சிறுமிகள் துஷ்பிரயோகம் செய்யப்படும் காணொளிகள் மறைத்து  வைக்கப்பட்டிருந்தமை அவதானிக்கப்பட்டதாக சந்தேக நபரான ஆசிரியரின் மனைவி சம்பந்தப்பட்ட மாணவிகளில் சிலரின் பெற்றோருக்கு அறிவித்துள்ளார்.

இதனையடுத்து, குறித்த பெற்றோர் மூலமாக களுத்துறை வடக்கு காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட முறைப்பாட்டுக்கமைய, தலைமறைவாகியிருந்த சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டார்.

அவர் இன்று (11) களுத்துறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

33 இலட்சம் பேருக்கு நலன்புரிக் கொடுப்பனவு

0

நாட்டிலுள்ள 33 இலட்சத்துக்கும் அதிகமானோருக்கு ஜூலை 1 முதல் அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுகள் வழங்கப்படவுள்ளதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.

அதற்கமைய மிக வறியவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ள பயளானிகளுக்கு எதிர்வரும் 3 ஆண்டுகளுக்கு 15 000 ரூபா கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.

நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்கைகள் அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அதிகாரங்களுக்கமைய இதற்கான வர்த்தமானி அறிவித்தல் ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி இடைநிலை, பாதிக்கப்படக்கூடிய, வறிய மற்றும் மிகவும் வறுமையான குடும்பங்களுக்கு 4 பிரிவுகளின் கீழ் கொடுப்பனவுகள் வழங்கப்பட உள்ளதோடு, அங்கவீனமானவர்கள், முதியவர்கள் மற்றும் சிறுநீரக நோயாளர்கள் ஆகியோருக்கும் அஸ்வெசும திட்டத்தின் கீழ் நலன்புரி கொடுப்பனவுகள் வழங்கப்படவுள்ளன.

அதற்கமைய தற்காலிக நெருக்கடிகளுக்கு முகம்கொடுத்திருக்கும் 400,000 பேருக்கான 2500 ரூபாய் மாதாந்த கொடுப்பனவு 2023 டிசம்பர் 31 வரையிலும்,  பாதிக்கப்படக் கூடிய 400,000 பேருக்கான 5000 ரூபாய் கொடுப்பனவு 2024 ஜூலை 31 வரையிலும் வழங்கப்படவுள்ளது. மேலும் வறியோர் என்று அறியப்பட்ட பயனாளிகள் 800,000 பேருக்கான 8500 ரூபாய் கொடுப்பனவும் மிக வறுமையானவர்களுக்காக மாதாந்தம் 15,000 கொடுப்பனவும் 2023 ஜூலை 01 முதல் மூன்று வருட காலத்திற்கு வழங்கப்படவுள்ளன.

தற்போது நலன்புரி நன்மைகள் கொடுப்பனவுகளை பெற்றுக்கொள்ளும்72,000 மாற்றுத் திறனாளிகளுக்கு மாதாந்தம் 5000 ரூபாய் வீதமும், சிறுநீரக பாதிப்புக்கான நிவாரணங்களை பெறும் 39,150 பேருக்கு 5000 ரூபாய் வீதமும் முதியவர்களுக்கான கொடுப்பனவுகளை பெறும் 416,667 பேருக்கு 2000 ரூபாய் என்ற அடிப்படையிலும் கொடுப்பனவுகள் வழங்கப்படவுள்ளன.

மேற்படி நலன்புரி நன்மைகள் கொடுப்பனவுகளை பெற்றுக்கொள்வதற்காக நாடளாவிய ரீதியிலுள்ள 340 பிரதேச செயலாளர் பிரிவுகளிலிருந்து 3,712,096 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. இந்த நலன்புரி நன்மைகள் கொடுப்பனவு திட்டத்திற்கு தகுதியானவர்களை கண்டறிவதற்கான திட்டத்தில் தகவல்களை சரிபார்க்கும் பணிகளில் 91.5 சதவீதம் நிறைவடைந்துள்ளது.

பிரதேச செயலாளர் பிரிவுகளில் மூவர் அடங்கிய தெரிவுக்குழு ஒன்றின் கீழ் தகவல்கள் பரிசீலிக்கப்பட்டு மாவட்டச் செயலாளரின் அனுமதியை பெற்றுக்கொள்வதற்கான வேலைத்திட்டம் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகம் மேலும் தெரிவித்துள்ளது.

மிகவேகமாகப் பணவீக்கம் வீழ்ச்சி

0

எதிர்பார்க்கப்பட்டதை விடவும் மிகவேகமாகப் பணவீக்கம் வீழ்ச்சியடைந்துவரும் நிலையில், அதற்கு சமாந்தரமாக வட்டிவீதங்களும் வீழ்ச்சியடையுமென இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க எதிர்வுகூறியுள்ளார்.

கொழும்பில் செவ்வாய்க்கிழமை (09) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொருளியல் கருத்தரங்கு ஒன்றில் உரையாற்றிய ஆளுநர் நந்தலால் வீரசிங்க, ‘பணவீக்கம் நாம் எதிர்பார்த்ததை விடவும் மிகவேகமாக வீழ்ச்சியடைந்துவருகின்றது. அதனுடன் இணைந்ததாக உயர்மட்டத்தில் காணப்பட்ட வட்டிவீதங்கள் தற்போது வீழ்ச்சியடைந்து வருகின்றன’ என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

அதுமாத்திரமன்றி கடன்மறுசீரமைப்புச் செயன்முறை தொடர்பில் முழுமையாக அறிவித்ததன் பின்னர், சந்தை வட்டிவீதங்கள் மேலும் விரைவாக வீழ்ச்சியடையுமென எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்தோடு பணவீக்கமானது இவ்வாண்டின் பின்னரைப்பகுதியில் தாம் ஏற்கனவே எதிர்வுகூறிய மட்டத்தை அடையுமெனவும் ஆளுநர் நந்தலால் வீரசிங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

மேலும் கடன்மறுசீரமைப்பை மேற்கொள்ளும்போது வங்கிக்கட்டமைப்பின் உறுதிப்பாட்டுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்றும், பொதுமக்களின் வைப்புக்களைப் பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உத்தரவாதமளித்துள்ளார்.

அரச பணியாளர்கள் இன்று முதல் சேவைக்கு

0

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக வேட்புமனு தாக்கல் செய்துள்ள அரச பணியாளர்களை மீண்டும் பணியில் இணைப்பது தொடர்பான சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, உள்ளூராட்சி மன்ற வேட்பாளராக வேட்புமனு தாக்கல் செய்த அரச பணியாளர்கள் தாங்கள் வேட்பாளராக போட்டியிடும் தொகுதியில் பணிபுரிந்தால், அதற்கு வெளியே உள்ள அரச அல்லது அரச அனுசரணை பெற்ற நிறுவனங்களுக்கு இடமாற்றம் பெற்று பணியில் இணைய வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, குறித்த அரச பணியாளர்கள் இன்று (9) முதல் அந்தந்த நிறுவனங்களின் தலைவர்களால் நியமிக்கப்பட்ட பணியிடங்களில் பணிக்கு சமுகமளிக்க முடியுமென அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வைத்தியசாலைகளில் கட்டணம் செலுத்தும் சிகிச்சை அறைகள்

0
அரச வைத்தியசாலைகளில் கட்டணம் செலுத்தும் சிகிச்சை அறைகளை ஸ்தாபிக்க அமைச்சரவை நேற்று அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் பந்துல குணவர்தன இதனைத் தெரிவித்துள்ளார்.

அதன்படி, இலங்கையர்கள் மற்றும் வெளிநாட்டினருக்காக, நாடளாவிய ரீதியிலுள்ள வைத்தியசாலைகளில் இவ்வாறான கட்டணம் செலுத்தும் அறைகள் ஸ்தாபிக்கப்படவுள்ளன.

அரசாங்க வைத்தியசாலைகளில் கட்டணம் செலுத்தும் சிகிச்சை அறைகள் அறிமுகப்படுத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, 2023 ஆம் ஆண்டுக்கான பாதீட்டு முன்மொழிவில் தெரிவித்திருந்தார்.

தனியார் வைத்தியசாலைகளில் செலவு அதிகமாக இருப்பதால், அரச வைத்தியசாலைகளிலும் கட்டணம் செலுத்தும் அறைகளை ஸ்தாபிக்குமாறு பொதுமக்கள் வைத்த கோரிக்கைக்கு அமைய இந்த திட்டம் முன்மொழியப்படுவதாக ஜனாதிபதி பாதீட்டு உரையில் தெரிவித்தார்.

அதன்படி, முதற்கட்டமாக தேசிய வைத்தியசாலைகளில் இந்த கட்டணம் செலுத்தும் முறைமை அறிமுகப்படுத்தப்படும் என அவர் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஒரு கிலோகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

0
வத்தளை – ஹெந்தலை பிரதேசத்தில் காவல்துறை விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் சுமார் ஒரு கிலோகிராம்  14 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வத்தளையைச் சேர்ந்த 32 வயதுடைய ஒருவரே நேற்று (8) இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர்களிடம் இருந்து, சட்டவிரோதமான வழியில் ஈட்டப்பட்டதாகக் கருதப்படும் 15 இலடட்சம் ரூபா பணமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இன மோதலை ஏற்படுத்தும் வகையில் பேசிய சரத் வீரசேகர

0
வடக்கில் அமைக்கப்பட்டுள்ள விகாரைகள் சட்டவிரோதம் என்றால் தெற்கில் அமைக்கப்பட்டுள்ள இந்து ஆலயங்களும் சட்டவிரோதமானவையே என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

தையிட்டியில் தமிழ் மக்களின் காணிகளை ஆக்கிரமித்து சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரையை அகற்றுமாறு கோரி முன்னெடுக்கப்பட்ட தொடர் போராட்டம் தொடர்பில்  ஊடகமொன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போது அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், இலங்கையிலுள்ள 25 மாவட்டங்களிலும் தமிழ் மக்கள் சுதந்திரமாக வாழ்கின்றார்கள்.

அவர்கள் தங்கள் குல தெய்வங்களை வழிபட அந்தந்த இடங்களில் சிறிய மற்றும் பெரிய ஆலயங்களை அமைத்திருக்கின்றார்கள். அதேபோல் இலங்கையின் 25 மாவட்டங்களிலும் பௌத்தர்கள் வாழ்வதற்கு முழு உரித்தும் உண்டு.

வடக்கு மற்றும் கிழக்கில் பௌத்தர்கள் வாழ முடியாது என்று எந்தவொரு சட்டமும் இல்லை.

வடக்கில் பௌத்தர்கள் வாழ்கின்றார்கள். இராணுவத்தினர் இருக்கின்றார்கள். அவர்கள் வழிபட விகாரைகள் அமைப்பதில் தவறில்லை என தெரிவித்துள்ளார்.