Thursday, February 6, 2025
Sponsored advertisementspot_img
Home Blog Page 60

மஹிந்தவை மீண்டும் பிரதமராக்குவோம்

0

அரசியல் சூழ்ச்சி,அரசியல் நெருக்கடி ஆகியவற்றின் ஊடாக மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக்க வேண்டிய தேவை கிடையாது.

மக்களாணையுடன் மீண்டும் அவரை பிரதமராக்குவோம். பொதுஜன பெரமுனவின் கொள்கைகளை முழுமையாக ஏற்றுக்கொள்பவரை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிப்போம் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

அடுத்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ என அரசியல் களத்தில் குறிப்பிடப்படும் விடயம் தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

பிரதமர் பதவியில் மாற்றம் ஏற்படுத்த வேண்டிய தேவை தற்போது கிடையாது.ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர் தினேஷ் குணவர்தனவை பிரதமராக நியமிக்க கட்சி என்ற ரீதியில் முழுமையான ஒத்துழைப்பு வழங்கினோம். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் அதற்கு இணக்கம் தெரிவித்தார்.

பெரும்பான்மை பலத்தை வைத்துக் கொண்டு கட்சி என்ற ரீதியில் நாட்டுக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டுள்ளோம்.

ஜனாதிபதி,பிரதமர் ஆகியோரை நாங்களே தெரிவு செய்தோம்.ஆகவே பிரதமர் பதவியில் மாற்றம் ஏற்படுத்த வேண்டிய தேவை ஏதும் கிடையாது.

அரசியல் சூழ்ச்சி,அரசியல் நெருக்கடி ஆகியவற்றின் ஊடாக மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக்க வேண்டிய தேவை கிடையாது.

மக்களாணையுடன் மீண்டும் அவரை பிரதமராக்குவோம்.தேர்தல் ஒன்று இடம்பெற்றாமல் எமது பலத்தை மீண்டும் உறுதிப்படுத்துவோம்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க என்று அமைச்சர் பிரசன்ன ரணதுங்க குறிப்பிட்டுள்ளமை அவரது தனிப்பட்ட கருத்தாகும்.

அதற்கும் கட்சிக்கும் தொடர்பில்லை.ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொதுஜன பெரமுனவின் கொள்கைகளை முழுமையாக ஏற்றுக்கொண்டால் ஜனாதிபதி தேர்தலில் அவருக்கு ஆதரவு வழங்கலாம்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் கொள்கைளை முழுமையாக ஏற்றுக் கொண்டு அதனை செயற்படுத்துபவரை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிப்போம்.

எக்காரணிகளுக்காகவும் கட்சி கொள்கைகளை விட்டுக் கொடுக்க மாட்டோம்.எதிர்வரும் காலங்களில் இடம்பெறும் சகல தேர்தல்களிலும் எமது கட்சியை முன்னிலைப்படுத்தி செயற்படுவோம்.

அமைச்சரவை தொடர்பில் தீர்மானம் எடுக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உண்டு.நிலையான அமைச்சரவை ஒன்றை அமைக்கும் போது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் எட்டு சிரேஷ்ட உறுப்பினர்களுக்கு அமைச்சு பதவி வழங்கப்பட வேண்டும் என ஜனாதிபதியிடம் இரண்டு முறை எழுத்து மூலமாக வலியுறுத்தினோம். ஆனால் இதுவரை அதற்கு சாதகமான பதில் கிடைக்கவில்லை.

2023 ஆம் ஆண்டு வரவு – செலவு திட்டத்தின் பின்னர் அமைச்சரவை மறுசீரமைப்பு என்று குறிப்பிடப்பட்டது.அதன் பின் சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுக் கொண்டதன் பின்னர் அமைச்சரவை மறுசீரமைப்பு என குறிப்பிடப்பட்டது.

ஆனால் இதுவரை நிலையான அமைச்சரவை ஸ்தாபிக்கப்படவில்லை.அமைச்சரவை தொடர்பில் இனி கட்சி மட்டத்தில் ஜனாதிபதியுடன் எவ்வித பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபட போவதில்லை.அமைச்சு பதவி இல்லாவிடினும் அரசாங்கத்தின் சிறந்த தீர்மானங்களுக்கு கட்சி என்ற ரீதியில் முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம் என்றார்.

வேகமாக அதிகரிக்கும் டெங்கு நோயாளர்கள்

0
டெங்கு நோய் தொற்று அதிகமாக பரவியுள்ள கம்பஹா மாவட்டத்துக்கு டெங்கு நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்த விசேட குழுவொன்றை இன்று அனுப்பவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கம்பஹா மாவட்டத்தில் இதுவரை 7 ஆயிரத்துக்கும் அதிகமான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

நேற்றைய தினம் வரையில், நாட்டில் 31,098 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இந்தநிலையில், மேல் மாகாணத்தில் அதிகளவானோர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனினும், கடந்த ஆண்டு மே மாதம் வரையில் இலங்கையில் 24 ஆயிரத்து 206 டெங்கு நோயளர்கள் பதிவாகியுள்ளனர்.

இந்த வருடத்தில், டெங்கு நோய் தொற்றின் 3 ஆம் திரிபே இதற்கு பிரதான காரணம் என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனடாவில் காட்டுத் தீ – அவசரநிலை!

0

மேற்கு கனேடிய மாகாணம் முழுவதும் பரவிய காட்டுத் தீயை அடுத்து ஆல்பர்ட்டா மாகாணத்தில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

காட்டுத் தீ பரவலையடுத்து குறைந்தது 25,000 பேர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறினர்.

மாகாணத் தலைநகர் எட்சனில் வசிக்கும் 8,000 க்கும் அதிகமான மக்கள் உடனடியாக வெளியேறும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மாகாணத் தலைநகர் எட்மண்டனுக்கு மேற்கே 140 கிமீ தொலைவில் உள்ள டிரேட்டன் பள்ளத்தாக்கு மற்றும் நகருக்கு வடக்கே சுமார் 550 கிமீ தொலைவில் உள்ள ஃபாக்ஸ் லேக் பகுதிகளில் 20 வீடுகள் தீயில் கருகின.

பலத்த காற்று வீசுவதால், தீயை கட்டுப்படுத்த முடியாது போயுள்ளதாக தீயணைப்பு பிரிவு தெரிவித்துள்ளது. தீயணைப்பு ஹெலிகாப்டர்கள் மற்றும் விமான தாங்கிகள் வரவழைக்கப்பட்டுள்ளன.

வெளியேற்றப்பட்ட 1,000க்கும் மேற்பட்டவர்கள் எட்மண்டன் எக்ஸ்போ சென்டரில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அல்பர்ட்டா ஒரு பெரிய எண்ணெய் உற்பத்தி தளமாகும். எவ்வாறாயினும், இதுவரை எண்ணெய் கிடங்குகள் ஆபத்தில் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகவில்லை.

கொழும்பின் சில பகுதிகளுக்கு நீர் விநியோகத் தடை!

0
அத்தியாவசிய திருத்தப்பணிகள் காரணமாக கொழும்பின் சில புறநகர்பகுதிகளில் நாளைய தினம் 10மணிநேர நீர்விநியோகத்தடை அமுல்லப்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

இதற்கமைய, கொலன்னாவ நகர சபைக்குட்பட்ட பகுதிகளிலும், ராஜகிரிய, ஒபேசேகரபுர, பண்டாரநாயக்கபுர, எத்துல்கோட்டே, நாவல, கொஸ்வத்தை மற்றும் நாவல திறந்த பல்கலைக்கழக வளாகத்திலும் நீர் விநியோகத்தடை அமுப்படுத்தப்படும் என அந்த சபை குறிப்பிட்டுள்ளது.

நாளை முற்பகல் 10 மணிமுதல், இரவு 8 மணிவரையான காலப்பகுதியில் வரையில் நீர்விநியோகத்தடை அமுலில் இருக்கும் என தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு

0

இறுதி காலாண்டில் அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.

அரசு எதிர்பார்த்த இலக்குகளை எட்டினால், பொதுமக்கள் பயன்பெறுவார்கள் என்று அவர் தெரிவித்தார்.

நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தியதன் பின்னர் கடந்த காலாண்டுக்குள் அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பை வழங்குவதற்கு எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்ததாக பாலித ரங்கே பண்டார தெரிவித்தார்.

4 ஆளுநர்களுக்கு ஆப்பு!

0
மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் இருந்து கிடைத்த முறைப்பாடுகளை அடுத்து நான்கு மாகாண ஆளுநர்களை பதவி விலகுமாறு ஜனாதிபதி செயலகம் பணித்துள்ளதாக அரசாங்க தகவல் தரப்புகள் தெரிவித்துள்ளன.

இதன்படி, இந்த தீர்மானம் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத், வடமேல் மாகாண ஆளுநர் அட்மிரல் வசந்த கரன்னாகொட, ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில் மற்றும் சப்ரகமுவ ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ ஆகியோர் இதில் உள்ளடங்குகின்றனர்.

குறித்த ஆளுநர்கள், மாவட்டங்களின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து செயற்படாமை காரணமாகவே விலக்கப்படவுள்ளனர்.

இதேவேளை லண்டனில் நேற்று இடம்பெற்ற பிரித்தானியாவின் புதிய மன்னர் மூன்றாம் சார்ள்ஸின் முடிசூட்டு விழாவில் கலந்து கொண் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடு திரும்பியவுடன் புதிய ஆளுநர்கள் விரைவில் பெயரிடப்படவுள்ளனர்.

இதில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமானின் பெயரும் பரிந்துரையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

கொவிட் தொற்றினால் மூவர் மரணம்!

0
கொவிட் தொற்றினால் நேற்று முன்தினம் (5) மூவர் உயிரிழந்துள்ளனர்.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் நேற்று (6) வெளியிடப்பட்ட கொவிட் மரண அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, நேற்றைய தினம் 8 பேருக்கு புதிதாக கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

அத்துடன், 13 பேருக்கு நேற்றுமுன்தினம் (5) கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரள முஸ்லீம் பெண்களை இழிவுபடுத்தும் படத்திற்கு மோடி ஆதரவு

0

தி கேரளா ஸ்டோரி’ படத்துக்கு ஆதரவு தெரிவித்த இந்தியபிரதமர் மோடிக்கு தயாரிப்பாளர் விபுல் ஷா நன்றி தெரிவித்துள்ளார்.

விபுல் ஷா தயாரிப்பில் இயக்குநர் சுதிப்டோ சென் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் ‘தி கேரளா ஸ்டோரி’. இப்படத்தின் டீசரில் கேரளாவைச் சேர்ந்த பெண்கள் மதமாற்றம் செய்யப்பட்டு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் சேர்க்கப்பட்டதாக கூறப்பட்டிருக்கிறது.

இதற்கு கேரளாவில் பெரும் தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இன்னொரு புறம் நேற்று இப்படத்துக்கு தடை விதிக்க கேரள உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. வடமாநிலங்களில் இப்படம் நேற்று முதல் நாளில் ரூ.6.5 கோடி வரை வசூல் கிடைத்ததாகவும் இந்தியா முழுவதும் ரூ.10 கோடி வரை வசூல் ஈட்டியதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

கர்நாடகாவில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் இந்திய தேசத்துக்கு எதிரான சதியை அம்பலப்படுத்தியுள்ளதாக கூறியிருந்தார். இந்த நிலையில் படத்தின் தயாரிப்பாளர் விபுல் ஷாஇ ‘தி கேரளா ஸ்டோரி’ படத்துக்கு ஆதரவு தெரிவித்த பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

“நாளின் தொடக்கத்தில் இதை விட வேறு என்ன எங்களுக்கு வேண்டும்? கேரள உயர்நீதிமன்றம் ஒரு அழகான தீர்ப்பை வழங்கியுள்ளது. மேலும் பிரதமர் மோடி எங்கள் படம் குறித்து பேசியது மட்டுமின்றி நாங்கள் படம் முழுக்க அடிக்கோடிட்டு காட்ட விரும்பிய விஷயத்தையே அவரும் பேசியுள்ளார்.

இப்படம் பயங்கரவாதம் மற்றும் பயங்கரவாதிகளுக்கு எதிரான படம் மட்டுமே என்று இயக்குனர் கூறியுள்ளார். இது எந்தவொரு சமூகத்தையோ அல்லது மதத்தையோ தவறாக சித்தரிக்கவில்லை. எங்களது இந்த நிலைப்பாட்டை பிரதமரும் நிருபித்திருக்கிறார். எங்களை குறிவைத்த அனைவருக்கும் நீதிமன்றத்தின் தீர்ப்பே பதிலாக அமைந்துள்ளது.” இவ்வாறு விபுல் ஷா கூறியுள்ளார்.

மேலும் அண்மையில் “புர்கா” என்ற திரைப்படம் வெளியாகி முஸ்லீம் பெண்கள் பற்றிய தவறான எண்ணக்கருவை பரப்பியமை முஸ்லிம்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் தேர்தல் காலம் என்பதால் மதத்தை வைத்து அரசியல் செய்வதாக பெரும்பாலான இந்தியர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

சார்ள்ஸ் மன்னரின் பங்கேற்புடன் பொதுநலவாய மாநாடு

0

மூன்றாம் சார்ள்ஸ் மன்னரின் பங்கேற்புடன் நேற்று (05) லண்டனில் நடைபெற்ற  பொதுநலவாய தலைவர்கள் மாநாட்டில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் அவரது பாரியார் மைத்திரி விக்ரமசிங்க ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதன் போது  மூன்றாம் சார்ள்ஸ் மன்னருக்கு வாழ்த்துகளை கூறிய ஜனாதிபதி, அவருடன் சுமூகமாக கலந்துரையாடலில் ஈடுபட்டதோடு, இச் சந்திப்பில் பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்கவும் கலந்துகொண்டார்.

இம்மாநாட்டில் இளையோரின் பங்களிப்பை ஊக்குவிக்கும் வகையிலான கல்வி மறுசீரமைப்புக்களை மேற்கொள்வதற்கு பொதுநலவாய அமைப்பு விரிவான திட்டங்களை  முன்னெடுக்க வேண்டியது அவசியம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது உரையில் வலியுறுத்தினார்.

டிஜிட்டல் மயமாக்கலின் ஊடாக தொடர்பாடல்களை வலுப்படுத்த வேண்டும் எனவும் ஜனாதிபதி கோரினார்.

இம்மாநாட்டிற்கு இணையாக இடம்பெற்ற ‘Fireside Chat’நிகழ்வில் பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்க கலந்துகொண்டார்.

‘Fireside Chat’ நிகழ்வானது பொதுநலவாய மாநாட்டிற்கு அமைவான விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடும் மேடையாகும்.

இதன் போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, கானா நாட்டு ஜனாதிபதி  நானா எட்டோ அக்குபோ – எட்டோ (Nana Addo Dankwa Akufo-Addo) அவர்களையும்  லண்டனில் சந்தித்து கலந்துரையாடினார்.

இலங்கை மற்றும் கானாவுக்கு இடையிலான இருதரப்பு உறவுகளை பலப்படுத்திக்கொள்வது தொடர்பில் இதன்போது  ஆராயப்பட்டது.

அதனையடுத்து ருவண்டா ஜனாதிபதி பவுல் ககமே (Paul Kagame)   அவர்களை (05) சந்தித்து ஜனாதிபதி, கலந்துரையாடினார்.

இதன்போது இலங்கை மற்றும் ருவண்டா நாடுகளுக்கிடையிலான உறவுகளை பலப்படுத்திக்கொள்வது தொடர்பில் ஆராயப்பட்டதோடு,  விஷேடமாக விவசாயம் மற்றும் சுகாதார துறை சார்ந்த முதலீடுகளுக்கான வாய்ப்புக்கள் பற்றியும் ஆராயப்பட்டது.

இரு நாடுகளுக்கு இடையிலும் விஜயம் மேற்கொண்டு இரு நாட்டு அமைச்சர்களுக்கிடையிலான சந்திப்பை அடுத்த கட்டமாக நடத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் இலங்கை மற்றும் ருவண்டாவுக்கு இடையிலான பாதுகாப்பு  ஒத்துழைப்புகளை மேலும் வலுப்படுத்திக் கொள்ளும் நோக்கில் இயற்கை அனர்த்தங்களின் போதான துரித நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு அவசியமான பயிற்சிகளை வழங்க இலங்கை பாதுகாப்பு படைகளின் ஒத்துழைப்பை வழங்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க  உடன்பாடு தெரிவித்தார்.

லண்டனுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் சரோஜா சிறிசேன மற்றும் சர்வதேச அலுவல்கள் தொடர்பிலான ஜனாதிபதியின் பணிப்பாளர் தினுக் கொலம்பகே உள்ளிட்டவர்கள் இச் சந்திப்பில் கலந்துகொண்டிருந்தனர்.

பிரித்தானியாவின் புதிய மன்னராக மூன்றாம் சார்லஸ்

0
பிரித்தானியாவின் புதிய மன்னராக மூன்றாம் சார்லஸ் இன்று முடிசூடினார்.

மூன்றாம் சார்லசின் முடிசூட்டு விழா இன்று(6) லண்டன் – வெஸ்ட்மின்ஸ்டர் அபே தேவாலயத்தில் இடம்பெற்றது.

முடிசூட்டு விழாவில் கலந்து கொள்வதற்காக உலக தலைவர்கள் பலர் வெஸ்ட்மின்ஸ்டர் அபே தேவாலயத்துக்கு வருகை தந்தனர்.

வரலாற்றுச் சிறப்புமிக்க பக்கிங்காம் அரண்மனையில் இருந்து வெஸ்ட்மின்ஸ்டர் அபே தேவாலயம் வரை முடிசூட்டு விழாவின் ஊர்வலம் இடம்பெற்றது.

மன்னர் மூன்றாம் சார்லசும், அவரது மனைவி கமீலாவும் 6 குதிரைகள் பூட்டப்பட்ட சாரட் வண்டியில் இராணுவ வீரர்கள் புடைசூழ ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டனர்.

வீதியோரம் கொடியுடன் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அவர்களுக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

மன்னர் சார்லஸ் வெஸ்ட்மின்ஸ்டர் தேவாலயத்தைச் சென்றடைந்ததும் முறைப்படி மன்னர் முடிசூட்டு விழாவுக்கான ஏற்பாடுகள் இடம்பெற்றன.

700 ஆண்டுகள் பழமையான சிம்மாசனத்தின் பின்நின்று கொண்டு கேண்டர்பரி ஆர்ச் பிஷப் மன்னர் சார்லசை அங்கீகரித்து அறிவிப்பு வெளியிட்டார்.

இந்த அறிவிப்பை தொடர்ந்து பொதுமக்கள் முழக்கங்கள் எழுப்பினர்.

இராணுவ இசைக் கருவிகள் இசைக்கப்பட்டது.

அதன்பின், மன்னர் மூன்றாம் சார்லஸ் சட்டத்தையும், இங்கிலாந்து தேவாலயத்தையும் காப்பதாக உறுதிமொழி எடுத்துக்கொண்டார்.