Wednesday, February 5, 2025
Sponsored advertisementspot_img
Home Blog Page 68

புத்தளம் பி.ச.உறுப்பினர் ரிஜாஜினால் வீதி புனரமைப்பு

0

புத்தளம் பிரதேச சபை உறுப்பினர் ஜனாப் எஸ்.எம்.ரிஜாஜ் அவர்களினால் பொத்துவில்லு பிரதான வீதியின் ஒரு பகுதி புனரமைக்கப்பட்டு மீண்டும் மக்கள் பாவனைக்கு விடப்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு நாட்டில் பெய்த தொடர் மழை காரணமாக நாட்டின் பல பாகங்களும் வெகுவாக பாதிக்கப்பட்டிருந்தன. அந்த வகையில் புத்தளம் நாகவில்லு பகுதி அதிகமான பாதிப்புக்கு உள்ளாகியிருந்தது.

அதிலும் நாகவில்லு, பொத்துவில்லு பிரதான வீதியின் ஒரு பகுதி முற்றாக சேதமடைந்து மக்கள் பயணங்கள் மேற்கொள்ள முடியாமல் மிகவும் சிறமப்பட்டனர்.

இவ்வாரு பாதிக்கப்பட்ட வீதியினை மிக அவசரமாக திருத்தம் செய்ய பிரதேச சபை உறுப்பினர் ஜனாப் எஸ்.எம்.ரிஜாஜ் அவர்களினால் பல முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. அந்த வகையில் மாகாண வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு வீதி திருத்தும் பணிக்கான வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தன.

பிரதேச சபை உறுப்பினரின் குறித்த வேண்டுகோளுக்கினங்க மாகாண வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் நாகவில்லு, பொத்துவில்லு பிரதான வீதியின் பாதிக்கப்பட்ட வீதி சுமார் 107 மீட்டர் நீளமும் 12 அடி அகலமும் கொங்கிரீட் இடப்பட்டு செப்பனிடப்பட்டு வீதி புனரமைக்கப்பட்டு  நிறைவுசெய்யப்பட்டுள்ளது.

குறித்த வீதியின் ஊடாகவே பொத்துவில்லு மற்றும் அட்டவில்லு பிரதேச மக்கள் பயணங்கள் மேற்கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.

முற்றாக சேதமடைந்திருந்த பொத்துவில்லு பிரதான வீதியின் குறித்த பகுதியை முழுமையாக திருத்தி தந்தமைக்காக பொத்துவில்லு மற்றும் அட்டவில்லு பிரதேச மக்கள் பிரதேச சபை உறுப்பினர் ஜனாப் எஸ்.எம்.ரிஜாஜ் அவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளதுடன், புத்தளம் எருக்கலம்பிட்டி (நாகவில்லு) மக்கள் தமது பாராட்டுக்களை தெரிவித்துள்ளமை விஷேட அம்சமாகும்.

நாகவில்லு பாடசாலைக்கு பழைய மாணவர் சங்கத்தினால் குழாய் நீர் வசதி

0

புத்தளம் எருக்கலம்பிட்டி முஸ்லிம் மகா வித்தியாலயத்திற்கு இன்றை தினம் 07.03.2022 திங்கள் பாடசாலை பழைய மாணவர் சங்கத்தினால் குழாய் கிணறு மற்றும் நீர் தாங்கி நிர்மானிக்கப்பட்டு பாவனைக்கு கையளிக்கப்பட்டது.

புத்தளம் எருக்கலம்பிட்டி மு.ம.வி. பழையமாணவர் சங்கத்தின் வேண்டுகோளுக்கினங்க புத்தளம் சமூக ஆர்வளர் திரு சஜாப் அவர்களின் முயற்சியால் இன்றைய தினம் பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பாவனைக்கு குழாய் கிணறு மற்றும் நீர் தாங்கி நிர்மானிக்கப்பட்டு பாவனைக்கு கையளிக்கப்பட்டது.

பழையமாணவர் சங்கத்தினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று மிக குறிய காலத்தில் நிர்மானித்து தந்த புத்தளம் சமூக ஆர்வளர் திரு சஜாப் அவர்களுக்கு பாடசாலை பழைய மாணவர் சங்கம் மற்றும் பாடசாலைச் சமூகத்தினால் நன்றி தெரிவிக்கப்பட்டது.

சுமார் மூன்று லட்சம் செலவில் பாடசாலை பள்ளிவாசலுக்கு அருகில் நிர்மானிக்கப்பட்ட இக்குழாய் கிணற்றின் மூலம் பாடசாலை மாணவர்கள் அனைவரும் பயன்பெறுவார்கள் என பாடசாலை அதிபர் திரு எஸ்.எம். ஹுசைமத் தெரவித்தார்.

குறித்த நிகழ்வில் பள்ளிவாசல் இமாம், பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் கலந்து சிறப்பித்ததுடன், சிற்றுண்டி நிகழ்வுடன் இவ் வைபவம் நிறைவுபெற்றமை குறிப்பிடத்தக்கது.

நாவில்லுவில் உதைப்பந்தாட்டப் போட்டி

0

எருக்கலம்பிட்டி கிரியேட்டிவ் மூமன்ட் அமைப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கிடையான சினேக பூர்வ உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி இன்று 27.02.2022 ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.

புத்தளம் எருக்கலம்பிட்டி முஸ்லிம் மகா வித்தியாலய மாணவர்களுக்கிடையான குறித்த உதைப்பந்தாட்ட போட்டி இன்று வெகு விமர்சையாக இடம்பெற்றது.

எருக்கலம்பிட்டி கிரியேட்டிவ் மூமன்ட் அமைப்பின் பூரண அணுசரனையில் ஏற்பாடு செய்யப்பட்ட அணிக்கு 7 போர் கொண்ட இச்சுற்றுப்போட்டியில் 10 அணிகள் கழந்துகொண்டன. தரம் 7 முதல் தரம் 11 வரையான பாடசாலை மாணவர்கள் குறித்த போட்டியில் பங்குபற்றினர்.

பாடசாலை மாணவர்களின் உதைப்பந்தாட்ட திறனை மேலும் அதிகரிக்கும் நோக்கில் புத்தளம் எருக்கலம்பிட்டி முஸ்லிம் மகா வித்தியாலயத்துடன் இணைந்து எருக்கலம்பிட்டி கிரியேட்டிவ் மூமன்ட் அமைப்பு இப்போட்டியினை ஏற்பாடு செய்திருந்தமை விஷேட அம்சமாகும்.

இச்சுற்றுப்போட்டியில் இறுதிப்போட்டிக்கு தெரிவான GOAL RAIDER மற்றும் SUPER KINGS அணிகளுக்கடையான அபார போட்டியில் GOAL RAIDER அணி 1-0 என்ற கோல் கணக்கில் கிண்ணத்தை தனதாக்கியது.

இந்நிகழ்வில் புத்தளம் பிரதேச சபை உறுப்பினர் ஜனாப் எஸ்.எம். றிஜாஜ், பாடசாலை அதிபர் ஜனாப் எஸ்.எம். குசைமத், பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை உறுப்பினர்கள், கழகங்கள் மற்றும் ஊர் ஜமாத்தினர் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

நாவில்லுவில் சுதந்திர தினக் கொண்டாட்டங்கள்

0

இலங்கை சோசலிஷ குடியரசின்eruk நிகழ்வு வெகு விமர்சையாக நேற்று இடம்பெற்று முடிவுற்றது.

புத்தளம் பிரதேச சபை உறுப்பினர் ஜனாப் எஸ்.எம். ரிஜாஜ் அவர்களின் எற்பாட்டில் கடந்த மூன்று தினங்களாக இடம்பெற்ற இச் சுற்றுப்போட்டியில், சுமார் 32 அணிகள் பங்குபற்றின.

மின்னொளியில் இடம்பெற்ற இப்போட்டியினை enews1st நேரளை செய்தமை விஷேட அம்சமாகும்.

சகல போட்டிகளிலும் அபாரமாக விளையாடிய எருக்கலம்பிட்டி யூத் மற்றும் யூத் பல்காரா அணிகள் இருதிப்போட்டிக்கு தகுதிபெற்றன. மிகவும் சிறப்பாக விளையாடிய இரு அணிகளில் எருக்கலம்பிட்டி யூத் அணியினர் இருதிப்போட்டியில் வெற்றி பெற்று கிண்ணம் மற்றும் பணப்பரிசிலை தட்டிச்சென்றனர்.

வெற்றிபெற்ற அணிக்கு முப்பத்தி ஐயாயிரம் ரூபாய் பணப்பரிசு மற்றும் வெற்றிக்கேடயம் என்பன புத்தளம் பிரதேச சபை உறுப்பினர் ஜனாப் எஸ்.எம். ரிஜாஜ் அவர்களினால் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இரண்டாம் இடம் பெற்ற யூத் பல்காரா அணிக்கு பதினையாயிரம் ரூபாய் பணப்பரிசு மற்றும் வெற்றிக்கிண்ணம் வழங்கப்பட்டன.

இதேவேளை 40 வயதிற்கு மேற்பட்டோருக்கான அதி விஷேட சுற்றுப்போட்டியில் நாகவில்லு ஸ்டார்ஸ் அணியினை கொழும்பு ஸ்டார்ஸ் அணியினர் 3-0 என்ற கணக்கில் வெற்றிபெற்று பத்தாயிரம் ரூபாய் பணப்பரிசு மற்றும் வெற்றிக்கிண்ணத்தை தட்டிச்சென்றனர்.

வெற்றிபெற்ற பத்தாயிரம் ரூபாய் பணப்பரிசு மற்றும் வெற்றிக்கிண்ணத்தை பாடசாலைக்கு நன்கொடையாக வழங்கிவைக்கப்பட்டமை விஷேட அம்சமாகும்.

நேற்றைய இறுதிநாள் நிகழ்வினை முகப்புத்தகம் வாயிலாக நேரலை செய்த enews1stயிற்கு ஏற்பாட்டுக்குழுவினர் விஷேட நன்றி தெரிவித்ததுடன், இனிய ஸலவாத்துடன் நிகழ்வுகள் யாவும் நிறைவுபெற்றன.

மன்னார் பி.சபை தவிசாளராக இஸ்ஸதீன்!

0

மன்னார் பிரதேச சபையினை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கைப்பற்றியது – புதிய தவிசாளராக இஸ்மாயில் இஸ்ஸதீன் தெரிவு

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி வசம் இருந்த மன்னார் பிரதேச சபை தற்பொழுது இவ் சபையின்அனைத்து கட்சி உறுப்பினர்களின் ஒத்துழைப்புடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது.

மன்னார் பிரதேச சபையின் தவிசாளராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி உறுப்பினர் S.H.M.முஜாஹிர் பதவி வகித்து வந்த நிலையில் 2022ம் ஆண்டுக்கான பாதீடு 2 தடவைகள் தோற்கடிக்கப்பட்டதனால் 12.01.2022 அன்று காலை 10.30 மணியளவில் வட மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் பற்றிக் டிரஞ்சன் தலைமையில் புதிய தவிசாளருக்கான தெரிவு இடம் பெற்றது.

இதன் போது புதிய தவிசாளர் தெரிவிற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினரும் உப தவிசாளருமான இஸ்மாயில் இஸ்ஸதீனின் பெயர் பரிந்துரைக்கப்பட்து.

எனினும் தவிசாளர் தெரிவிற்கு வேறு எந்த உறுப்பினர்களுடைய பெயரும் பரிந்துரைக்கப்படவில்லை.

இந்நிலையில் மன்னார் பிரதேச சபையின் 21 உறுப்பினர்களின் ஒத்துழைப்புடன் உப தவிசாளராக இருந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த எருக்கலம்பிட்டி உறுப்பினர் இஸ்மாயில் இஸ்ஸதீன் மன்னார் பிரதேச சபையின் புதிய தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார்.

மேலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் 7 உறுப்பினர்களும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 2 உறுப்பினர்களும் பொதுஜன பெரமுன மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலா ஒவ்வொரு உறுப்பினரும் பூரண ஆதரவை ஆரம்ப முதல் வழங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

அஹதிய்யா பாடசாலைகளின் மத்திய சம்மேள பேராளர் மாநாடு

0

அகில இலங்கை அஹதிய்யா பாடசாலைகளின் மத்திய சம்மேள பேராளர் மாநாடு நேற்று 2022/01/08 சனிக்கிழமை கொழும்பு மருதானை MICH  மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.

அகில இலங்கை அஹதிய்யா பாடசாலைகள் ரீதியாக ஒருவர் தலா ஒருவர் வீதம் அஹதிய்யா பாடசாலைகள் அதிபர்கள், பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள், நிறுவாகிகள் என பலர் கலந்து சிறப்பித்தனர்.

குறித்த நிகழ்வில் பிரதம பேச்சாளராக
ஜாமிஆ நளீமியா கலாபீட பிரதிப் பணிப்பாளரும், விரிவுரையாளருமான
அஷ்ஷேஹ எம்.எச்.எம். பளீல் அவர்கள் கலந்துகொண்டதுடன்,

விஷேட அதிதிகளாக உயர் நீதிமன்ற சட்டத்தரணி றுஷ்தி ஹபீப், சட்டத்தரணி றூமி , முன்னால் முஸ்லிம் சமய கலாசார பண்பாட்டு அலுவல்கள் திணைக்கள உதவிப் பணிப்பாளர் அஷ்ஷேஹ் நூருல் அமீன் மெளலவி, எம்.எம்.முஹம்மட் (முன்னால் பரீட்சை ஆணையாளர்) இலங்கை பரீட்சை திணைக்களம், அஷ்ஷேஹ் எம்.எம்.ஏ.லாபிர், ஸப்பான் ஏ அஸீஸ் மற்றும் முன்னால் மத்திய சம்மேளனத்தின் உறுப்பினர்கள் கலந்து கொண்டமை விஷேட அம்சமாகும்.

2022ஆம் ஆண்டுக்கான அகில இலங்கை அஹதிய்யா பாடசாலைகளின் மத்திய சம்மேளனத்தின் புதிய நிருவாகிகளாக பின்வருவோர் தெரிவு செய்யப்பட்டனர்.

2022 -2025 வரையான நடப்பாண்டு நிறுவாகிகள்

அல்ஹாஜ் எம்.ஆர்..எம். ஸரூக் ( தலைவர்)

எம் .எப்.எம்.பாஹிம் ( பொதுச் செயலாளர்)

அல்ஹாஜ் எம்.எச் .எம் உவைன் ( பொருளாளர்)

உப தலைவர்களாக

1) பாறூக் பதீன் (ஆசிரியர் &வலய சுற்றாடல் முன்னோடி ஆணையாளர்)
2) அல்ஹாஜ் ஏ.எல்.எம்.அஸ்வர்
3) அஷ்ஷேஹ் எம்.எம்.றபியுத்தீன்

எஸ்.எம்.ஹிஷாம் ( உப செயலாளர் )
அஷ்ஷேஹ் எம். அக்ரம் ஜுனைத் ( உப பொருளாளர்)
அல்ஹாஜ் கலாநிதி பி.எம்.பாறூக் ( கணக்காய்வாளர் )

ஆகியோர் தெரிவு செய்யப்பட்டார்கள்.

புதிய சுகாதார வழிகாட்டல் வெளியானது!

0
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் இன்று(01) முதல் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை அமுலாகும் வகையிலான புதிய சுகாதார வழிகாட்டல் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படிஐந்தாம் வகுப்புக்கு மேல் 50 சதவீத மாணவ கொள்ளளவுடன் மேலதிக வகுப்புக்களை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை 2022ஆம் ஆண்டில், நாட்டில் முடக்க நிலையை அமுலாக்காமல் இருப்பதற்கும், வழமைபோல இயல்பு வாழ்க்கையைப் பேணுவதற்கும், அனைத்துப் பிரஜைகளும் சுகாதார வழிகாட்டல்களை கடுமையாக பின்பற்ற வேண்டும் என சுகாதார அமைச்சு வலியுறுத்தியுள்ளது.

மேற்படி சுகாதார வழிகாட்டலில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் வருமாறு:

பு/எருக்கலம்பிட்டியில் வடிகான் சுத்திகரிப்பு பணி!

0

பு/எருக்கலம்பிட்டியில் இன்றைய தினம் புத்தளம் நகர சபையின் அனுசரைணயுடன் வடிகான் சுத்திகரிப்பு பணி இடம்பெற்றது.

பு/எருக்கலம்பிட்டி பள்ளிவாசல் நிர்வாகத்தின் வேண்டுகோளுக்கிணங்க, புத்தளம் நகரசபையின் சிரேஷ்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு ஜஸ்லின் அவர்களின் வழிகாட்டுதலில் வடிகான் சுத்திகரிப்பு மற்றும் வேளைத்திட்டம் இடம்பெற்றது.

பு/எருக்கலம்பிட்டி பாடசாலை வீதியின் வடிகானில் மண் நிரம்பி வீதியை ஊடருத்து வெள்ள நீர் வீடுகளுககுள் சென்றதால் குறித்த வடிகான் தோண்டப்பட்டு செப்பனிடப்பட்டுள்ளது.

ஏனைய வடிகான்கள் எதிர்வரும் தினங்களில் செப்பனிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த வேளைத்திட்டத்தின்போது, புத்தளம் நகரசபை உறுப்பினர் திரு ரனீஸ், புத்தளம் நகரசபையின் சிரேஷ்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு ஜஸ்லின் மற்றும் புத்தளம் எருக்கலம்பிட்டி நம்பிக்கையாளர் சபை உறுப்பினர்கள் குறித்த வேளைத்திட்டத்தில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

 

புத்தளம் எருக்கலம்பிட்டியில் கடும் வெள்ளம்

0

புத்தளம் பகுதியில் தொடர்ச்சியாக பெய்துவரும் அடை மழை காரணமாக புத்தளம் பகுதி முழுதும் மழை வெள்ளத்தால் மூழ்கியுள்ளது.

புத்தளம், தில்லையடி, பாலாவி, புத்தளம் எருக்கலம்பிட்டி, ஹிதாயத் நகர்,  மதுரங்குளி மற்றும் ஏனைய பல கிராமங்களும் வெள்ளித்தினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

அவ்வகையில் புத்தளம் எருக்கலம்பிட்டி கிராமமும் முழுவதுமாக பாதிக்கப்பட்டுள்ளது.

சுமார் 1500 குடும்பங்கள் இங்கு வாழ்ந்துவருவதுடன், அனைத்து வீடுகளும் மழை வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

நூற்றிற்கும் அதிகமான வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதுடன் ஐநூற்றுக்கும் அதிகமான வீடுகள் பகுதி அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 8ஆம் திகதி ஏற்பட்ட மழை வெள்ளித்தினால் பாதிக்கப்பட்ட பல குடும்பங்கள் பள்ளிவாசல்கள், மத்ரஸாக்கள் மற்றும் பாடசாலைகளில் தற்காலிகமாக  தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த இரண்டு தினங்களாக இவர்களுக்கான சமைத்த உணவுகள் மூன்று வேலைகளிலும் ஊர் தனவந்தர்களின் உதவியுடனும், பள்ளிவாசல் நிர்வாக சபையின் வழிகாட்டலுடனும் வழங்கப்பட்டு வருவதுடன், ஊர் மக்களுக்கும் உணவு விநியோகங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது.

இவர்களுக்கான நிவாரண உதவிகள் இதுவரை அரசாங்கத்தினால் வழங்கப்படாத போதிலும், ஊர் மக்களின் பங்களிப்புடன் மாத்திரமே பாதிக்கப்பட்ட மக்களுக்கான உணவு விநியோகங்கள் இதுவரை  வழங்கப்பட்டு வருகின்றது.

புத்தளம் பொத்துவில்லு பகுதியில் உள்ள குளம் மழை நீரினால்  பெருக்கெடுத்துள்ளதால் குறித்த குளத்து நீர் புத்தளம் எருக்கலம்பிட்டி கிராமத்திற்குள் தொடர்ந்தும் மூன்றாவது நாளாக ஊடறுத்து செல்வதால் வீடுகள் தொடர்ந்தும் நீருள் மூழ்கியுள்ளது.

மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதுடன் அரசாங்கத்தின் நிவாரண உதவிக்காக பல மக்கள் தொடர்ந்தும் எதிர்பார்த்து காத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

முஸ்லிம் கலாசார திணைக்களத்தின் பணிப்பாளராக அன்ஸார்

0

முஸ்லிம் கலாசார திணைக்களத்தின் புதிய பணிப்பாளராக மன்னார் எருக்கலம்பிட்டி முஸ்லீம் மத்திய மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர் இப்ராஹிம் அன்ஸார் நியமிக்கப்பட உள்ளதாக  அரச உயர்மட்ட தகவல்கள் தெரிவித்துள்ளன.

அவரின்  நியமனத்திற்கான அமைச்சரவை அங்கீகாரம் நேற்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முஸ்லிம் கலாசார திணைக்களத்தின் புதிய பணிப்பாளராக இப்ராஹிம் அன்ஸார் அவர்கள் விரைவில் தனது கடமைகளை பொறுப்பேற்க உள்ளார்.

இப்ராஹிம் அன்ஸார் இதற்கு முன்னதாக சவுதி அரேபியா ,மலேசியா உள்ளிட்ட நாடுகளின் உயர்ஸ்தாணிகராக பல ஆண்டுகள் சேவையாற்றிய மூத்த அரச உயரதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது.