Sponsored Advertisementspot_img
HomeLocal Newsவீதி பாதுகாப்பு தொடர்பில் விஷேட கலந்துரையாடல்!

வீதி பாதுகாப்பு தொடர்பில் விஷேட கலந்துரையாடல்!

கிளிநொச்சி மாவட்டத்தின் வீதி பாதுகாப்பு தொடர்பான விஷேட கலந்துரையாடல் ஒன்று இன்று நடைபெற்றது.

கிளிநொச்சி மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அட்தியட்சகர் அவர்களின் தலைமையில் வீதி பாதுகாப்பு தொடர்பான கலந்துரையாடல் கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

குறித்த கலந்துரையாடலில் மாவட்டத்திலுள்ள பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள்,போக்குவரத்து பொலிசார், மாவட்டத்திலுள்ள திணைக்களங்களின் உத்தியோகத்தர்கள், முச்சக்கரவண்டி சங்க பிரதிநிதிகள், தனியார் பேரூந்து உரிமையாளர் சங்க பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.

நாட்டில் அதிகரித்துவரும் வீதி விபத்துக்களை தடுக்கும் நோக்கிலும், உயிர் ஆபத்துக்களை குறைக்கும் நோக்கிலும் குறித்த கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதேவேளை அண்மையில் கொத்மலை, கெரண்டியிஎல்ல பகுதியில் இடம்பெற்ற மிக மோசமான பஸ் விபத்து முழு நாட்டு மக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

ALTEC SOLUTION

Official Instagram

Most Popular

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

Official Instagram

Most Popular