Tuesday, July 14, 2026
Sponsored advertisementspot_img
Sponsored Advertisementspot_img
HomeLocal Newsலக்விஜய நிலக்கரி கொள்வனவு ஊழல் விசாரணையில் அதிரடி திருப்பம்!

லக்விஜய நிலக்கரி கொள்வனவு ஊழல் விசாரணையில் அதிரடி திருப்பம்!

நிலக்கரி கொள்முதல் தொடர்பான கொடுக்கல் வாங்கல்கள் குறித்து விசாரணை நடத்தும் விசேட ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில், லக்விஜய நிலக்கரி மின்நிலையத்தின் பிரதி பொதுமுகாமையாளர் துஷான் அபேகோன் உள்ளிட்ட மூன்று அதிகாரிகள் இன்று (13) சாட்சியமளிக்க அழைக்கப்பட்டுள்ளனர்.

லக்விஜய மின்நிலையத்தின் பிரதி பொதுமுகாமையாளர் துஷான் அபேயகோன் ஏற்கனவே கடந்த புதன்கிழமை(8) ஆணைக்குழு முன்னிலையில் முன்னிலையாகியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நிலக்கரி கொள்முதல் கொடுக்கல் வாங்கல்களை விசாரணை செய்வதற்கான விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொது விசாரணைகளின் மூன்றாவது நாள் நடவடிக்கைகள் இன்று இடம்பெறவுள்ளன.

இதற்கு முன்பாக, பிரதி மன்றாடியார் நாயகம் கங்கா வாகிஷ்ட ஆராச்சி, பிரதி மன்றாடியார் நாயகம் ஏஞ்சலோ வன் வூட், எரிசக்தி அமைச்சின் செயலாளர் ஜி.எம்.ஆர்.டி. அப்போன்சு, அமைச்சின் மேலதிக செயலாளர் மற்றும் நிறுவனங்களின் பதிவாளர் ஷ்யாமா ஹர்ஷனி உள்ளிட்டோரிடமிருந்து ஆணைக்குழு சாட்சியங்களைப் பதிவு செய்திருந்தது.

இந்த விசாரணையின் போது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஏற்கனவே சமர்ப்பித்த உறுதிமொழிகளின் அடிப்படையில் சாட்சியங்கள் பதிவு செய்யப்படுகின்றன.

இதேவேளை எதிர்காலத்திலும் விசாரணைகள் தொடரும் என ஆணைக்குழுவின் செயலாளர் டி.வி. பண்டாரசேன தெரிவித்தார்.

RELATED ARTICLES

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

Official Instagram

Most Popular

- SPONSORED ADD -

Official Instagram

Most Popular