Sunday, April 26, 2026
Sponsored advertisementspot_img
Sponsored Advertisementspot_img
HomeLocal Newsவெசாக் வாரத்தில் ஹஜ் பெருநாள்: அரசாங்கத்தின் தீர்மானம்?

வெசாக் வாரத்தில் ஹஜ் பெருநாள்: அரசாங்கத்தின் தீர்மானம்?

பௌத்த மக்கள் மிகவும் புனிதமாகப் போற்றும் வெசாக் வாரத்தில் மாடுகள் அல்லது ஏனைய விலங்குகளைப் பலியிடுவதானது தேவையற்ற சமூகப் பதற்றங்களுக்கு வழிவகுக்கும் என்பதால், இது குறித்து அரசாங்கம் இஸ்லாமிய மதத் தலைவர்களுடன் கலந்துரையாடி ஒரு தீர்மானத்திற்கு வர வேண்டும் என கலகொட அத்தே ஞானசார தேரர் வலியுறுத்தியுள்ளார்.

கொழும்பில் நேற்று முன்தினம் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை நடத்தி அதில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

இஸ்லாமியர்கள் தமது ஹஜ் பெருநாளை மிகுந்த எதிர்பார்ப்புடன் கொண்டாடி வருகின்றனர். ஈதுல்  பெருநாளைத் தொடர்ந்து அய்யாமுல் தஷ்ரீக் எனப்படும் மூன்று நாட்கள் தியாகத் திருநாள் நிகழ்வுகள் இடம்பெறுகின்றன. இஸ்லாமிய மார்க்கத்தின் படி அல்லாஹ்வுக்காகச் செய்யப்படும் தியாகமாகவே இது கருதப்படுகிறது. இப்ராஹீம் நபியவர்களின் வாழ்க்கையில் இடம்பெற்ற அர்ப்பணிப்பினை நினைவுறுத்தும் வகையில், நீண்டகாலமாக அவர்கள் மாடுகள், ஆடுகள் அல்லது ஒட்டகங்களைப் பலியிடுவதை ஒரு புண்ணியச் செயலாகக் கருதிப் பின்பற்றி வருகின்றனர்.

எனினும், இவ்வாறான குர்பான் நிகழ்வுகளின் போது நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த காலங்களில் அமைதியற்ற சூழல்கள் உருவானதை நாம் அறிவோம். குறிப்பாக 2013 ஆம் ஆண்டு கொலன்னாவை நகர சபைக்கு அப்போதைய மேல் மாகாண ஆளுநர் அலவி மௌலானாவினால் அனுப்பப்பட்ட ஒரு கடிதத்தில், இதனை பசு வதை புண்ணியச் செயல் எனக் குறிப்பிட்டிருந்த ஆவணம் என்னிடம் இப்போதும் உள்ளது. ஒரு விலங்கைக் கொன்று அதன் இறைச்சியைத் தமக்கும், ஏழைகளுக்கும், அயலவர்களுக்கும் பகிர்ந்தளிப்பதே அவர்களின் சம்பிரதாயம்.

தற்போதுள்ள சூழலில் வெசாக் வாரம் என்பது பௌத்தர்களுக்கு மிகவும் முக்கியமான காலப்பகுதியாகும். மக்கள் தான தர்மங்கள் செய்தும், தோரணங்கள் அமைத்தும், பௌத்த நடைமுறைகளைப் பின்பற்றியும் இப்புனித வாரத்தைக் கொண்டாடுகின்றனர். 

இம்முறை இஸ்லாமிய நாட்காட்டியின் படி மே மாதம் 30ஆம் திகதி ஹஜ் பெருநாளின் முக்கிய தினம் அமையும் எனத் தெரிகிறது. வெசாக் வாரம் மே 27 ஆம் திகதி ஆரம்பமாகின்றது. இதன்படி வெசாக் வார காலப்பகுதிக்குள் இந்தத் தியாகத் திருநாள் நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளன.

பௌத்த தர்மத்தின் படி தம்மபதத்தில் அனைத்து உயிர்களும் தண்டனைக்கும் மரணத்திற்கும் அஞ்சுகின்றன. எனவே தன்னையே உதாரணமாகக் கொண்டு பிற உயிர்களைக் கொல்லவோ அல்லது கொலை செய்யத் தூண்டவோ கூடாது என்பதே அதன் பொருளாகும். 

தற்போதுள்ள சர்வதேச அரசியல் சூழலில், குறிப்பாக மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் பதற்றங்களுக்கு மத்தியில், இணையத்தளங்கள் வாயிலாக மத ரீதியான கருத்துக்கள் ஆவேசமாகப் பரிமாறப்படுகின்றன.  இவ்வாறான பின்புலத்தில் உள்நாட்டில் இத்தகைய செயற்பாடுகள் பாரிய மோதல்களுக்கு வித்திடக்கூடும். 

எனவே, வக்பு சபை மற்றும் இஸ்லாமிய மதத் தலைவர்களுடன் இணைந்து அரசாங்கம் இது குறித்து உரிய ஒருங்கிணைப்பை மேற்கொள்ள வேண்டும். மதச் சுதந்திரம் மதிக்கப்பட வேண்டிய அதேவேளை, நாட்டின் அமைதியைப் பேணும் வகையில் இவ்வாறான சந்தர்ப்பங்களில் எழும் சிக்கல்களைத் தவிர்ப்பதற்கு அரசாங்கம் உடனடியாகக் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.  

RELATED ARTICLES

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

Official Instagram

Most Popular

- SPONSORED ADD -

Official Instagram

Most Popular