Saturday, August 30, 2025
Sponsored advertisementspot_img
Sponsored Advertisementspot_img
HomeMuslim Worldகாஸா மீதான நேற்றைய தாக்குதலில் 135 பேர் உயிரிழப்பு!

காஸா மீதான நேற்றைய தாக்குதலில் 135 பேர் உயிரிழப்பு!

இஸ்ரேல், காசா முனையில் அதிரடி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த போர் நீடித்து வருகிறது. இந்நிலையில், நேற்றிரவும் காசா முழுவதும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதில் 135 அப்பாவி பாலஸ்தீனர்கள் அநியாயமாக கொல்லப்பட்டனர். 771 பேர் காயமடைந்தனர் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும் பட்டினியால் இறந்தவர்களின் எண்ணிக்கை 193ஐ எட்டியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 5 பட்டினி மரணங்களை சுகாதார அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, காசாவை முழுமையாக ஆக்கிரமிக்க முடிவு செய்துள்ளார். ஐ.நா. உதவி பொதுச்செயலாளர் மிரோஸ்லாவ் ஜென்கா கூறுகையில், ‘நெதன்யாகுவின் நடவடிக்கை கவலையளிக்கிறது’ என்று ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலிடம் தெரிவித்தார்.

அமெரிக்க அதிபர் கூறுகையில், ‘தாக்குதலை தொடரலாமா வேண்டாமா என்பதை இஸ்ரேல் தான் முடிவு செய்ய வேண்டும்’ என்று கூறினார். காசா மீதான இஸ்ரேலின் போரில் இதுவரை குறைந்தது 61,158 பேர் கொல்லப்பட்டுள்ளனர், 151,442 பேர் காயமடைந்துள்ளனர்.

RELATED ARTICLES

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

- SPONSORED ADD -

Official Instagram

Most Popular