ஜூட் சமந்த
வணாத்தவில்லுவ – காட்டுப்புளியங்குளம் பகுதியில் உள்ள தென்னந்தோப்பு ஒன்றில் அமைந்துள்ள வீட்டிலிருந்து சிறுத்தை புலித் தோல், சட்டவிரோத துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களை வைத்திருந்த குற்றச்சாட்டின் கீழ் இருவர் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சுற்றிவளைப்பு வனஜீவராசிகள் திணைக்களத்தின் வணாத்தவில்லுவ உப அலுவலக அதிகாரிகளால், இன்று (17ஆம் திகதி) நள்ளிரவில் முன்னெடுக்கப்பட்டது.
சந்தேகநபர்கள் தங்கியிருந்த வீட்டைச் சோதனையிட்ட போது பல சட்ட விரோதமான பொருட்கள் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன:
- ஒரு சிறுத்தை புலித் தோல் (திவி ஹக்)
- வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட, அனுமதியற்ற 12 போர்ட் ரக துப்பாக்கி ஒன்று
- உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட, அனுமதியற்ற 12 போர்ட் ரக துப்பாக்கி ஒன்று
- 05Live தோட்டாக்கள் (உயிருள்ள தோட்டாக்கள்)
- 04 வெற்றுத் தோட்டாக் கூடுகள் ஆகியன அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டன
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை புத்தளம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வனாத்தவில்லுவ வனஜீவராசிகள் திணைக்களத்தினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


