Thursday, August 6, 2026
Sponsored advertisementspot_img
Sponsored Advertisementspot_img
HomeLocal Newsவிடுதிக்குள் ரகசிய 'பிசினஸ்': பல்கலை மாணவனுக்கு ரூ.4 லட்சம் அபராதம்!

விடுதிக்குள் ரகசிய ‘பிசினஸ்’: பல்கலை மாணவனுக்கு ரூ.4 லட்சம் அபராதம்!

பல்கலைக்கழக விடுதி அறைக்குள் எவரும் எதிர்பார்க்காத வகையில் மிக நீண்டகாலமாக நடந்துவந்த அதிர்ச்சி ரகசியம் ஒன்று இப்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. உயர்கல்வி கற்க வேண்டிய இடத்தில் போதைப்பொருள் வியாபாரம் செய்துவந்த மாணவன் ஒருவனுக்கு நீதிமன்றம் வழங்கிய அதிரடித் தீர்ப்பு கல்வி உலகையே உலுக்கியுள்ளது.

வடமேல் பல்கலைக்கழகத்தின் இரண்டாம் ஆண்டில் பயிலும் 22 வயதான மாணவன் ஒருவனே இந்த சட்டவிரோத செயலில் ஈடுபட்டு சட்டத்தின் பிடியில் சிக்கியுள்ளார். பலங்கொட பகுதியைச் சேர்ந்த இந்த மாணவன், சக மாணவர்களையே குறிவைத்து விடுதிக்குள் வைத்து போதைப்பொருட்களை விற்பனை செய்து வந்துள்ளான்.

பல்கலைக்கழக பாதுகாப்பு அதிகாரி (மார்ஷல்) விடுதி அறைகளில் மேற்கொண்ட திடீர் சோதனையின்போதே இந்த அதிர்ச்சி உண்மை அம்பலமானது. விடுதி அறைக்குள் இருந்து பெருமளவிலான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டதை அடுத்து, பொலிஸாருக்கு உடனடியாக தகவல் வழங்கப்பட்டது.

குளியாப்பிட்டிய தலைமை பொலிஸ் பரிசோதகர் கமல் ரத்நாயக்க மற்றும் உப பொலிஸ் பரிசோதகர் ஏகநாயக்க தலைமையிலான குழுவினர் நடத்திய தீவிர விசாரணையில், மாணவன் நீண்டகாலமாக இந்த போதைப்பொருள் வியாபாரத்தை நடத்தி வந்தது உறுதிசெய்யப்பட்டு கைது செய்யப்பட்டான். அவனிடமிருந்து 254 கிராம் ஹஷீஷ் மற்றும் புகையிலை வரி சட்டத்தை மீறி நாட்டிற்குள் கடத்தி வரப்பட்ட 500 வெளிநாட்டு சிகரெட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

வழக்கு விசாரணைகளுக்காக குளியாப்பிட்டிய நீதவான் மிஹில் சிரந்த சதாரசிங்க முன்னிலையில் மாணவன் ஆஜர்படுத்தப்பட்டபோது, தான் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டான். இதனைத் தொடர்ந்து, மாணவனுக்கு ரூ. 4,10,000 அபராதம் விதித்து நீதவான் தீர்ப்பளித்தார். இளமைப் பருவத்தில் குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க ஆசைப்பட்டு, தனது எதிர்காலத்தையும் கல்வி வாழ்க்கையையும் கேள்விக்குறியாக்கியுள்ள இந்த சம்பவம் ஏனைய மாணவர்களுக்கும் ஒரு எச்சரிக்கையாக அமைந்துள்ளது.

RELATED ARTICLES

Shaahy Products - ABC Malt

Official Instagram

Most Popular

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

Official Instagram

Most Popular