Thursday, August 6, 2026
Sponsored advertisementspot_img
Sponsored Advertisementspot_img
HomeLocal Newsஎதிர்க்கட்சித் தலைவருக்கு ஐ.தே.க பாராட்டு: அரசியல் களத்தில் திருப்புமுனை!

எதிர்க்கட்சித் தலைவருக்கு ஐ.தே.க பாராட்டு: அரசியல் களத்தில் திருப்புமுனை!

ரணில் தலைமையிலான ஐ.தே.க செயற்குழுவில் சஜித்துக்குப் பாராட்டு: கொழும்பு அரசியலில் அதிரடி திருப்புமுனை!

இலங்கை அரசியலில் இதுவரை கண்டிராத ஒரு புதிய அரசியல் நகர்வாக, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் அதிரடி நடவடிக்கையைப் பாராட்டி ஐக்கிய தேசியக் கட்சியின் (UNP) செயற்குழுவில் சிறப்புத் தீர்மானம் ஒன்று ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. கொழும்பு பிளவர் வீதியில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் அலுவலகத்தில், அவரது தலைமையில் கூடிய செயற்குழு கூட்டத்திலேயே இந்த எதிர்பாராத அரசியல் நகர்வு இடம்பெற்றுள்ளது.

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்கும் விவகாரத்தில் அரசாங்கத்தின் நகர்வுகளுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் அனைத்தையும் ஒரே மேடையில் கொண்டுவந்ததே இந்த பாராட்டுக்கு முக்கிய காரணமாகும். கடந்த ஜூலை 23 அன்று கொழும்பு ஸ்ரீமத் மாக்கஸ் பெர்னாண்டோ மாவத்தையில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில், நாட்டின் அனைத்து பிரதான எதிர்க்கட்சித் தலைவர்களையும் ஒன்றுதிரட்டி சஜித் பிரேமதாச நடத்திய உயர்மட்டக் கூட்டம் அரசியல் களத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.

இந்தக் கூட்டத்தின் மூலம் எதிர்க்கட்சிகளின் கூட்டுப் பலத்தை நிரூபித்த சஜித் பிரேமதாசவின் தொலைநோக்கு நடவடிக்கையை ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு பாராட்டியுள்ளது. அத்துடன் நின்றுவிடாது, அன்று எடுக்கப்பட்ட தீர்மானங்களை காலந்தாழ்த்தாது உடனடியாக களத்தில் நடைமுறைப்படுத்த அனைத்துக் கட்சித் தலைவர்களும் ஒன்றிணைந்து ஓரணியில் திரள வேண்டும் என்றும் ஐ.தே.க செயற்குழு பகிரங்க அழைப்பு விடுத்துள்ளது.

ஒன்றாக இருந்த கட்சி பிளவுபட்டு வெவ்வேறாக பயணித்த நிலையில், தற்போது நீதித்துறை சார்ந்த இந்த முக்கிய விவகாரத்தில் ரணில் – சஜித் தரப்புகள் ஒரே நேர்கோட்டில் பயணிப்பது, வரவிருக்கும் இலங்கை அரசியல் சூழலில் ஒரு புதிய மாற்றத்திற்கான புயலைக் கிளப்பியுள்ளதாகவே பார்க்கப்படுகிறது.

RELATED ARTICLES

Shaahy Products - ABC Malt

Official Instagram

Most Popular

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

Official Instagram

Most Popular