Friday, November 14, 2025
Sponsored advertisementspot_img
Home Blog Page 129

சாமர சம்பத் எம்.பி கைது!

0

பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க கைது செய்யப்பட்டுள்ளார். 

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் அவர் கைது செய்யப்பட்டார். 

ஊவா மாகாண முதலமைச்சராக அவர் பதவி வகித்த காலத்தில் முறைகேடு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இன்று (27) முற்பகல் குறித்த ஆணைக்குழுவில் வாக்குமூலம் வழங்க முன்னிலையான அவர் கைதானார். கைதானவர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

பிரதி பொலிஸ்மா அதிபராக ஜெ.ஏ.சந்திரசேன!

கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபராக ஜெ.ஏ.சந்திரசேன தனது கடமைகளை இன்று பொறுப்பேற்றார்.

இரணைமடு சந்தியிலுள்ள அலுவலகத்தில் தனது கடமைகளை சர்வமத வழிபாட்டுடன் உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றார்.

ஏற்கனவே கடமையாற்றிய பிரதி பொலிஸ்மா அதிபர் சமந்த டீ சில்வா பொலிஸ் விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரியாக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து. ஜெ.ஏ சந்திரசேன கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு பிரதி பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை ஜெ.ஏ சந்திரசேன இதற்கு முன்பு கழுத்துறை பொலிஸ் கல்லூரியின் பணிப்பாளராக கடமையாற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கிளிநொச்சி செய்தியாளர் ஆனந்தன்

வேட்புமனுவை கையளித்த சிறீதரன் எம்.பி!

ஐக்கிய மக்கள் சக்தியின் பூநகரி பிரதேச சபையில் போட்டியிடுவதற்கான வேட்பு மனு கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.

கட்சியின் கிளிநொச்சி தொகுதி அமைப்பாளர் மரியதாஸ் மரியசீலன் குறித்த வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

இதேவேளை பூநகரி பிரதேச சபைக்கான வேட்புமனு பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தலைமையில் இலங்கை தமிழரசுக்கட்சி சார்பாக கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இன்று காலை கையளிக்கப்பட்டது.

விடுதலை நோக்கிய பயணத்தில் உள்ளூர் அதிகார சபைகள் தேர்தல் என்பது ஒரு குட்டி அரசுக்கான முதன்மை தேர்தல் என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.

மேலும் பூநகரி பிரதேச சபைக்கான பதினொரு வட்டாரத்திற்கான வேட்பு மனுவை தாக்கல் செய்திருக்கிறோம் எனவும், கடந்த தேர்தல்களிலும் பதினொரு வட்டாரங்களில் வெற்றி பெற்றதை போன்று இம்முறையும் வெற்றி பெற்று கிளிநொச்சி மாவட்டத்தில் மூன்று சபைகளையும் கைப்பேற்றுவோம் என தெரிவித்தார்.

கிளிநொச்சி செய்தியாளர் ஆனந்தன்

கொழும்பு முத்திரை கண்காட்சி 2025!

0

தபால் திணைக்களத்தின் தபால் முத்திரை சேகரிப்பு பணியகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட கொழும்பு தபால் முத்திரை கண்காட்சி 2025 நாளை மார்ச் 27 முதல் 29 வரை நடைபெறவுள்ளது.

காலை 9.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை கொழும்பு 10 டி.ஆர். விஜேவர்தன மாவத்தை தபால் நிலைய தலைமையகத்தில் நடைபெற உள்ளது.

உள்ளூர் மற்றும் வெளிநாட்டு நாடுகளின் பழைய முத்திரைகள், முதல் நாள் அட்டைகள், நினைவுப் பொருட்கள், மற்றும் தபால் முத்திரை சேகரிப்பு பொழுதுபோக்கு தொடர்பான அம்சங்கள், பழைய நாணயங்கள் மற்றும் ரூபாய் நோட்டுகள் உட்பட பல பொருட்களை கொழும்பு முத்திரை கண்காட்சியில் பெற்றுக்கொள்ள முடியும்.

5,000/- பெறுமதியான உணவுப் பொருட்கள் 2,500/- ரூபாவுக்கு!

0

“காலத்தின் தேவைக்கான உணவுப் பொதி” வழங்கும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தல்”

தமிழ், சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு சலுகை விலையில் உணவுப் பொதியொன்றை வழங்குவதற்காக கௌரவ ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க அவர்கள் 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் சமர்ப்பித்துள்ள முன்மொழிவுக்கமைய, 5,000/- பெறுமதியான அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கிய “காலத்தின் தேவைக்கான உணவுப் பொதியொன்று” 2,500/- ரூபாவுக்கு வழங்குவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

அதற்காக, அஸ்வெசும நலன்புரி நன்மைகளை எதிர்பார்த்து புதிதாக விண்ணப்பித்துள்ள 812,753 விண்ணப்பங்களில் தகைமையுடைய பயனாளிகளைத் தெரிவு செய்வதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.

அதற்கமைய, 2025.04.01 தொடக்கம் 2025.04.13 வரையான காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் அமைந்துள்ள சதொச விற்பனை நிலையங்களிலும், COOPFED விற்பனை நிலையங்கள் மூலமும் உணவுப் பொதியை பயனாளிகளுக்கு வழங்குவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக விவசாயம், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் மற்றும் வர்த்தக, வணிக, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் அவர்களும் இணைந்து சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

    பாராளுமன்ற அமர்வில் விசாகா கல்லூரி மாணவிகள்!

    0

    விசேட மாணவர் பாராளுமன்ற அமர்வில் பங்கேற்பதற்கு விசாகா கல்லூரி மாணவிகள் பழைய பாராளுமன்றத்திற்கு வருகை

    ஜனாதிபதி செயலகம், கல்வி அமைச்சு மற்றும் இலங்கை பாராளுமன்ற தொடர்பாடல் பிரிவு ஆகியவற்றால் பாடசாலை மாணவர்களுக்காக செயல்படுத்தப்படும் திட்டத்துடன் இணைந்ததாக, கொழும்பு விசாகா கல்லூரியின் விசேட பாராளுமன்ற அமர்வு ​நேற்று (25) ஜனாதிபதி அலுவலகத்தின் பழைய பாராளுமன்ற பீடத்தில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் நடைபெற்றது.

    கொழும்பு விசாகா கல்லூரி மாணவர் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு “Clean Sri Lanka” திட்ட எண்ணக்கருவின் மதிப்பு மற்றும் அதன் நடைமுறை முக்கியத்துவம் குறித்த தெளிவு பெறவும் வாய்ப்பு கிடைத்தது.

    மாணவர் பாராளுமன்றம் தொடர்பாக தயாரிக்கப்பட்ட “விஷன்” சஞ்சிகையின் பிரதியை, பாராளுமன்ற விவகாரங்கள் மற்றும் நிறைவேற்றுப் பொறுப்பு தொடர்பான உதவிப் பணிப்பாளர் நதீக தங்கொல்ல பிரதமரிடம் வழங்கினார்.

    இதன் போது விசாகா கல்லூரி அதிபர் மனோமி செனவிரத்னவினால் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கு விசேட நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.

    பொருளாதார வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளக்கூடிய தலைமுறையொன்றை உருவாக்க புதிய கல்வி சீர்திருத்தங்கள் செயல்படுத்தப்படும் என்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இங்கு தெரிவித்தார்.

    உலகில் அறிவைப் பெறுவதற்கு மாணவர்களை தயார்படுத்துவது மற்றும் தன்னம்பிக்கை கொண்ட மாணவர் தலைமுறையை உருவாக்குவது என்பன அரசாங்கத்தின் நோக்கம் என்றும் பிரதமர் மேலும் கூறினார்.

    புதிய கல்வி சீர்திருத்தங்கள் மூலம் வேலைவாய்ப்புச் சந்தைக்கு மட்டுமல்லாமல், சமூகத்தை வழிநடத்தக் கூடிய பொருளாதாரத்திற்கும் பங்களிக்க முடியுமான திறமையான இளைஞர்களை உருவாக்குவது அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு எனவும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இங்கு தெரிவித்தார்.

    பாடசாலைகளுக்கிடையே வளங்களைப் பகிர்ந்து செல்வதில் உள்ள ஏற்றத்தாழ்வை நீக்குவதே அரசாங்கத்தின் நோக்கம் என்பதோடு இதற்கு பிரஜைகளின் பொறுப்பின் முக்கியத்துவத்தையும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.

    சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்ன உரையாற்றுகையில்,

    ‘தலைமைத்துவம் ஆணவத்திலிருந்து விடுபட்டதாக இருக்க வேண்டும். ஆணவமில்லாத தலைவர்கள் நாட்டையும் மக்களையும் நல்ல திசையில் வழிநடத்துவார்கள். அதற்கு, நீங்கள் உங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். இலங்கை வரலாற்றிலிருந்து அல்லது உலக வரலாற்றிலிருந்து திறமையான தலைவர்களைப் பற்றிய தெளிவைப் பெற முடியும். சண்டசோக எப்படி தர்மசோக ஆனார் என்பதையும் ஹிட்லரின் சர்வாதிகாரம் எப்படி உலகை அழிவுக்கு இட்டுச் சென்றது என்பதையும் மாணவர்கள் என்றவகையில் படிக்க வேண்டும். குறைந்தபட்ச நுகர்வு கொண்ட, நாட்டைப் பற்றி சிந்திக்கும் தலைவர்களின் தோற்றம் ஒரு நாட்டின் ஸ்திரத்தன்மையை எளிதாக்கும். எனவே, நாட்டின் சவால்களை எதிர்கொள்ளக்கூடிய தலைவர்களை உருவாக்க நாம் பாடுபட வேண்டும். பொதுநலத்தை இறுதி இலக்காகக் கொண்டு, நாட்டு மக்களுக்கு வளமான எதிர்காலத்தை உருவாக்க முடியும் என்றார்.

    மூவரின் உயிர்களை பறித்த விபத்து!

    0

    நாடு முழுவதும் பல பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்துகளில் இளைஞன் ஒருவர் உட்பட மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.

    நேற்று (25) இந்த விபத்துகள் கட்டுபொத்த, அவிசாவளை மற்றும் அத்திமலை ஆகிய பொலிஸ் பிரிவுகளில் பதிவாகியுள்ளன.

    அத்திமலை, கொட்டியாகல 05 ஆம் தூண் கிளை வீதியின் வத்தேகம பகுதியில் மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

    விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் அத்திமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.

    உயிரிழந்தவர் கொட்டியாகல பகுதியில் வசிக்கும் 18 வயது இளைஞர் என தெரிவிக்கப்படுகிறது.

    இதற்கிடையில், கட்டுபொத்த, பொத்துஹெர, தம்பிடிய கிளை வீதியில்  தம்பிடிய சந்திக்கு அருகில், வீதியை கடக்கும் பாதசாரி மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் 79 வயதுடைய முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

    இதற்கிடையில், அவிசாவளை பொலிஸ் பிரிவின் கொழும்பு-ஹட்டன் வீதியின் தல்துவ பகுதியில், வீதியை கடக்க முற்பட்ட பாதசாரி மீது பேருந்து ஒன்று மோதியதில் விபத்தொன்று ஏற்பட்டுள்ளது.

    விபத்தில் காயமடைந்த பாதசாரி அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.

    உயிரிழந்தவர் தல்துவ பகுதியைச் சேர்ந்த 69 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தேசபந்து குறித்து சஜித் ஓபன் டோக்!

    0

    பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு எதிராக அரசாங்கம் இன்று நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டு வந்துள்ளது. இதற்கு ஐக்கிய மக்கள் சக்தியும் தமது பூரண ஆதரவை வழங்கும். கடந்த அரசாங்கத்தின் போது ஐக்கிய மக்கள் சக்தி தான் தேசபந்து தென்னகோனுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டு வந்தது. அன்று அரசியலமைப்பு பேரவையில் அவருக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியே வாக்களித்தது.

    அரசியலமைப்பை மீறியே தேசபந்து தென்னகோன் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டார். இந்த அரசியலமைப்பை மீறிய நடவடிக்கைக்கு முன்னாள் ஜனாதிபதியைப் போலவே சபாநாயகரும் பொறுப்புக் கூற வேண்டும். அரசியலமைப்பு பேரவையில் நடந்தவற்றை முற்றிலுமாகத் திரிவுபடுத்தி, மீயுயர் சட்டத்தை அப்பட்டமாக மீறிய வகையிலயே இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

    அன்று தேசபந்து தென்னகோனை அரசியலமைப்பை மீறி, உயரிய சட்டத்தை காலில் போட்டு மிதித்து, சட்டவிரோதமாக நியமிக்கப்பட்ட போது, ​​இன்று கூச்சல் போடுபவர்கள் அன்று மௌனம் காத்தனர். இவ்வாறு தாமதமாகவேனும் இந்த அரசாங்கம் இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையைக்  கொண்டு வருவதில் மகிழ்ச்சியடைகிறேன். இதற்கு பூரண ஆதரவை வழங்குவேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

    எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை இலக்காகக் கொண்டு ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட வேட்பாளர்களுடன் இன்று (25) இடம்பெற்ற சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

    பாதுகாப்பு பிரதியமைச்சரின் தேசிய பாதுகாப்பு தொடர்பிலான டியுஷன் எங்கே?  

    தேசிய பாதுகாப்பு தொடர்பில் டியுஷன் வகுப்புகளை நடத்த மேசையையும் கதிரையையும் கொண்டு வருமாறு பாதுகாப்பு பிரதியமைச்சர் தேர்தலின் போது குறிப்பிட்டார். ஜனவரியில் இருந்து ஏராளமான துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடந்துள்ளன. 22 க்கும் மேற்பட்ட இறப்புகள் நடந்துள்ளன.

    தேசிய பாதுகாப்புக்கு இது பிரச்சினையாக காணப்படுகிறது. பொதுமக்களின் வாழ்க்கை தேசிய பாதுகாப்போடு நேரடியாக தொடர்பு படுகின்றன. இன்று நாட்டில் சட்டம் அமுலில் இல்லை.

    குண்டர்களும், குற்றவாளிகளும், கொலைகாரர்களும் இன்று சமூகத்தை ஆட்கொண்டுள்ளனர். இவற்றுக்கு அரசாங்கத்திடம் தீர்வு இல்லை என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

    கனடாவை புரட்டிப்போடவுள்ள ஏப்ரல்!

    0

    கனடா நாட்டின் புதிய பிரதமராக மார்க் கார்னி சமீபத்தில் தான் பதவியேற்றிருந்தார். இதற்கிடையே கனடாவுக்கு மாபெரும் அச்சுறுத்தலாக டிரம்ப் உருவாகியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள மார்க் கார்னி, இந்த இக்கட்டான சூழலில் வழிநடத்த யார் தகுதியானவர் என்பதைக் கனடா மக்கள் தேர்வு செய்ய வேண்டும் எனக் கூறியுள்ளார். மேலும், அங்கு வரும் ஏப்ரல் 28ம் தேதி தேர்தலுக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.

    கனடா நாட்டில் இத்தனை காலம் பிரதமராக இருந்தவர் ஜஸ்டின் ட்ரூடோ. இருப்பினும், பல்வேறு காரணங்களால் அவருக்கான அழுத்தம் அதிகரித்தது. இதனால் வேறு வழியின்றி கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். அவருக்குப் பதிலாக மார்க் கார்னி அந்நாட்டின் பிரதமராகப் பதவியேற்றார்.

    அங்கு கடைசியாக 2021ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடந்தது. அந்நாட்டின் சட்டப்படி 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடத்த வேண்டும். அதன்படி இந்தாண்டு அங்குத் தேர்தல் நடத்த வேண்டி இருந்தது. அங்குப் பிரதமர் பதவியும் கைமாறிய நிலையில், விரைவில் தேர்தல் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. விரைவில் தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றே எதிர்பார்க்கப்பட்டது.

    இந்தச் சூழலில் தான் நாடாளுமன்ற தேர்தல் குறித்த அறிவிப்பை அந்நாட்டின் பிரதமர் மார்க் கார்னி வெளியிட்டுள்ளார். அதன்படி அங்கு வரும் ஏப்ரல் 28ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப் கனடாவுக்கு எதிராக இறக்குமதி வரிகளை அறிவித்துள்ள நிலையில், அதைக் குறிப்பிட்டு இதுபோன்ற முக்கியமான தருணங்களில் நாட்டை யார் வழிநடத்த வேண்டும் என்பதை மக்கள் முடிவு செய்ய வேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளார்.

    கனடாவைப் பொறுத்தவரை ஆளும் லிபரல் கட்சிக்கும் கன்சர்வேடிவ் கட்சிக்கும் இடையே தான் கடும் போட்டி. அங்கு ட்ரூடோ இருந்தவரை கன்சர்வேடிவ் கட்சிக்கான ஆதரவே அதிகமாக இருந்தது. ஆனால், கார்னி பதவியேற்றவுடன் நிலைமை மாறியுள்ளது. தற்போதைய சர்வேக்களில் கன்சர்வேடிவ் கட்சியைக் காட்டிலும் லிபரல் கட்சிக்கான ஆதரவு சற்று அதிகமாக இருக்கிறது. இருப்பினும், தேர்தலில் கடும் போட்டி இருக்கும் என்றே கூறப்படுகிறது.

    அடிமேல அடிவாங்கிய சகிப் அல்ஹஸன்!

    0

    மோசடி குற்றச்சாட்டை எதிர்கொள்ளும் வங்கதேச கிரிக்கெட் முன்னாள் கேப்டன் ஷகிப் அல் ஹசன் சொத்துகளை பறிமுதல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    வங்க தேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் கட்சியை சேர்ந்த முன்னாள் எம்.பி., ஷகிப் அல் ஹசன். அந்த நாட்டு கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன். கடந்த ஆண்டு மாணவர் தலைமையிலான கிளர்ச்சியின் போது, கனடாவில் இருந்தவர், மீண்டும் வங்கதேசம் செல்லவில்லை.

    இதற்கிடையே, கடந்த 2024ம் ஆண்டு டிசம்பர் 15ம் தேதி ஐ.ஐ.எப்.சி., வங்கியின் சார்பாக ஷகிப் அல் ஹசன் உள்பட 4 பேரின் மீது ரூ.3 கோடி அளவிலான செக் மோசடியில் ஈடுபட்டதாக வங்கதேச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கில் ஆஜராகாததினால் ஷகிப் அல் ஹசனுக்கு எதிராக நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்து இருந்தது.

    தற்போது அவரது சொத்துகளை பறிமுதல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இடது கை ஆல்ரவுண்டரான இவர் வங்கதேச அணிக்காக 71 டெஸ்ட், 247 ஒருநாள் போட்டிகள் உட்பட பல்வேறு போட்டிகளில் சிறப்பாக ஆடி, மொத்தம் 712 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.