Friday, November 14, 2025
Sponsored advertisementspot_img
Home Blog Page 130

சட்டென்று மாறிய வானிலை!

0

நாட்டின் பல பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. 

அதன்படி, மேல், சபரகமுவ, வடமேல், தென் மற்றும் ஊவா மாகாணங்களில் இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது. 

மேல், சபரகமுவ, தென் மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் 75 மில்லிமீற்றர் வரை ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும். 

இதேவேளை, கிழக்கு மாகாணத்திலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் சில இடங்களில் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பாராளுமன்றில் உள்ளக விளையாட்டுப் போட்டி!

0

பாராளுமன்ற உறுப்பினர்களின் வருடாந்த உள்ளக விளையாட்டுப் போட்டிக்கான கேடயங்கள் மற்றும் சான்றிதழ்கள் கையளிக்கும் நிகழ்வு பிரதமர் மற்றும் சபாநாயகர் தலைமையில் நடைபெற்றது.

ஐந்தாவது வருடமாக ஏற்பாடு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான வருடாந்த உள்ளக விளையாட்டுப் போட்டியில் வெற்றியீட்டியவர்களுக்கான கேடயங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கும் வைபவம் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய மற்றும் சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன ஆகியோரின் தலைமையில் பாராளுமன்ற பிலியட் மண்டபத்தில் கடந்த 21ஆம் திகதி நடைபெற்றது.

விளையாட்டுத் துறைப் பிரதியமைச்சர் சுகத் திலகரத்ன மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார ஆகியோரின் தலைமையின் கீழ் பாராளுமன்ற படைக்கல சேவிதர் திணைக்களத்தின் ஒத்துழைப்புடன் இந்தப் போட்டிங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

ஏழு உள்ளக விளையாட்டுப் பிரிவுகளின் கீழ் இடம்பெற்ற போட்டிகளில் ஸ்நூகர் இறுதிப் போட்டி பிரதமர் மற்றும் சபாநாயகர் முன்னிலையில் இடம்பெற்றது. பாராளுமன்ற உறுப்பினர்களான டி.வி.சானக்க மற்றும் ரோஹன பண்டார பங்குபற்றிய இப்போட்டியில் பாராளுமன்ற உறுப்பினர் டி.வி.சானக்க வெற்றிபெற்றார்.

இங்கு நடைபெற்ற கலப்பு இரட்டையர் மேசைப்பந்துப் போட்டியில் பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க மற்றும் சட்டத்தரணி நிலந்தி கொட்டஹச்சி ஆகியோர் வெற்றி பெற்றனர். இதில் எதிர்த்திசையில் பாராளுமன்ற உறுப்பினர்களான வருண லியனகே மற்றும் சட்டத்தரணி சமிந்திரானி கிரிஎல்லே ஆகியோர் போட்டியிட்டனர்.

தாம் போட்டியில் பாராளுமன்ற உறுப்பினர் டபிள்யூ.எச்.எம்.தர்மசேன அவர்கள் வெற்றிபெற்றார். இரண்டாவது இடத்தை பாராளுமன்ற உறுப்பினர் பி.ஆரியவன்ச அவர்கள் பெற்றுக்கொண்டார்.

மேசைப்பந்து (ஆண்கள்) போட்டியில் பராளுமன்ற உறுப்பினர் வருண லியனகே அவர்கள் வெற்றிபெற்றதுடன், இரண்டாவது இடத்தை பாராளுமன்ற உறுப்பினர் ருவன்திலக ஜயக்கொடி பெற்றுக்கொண்டார்.

உள்ளக விளையாட்டுப் போட்டியின் தனிநபர்களுக்கான மேசைப்பந்து (பெண்கள்) போட்டியில் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி நிலந்தி கொட்டஹச்சி அவர்கள் வெற்றிபெற்றதுடன், இரண்டாவது இடத்தை பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி சமிந்திரானி கிரிஎல்லே பெற்றுக்கொண்டார்.

சதுரங்கப் போட்டியில் (செஸ்) பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் அர்ச்சுனா இராமநாதன் பெற்றிபெற்றதுடன், இரண்டாவது இடத்தை பாராளுமன்ற உறுப்பினர் ரோஹன பண்டார வெற்றிகொண்டார்.

அத்துடன், கரம் விளையாட்டில் பாராளுமன்ற உறுப்பினர் லெப்டினன் கமாண்டர் ஓய்வுபெற்ற பிரகீத் மதுரங்க வெற்றிபெற்றதுடன், இப்போட்டியில் இரண்டாவது இடத்தை விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே பெற்றுக்கொண்டார்.

பூல் (pool) விளையாட்டில் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹன பண்டார வெற்றிகொண்டதுடன், இரண்டாவது இடத்தை பாராளுமன்ற உறுப்பினர் டி.வி.சானக்க பெற்றுக்கொண்டார்.

இதில் வெற்றிபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களை வாழ்த்தி உரைநிகழ்த்திய பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய, மிகவும் வேலைப்பழு மிக்க காலத்தில் மனதை இலகுவாக வைத்திருக்கவும், உறுப்பினர்களிடையே நட்புறவை மேம்படுத்துவதற்கு விளையாட்டுக்கள் உறுதுணையாக இருப்பதாகக் கூறினார். அத்துடன், இந்தப் போட்டியை ஏற்பாடு செய்தமைக்காக விளையாட்டுப் பிரதியமைச்சர் சுகத் திலகரத்ன மற்றும் பாராளுமன்ற நளின் பண்டார ஆகியோருக்கும் பிரதமர் நன்றியைத் தெரிவித்தார்.

இந்த விளையாட்டுப் போட்டிகளின் நடுவர்களாகப் பாராளுமன்ற பணியாளர்களான தரங்க அபேசிங்கே மற்றும் சமீர சஞ்சீவ ஆகியோர் பங்களித்தனர்.

கேடயங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கும் நிகழ்வில் பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவர் ஹேமாலி வீரசேகர, சபை முதல்வரும், அமைச்சருமான பிமல் ரத்னாயக்க, விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். அத்துடன், பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர, பாராளுமன்ற பணியாட் தொகுதியின் பிரதானியும் பிரதிச் செயலாளர் நாயகமுமான சமிந்த குலரத்ன, படைக்கல சேவிதர் குஷான் ஜயரத்ன உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

தேர்தல் ஆணைக்குழு விசேட அறிக்கை!

பூநகரி, மன்னார் மற்றும் தெஹியத்தகண்டிய பிரதேச சபைகளுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்வது தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு விசேட அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது. 

அந்த பிரதேச சபைகளுக்குச் சொந்தமான உள்ளூராட்சி நிறுவனங்களுக்கான கட்டுப்பணத்தை ஏற்றுக்கொள்வது நாளை (26) நண்பகல் 12.00 மணியுடன் நிறைவடையவுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதேவேளை கிளிநொச்சி பூநகரி பிரதேச சபையில் போட்டியிடுவதற்கான கட்டுப்பணத்தை ஈழ மக்கள் ஜனநாயகக்கட்சி இன்று செலுத்தியது.

கட்சியின் செயலாளர் நாயகமும் முன்னாள் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா குறித்த கட்டுப்பணத்தை மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் செலுத்தினார்.

மேலும் ஜனநாயக தமிழ்த்தேசி கூட்டணி (DTNA) பூநகரி பிரதேச சபைக்கான வேட்பு மனுவை இன்றைய தினம் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் செலுத்தியது. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் தலைமையில் வேட்பு மனுவை தாக்கல் செய்தனர்.

அதன்படி, இன்று (25) முதல் 26 ஆம் திகதி நண்பகல் 12.00 மணி வரை ஒவ்வொரு மாவட்டத்தின் தெரிவத்தாட்சி அதிகாரிகளும் வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்வார்கள் என்று தேர்தல் ஆணைக்குழு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

கிளிநொச்சி செய்தியாளர் ஆனந்தன்

தேசபந்து தென்னகோனுக்கு கிடுக்கிப்பிடி!

0

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு எதிரான பிரேரணை ஒன்றில் தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கைச்சாத்திட்டுள்ளனர்.

அதன்படி, அவரை பொலிஸ்மா அதிபர் பதவியில் இருந்து நீக்கும் குறித்த பிரேரணை இன்று (25) பிற்பகல் 12.15 மணியளவில் பாராளுமன்றத்தில் சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் ஏப்ரல் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

2023 ஆம் ஆண்டு வெலிகம பெலேன பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு அருகில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பாக கைது செய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த தேசபந்து தென்னகோன், 20 நாட்கள் தலைமறைவாக இருந்த பின்னர் மார்ச் 19 ஆம் திகதி நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

குளியல் அறையில் விசித்திரமான உற்பத்தி!

சூட்சுமமான முறையில் கிளிநொச்சியில் கசிப்பு உற்பத்தி

கிளிநொச்சி இரத்தினபுரம் பகுதியில் வீட்டின் குளியல் அறை பகுதியில் சூட்சகமான முறையில் நிலத்தில் தோண்டி யாருக்கும் சந்தேகம் வராத அளவுக்கு கசிப்பு உற்பத்தி மேற்கொள்ளப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

குளியல் அறை பகுதியில் கோடா பரல் வைக்கப்பட்டு தண்ணீர் குடத்தில் குழாய்கள் பொருத்தப்பட்டு கேஸ் (gas) அடுப்பு மூலம் தீ மூட்டப்பட்டு இவ் கசிப்பு உற்பத்தி மேற்கொள்ளப்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளார்கள்.

கசிப்பு உற்பத்தி முற்றுகையின் போது 380 லீட்டர் கோடாவும் 20 லீட்டர் கசிப்பும் கசிப்பு உற்பத்திக்கான பொருட்களும் கசிப்பு உற்பத்தியை மேற்கொண்ட 20 வயது இளைஞன் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலீஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கிளிநொச்சி செய்தியாளர் ஆனந்தன்

ரணில், மஹிந்த குறித்து சஜித் பளிச் பதில்!

0

சஜித் மஹிந்த ரணில் இணையவுள்ளதாக பல்வேறு பத்திரிகைகளில் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன. அது மாத்திரமல்லாது அவ்வாறு செய்தி வெளியிட்டு தொலைகாட்சி அலைவரிசைகளில் காலையில் பத்திரிகை முக்கிய செய்தி வாசிப்பு நிகழ்ச்சிகளில் தலைப்புச் செய்திகளாக முன்னிலைப்படுத்தப்படுகின்றன. இது அப்பட்டமான பொய்யாகும். ஐக்கிய மக்கள் சக்திக்கு யாருடனும் சேர வேண்டிய தேவை இல்லை. இவ்வருடம் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி பெரும் வெற்றியடைவதை தடுக்க, வங்குரோத்து அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து பொய்யான செய்திகளை பரப்பி வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். 

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை இலக்காகக் கொண்டு ஐக்கிய மக்கள் சக்தியின் குருநாகல் மாவட்ட வேட்பாளர்களுடன் நேற்று (23) இடம்பெற்ற சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார். 

கடந்த அரசாங்கம் செய்ததையே மீண்டும் செய்வது முறைமை மாற்றமல்ல. மக்களை ஏமாற்ற ஐக்கிய மக்கள் சக்தி அச்சப்படுகின்றது. பொய்யை நம்ப வைப்பதற்கும், மக்களை அரசியல் ரீதியாக ஏமாறுவதற்கும் நாம் பயப்படுகிறோம். ஐக்கிய மக்கள் சக்தியானது முடிவுகளை எடுக்கும் விடயத்தில் சரியான முடிவுகளையே எடுத்து வருகின்றது. இன்று அரசாங்கமானது பல்வேறு தலைப்புச் செய்திகளை தூக்கிப் பிடித்துக் கொண்டு, ஐக்கிய மக்கள் சக்தி பல்வேறு கட்சிகளுடன் கூட்டு சேர முயற்சிக்கின்றது என போலியான செய்திகளை கட்டமைத்து வருகிறது. ஆனால் ஐக்கிய மக்கள் சக்தி ஒருபோதும் அத்தகையதொரு தீர்மானத்துக்கு வராது. நாம் இவர்களோடு இணையோம். ஐக்கிய மக்கள் சக்தி முதன்முறையாக உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடுவதாலயே இவ்வாறான செய்திகளை வெளியிடுகிறார்கள் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இங்கு மேலும் தெரிவித்தார்.

குழந்தையின் உயிரை பறித்த டீசல்!

0

யாழ்ப்பாணம், ஊர்காவற்றுறையில் குளிர்பானம் என்று நினைத்து போத்தலில் இருந்த டீசலை அருந்திய குழந்தை உயிரிழந்துள்ளது. 

வீட்டின் அருகே இருந்த டீசல் போத்தலை குழந்தை குளிர்பானம் என்று நினைத்து அருந்தியதாகவும், இதைப் பார்த்த பெற்றோர் உடனடியாக குழந்தையை ஊர்காவற்றுறை வைத்தியசாலையில் அனுமதித்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர். 

பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும், சிகிச்சை பலனின்றி நேற்று (23) குழந்தை உயிரிழந்தது. 

யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறையில் உள்ள நாராந்தனை பகுதியைச் சேர்ந்த ஒரு வயதும் ஒன்பது மாதங்களுமான குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது. 

சம்பவம் குறித்து ஊர்காவற்றுறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

பரிதாபமாக உயிரிழந்த 16 வயது இளைஞன்!

0

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அகத்திக்குளம் பிரதேசத்தில் வயலில் உழுதுகொண்டிருந்த உழவு இயந்திரத்தில் இருந்து தவறி விழுந்திருக்கலாம் என கருதப்படும் 16 வயது இளைஞன் கலப்பையில் சிக்குண்டு உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். 

உயிரிழந்த இளைஞன் கண்ணகி கிராமத்தை சேர்ந்த பெ.ஜீரோசன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். 

குறித்த இளைஞன் குடும்பத்தில் மூத்த பிள்ளை என்பதுடன் இரு சகோதரிகளுடன் வாழ்ந்து வருவதுடன் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக பாடசாலையில் இருந்து இடைவிலகி பல்வேறு தொழில் புரிந்து வந்துள்ளார். 

இந்நிலையில் உழவு இயந்திர சாரதியாக வேண்டும் எனும் ஆசையில் நெருங்கிய நண்ரொருவருடன் உழவு இயந்திரத்தில் பயிற்சி பெற்று வந்துள்ளார். 

இந்நிலையில் நேற்று (22) சில ஏக்கர் வயல் நிலங்களை உழுதுவிட்டு பின்னர் உழவு இயந்திரத்தில் நண்பர் உழுது கொண்டிருக்கும் போது அருகில் இருந்த அவர், தவறி வீழ்ந்து வயலை இரட்டிப்பாக்கும் கலப்பைக்குள் அகப்பட்டு உடல் நசுங்கி உயிரிழந்திருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது. 

உழவு இயந்திரத்தின் சாரதியான உயிரிழந்தவரின் நண்பன் அக்கரைப்பற்று பொலிசாரிடம் சரணடைந்துள்ள நிலையில், சம்பவம் தொடர்பில் பொலிசார் விசாரணையினை முன்னெடுத்துள்ளனர்.

சொத்துக்கள் அரசுடைமையாக்கப்படும்!

0

முந்தைய அரசாங்கங்களின் காலத்தில் சட்டவிரோதமாக அல்லது முறைகேடாக கையகப்படுத்தப்பட்ட அரச சொத்துக்களை அரசுடமையாக்குவதற்கான புதிய சட்டங்களை உள்ளடக்கிய சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சந்தன சூரியராச்சி தெரிவித்துள்ளார். 

குறித்த சட்டமூலம் ஏப்ரல் மாதம் 8 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். 

இந்த சட்டத்தின் மூலம், இந்த நாட்டில் அரச சொத்துக்கள் மற்றும் பொது நிதியை துஷ்பிரயோகம் செய்யும் தனிநபர்களின் எந்தவொரு சொத்தும் நீதிமன்ற நடவடிக்கைகள் மூலம் சட்டப்பூர்வமாக அரசுடமையாக்கப்படும் என்று பாராளுமன்ற உறுப்பினர் சந்தன சூரியராச்சி மேலும் கூறியுள்ளார். 

“பல்வேறு காலங்களில் இந்த நாட்டை ஆண்ட ஆட்சியாளர்கள், அரசியல்வாதிகளுக்கு நெருக்கமானவர்கள், தந்தையர், மகன்கள், உறவினர்கள் என அனைவரும் ஒன்றுகூடி நமது நாட்டின் அரச சொத்து, அரச வளங்கள் மற்றும் அரச நிதியை பல்வேறு வழிகளில் துஷ்பிரயோகம் செய்து கையகப்படுத்தியுள்ளனர்.” 

மேலும் அவர்கள் அவற்றைத் தங்களுக்கு சொந்தமாக்கிக் கொண்டுள்ளனர். சட்டவிரோதமாகவோ அல்லது முறையற்றதாகவோ கையகப்படுத்திய எவருடைய சொத்தையும், சட்டப்பூர்வமாகவும் முறையாகவும் நீதிமன்ற நடவடிக்கைகள் மூலம் மீட்டெடுக்க அரசாங்கத்திற்கு உதவும் புதிய சட்ட ஏற்பாடுகளுக்கான சட்டமூலம் ஏப்ரல் 8 ஆம் திகதி பாராளுமன்றத்திற்கு வரவுள்ளது. 

“நாங்கள் இந்த நாட்டு மக்களின் அபிலாஷைகளை நாளுக்கு நாள் நிறைவேற்றி வருகிறோம் என்று நாங்கள் நம்புகிறோம், மேலும் இந்த நாட்டின் ஒவ்வொரு குடிமகனின் நம்பிக்கையையும் எந்தவித சலசலப்பும் இல்லாமல் நிறைவேற்ற தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.” என்றார்.

கட்டாரில் இடம்பெற்ற பிரம்மாண்ட இப்தார் நிகழ்வு!

கட்டாரில் வாழும் மன்னார் எருக்கலம்பிட்டி வாழ் உறவுகளுக்கான இப்தார் நிகழ்வு நேற்று மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.

தொழில் நிமித்தம் கட்டார் நாட்டில் உள்ள அனைத்து எருக்கலம்பிட்டி உறவுகளையும் ஒன்றிணைத்து கட்டார் முன்தசா பகுதியில் மாபெரும் இப்தார் நிகழ்வு இடம்பெற்றது.

கட்டார் நாட்டில் வாழக்கூடிய அனைத்து எருக்கலம்பிட்டி உறவுகளின் நிதி பங்களிப்புடன் சுமார் 130 பேருக்கான இப்தார் ஏற்பாடுகள் மிகவும் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் 120 யிற்கும் அதிகளவான எருக்கலம்பிட்டி உறவுகள் கலந்துகொண்டமை விஷேட அம்சமாகும்.