Friday, November 14, 2025
Sponsored advertisementspot_img
Home Blog Page 132

நிராகரிக்கப்பட்ட வேட்பு மனுக்கள்!

கிளிநொச்சி மாவட்டத்தில் கரைச்சி மற்றும் பச்சிலைப்பள்ளிக்கான வேட்பு மனுக்கள் இன்று நண்பகல் வரை ஏற்றுக்கொள்ளப்பட்டது.

அதனைத் தொடர்ந்து மாவட்ட அரசாங்கதிபர் எஸ்.முரளீதரன் மற்றும் மாவட்ட உதவித்தேர்தல் ஆணையாளர் வேலாயுதம் சிவராசா ஆகியோர் இணைந்து ஊடக சந்திப்பினை மேற்கொண்டிருந்தனர்.

பச்சிலைப்பள்ளி பிரதேச சபைக்கு ஏழு அரசியல் கட்சிகள் மற்றும் இரண்டு சுயேட்சைக்குழுக்கள் தாக்கல் செய்த வேட்பு மனுவில், ஒரு சுயேட்சைக்குழுவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

எனவே பச்சிலைப்பள்ளி பிரதேச சபைக்கு ஏழு அரசியல் கட்சிகளினதும் ஒரு சுயேட்சைக்குழுவின் வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக உறுதிப்படுத்தப்பட்டது.

இதேவேளை கரைச்சி பிரதேச சபைக்கு பத்து அரசியல் கட்சிகளும், மூன்று சுயேட்சைக் குழுக்களும் வேட்பு மனுவை தாக்கல் செய்தனர். இதில் மூன்று அரசியல் கட்சிகளின் வேட்பு மனுக்களும், இரண்டு சுயேட்சைக்குழுவின் வேட்பு மனுக்களும் நிராகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

எனவே ஏழு கட்சிகள் மற்றும் ஒரு சுயேட்சைக்குழுவின் வேட்பு மனு ஏற்றுக்கொள்ளப்பட்டதாக மாவட்ட அரசாங்கதிபர் மற்றும் மாவட்ட உதவித்தேர்தல் ஆணையாளர் ஆகியோரினால் உறுதிப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கிளிநொச்சி செய்தியாளர் ஆனந்தன்

எருக்கலம்பிட்டியில் இடம்பெற்ற இப்தார் நிகழ்வு!

0

மன்னார் எருக்கலம்பிட்டி ஸயீதிய்யா அரபுக் கல்லூரியின் ஏற்பாட்டில் நேற்று 19.03.2025 புதன் கிழமை மாபெரும் இப்தார் நிகழ்வு கல்லூரி அதிபர் அஷ்ஷைக் அல்உஸ்தாத் ஷிபான் முஹாஜிரி அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

ஸயீதிய்யா அரபுக் கல்லூரி வளாகத்தில் மிகவும் சிறப்பாக இடம்பெற்ற குறித்த இப்தார் நிகழ்வில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திரு K.கனகேஸ்வரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

இப்தாரில் கலந்துகொள்ள வருகை தந்த அதிதிகளுக்கு கல்லூரி மாணவர்களினால் வரவேற்பு பைத் படிக்கப்பட்டு மலர் செண்டும் வழங்கிவைக்கப்பட்டது.

ரமழானின் நோக்கங்களும், மார்க்க கல்வி கற்கும் மாணவர்கள் எதிர்காலத்தில் எவ்வாறு சமூகத்தில் முன்னின்று செற்படவேண்டும் என்றும் வருகை தந்த அதிகாரிகளினால் தெளிவூட்டப்பட்டது.

இந் நிகழ்வில் மாவட்ட அணர்த்த முகாமைத்துவ பணிப்பாளர் திரு திலீபன், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திரு நிஸாம்தீன், மாவட்ட வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் திரு அஷாட், மாவட்ட விளையாட்டு துறை அதிகாரி திரு பிரின்ஸ், மாவட்ட வனவிலங்குகள் திணைக்கள பணிப்பாளர் திரு திஸார, விசேட அதிரடிப் படை மன்னார் மாவட்ட கட்டிலை அதிகாரி, தேசிய இளைஞர் படையணி மன்னார் மாவட்ட பணிப்பாளர் திரு சர்ராஜ்., முன்னாள் பிரதேச சபை தவிசாளர் திரு இஸ்ஸதீன், எருக்கலம்பிட்டி இரு பள்ளிவாசல்கள் நிர்வாக சபைத் தலைவர்கள், பாடசாலை அதிபர்கள், ஜனாஸா பௌண்டேஷன் அமைப்பினர், தாருஸ்ஸலாம் நலன் புரிச்சங்கத்தின் உலமாக்கள், தனவந்தர்கள் மற்றும் ஊர் நலன்விரும்பிகள் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

வேட்புமனுக்களை ஏற்கும் காலம் நிறை!

0

எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக் கொள்ளும் நடவடிக்கை இன்று நண்பகல் 12 மணியுடன் நிறைவடைந்துள்ளது. 

அதன்படி, ஏதேனும் ஆட்சேபனைகள் இருந்தால், அவற்றை முன்வைப்பதற்கு ஒன்றரை மணி நேரம் கால அவகாசம் வழங்கப்பட்டதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதற்கமைய, இன்று பிற்பகல் 1.30 மணிவரை ஆட்சேபனைகளை முன்வைக்க முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தலுக்கான திகதி அறிவிப்பு!

0

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் மே மாதம் 6 ஆம் திகதி நடைபெறும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தும் காலப்பகுதி நேற்று (19) நண்பகல் 12 மணியுடன் நிறைவடைந்துள்ளது. 

அதேநேரம் வேட்புமனுக்கள் இன்று (20) நண்பகல் 12 மணி வரை ஏற்றுக் கொள்ளப்பட்ட நிலையில், தற்போது உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.

2 மணிக்குப் பின்னர் காலநிலையில் அதிரடி மாற்றம்!

0

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடியசாத்தியம் காணப்படுகின்றது.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஜனாதிபதியின் அதிரடி அறிவிப்பு!

0

தொழிற்சங்கங்களின் கோரிக்கையோ அழுத்தமோ இன்றி வரலாற்றில் அரசாங்கமொன்றினால் அதிகூடிய வேதன அதிகரிப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், சுகாதார தொழிற்சங்கங்கள் பணிபுறக்கணிப்பில் ஈடுபடுவதை ஏற்க முடியாது என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். 

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும் அரச சேவை ஐக்கிய தாதியர் சங்கத்திற்கும் இடையில் நேற்று இடம்பெற்ற சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். 

தற்போதைய பொருளாதார நிலையிலும் அரச சேவையை வினைத்திறனாக முன்னெடுத்தல், தகைமையுள்ள நபர்களை அரச சேவைக்கு ஈர்த்தல் மற்றும் அரச சேவையை ஊக்குவிப்பதற்காகப் பாதீட்டில் அரச ஊழியர்களின் அடிப்படை வேதனத்தை அதிகரிப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். 

பாதீட்டில் 06 முறைமைகளின் அடிப்படையில் வேதன அதிகரிப்பு வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த ஜனாதிபதி, அதன் பிரகாரம் மிகக் குறைந்த அடிப்படை சம்பளத்தை 15,000 ரூபாவினால் அதிகரித்தல், மேலதிக நேரக் கொடுப்பனவு அதிகரித்தல், விடுமுறை நாள் கொடுப்பனவு அதிகரித்தல், 80 சதவீதத்தினால் வருடாந்த வேதனத்தை அதிகரித்தல், முழுமையான வேதன அதிகரிப்பிற்கு அமைய ஓய்வூதிய கொடுப்பனவை அதிகரித்தல், உழைக்கும் போது செலுத்தும் வரி எல்லையை அதிகரித்தல் என்பவற்றை மேற்கொண்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். 

இந்தநிலையில், குறித்த வேதன அதிகரிப்பானது அரச சேவையில் பெருமளவானவர்களினால் பாராட்டப்படுவதாகவும், அது தொடர்பில் புதிய அரசாங்கத்தின் ஆர்வத்தைப் பாராட்டுவதாகவும் அரச சேவை ஐக்கிய தாதியர் சங்க பிரதிநிதிகள் ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளனர். 

அத்துடன், தாதியர் சேவையில் தற்போது காணப்படும் பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டதுடன், அதற்கான துரித தீர்வினை பெற்றுத்தருமாறு அரச சேவை ஐக்கிய தாதியர் சங்க பிரதிநிதிகள் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்ததாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

வாய்ப் புற்றுநோய் தொடர்பில் அதிர்ச்சி தகவல்!

0

வாய்ப் புற்றுநோயால் நாட்டில் நாளாந்தம் மூன்று பேர் உயிரிழப்பதாக விசேட அறுவை சிகிச்சை நிபுணர் வைத்தியர் ஆனந்த ரத்நாயக்க தெரிவித்துள்ளார். 

இந்த நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 3,000 புதிய வாய் புற்றுநோயாளர்கள் அடையாளம் காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டுகிறார். 

இன்றைய உலக வாய் சுகாதார தினத்தை முன்னிட்டு, சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே முகம் மற்றும் வாய் அறுவை சிகிச்சை நிபுணர் வைத்தியர் ஆனந்த ரத்நாயக்க இதனைக் குறிப்பிட்டுள்ளார். 

பாக்கும் புற்றுநோயை உண்டாக்கும் காரணி என்பது இப்போது நிரூபிக்கப்பட்டுள்ளதாக வைத்தியர் சுட்டிக்காட்டியுள்ளார். 

“தற்போது, ​​இலங்கையில் ஆண்களிடையே மிகவும் பொதுவான புற்றுநோய், வாய்ப் புற்றுநோயாகும்.” 

இலங்கையில் சராசரியாக, வருடத்திற்கு 3,000 புதிய வாய்ப் புற்றுநோயாளிகள் அடையாளம் காணப்படுகிறார்கள். 

சோகமான உண்மை என்னவென்றால், நம் நாட்டில் சராசரியாக ஒவ்வொரு நாளும் குறைந்தது மூன்று பேர் வாய்ப் புற்றுநோயால் இறக்கின்றனர். 

நமக்கு மிக முக்கியமான விடயம் என்னவென்றால், வாய்ப் புற்றுநோய் எனப்படும் இந்த நிலையை நாம் எளிதாகக் கட்டுப்படுத்த முடியும். 

புகையிலை மற்றும் புகையிலையை அண்டிய உற்பத்திகளை மெல்லுவதால்  இந்நோய் ஏற்படுகிறது. அத்துடன் பாக்கும் புற்றுநோயிக்கான காரணியாக நிரூபிக்கப்பட்டுள்ளது.” என்றார்.

உலமா சபையின் முக்கிய அறிவிப்பு!

0

2025ஆம் ஆண்டிற்கான க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை 2025.03.17ஆம் திகதி தொடக்கம் மார்ச் 26ஆம் திகதி வரை நாடுபூராகவும் நடைபெறவுள்ளது.

அதனடிப்படையில் மார்ச் 21ஆம் திகதி வெள்ளிக்கிழமை தினமாக இருப்பதனாலும் ஜுமுஆவுக்குப் பிறகும் பரீட்சைகள் நடைபெறவிருப்பதனாலும் மாணவர்களது செளகரியம் கருதி அன்றைய தினம் ஜுமுஆ பிரசங்கம் மற்றும் தொழுகையினை பிற்பகல் 1.00 மணியளவில் முடிவுறும் வகையில் அமைத்துக் கொள்ளுமாறு சகல கதீப்மார்களையும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை வேண்டிக் கொள்கிறது.

பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் இப்பரீட்சையினை சிறந்த முறையில் எதிர்கொண்டு அதிசிறந்த சித்திகளைப் பெற எல்லாம் வல்ல அல்லாஹ் அருள்பாலிப்பானாக!

அஷ்-ஷைக் எம்.எல்.எம். இல்யாஸ்

பதில் தலைவர்

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை

அஷ்-ஷைக் எம்.எஸ்.எம். தாஸீம்

பதில் பொதுச் செயலாளர்

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை

தோனி ஏன் விளையாடுகிறார் தெரியுமா?

0

ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் நட்சத்திர வீரர் தோனி தனது 43 வது வயதில் விளையாடுகிறார். 12 கோடி ரூபாய் சம்பளம் பெற்று வந்த தோனி மற்ற வீரர்களுக்கு பெரிய அளவு ஊதியம் கொடுக்க வேண்டும் என்பதற்காக தம்மை புதிய விதி மூலம் மாற்றிக்கொண்டு சம்பளத்தை வெறும் 4 கோடி ரூபாயாக குறைத்துக் கொண்டார்.

மேலும் தோனிக்கு இதுதான் கடைசி சீசன்களாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் 43 வயது வீரர் ஒருவர் என் ஐபிஎல் போல் கடினமான தொடரில் விளையாட வேண்டும் என்ற கேள்வியும் எழுகிறது. இதுகுறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், தான் இதை தோனியிடமே கேட்டு பதிலை வாங்கியதாக கூறினார்.

இது குறித்து பேசிய அவர்,”அண்மையில் ஒரு திருமண நிகழ்ச்சியில் நான் தோனியை சந்தித்தேன். அவர் நல்ல உடல் தகுதியுடன் இருக்கின்றார். உடலும் வலுவாகவே இருக்கின்றது. நான் அவரிடம் உனக்கு இது கடினமாக இல்லையா? ஏன் இதை செய்கிறாய் என்று கேட்டேன்.” “அதற்கு நிச்சயமாக எனக்கு இது கடினமாக தான் இருக்கின்றது. ஆனால் இதை செய்யும் போது எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. இந்த பயணத்தை நான் மகிழ்ச்சியாக செய்கின்றேன். மாலை நேரத்தில் மணி நான்கு அல்லது ஐந்தாக ஆனால் உடனே நான் பேட்டை எடுத்துக்கொண்டு விளையாட சென்று விடுகிறேன்.”

“என் வாழ்நாள் முழுவதும் நான் இதை தான் செய்து வருகின்றேன். உங்களுக்கு விளையாட வேண்டும் என்ற உத்வேகம் இருக்கும் வரை உங்களால் செய்ய முடியும் என்று தோனி எனக்கு பதில் அளித்ததாக ஹர்பஜன் சிங் கூறினார். மேலும் தோனி குறித்து பேசிய ஹர்பஜன், எந்த ஒரு கிரிக்கெட் போட்டிகளிலும் பங்கேற்காமல் திடீரென்று ஐபிஎல் போன்ற ஒரு தொடரில் விளையாடுவது என்பது மிகவும் கடினம்.”

“ஆனால் தோனி அதை எப்படி செய்ய வேண்டும் என்று மற்றவர்களுக்கு காட்டுகிறார். மற்றவர்களை விட இவர் ஏதோ வித்தியாசமாக செய்கின்றார். ஐபிஎல் விளையாட வேண்டும் என அவர் வந்து பிழைத்தால் போதும் என்று விளையாடவில்லை. மற்ற பவுலர்கள் மீது ஆதிக்கம் செலுத்துகிறார். பயிற்சியில் அதிக பந்துகளை அவர் எதிர்கொள்கிறார். ஐபிஎல் தொடர் ஆரம்பிப்பதற்கு இரண்டு மூன்று மாதத்திற்கு முன்பு தோனி இதனை செய்கின்றார்” என்று ஹர்பஜன்சிங் தெரிவித்துள்ளார்.

சுனிதா வில்லியம்ஸை நிராகரித்த பைடன்!

0

விண்வெளியில் சிக்கியிருந்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோரை பூமிக்கு அழைத்து வருவது தொடர்பாக முன்னாள் அதிபர் ஜோ பைடன் நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தோம். ஆனால், அரசியல் காரணங்களுக்காக அது நிராகரிக்கப்பட்டது,” என ஸ்பேஸ் எக்ஸ் சி.இ.ஓ., எலான் மஸ்க் கூறியுள்ளார்.

கடந்த 9 மாதங்களாக சர்வதேச விண்வெளி மையத்தில் சிக்கியிருந்த விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் ‘ ஸ்பேஸ் எக்ஸ்’ நிறுவனத்தின் ‘டிராகன்’ விண்கலம் மூலம் பூமிக்கு திரும்பினர்.

இது தொடர்பாக ‘ஸ்பேஸ் எக்ஸ்’ நிறுவனத்தின் சி.இ.ஓ., எலான் மஸ்க் ‘எக்ஸ்’ சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: விண்வெளி வீரர்களை பூமிக்கு பத்திரமாக அழைத்து வந்த ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் நாசா குழுவினருக்கு பாராட்டுகள். இந்த திட்டத்திற்கு முன்னுரிமை அளித்த அதிபர் டிரம்ப்புக்கு நன்றி. இவ்வாறு அந்த பதிவில் கூறியுள்ளார்.

முன்னதாக டிவி ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டி ஒன்றில் எலான் மஸ்க் கூறியதாவது: விண்வெளி வீரர்களை பத்திரமாக அழைத்து வர தயார் என முன்னரே கூறினோம். இதில் எந்த சந்தேகமும் இல்லை. 8 நாட்கள் மட்டுமே அவர்கள் விண்வெளியில் இருந்து இருக்கவேண்டும். ஆனால், 10 மாதங்கள் இருந்தனர். இதற்கு எந்த காரணமும் இருக்க முடியாது. சில மாதங்களுக்கு முன்னரே ஸ்பேஸ் எக்ஸ் மூலம் அவர்களை அழைத்து வந்திரப்போம். இதற்கான கோரிக்கையை ஜோ பைடன் நிர்வாகத்திடம் வைத்தோம். ஆனால், அரசியல் காரணங்களுக்காக அது நிராகரிக்கப்பட்டது. இது தான் உண்மை. இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக கடந்த ஜனவரி மாதமும், எலான் மஸ்க் வெளியிட்ட பதிவில், ‘ ஜூன் 2024 முதல் விண்வெளியில் சிக்கி உள்ள வீரர்களை மீட்க முன்னுரிமை அளிக்க வேண்டும் என டிரம்ப் கூறியிருந்தார். இத்தனை நாட்கள் அவர்களை விண்வெளியில் வைத்திருந்தது மோசமானது எனக்கூறியிருந்தார். இதனை டிரம்ப்பும் உறுதி செய்து இருந்தது குறிப்பிடத்தக்கது.