Wednesday, November 12, 2025
Sponsored advertisementspot_img
Home Blog Page 155

நுரைச்சோலையில் சிக்கிய கடத்தல் பொருட்கள்!

0

நொரச்சோலை ஆலங்குடா கடற்பரப்பில் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட அதிரடி தேடுதல் நடவடிக்கையின் போது தீவுக்குள் கடத்த முயன்ற சுமார் 496 கிலோகிராம் உலர் இஞ்சி மற்றும் 515 ஜோடி காலணிகள் கைப்பற்றப்பட்டன.

இந்த நடவடிக்கையின்போது டிங்கி படகு ஒன்றுடன் 02 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சட்டவிரோதமான பொருட்களின் ஊடுருவலைத் தடுப்பதற்காக தீவின் கரையோரப் பகுதிகளில் ரோந்து மற்றும் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தபோதே குறித்த பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

இது வடமேற்கு கடற்படை கட்டளையில் SLNS விஜயா மூலம் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்த நடவடிக்கையின்போது 515 ஜோடி செருப்புகள் சுமார் 496 கிலோ எடையுள்ள 16 சாக்குகளில் மறைக்கப்பட்டிருந்ததுடன், உலர் இஞ்சி 06 பொதிகளில் மறைக்கப்பட்டிருந்தன.

இந்த கடத்தல் நடவடிக்கைக்காக பயன்படுத்தப்பட்ட டிங்கி படகும், அதனுடன் தொடர்புடைய 02 சந்தேக நபர்களையும் கற்பிட்டி கடற்படையினர் கைப்பற்றினர்.

இந்த நடவடிக்கையில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 33 மற்றும் 46 வயதுடைய கல்பிட்டியில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். 02 சந்தேக நபர்களும் கைப்பற்றப்பட்ட பொருட்களுடன் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கட்டுநாயக்க சுங்கத் தடுப்பு அலுவலகத்தில் ஒப்படைக்கப்படவுள்ளனர்.

ஆனமடுவ வைத்தியசாலைக்கு கடற்படை உதவி!

0

சுகாதார அமைச்சின் மேற்பார்வையில் இலங்கை கடற்படையின் சமூகப் பணித் திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட மருத்துவ தரத்தில் அமையப்பெற்ற சுத்திரீகரிக்கப்பட்ட குடிநீர் மையம், நேற்று (2025 பெப்ரவரி 01) ஆனமடுவ ஆதார வைத்தியசாலையின் இரத்த சுத்தீகரிப்பு (hemodialysis) பிரிவில் நிறுவப்பட்டது.

இது கடற்படையின் உயர் தொழிநுட்ப பங்களிப்புடன் இந்த சமூகப் பணித் திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட முப்பத்தொறாவது (31) மருத்துவ தர சுத்திரீகரிக்கப்பட்ட குடிநீர் மையமாகும்.

இத் திட்டத்தை ஆனமடுவ ஆதார வைத்தியசாலையின் இரத்த சுத்தீகரிப்பு (hemodialysis) பிரிவில் நிறுவுவதன் மூலம், குறித்த பிரிவில் பத்து (10) சிறுநீரக நோயாளிகளுக்கு ஒரே நேரத்தில் சிகிச்சை அளிக்க முடியும், மேலும் இருபது (20) நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க கூடிய தன்மையும் உள்ளது.

மேலும், ஆனமடுவ ஆதார வைத்தியசாலையில் நிறுவப்பட்ட மருத்துவ தரத்தில் அமையப்பெற்ற குறித்த சுத்திரீகரிக்கப்பட்ட குடிநீர் மையத்தை வைத்தியசாலைக்கு கையளிக்கும் நிகழ்வில், இந்த சமூகப் பணித் திட்டத்தின் வெற்றிக்கு தொடராக பங்களித்து வரும் அனைத்து பங்குதாரர்களும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

மதுரங்குளியில் சிக்கிய ஒரு தொகை கஞ்சா!

0

இலங்கை கடற்படை, மதுரங்குளிய காவல்துறையினருடன் இணைந்து 2025 ஜனவரி 31 ஆம் திகதி மதுரங்குளிய, நவதங்குளம் பகுதியில் நடத்தப்பட்ட கூட்டுத் தேடுதல் நடவடிக்கையின் போது, கேரள கஞ்சா ஒரு (01) கிலோகிராம் ஐநூற்று எண்பத்தைந்து (585) கிராமுடன் ஒரு சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டதுடன், ஒரு மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டது.

அதன்படி, வடமேற்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் தம்பபன்னி நிறுவனம், மதுரங்குளிய காவல்துறையினருடன் இணைந்து நடத்தப்பட்ட இந்த கூட்டுத் தேடுதல் நடவடிக்கையின் போது, ஒரு (01) கிலோகிராம் ஐநூற்று எண்பத்தைந்து (585) கிராம் எடையுள்ள கேரள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது, இதன் மொத்த மதிப்பு ஆறு (06) இலட்சத்திற்கும் அதிகமாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.

மேலும், கடற்படையினரால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கோட்டந்தீவு, பெரியபாடு பகுதியைச் சேர்ந்த 43 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். மேலும், சந்தேக நபர், கேரள கஞ்சா மற்றும் மோட்டார் சைக்கிளை மதுரங்குளி காவல் நிலையத்தில் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்க பட்டது.

இலங்கை வந்த பாக்கிஸ்தான் போர்க்கப்பல்!

0

பாகிஸ்தான் கடற்படைக் கப்பலான ‘PNS ASLAT’ இன்று (2025 பெப்ரவரி 01) காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது, மேலும் கடற்படை மரபுகளுக்கமைய இலங்கை கடற்படை கப்பலை வரவேற்றது.

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ள ‘PNS ASLAT’ என்ற Frigate (FFG) ரக கப்பல் 123 மீட்டர் நீளமும் மொத்தம் 243 உறுப்பினர்களை உள்ளடக்கியதுடன், கப்பலின் கட்டளை அதிகாரியாக கெப்டன் MUHAMMAD AZHAR AKRAM கடமைப்புறிகிறார்.

மேலும், ‘PNS ASLAT’ போர்க்கப்பல் நாட்டில் தங்கியிருக்கும் காலப்பகுதியில், கப்பலின் அங்கத்தவர்கள் தீவின் முக்கிய இடங்களை பார்வையிட பல பகுதிகளுக்குச் செல்ல திட்டமிடப்பட்டுள்ளனர்,

மேலும், ‘PNS ASLAT’ என்ற கப்பல் 2025 பெப்ரவரி 4 அன்று தீவிலிருந்து புறப்படவுள்ளது. மேலும், இலங்கை கடற்படை கப்பல் ஒன்றுடன் மேற்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான கடற்கரையில், ஒரு கடற்படைப் பயிற்சியில் (PASSEX) ஈடுபடவும் திட்டமிட்டுள்ளனர்.

Dr.அர்ச்சுனா எம்.பி இன் கழுத்தில் கத்தி!

0

யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவை பாராளுமன்ற உறுப்பினராக இருந்து தகுதி நீக்கம் செய்ய உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை மே 14 ஆம் திகதி மீள விசாரணைக்கு எடுப்பதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று அறிவித்தது.

இதற்கிடையில், நிலுவையில் உள்ள ஒழுக்காற்று விசாரணை காரணமாக இராமநாதன் அர்ச்சுனா சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் நேற்று மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்குத் தெரிவித்தார்.

சுகாதார அமைச்சின் செயலாளர் சார்பாக ஆஜரான மூத்த கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சுமதி தர்மவர்தன, நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவை சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டதற்கான ஆவணங்கள் ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக நீதிமன்றத்திற்குத் தெரிவித்தார்.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதிபதி மாயாதுன்னே கொரியா மற்றும் நீதிபதி மஹேன் கோபல்லவ ஆகியோர் அடங்கிய இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு, மனுதாரர் கோரியபடி அறிவிப்புகள் மற்றும் இடைக்கால நிவாரணம் வழங்குவதை பரிசீலிக்க மனுவை மே 14 ஆம் திகதி விசாரணைக்கு ஒத்திவைத்தது.

பிரதிவாதிகள் ஆட்சேபனைகளை தாக்கல் செய்ய நீதிமன்றம் மேலும் கால அவகாசம் வழங்கியது.

இராமநாதன் அர்ச்சுனாவை பாராளுமன்ற உறுப்பினரிலிருந்து தகுதி நீக்கம் செய்து அறிவிக்கும் குவோ வாரண்டோ ரிட் வகையிலான உத்தரவை பிறப்பிக்கக் கோரி சமூக ஆர்வலர் ஓஷல ஹேரத் இந்த மனுவை தாக்கல் செய்தார்.

மனுதாரர் சார்பாக சட்டத்தரணி என்.கே.அசோக்பரன் மற்றும் ஷெனல் பெர்னாண்டோ ஆஜராகினர், துஷாரி ஜெயவர்தனாவின் அறிவுறுத்தலின் பேரில் மூத்த சட்டத்தரணி சேனானி தயாரத்ன இராமநாதன் அர்ச்சுனாவுக்காக ஆஜரானார்.

அர்ச்சுனா சுகாதார அமைச்சுடன் இணைக்கப்பட்ட ஒரு பொது அதிகாரி என்றும், எனவே, ஒரு பொது அதிகாரியாக, அவருக்கு அரசுடன் ஒப்பந்தம் இருப்பதாகவும் மனுதாரர் கூறினார்.

அரசியலமைப்பின் பிரிவு 91(1)(e) பொது ஒப்பந்தங்களில் ஏதேனும் வகையில் சம்பந்தப்பட்ட நபர்கள் பாராளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்படுவதைத் தடுக்கிறது என்று மனுதாரர் கூறினார்.

அர்ச்சுனா சாவகச்சேரி ஆதார மருத்துவமனையின் பதில் மருத்துவ அத்தியட்சகராக பணியாற்றினார் என்றும், பின்னர் பேராதனை போதனா மருத்துவமனைக்கு இணைக்கப்பட்டார் என்றும் மனுதாரர் மேலும் கூறினார்.

செப்டம்பர் 29, 2024 அன்று அல்லது அதற்கு முந்தைய திகதியில் அர்ச்சுனாவின் பேஸ்புக் சுயவிவரம், அப்போதைய சுகாதார அமைச்சக செயலாளரால் ஒழுங்கு நடவடிக்கை நிலுவையில் உள்ளதால் அவர் இடைநீக்கம் செய்யப்பட்டதாக பகிரங்கமாக வெளிப்படுத்தியதாக மனுதாரர் கூறினார்.

எனவே, அரசியலமைப்பின் பிரிவு 91(1)(d) மற்றும் 91(1)(e) ஆகியவற்றின் கீழ் அர்ச்சுனா பாராளுமன்ற உறுப்பினராக இருக்க தகுதியற்றவர் என்று மனுதாரர் கூறினார்.

தந்தையை போட்டுத்தள்ளிய மகன்!

0

மகனின் தாக்குதலுக்கு இலக்காகி தந்தை ஒருவர் உயிரிழந்த சம்பவம் உடப்பு பொலிஸ் பிரிவின் பெரியகொலனி பகுதியில் நேற்று (01) அதிகாலையில் பதிவாகியுள்ளது.

உயிரிழந்தவர் உடப்பு, ஆடிமுனை பகுதியைச் சேர்ந்த 63 வயதான நபர் என தெரியவந்துள்ளது.

பெரியகொலனி பகுதியில் உள்ள வீடொன்றில் தங்கியிருந்த ஒருவர், உடல்நலக்குறைவு காரணமாக உடப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் இறந்துவிட்டதாக உடப்பு பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

உடலைப் பரிசோதித்த சட்டவைத்திய அதிகாரி, இது சந்தேகத்திற்கிடமான மரணம் என்றும், நீதவான் விசாரணை தேவை என்றும் அறிவித்துள்ளார்.

அதன்படி, முன்னெடுத்த விசாரணையில், இந்த மரணம் ஒரு கொலை என்றும், தந்தை உறங்கி கொண்டிருந்த போது மகன் தந்தையின் மார்பில் கத்தியால் குத்தியுள்ளமையும் தெரியவந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

விசாரணையில் இறந்தவரின் மகன் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும், அன்று அவரது சிகிச்சைகாக தந்தை வராததால் ஏற்பட்ட கோபத்தில் தந்தையை அவர் கத்தியால் குத்தியதாகவும் தெரியவந்தது.

சடலம் புத்தளம் மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், குற்றத்தைச் செய்த சந்தேகநபரான 20 வயதான மனநலம் பாதிக்கப்பட்ட மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் உடப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

அதிரடியாக சென்ற சுகாதார அமைச்சர்!

0

சந்தைக்கு தொடர்ச்சியாக பொருட்களை விநியோகிக்க புதிய இயந்திரங்கள் நிறுவப்பட்டு உற்பத்தி திறனை திறம்பட செய்ய வேண்டும்’ -சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ அதிகாரிகளுக்கு தெரிவித்தார்

வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தியால் ஏற்படும் நீர் இழப்பை தடுப்பதற்கு வாய்வழி rehydration salts தீர்வாகப் பயன்படுத்தப்படும் வாய்வழி (Oral rehydration salts – (ORS)  தயாரிப்புகளை இலங்கையின் சுகாதாரத் துறை சந்தையில் தொடர்ந்து வழங்குவதற்கும் விரிவுபடுத்துவதற்கும் உற்பத்தி தொடர்பான நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய இயந்திரங்களை நிறுவுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் தெரிவித்தார்

அரச மருந்துக் கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான இரத்மலானை களஞ்சியசாலை வளாகம் மற்றும் உற்பத்திப் பிரிவிற்கு விசேட கண்காணிப்புச் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டபோதே அமைச்சர் இந்த ஆலோசனையை வழங்கினார்.

நாடளாவிய ரீதியில் உணவுப் பொருட்களை விநியோகிப்பதில் சில குறைபாடுகள் காணப்படுவதாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸவிடம் தெரிவிக்கப்பட்டதையடுத்து முன்னறிவிப்பின்றி அமைச்சர் இந்த விசேட கண்காணிப்பு விஜயத்தை மேற்கொண்டார்.
நாட்டிலேயே ஜீவனி தயாரிப்புகளை உற்பத்தி செய்யும் ஒரே நிறுவனம் அரச மருந்துக் கூட்டுத்தாபனம் மட்டுமே. அந்த கூட்டுத்தாபனத்தின் கீழ் இயங்கும் இரத்மலானை உற்பத்தி ஆலையின் அதிகபட்ச கொள்ளளவின் கீழ் 1000 M.L  பொதிகள் (33500 * 25) கொண்ட 25 தொகுதிகளும் தலா  200 M.L  பாக்கெட்டுகள் (165500  *  8) கொண்ட 8 தொகுதிகளும் மாதந்தோறும் உற்பத்தி செய்யப்படுகின்றன.

தற்போது பாவனையில் இருக்கும் இயந்திரமும் 12 ஆண்டுகள் பழமையானது என்பதும் இங்கு தெரியவந்தது. தற்போதைய சந்தைத் தேவைக்கு ஏற்ற உற்பத்தித் திறனை ஒரு இயந்திரம் மூலம் உற்பத்தி செய்ய முடியாது என அமைச்சரிடம் ஊழியர்கள் சுட்டிக்காட்டினர்.

இந்நிலைமை தொடர்பில் அரச மருந்தக சட்ட கூட்டுத்தாபனத்தின் தலைவருடன் கலந்துரையாடிய அமைச்சர் தேவையான இயந்திரங்களை கொள்வனவு செய்யுமாறு பணிப்புரை வழங்கினார். மேலும் தற்போது நிலவும் ஊழியர் பிரச்சனைகள் மற்றும் வெற்றிடங்களை நிரப்புவது குறித்து உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

ஜீவனி தயாரிப்புகளுக்கு மேலதிகமாக இரத்மலானையில் அமைந்துள்ள இந்த உற்பத்தி நிலையம் குளுக்கோஸ் மற்றும் தோல் மேற்பரப்பு பூச்சுகளையும் உற்பத்தி செய்கிறது. 23 ஊழியர்களும் அங்கு பணிபுரிகின்றனர்.

ரத்மலானை களஞ்சியசாலை வளாகம் மற்றும் உற்பத்திப் பிரிவின் பதில் முகாமையாளர் திரு.பிரதாங்க் பெரேரா, திரு.எஸ்.பி.குணதிலக்க மற்றும் பணியாளர்கள் குழுவும் இந்த கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்மருந்துக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் கலாநிதி மனுஜ் சி.வீரசிங்கம்ஹத்த தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு விளக்கமளித்தார்.

அமரர் மாவையின் சேவையை நினைவுகூர்ந்த ஹக்கீம்!

0

தமிழரசு கட்சியின் மறைந்த மூத்த தலைவர் மாவை சோ.சேனாதிராஜாவின் யாழ்ப்பாணம், மாவிட்டபுரம் இல்லத்திற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் வெள்ளிக்கிழமை(31) மாலை சென்று, அன்னாரின் பூதவுடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினார்.

அத்துடன், அவரது புதல்வர்கள் இருவருக்கும், புதல்விக்கும் அனுதாபங்களைத் தெரிவித்துக் கொண்டார்.

முஸ்லிம் காங்கிரஸ் திகாமடுல்ல பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை, கட்சியின் யாழ் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களின் அமைப்பாளர் ரொஷான் சமீம் ஆகியோரும் இதன்போது உடனிருந்தனர்.

மேலும் அமரர் மாவை சோ.சேனாதிராஜா அவர்கள் தனது மக்களுக்காக ஆற்றிய பெரும் தொண்டு பற்றி ரவூப் ஹக்கீம் அவர்கள் நினைவுகூர்ந்தமை குறிப்பிடத்தக்கது.

எம்.என்.எம்.யஸீர் அறபாத் (BA,JP) -ஓட்டமாவடி.

படுதோல்வியடைந்த இலங்கை அணி!

0

இலங்கை அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 242 ஓட்டங்களால் வெற்றிபெற்றது. 

போட்டியில் முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பாடிய அவுஸ்திரேலிய அணி 6 விக்கெட்டுக்களை இழந்து 654 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில், இன்னிங்ஸை இடைநிறுத்தியது. 

இந்தநிலையில், தமது முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பாடிய இலங்கை அணி 165 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தமையினால் பளோ ஒன் முறையில் இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்தது. 

அதற்கமைய, இரண்டாவது இன்னிங்ஸிற்காக துடுப்பாடிய இலங்கை சகல விக்கெட்டுக்களையும் இழந்து 247 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியை தழுவியது.

மீண்டும் இணையும் இரு இமயங்கள்!

0

ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் சமகி ஜன பலவேகய இணைப்பு தொடர்பான பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமான கட்டத்தை எட்டியுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் தலதா அதுகோரல சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், தலைமைத்துவம் மற்றும் சின்னம் குறித்து இன்னும் விவாதிக்கப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

உள்ளூராட்சித் தேர்தலில் ஒன்றாக போட்டியிடுவதற்கான உடன்பாட்டை எட்டுவதே விவாதங்களின் முதன்மை நோக்கம் என்று தலதா அதுகோரல தெரிவித்துள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“தலைமைத்துவம் மற்றும் சின்னம் தொடர்பான பிரச்சினைகளை பின்னர் போசிக்கொள்ளலாம். ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து பிரிந்த பல உறுப்பினர்கள் உள்ளனர். வரவிருக்கும் உள்ளூராட்சித் தேர்தல்கள் மிக முக்கியமான தேர்தல். அதற்கு முன் ஒரு உடன்பாட்டை எட்டுவதே எங்கள் நோக்கம்.

இந்த ஒப்பந்தத்தில், மற்ற கட்சிகளும் எங்களுடன் சேரலாம். சில சமயங்களில் நாம் உள்ளூராட்சித் தேர்தல்களில் பொதுவான சின்னத்துடன் போட்டியிடலாம்.

இரு கட்சிகளும் இணைய வேண்டும் என்ற கருத்துடைய கட்சி உறுப்பினர்கள் உள்ளனர். அதற்காக நாங்கள் ஒரு தொடக்கத்தை எடுத்துள்ளோம்” என்றார்.