Tuesday, March 17, 2026
Sponsored advertisementspot_img
Home Blog Page 157

செம்மணி மனித புதைகுழி குறித்து கவலை!

செம்மணி மனித புதைகுழி அகழ்வுகள் சர்வதேச கண்காணிப்புடன் மேற்கொள்ளப்பட வேண்டும் என வட கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கத் தலைவி யோகராசா கலாறஞ்சினி தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் அமைந்துள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளினுடைய அலுவலகத்தில் நேற்று (04-06-2025) நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

காலத்துக்கு காலம் பல்வேறு மனித புதை குழிகள் கண்டு கண்டுபிடிக்கப்பட்டு அகழ் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அவ்வாறே செம்மனி புதை குழியிலும் மனித எச்சங்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டிருக்கின்றன என்று குறிப்பிட்டார்.

எனவே இவ்வாறான அகழ்வு பணிகள் ஒரு சர்வதேச கண்காணிப்பின் கீழ் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும், அத்துடன் ஊடகவியலாளர்கள் கானாமலாக்கப்பட்டவர்கள் சார்பிலும் அவர்களது பிரதிநிதிகளையும் அனுமதிக்க வேண்டும் என்று குறிப்பிட்ட அவர், குறித்த அகழ்வு பணிக்கு நீதி கோரிஇன்றைய தினம் செம்மணி சந்தியில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றையும் முன்னெடுக்க இருப்பதாகவும் தெரிவித்தார்.

விமான நிலையத்துக்கு 24×7 மணி நேர பஸ் சேவை!

0

விமான நிலையத்துக்கு பிரவேசிக்கும் மக்களுக்காக பொதுப் போக்குவரத்து சேவையொன்றின் அத்தியாவசியத் தேவையைப் பூர்த்தி செய்வதன் ஆரம்ப நடவடிக்கையாக, நேற்று முதல் விமான நிலையத்திலிருந்து கொழும்பு வரை தனியார் பேருந்து சேவை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

இதற்கு முன்னர் அவெரிவத்தை பேருந்து தரிப்பு நிலையத்திலிருந்து பயணத்தை ஆரம்பிக்கும் இந்த பேருந்து நேற்று முதல் விமான நிலையத்திலிருந்து ஆரம்பிக்கின்றது. 

இந்த பேருந்து சேவையை 24×7 மணி நேரச் சேவையாக நடைமுறைப்படுத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

தற்போது தனியார் துறையின் பேருந்து ஒன்றைச் சேவையில் ஈடுபடுத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், எதிர்காலத்தில் பயணப் பொதிகளைக் கொண்டு வரும் வசதிகளுடன் பேருந்து சேவை ஒன்றை, இந்த சேவைக்கு ஈடுபடுத்துவதற்கு எதிர்பார்ப்பதாகவும் பிரதி அமைச்சர் ஜனித்த ருவன் கொடித்துவக்கு தெரிவித்தார். 

இந்த சேவையை வழங்கும் பேருந்து வண்டிகளில் பணியாற்றும் பணியாளர்களுக்கு மக்கள் அபிமான சேவையை வழங்குவதற்காக முறையான பயிற்சி வழங்கப்பட்ட பின்னர் இச்சேவையில் அவர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள். 

மதுரங்குளி-தொடுவா வீதி மீண்டும் மக்கள் பாவனைக்கு!

0

மதுரங்குளி-தொடுவா பிரதான வீதியின் சிறிய பாலத்திற்கான திருத்தப் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் அதற்காக போடப்பட்ட தற்காலிக பாதை அண்மையில் பெய்த மழையில் அடித்துச்செல்லப்பட்டது.

மதுரங்குளி வர்த்தக சங்கத்தின் அனுசரணையில் சுமார் மூன்று மில்லியன் செலவில் நிர்மாணிக்கப்பட்ட குறித்த தற்காலிக பாதையே இவ்வாறு மழை நீரில் அடித்துச்செல்லப்பட்டது.

இதனால் மதுரங்குளி-தொடுவா பிரதான வீதியின் போக்குவரத்துக்கள் முற்றாக பாதிப்புக்குள்ளானதுடன், மதுரங்குளி வர்த்தக நடவடிக்கைகளும் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தன.

நிலைமையை கருத்திற்கொண்டு பாதிக்கப்பட்ட குறித்த தற்காலிக வீதி, மதுரங்குளி வர்த்தக சங்கத்தின் தலையீட்டில் மீண்டும் திருத்தம் செய்யப்பட்டு மக்கள் பாவனைக்காக நேற்றுமுதல் மீண்டும் மக்கள் பாவனைக்கு திறக்கப்பட்டது.

முஸ்லிம்களின் பண்டிகை எதிர்வரும் தினங்களில் வர இருப்பதனால், முஸ்லிம்கள் செறிந்து வாழும் குறித்த பிரதேசத்தின் நிலைமையை கருத்திற்கொண்டும், மக்களின் போக்குவரத்து தேவையை பூர்த்திசெய்யவும் மதுரங்குளி வர்த்தக சங்கம் துரிதமாக செயற்பட்டு குறித்த தற்காலிக வீதியை மீண்டும் செப்பனிட்டமைக்கு மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

சபாநாயகரிடம் புதிய முன்மொழிவு கையளிப்பு!

0

கலை-கலாசார அலுவல்கள் பற்றிய பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியமொன்றை பத்தாவது பாராளுமன்றத்தில் ஸ்தாபிப்பதற்கான முன்மொழிவொன்று நேற்று (04) கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்னவுக்கு பாராளுமன்றத்தில் கையளிக்கப்பட்டது.

தேசிய மக்கள் சக்தியின் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான ஜகத் மனுவர்ன மற்றும் ருவன் மாபலகம ஆகியோர் இந்த முன்மொழிவை கையளித்தனர்.

அதற்கமைய, பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் அடுத்த கூட்டத்தில் இந்த முன்மொழிவு தொடர்பில் கருத்திற்கொண்டு எதிர்கால நடவடிக்கை எடுப்பதற்காக ஆற்றுப்படுத்தப்படவுள்ளது.

முகக்கவசம் அணிவது தொடர்பில் புதிய சர்ச்சை!

0

அலுவலக வளாகங்களில் முகக்கவசம் அணியுமாறு பொதுவாக நிறுவனங்களுக்கு அறிவுறுத்த வேண்டிய அவசியமில்லை என்று சுகாதார அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் இன்ஃப்ளூயன்ஸா மற்றும் கோவிட் வைரஸ் தொற்றுக்கள் அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் எச்சரித்துள்ளது.

எனவே, மேல் மாகாணத்தின் துணைப் பிரதம செயலாளர் (நிர்வாகம்) வெளியிட்ட (2025.06.02) கடிதம், மேல் மாகாண சபையின் அனைத்து நிறுவனத் தலைவர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. இதில் அலுவலக வளாகங்களிலும் பொதுமக்கள் அதிகமாக இருக்கும் அனைத்து இடங்களிலும் பணிபுரியும் போது முகக்கவசம் அணியுமாறு அனைத்து ஊழியர்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கடிதம் தொடர்பாக, சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளர், சிறப்பு மருத்துவர் அனில் ஜயசிங்க, மேல் மாகாண தலைமைச் செயலாளருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி, சம்பந்தப்பட்ட கடிதத்தில் வெளியிடப்பட்ட அறிவுறுத்தல்களை மறுபரிசீலனை செய்யுமாறும், அலுவலகங்களில் முகமூடிகளை அணியுமாறு பொதுவாக நிறுவனங்களுக்கு அறிவுறுத்த வேண்டிய அவசியமில்லை என்றும் கூறியுள்ளார்.

2023 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் COVID 19 உலகளாவிய தொற்றுநோய் முடிவுக்கு வந்த பிறகு, சுவாச நோய் கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு செயல்முறையின் கீழ் COVID 19 பிற தொற்று நோய்களின் வகையில் சேர்க்கப்பட்டுள்ளது.

எனவே, மழைக்காலத்தில் இன்ஃப்ளூயன்ஸா போன்ற சுவாச நோய்கள் அதிகரிப்பதால், கோவிட் 19 அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாகவும், பொதுவாக, சுவாச நோய்களை தடுப்பதும், பொதுவான வழிமுறையின்படி மேற்கொள்ளப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது. எனவே, இந்த நேரத்தில் கோவிட் 19 தடுப்பு ஒரு ஆபத்தாகக் கருத வேண்டிய அவசியமில்லை என்றும், மேலும், நிறுவனங்களுக்கு இதுபோன்ற பரிந்துரைகளை வழங்குவது தேவையற்ற பயத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும், அன்றாட நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிக்கும் சூழ்நிலையை உருவாக்கக்கூடும் என்றும், எனவே சுகாதார அமைச்சகத்துடன் கலந்தாலோசித்த பின்னரே அத்தகைய ஆலோசனையை வழங்குவது நல்லது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், யாராவது தானாக முன்வந்து அல்லது தனிப்பட்ட பாதுகாப்புக்காக மருத்துவ ஆலோசனையின் பேரில் முகக்கவசம் அணிந்தால் எந்தப் பிரச்சினையும் இல்லை என்றும் செயலாளர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இருமல், சளி (காய்ச்சல்) போன்ற அறிகுறிகள் உள்ளவர்கள் மட்டுமே முகக்கவசம் அணிவது முக்கியம் என்றும், தனிப்பட்ட சுகாதாரத்தைப் பேணுவதற்கும், மற்றவர்களுக்கு நோய் பரவும் வாய்ப்பைக் குறைப்பதற்கும் முகக்கவசம் அணிவது சிறந்தது என்று குறித்த கடித்ததில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.


தீப்தி விஜேதுங்க
சுகாதாரம் மற்றும் ஊடகத்துறை அமைச்சரின் ஊடகச்செயலாளர்
சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சு.

அறிமுகமாகிறது சுகாதார தகவல் அமைப்பு!

0

நாட்டின் ஆரம்ப சுகாதாரப் பராமரிப்பு முறையில் ஒரு சிறந்த மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில், சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சரின் தலைமையில் நாளை (05) தம்புத்தேகமவில் கிளஸ்டர் சுகாதார தகவல் அமைப்பு (CHIS) ஆரம்பிக்கபட உள்ளது.

ஆரம்ப சுகாதாரப் பராமரிப்பு டிஜிட்டல் மயமாக்கல் திட்டத்தின் கீழ், கிளஸ்டர் சுகாதார தகவல் அமைப்பு (CHIS) நாளை (05) காலை சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸவின் தலைமையில் தம்புத்தேகம ஆதார மருத்துவமனையில் தொடங்கப்படும். இந்த கிளஸ்டர் சுகாதார தகவல் அமைப்பு நாட்டின் சுகாதாரப் பராமரிப்பு முறையை டிஜிட்டல் மயமாக்குவதில் ஒரு முக்கிய அம்சமாக இடம்பெறவுள்ளது.

இந்த கிளஸ்டர் சுகாதார தகவல் அமைப்பு அருகிலுள்ள மருத்துவமனைகளைச் சுற்றி “கிளஸ்டர்களாக” தொகுக்கிறது, மருத்துவமனைகள் மற்றும் மருத்துவமனைகளில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் நோயாளியின் சுகாதார பதிவுகள், எக்ஸ்ரே படங்கள், ஆய்வக சோதனை முடிவுகள், மருந்துச்சீட்டுகள் மற்றும் சிகிச்சைகள் மற்றும் மருத்துவ வரலாறு பற்றிய தரவைப் அறிய உதவுகிறது.

மேலும் நோயாளியின் உடல்நலம் குறித்த சரியான தரவுகளை மிகக் குறுகிய காலத்தில் ஆய்வு செய்ய முடியும். மேலும், ஒரு சிறிய மருத்துவமனைக்கு ஆய்வகம் இல்லையென்றால், அதே கிளஸ்டருக்குள் உள்ள ஒரு மருத்துவமனைக்கு சோதனை மாதிரிகளை அனுப்ப முடியும், இது பரிசோதனைகளின் எண்ணிக்கையை வெகுவாகக் குறைக்க மற்றும் நோயாளிகளுக்குத் தேவையான பராமரிப்பைப் பெறுவதை எளிதாக்க இது உதவுகிறது.

நோயாளிகள் பெரும்பாலும் தேவையான சிகிச்சையைப் பெற வெவ்வேறு மருத்துவமனைகளுக்குச் செல்ல வேண்டியிருக்கும், மேலும் சில நேரங்களில் அவர்கள் மீண்டும் மீண்டும் பரிசோதனைகள் செய்ய வேண்டியிருக்கும், மருத்துவ பதிவுகளை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு கொண்டு வர வேண்டியிருக்கும் அல்லது முடிவுகளுக்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியிருக்கும். இந்த சிரமங்களைத் தவிர்ப்பதன் மூலமும், நேரத்தை மிச்சப்படுத்துவதன் மூலமும், செலவுகளைக் குறைப்பதன் மூலமும், சிறந்த பராமரிப்பை வழங்குவதன் மூலமும், இந்த புதிய சுகாதார தகவல் அமைப்பு திறமையான மற்றும் நோயாளிக்கு ஏற்ற சுகாதார அமைப்பை உருவாக்க உதவும். மேலும், தேவையற்ற தாமதங்கள் அல்லது செலவுகள் இல்லாமல், சரியான நேரத்தில், சரியான இடத்தில், மக்கள் சரியான பராமரிப்பைப் பெறுவதையும் இது உறுதி செய்கிறது.

இந்த அமைப்பு சுகாதார அமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் (HSEP) கீழ் ஆசிய வளர்ச்சி வங்கியின் (ADB) ஆதரவுடன் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நவீன சுகாதார தகவல் அமைப்பின் மேம்பாட்டிற்கு ஆசிய வளர்ச்சி வங்கி நிதியுதவி மற்றும் தொழில்நுட்ப உதவியை வழங்கியுள்ளது.

இந்த அமைப்பின் சரியான செயல்பாட்டைச் பரிசோதிக்க தம்புத்தேகம மற்றும் தம்புள்ளையைச் சுற்றியுள்ள 31 மருத்துவமனைகள் மற்றும் சுகாதார மையங்களை உள்ளடக்கிய பரிசோதனை செயல்முறையும் இடம்பெறஉள்ளது.

மின்சார திருத்த சட்டமூலம் தொடர்பில் முக்கிய தகவல்!

0

“இலங்கை மின்சாரம் (திருத்தம்)” சட்டமூலம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மேலும் இரண்டு மனுக்களின் பிரதிகள் தனக்குக் கிடைத்துள்ளதாக சபாநாயகர் அறிவித்தார். 

சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்ன இன்று (04) பாராளுமன்றத்தில் இந்த அறிவிப்பை வெளியிட்டார். 

“இலங்கை மின்சாரம் (திருத்தம்)” சட்டமூலம் தொடர்பாக, அரசியலமைப்பின் பிரிவு 121 (1) இன் படி உயர் நீதிமன்றத்தில் இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

அரசியலமைப்பின் 121(1) ஆம் உறுப்புரையின் பிரகாரம் “இலங்கை மின்சாரம் (திருத்தம்)” எனும் சட்டமூலம் தொடர்பாக உயர் நீதிமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட்ட மனுக்களின் மேலும் இரண்டு பிரதிகள் தனக்குக் கிடைத்துள்ளதாக கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன இன்று (04) பாராளுமன்றத்தில் அறிவித்தார்.

பில்கேட்ஸிடமிருந்து பிரியும் 99% சொத்துக்கள்!

0

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் பில் கேட்ஸ், தனது சொத்தில் 99 சதவீதத்தை 2045 ஆம் ஆண்டுக்குள் ஆப்பிரிக்காவில் சுகாதாரம் மற்றும் கல்வி மேம்பாட்டிற்காக நன்கொடையாக வழங்க திட்டமிட்டுள்ளார். இதன் மூலம் கேட்ஸ் அறக்கட்டளை 2045 ஆம் ஆண்டுக்குள் தனது செயல்பாடுகளை முடிவுக்கு கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது

தொழில்நுட்ப உலகின் ஜாம்பவானான மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் பில் கேட்ஸ், தனது சொத்தில் பெரும்பகுதியை, குறிப்பாக ஆப்பிரிக்காவில் சுகாதாரம் மற்றும் கல்வி சேவைகளை மேம்படுத்துவதற்காக அடுத்த 20 ஆண்டுகளில் நன்கொடையாக வழங்க திட்டமிட்டுள்ளார்.

ப்ளூம்பெர்க் பில்லியனர் குறியீட்டின்படி, உலகின் ஐந்தாவது பெரிய பணக்காரரான பில் கேட்ஸின் தற்போதைய சொத்து மதிப்பு சுமார் 175 பில்லியன் டாலர்கள். இது 2045 ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 200 பில்லியன் டாலர்களை எட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதே ஆண்டில் தான் அவரது அறக்கட்டளை தனது செயல்பாடுகளை நிறுத்த திட்டமிட்டுள்ளது.

எத்தியோப்பியாவின் அடிஸ் அபாபாவில் உள்ள ஆப்பிரிக்க யூனியன் தலைமையகத்தில் பேசிய 69 வயதான பில் கேட்ஸ், “என்னுடைய சொத்துக்களை அடுத்த 20 ஆண்டுகளில் நன்கொடையாக வழங்க முடிவு செய்துள்ளேன். இதில் பெரும்பகுதி ஆப்பிரிக்காவில் உள்ள சவால்களை எதிர்கொள்ள உதவும் வகையில் செலவிடப்படும்” என்று தெரிவித்தார். கேட்ஸ் அறக்கட்டளை மூன்று முக்கிய இலக்குகளை கொண்டுள்ளது. அவை, தாய்மார்கள் மற்றும் குழந்தைகளின் தவிர்க்கக்கூடிய இறப்புகளை முடிவுக்குக் கொண்டுவருவது, தொற்று நோய்களால் பாதிக்கப்படாமல் அடுத்த தலைமுறையை வளர்ப்பது மற்றும் மில்லியன் கணக்கான மக்களை வறுமையிலிருந்து மீட்பது ஆகியவையாகும்.

அரசாங்க திட்டங்கள் முறையானதாக இல்லை!

0

கிளீன் ஶ்ரீலங்கா தொடர்பில் கதைத்த அரசாங்கம் இப்போது அதனை விடுத்து உள்ளூராட்சி சபைகளில் யாருடன் ஆட்சியமைப்பது என்று ஆராய்ந்து கொண்டிருக்கிறது என ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் ரோஹன பண்டார தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (3) நடைபெற்ற தனிப்பட்ட தரவுப் பாதுகாப்பு திருத்தச் சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே  இவ்வாறு தெரிவித்தார்

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

அரசாங்கம் முன்னெடுக்கும் திட்டங்கள் முறையானதாக இல்லை. தரவு முகாமைத்துவம் இல்லாமையே அதற்கு காரணமாகும். கிளீன் ஶ்ரீலங்கா தொடர்பில் ஆரம்பத்தில் கதைத்தனர். ஆனால் இப்போது உள்ளூராட்சி சபையில் ஆட்சியமைப்பது யார் என்ற பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. முன்னர் கூறியவற்றை மூடி மறைத்துவிட்டு இப்போது உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைக்க யாருடன் இணைவது என்று தேடுகின்றனர். 

இதேவேளை  பொருளாதார சீர்குலைவு தொடர்பில் கதைக்கின்றீர்கள். நீங்கள் கடந்த கால வரலாற்றில் செய்த பொருளாதார சீர்குலைவுகள் என்ன என்று நினைத்து பாருங்கள். கடந்த காலங்களில் இந்த நாட்டில் பஸ்களுக்கு தீ மூட்டியதால், மின் பிரப்பாக்கிகளை நொறுக்கியதால் நாட்டின் பொருளாதாரத்துக்கு நட்டம் ஏற்படவில்லையா என கேட்கிறோம்.

நீங்கள் தற்காலிகமாக ஏற்பட்ட அலையில் ஆட்சிக்கு வந்தவர்கள். அதனால் தொடர்ந்தும்  ஆட்சியில் இருக்க முடியும் என நினைக்க வேண்டாம்.  நீங்கள் இந்த நாட்டின் நிரந்தர உரிமையாளர்கள் அல்ல. உங்களிடம் முறையான தரவுகள் இருந்தால் அவற்றை கொண்டு நாட்டை அபிவிருத்தி செய்யுங்கள். 

18ஆவது ஐபிஎல் தொடரில் மகுடம் சூடுவது யார்?

0

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி இன்று நடைபெறவுள்ளது. 

அஹமதாபாத் சர்வதேச விளையாட்டரங்கில் இன்று இரவு 7.30 இற்கு இந்தப் போட்டி ஆரம்பமாகவுள்ளது. 

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய அணிகள் விளையாடவுள்ளன. 

2009, 2011, 2016 ஆகிய ஆண்டுகளில் இரண்டாம் இடத்தைப் பெற்ற ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 4ஆவது தடவையாக இறுதிப் போட்டியில் பங்கேற்கிறது. 

அதேநேரம் பஞ்சாப் கிங்ஸ் அணி 2ஆவது தடவையாக இறுதிப் போட்டியில் விளையாடுவதற்குத் தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.