Tuesday, March 17, 2026
Sponsored advertisementspot_img
Home Blog Page 159

வெளியாகியது வர்த்தமானி அறிவித்தல்!

0

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் பெயர்களை வர்த்தமானியில் வௌியிடும் நடவடிக்கையை தேர்தல் ஆணைக்குழு ஆரம்பித்துள்ளது. 

அதற்கமைய, மன்னார், முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களில் இருந்து உள்ளூராட்சி சபைகளுக்கு தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களின் பெயர்கள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் தற்போது வௌியிடப்பட்டுள்ளது. 

பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர், கடந்த பெப்ரவரி 17 ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பின் ஊடாக, உள்ளூராட்சி நிறுவனங்களின் பதவிக்காலம் 2025 ஜூன் 2 ஆம் திகதி ஆரம்பிக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்திருந்தார். 

அதன்படி, உள்ளூராட்சி மன்றங்களுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றும் பரிந்துரைக்கப்பட்ட உறுப்பினர்களின் பெயர்கள், அவர்களின் பதவிக்காலம் ஆரம்பிப்பதற்கு முன்பு வர்த்தமானியில் வெளியிடப்பட வேண்டும். 

தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் பெயர்களை உடனடியாக தேர்தல் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்க உத்தரவிட்டு, கடந்த மே 27 ஆம் திகதி தேர்தல் ஆணைக்குழு வர்த்தமானி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. 

உறுப்பினர்களின் பெயர்கள் வர்த்தமானியில் வெளியிடப்பட்ட பிறகு, உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் போது 50% பெரும்பான்மை வாக்குகளைப் பெற்ற கட்சியால் பரிந்துரைக்கப்பட்ட உள்ளூராட்சி மன்றங்களுக்கான தவிசாளர் மற்றும் உப தவிசாளரின் பெயர்களையும் தேர்தல் ஆணைக்குழு வர்த்தமானியில் வௌியிடவுள்ளது.

நாட்டில் தலைகீழாக மாறியுள்ள காலநிலை!

0

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடனான மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. 

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை பெய்யக்கூடும். 

வடமத்திய மாகாணத்திலும் மன்னார் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகிறது. 

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணிக்கு 50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். 

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் அவ்வப்போது மணிக்கு 30-40 கிலோமீற்றர் வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

இதேவேளை சிலாபத்திலிருந்து புத்தளம் மற்றும் மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையிலும், காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலுமான கடற்பரப்புகளில் காற்றின் வேகம் மணிக்கு 40-50 கிலோமீற்றர் வரையில் வீசக்கூடும் எனவும், காற்றின் வேகம் மணிக்கு 60-70 கிலோமீற்றர் வரையில் அதிகரிக்கக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. 

சிலாபத்திலிருந்து கொழும்பு ஊடாக காலி வரையிலும், காங்கேசன்துறையிலிருந்து திருகோணமலை வழியாக மட்டக்களப்பு வரையிலும் உள்ள கடற்பரப்புகளில் காற்றின் வேகம் மணிக்கு 50-60 கிலோமீற்றர் வரையிலும் அதிகரிக்கக்கூடும். 

எனவே, மறுஅறிவித்தல் வரை, குறித்த கடற்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாமெனக் கடற்படை மற்றும் மீனவர்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.

காத்தான்குடி வர்த்தக நிலையத்தில் பாரிய தீ விபத்து!

0

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவு உட்பட்ட காத்தான்குடி நகரில் இன்று (31) பாரிய சுப்பன் மார்க்கட் வர்த்தக நிலையத்தில் தீ பரவல் ஏற்பட்டது.

காத்தான்குடி கடற்கரை வீதியிலுள்ள பல்பொருள் அங்காடி வர்த்தக நிலையம் ஒன்றினுள் ஏற்பட்ட பாரிய தீ பரவல் காரணமாக வர்த்தக நிலையம் முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளது. இதனால் பல இலட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

மட்டக்களப்பு மாநகர சபை தீயணைக்கும் படையினர் காத்தான்குடி நகரசபை தீயணைப்பு படையினர் குறித்த இடத்திற்கு வந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயற்சித்த போதும் வர்த்தக நிலையம் முற்றாக எறிந்து சாம்பலாகியுள்ளது . அங்கிருந்து பொருட்கள் பொலிஸார் மற்றும் ஓரளவு காப்பாற்றப்பட்டுள்ளன.

இது இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கொரோனா பாதிப்பால் 7 பேர் உயிரிழப்பு!

0

இந்தியாவில் தற்போது கொரோனா பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2,710 ஆக உயர்ந்துள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 7 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் சமீபத்திய தரவுகளின்படி, இந்தியாவில் கோவிட்-19 பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2,710 ஆக உயர்ந்துள்ளது. இதில் பெரும்பாலான தொற்றுகள் கேரளாவில் உள்ளன. கடந்த இரு ஆண்டுகளாக பாதிப்புகள் குறைவாக இருந்த நிலையில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது.

கேரளாவில் அதிகம்: தற்போதைய நிலவரப்படி, கேரளாவில் 1,147 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதைத் தொடர்ந்து மகாராஷ்டிராவில் 424 பேர், டெல்லியில் 294 பேர் மற்றும் குஜராத்தில் 223 பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டில் தலா 148 பேரும், மேற்கு வங்கத்தில் 116 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஏழு பேர் உயிரிழப்பு: கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் ஏழு பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதனால் இந்த ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் பலி எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், மகாராஷ்டிராவில் இரண்டு இறப்புகள் பதிவாகியுள்ளன. டெல்லி, குஜராத், கர்நாடகா, பஞ்சாப் மற்றும் தமிழ்நாட்டில் தலா ஒருவர் உயிரிழந்துள்ளனர்.

இரண்டு புதிய ஓமிக்ரான் துணை வகைகளான எல்எப்.7 மற்றும் என்பி.1.8 ஆகியவை கொரோனா பாதிப்பு திடீரென அதிகரிக்க காரணமாகியுள்ளது. இருப்பினும் ஜேஎன்.1 நாட்டில் ஆதிக்கம் செலுத்தும் பாதிப்பாக இப்போது உள்ளது.

50,000 மாலுமிகளை உருவாக்கும் அரச திட்டம்!

0

கடல்சார் துறையை முன்னேற்றுவதற்காக 50,000 மாலுமிகளை உருவாக்கும் திட்டம்

50,000 மாலுமிகளை உருவாக்கும் அரச கொள்கையை பலப்படுத்தும் வகையில் விசேட செயற்குழு ஒன்றின் கலந்துரையாடல் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து சேவை பிரதி அமைச்சர் பணித ருவண் கொடிதுவக்கு தலைமையில் அண்மையில் (27) நடைபெற்றது.

தற்போது கடல்சார் துறையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பாகவும் அவற்றுக்கு முகம் கொடுப்பதற்காக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் இதன் போது கலந்துரையாடப்பட்டது.

கடல்சார் துறை ஊடாக நாட்டின் அபிவிருத்திக்கு வழங்கப்பட்டுள்ள மற்றும் வழங்கக்கூடிய பங்களிப்புகள் தொடர்பாக மக்கள் மத்தியில் நம்பிக்கை ஏற்படுத்துவதற்காக கவனம் செலுத்திய பிரதி அமைச்சர், 50,000 மாலுமிகளை உருவாக்கும் அரச கொள்கையை பலப்படுத்துவதற்காக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விரிவாக கருத்துக்கள் பரிமாறப்பட்டன.

கடல்சார் துறையை முன்னேற்றுவது தற்போதைய அரசாங்கத்தின் பிரதான குறிக்கோளாக இருப்பதுடன் அதனை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக அரசாங்கத்தின் தலையீடுகளை குறைவின்றி வழங்குவதாகவும் பிரதி அமைச்சர் தெளிவுபடுத்தினார்.

இதன் போது இக்குழு மற்றும் அதனுடன் தொடர்பான உப குழுக்கள் சில ஸ்தாபிக்கப்பட்டதுடன் அவற்றுக்கான அங்கத்தவர்களின் பெயர்களும் பிரயோகிக்கப்பட்டன.

சீரற்ற காலநிலையால் 9 மாவட்டங்கள் பாதிப்பு!

0

தென்மேற்கு பருவ பெயர்ச்சியால் நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் 9 மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். புத்தளம், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, அம்பாந்தோட்டை, காலி, களுத்துறை, கொழும்பு, இரத்தினபுரி மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களில் 485 குடும்பங்களைச் சேர்ந்த 1,757 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்தோடு 3 வீடுகள் முழுமையாகவும், 365 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அதேவேளை கடந்த 27ஆம் திகதி புத்தளம் ஆராச்சிகட்டுவ பிரதேசத்தில் நீரில் மூழ்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வியாழக்கிழமை (29) இரவு தெமட்டகொடை பிரதேசத்தில் தொழிற்சாலையொன்றின் மதில் சுவர் இடிந்து விழுந்ததில் பெண்கள் இருவர் உள்ளிட்ட மூவர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காலநிலை

தென்மேற்கு பருவப் பெயர்ச்சி காரணமாக மேற்கு, சப்ரகமுவ மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், காலி, மாத்தறை, நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீட்டருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

எதிர்வரும் திங்கட்கிழமையின் (2) பின்னரே காலநிலையில் மாற்றம் ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மேற்கு, சப்ரகமுவ, மத்திய, தெற்கு, வடக்கு, வடமத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மணிக்கு 50 – 60 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். இதன் போது கடலோரப் பகுதிகளில் மணிக்கு 30 – 40 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்குச் செல்வதை தவிர்த்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை சிலாபம் தொடக்கம் புத்தளம் மற்றும் மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையும், காலியிலிருந்து அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்கரைக்கு அப்பாற்பட்ட கடற்பகுதிகளில் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 60 – 70 கிலோ மீற்றராகக் காணப்படும். எனவே குறித்த கடற்பகுதிகளில் மறு அறிவித்தல் வரை மீன்பிடி நடவடிக்கைகளுக்கு செல்ல வேண்டாம் என மீனவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

78 மாணவர்களை கொட்டித் தீர்த்த தேனீக்கள்!

ஒட்டுசுட்டானில் தேனீ கொட்டியதில் 78இற்கும் மேற்பட்ட மாணவர்கள் பாதிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் மகாவித்தியாலயத்தில் இன்று 30.05.2025 தேனீக்கொட்டிற்கு இலக்காகி 78இற்கும் மேற்பட்ட மாணவர்களும், ஆசிரியர்கள் சிலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தேனீக் கொட்டிற்கு இலக்கான மாணவர்களின் நிலமைகளைப் பார்வையிட்டார்.

அத்தோடு பாடசாலை வளாகத்திலுள்ள தேனீக்கூடுகளை அகற்றாமல் அசமந்தமாகச் செயற்பட்டமைக்கு வனஜீவராசிகள் திணைக்களத்தினரை நேரடியாகச் சென்று நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மிகக் கடுமையாக எச்சரித்ததுடன், பாடசாலை வளாகத்திலுள்ள தேனீக்கூடுகளை உடனடியாக அகற்றுமாறும் உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பில் மேலும் தெரியவருகையில்,

முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் மகாவித்தியாலய, பாடசாலைக் கட்டடத்தொகுதியிலிருந்த பப்பரக்கொப்பான் எனும் தேனீக்கூடு, தற்போது வீசிவரும் கடுமையான காற்றினால் உதிர்ந்து வீழ்ந்தமையினால், பாடசாலை மாணவர்கள் மற்றும், ஆசிரியர்களைத் தாக்கியுள்ளது.

இதனால் பாடசாலையில் கற்றல் செயற்பாட்டில் ஈடுபட்டிருந்த 78இற்கும் மேற்பட்ட மாணவர்களும், ஆசிரியர்கள் சிலரும் பாதிக்கப்பட்டு ஒட்டுசுட்டான் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

அதிலே 45 வரையான மாணவர்களும், சில ஆசிரியர்களும் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

அதிலும் குறிப்பாக இருமாணவர்களும், ஒரு ஆசிரியருமாக மூவர் மிகமோசமாக தேனிக் கொட்டிற்கு உள்ளான நிலையில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு தீவிர சிகிச்சைப்பிரிவில் நியமிக்கப்பட்டுள்ளவர்களின் நிலை தேறியுள்ளதாகவும், எதுவித உயிர் பாதிப்புக்களும் இல்லை எனவும் வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந் நிலையில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் இதுதொடர்பில் அறிந்தவுடன் உடனடியாக ஒட்டுசுட்டான் வைத்தியசாலை மற்றும், முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு விரைந்து அங்கு சிகிச்சைபெற்றுவரும் மாணவர்கள் ஆசிரியர்களைப் பார்வையிட்டதுடன், நிலமைகள்தொடர்பிலும் கேட்டறிந்தார். அத்தோடு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவரும் மாணவர்கள் ஆசிரியர்களையும் பார்வையிட்டார்.

இந்நிலையில் பாடசாலைச் மூகத்தினரிடமிருந்து கடிதத்தின் பிரதிகளைப் பெற்றுக்கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர், உடனடியாக வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு சென்று, பாடசாலை மாணவர்களின் உயிருடன் விளையாட வேண்டாமென வனஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தரை மிகக் கடுமையாக எச்சரித்தார்.

அத்தோடு பாடசாலைச் சமூகத்தால் வழங்கப்பட்ட கோரிக்கைக் கடிதத்திற்கு நடவடிக்கை எடுக்காமை குறித்தும் கேள்வி எழுப்பியுமிருந்தார்.
அதேவேளை உடனடியாக பாடசாலைக் கட்டடங்களிலுள்ள தேனீக்கூடுகளை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் உத்தரவிட்டுள்ளார்.

அந்தவகையில் 30.05.2025 இன்று இரவு ஒட்டுசுட்டான் மகாவித்தியாலய வளாகத்திலுள்ள தேனீக்கூடுகள் அகற்றப்படுமென வனஜீவராசிகள் திணைக்களத்தால் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் அவர்களிடம் தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இன்று நள்ளிரவுடன் கால அவகாசம் நிறைவு!

0

இம்முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களின் பெயர்களை தேர்தல் ஆணைக்குழுவிற்கு சமர்ப்பிப்பதற்கு வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் இன்று (30) நள்ளிரவுடன் நிறைவடைவதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 

பெயர்கள் கிடைத்தவுடன் மறுநாள் (31) அந்த பெயர்களை உள்ளடக்கிய வர்த்தமானி அறிவிப்பை வெளியிட எதிர்பார்ப்பதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க கூறினார். 

பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர், கடந்த பெப்ரவரி 17 ஆம் திகதி வெளியிட்ட வர்த்தமானி அறிவிப்பின் மூலம், உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக் காலம் 2025 ஜூன் 2 ஆம் திகதி தொடங்க வேண்டும் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

அதற்கமைய, உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக் காலம் தொடங்குவதற்கு முன்னர், தெரிவு செய்யப்பட்ட மற்றும் பரிந்துரைக்கப்பட்ட உறுப்பினர்களின் பெயர்கள் வர்த்தமானி மூலம் வெளியிடப்பட வேண்டும். 

தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களின் பெயர்களை உடனடியாக சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டு, தேர்தல் ஆணைக்குழு மே 27 ஆம் திகதி வர்த்தமானி அறிவிப்பு ஒன்றையும் வெளியிட்டிருந்தது. 

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடைபெற்று 21 நாட்கள் கடந்த பின்னரும், தேர்தலில் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களின் பெயர்களை அரசியல் கட்சிகளும் சுயேட்சைக் குழுக்களும் ஆணைக்குழுவிற்கு சமர்ப்பிக்கத் தவறியதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

உறுப்பினர்களின் பெயர்கள் வர்த்தமானியில் வெளியிடப்பட்ட பின்னர், உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் 50%க்கு மேல் வாக்குகளைப் பெற்ற கட்சியால் பரிந்துரைக்கப்பட்ட அந்த உள்ளூராட்சி மன்றத்தின் தலைவர் மற்றும் துணைத் தலைவரின் பெயர்களையும் வர்த்தமானியில் வெளியிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்தார். 

அதன்படி, இன்று நள்ளிரவிற்கு முன்னர் அனைத்து உறுப்பினர்களின் பெயர்களையும் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்கள், அந்தந்த உள்ளூராட்சி மன்றங்களின் மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரியிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

பொது மக்களுக்கு கடும் எச்சரிக்கை!

0

பலத்த மழைவீழ்ச்சி மற்றும் காற்று தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் ஆம்பர் நிற எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வௌியிட்டுள்ளது. 

நாளை (31) முற்பகல் 08.00 மணி வரை செல்லுபடியாகும் வகையில் இந்த அறிவிப்பு வௌியிடப்பட்டுள்ளது. 

இயங்குநிலை தென்மேற்குப் பருவப் பெயர்ச்சி காரணமாக நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் தற்போது நிலவும் மழை நிலைமை மேலும் தொடரும் எதிர்பார்க்கப்படுவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. 

இதேவேளை, அதிகரித்த தென்மேற்குப் பருவப் பெயர்ச்சி காற்று நிலைமை காரணமாக மேல், சப்ரகமுவ, மத்திய, தென், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-60 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக் கூடும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதன் காரணமாக பொது மக்கள் மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறு அந்த திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

பிரபல திரைப்பட நடிகர் காலமானார்!

பிரபல திரைப்பட நடிகர் ராஜேஷ், உடல் நலக்குறைவு காரணமாக இன்று (29) காலை காலமானதாகத் தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன. 

“அவள் ஒரு தொடர் கதை” படத்தின் மூலம் தமிழ் திரையுலகில், ராஜேஷ் நடிகராக அறிமுகமானார்.

தமிழில் இதுவரை 150க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் நடித்திருக்கிறார். 

வெள்ளித்திரை மட்டுமின்றி சின்னத்திரையிலும் பல முக்கிய கதாபாத்திரங்களை ஏற்று நடித்துள்ளார். 

நடிகர் ராஜேஷின் மறைவுக்குப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.