Wednesday, September 10, 2025
Sponsored advertisementspot_img
Home Blog Page 167

வீட்டிலிருந்துகொண்டே பாஸ்போர்ட் பெறலாம்

0

அடுத்த மாதம் (ஜுன்-01) முதல், பொதுமக்கள் தமக்கான கடவுச் சீட்டை (Passport) பெற்றுக்கொள்ள, குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்துக்கு வர வேண்டியதில்லை என்று குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் தெரிவித்துள்ளார்.

அடுத்த மாதம் முதல் கடவுச்சீட்டைப் பெற்றுக் கொள்வதற்கான விண்ணப்பத்தை, ஒன்லைன் ஊடாக அனுப்பி வைக்க முடியும்.

அத்துடன் அதற்கான கட்டணத்தை வங்கிக் கணக்கில் வைப்பிலிடுவதுடன், உங்கள் பிரதேசத்திலுள்ள பிரதேச செயலக காரியாலயங்களில், கைவிரல் அடையாளங்களையும் பதிவு செய்யலாம் என்றும் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள கட்டுப்பாட்டாளர் தெரிவித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து, 03 நாட்களின் பின், பதிவுத் தபால் (Registered Post) மூலம், விண்ணப்பதாரரின் வீட்டுக்கே, கடவுச்சீட்டு அனுப்பிவைக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை கிரிக்கெட் அணிக்கு பண்ணப்பரிசு

0

 

சர்வதேச கிரிக்கட் பேரவை இலங்கைக்கு 200,000 டொலர்களை ஒதுக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் 5வது இடத்தை பெற்றதற்காக இந்த ஒதுக்கீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியா – இந்தியா இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி ஜூன் 7ஆம் திகதி இலண்டன் ஓவல் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.

உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப்பை வெல்லும் அணிக்கு 1.6 மில்லியன் டொலர்கள் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

புத்தளம் ஆசிரியரை தாக்கிய மாணவர்களின் கதி?

0

புத்தளம் தில்லையடி பகுதியில் ஆசிரியர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், கைது செய்யப்பட்ட 21 மாணவர்களும் நிபந்தனையுடனான பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இன்று அவர்கள் புத்தளம் நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது, நீதிவான் எஸ்.ஏ.எம்.சீ சத்துரசிங்ஹவினால், அவர்களுக்கு பிணை வழங்கப்பட்டதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, குறித்த 21 மாணவர்களும் தலா 5 இலட்சம் ரூபா பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

சாதாரண தரப் பரீட்சை முடிவடைந்த பின்னர் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை முதல், ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் அவர்கள் புத்தளம் காவல்துறை நிலையத்தில் முன்னிலையாக வேண்டும் என்றும் நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன், எந்தவொரு காரணத்தின் அடிப்படையிலும், முறைப்பாட்டாளர் தரப்பை, அச்சுறுத்தலுக்கு உள்ளாக்குவது தொடர்பில் அறியக்கிடைத்தால், பிணையை இரத்துச் செய்து, வழக்கு முடிவடையும் வரையில், அவர்களை விளக்கமறியலில் வைப்பதாகவும் நீதிவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

குறித்த வழக்கு, அடுத்த மாதம் 22ஆம் திகதி மீள விசாரணைக்கு அழைக்கப்படவுள்ளது.

https://youtu.be/QATMX1HY-24

தில்லையடி ஆசிரியர் தாக்குதல்-மேலும் பலர் கைது

0

புத்தளத்தில் தில்லையடி பாடசாலை ஆசிரியர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் 17 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த 17 மாணவர்களும் இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பில், முன்னதாக 5 மாணவர்கள் கைது செய்யப்பட்டு நாளை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் எதிர்வரும் 29ம் திகதி இடம்பெறவுள்ள கல்வி பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சைக்கு தோற்றவுள்ளவர்கள் என காவல்துறை குறிப்பிட்டுள்ளது.

தாக்குதலுக்கு இலக்கான ஆசிரியர் மாணவர்களது ஒழுக்கம் தொடர்பில் அறிவுறுத்தியுள்ளார்.

இந்தநிலையில், அவரது இல்லத்திற்கு கடந்த செவ்வாய்க்கிழமை சென்ற சில மாணவர்கள், குறித்த ஆசிரியர் மீது தாக்குதலை நடத்தியுள்ளனர்.

பின்னர், காயமடைந்த ஆசிரியர் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இதனையடுத்து காவல்துறையினர் முன்னெடுத்த விசாரணைகளின் அடிப்படையில், குறித்த சம்பவம் தொடர்பில், இதுவரையில் 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதிகர்க்கவுள்ள எரிபொருள் ஒதுக்கீடு

0

தேசிய எரிபொருள் அனுமதிச் சீட்டில் (QR) தற்போது அனுமதிக்கப்பட்டுள்ள எரிபொருள் ஒதுக்கீட்டினை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தனது உத்தியோகப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்படி, எதிர்வரும் மாதம் எரிபொருள் விலை திருத்தம் மேற்கொள்ளப்படுவதுடன், எரிபொருள் ஒதுக்கீடும் அதிகரிக்கப்படும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

நேற்று (மே 25) இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் (CPC) சந்தைப்படுத்தல், நிதி மற்றும் வர்த்தகப் பிரிவுகளுடன் நடைபெற்ற கூட்டத்தின் போது இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

வாகன இறக்குமதிக்கு பச்சை கொடி

0

மிக விரைவில் மீண்டும் ஜப்பானிய வாகனங்களை இலங்கைக்கு இறக்குமதி செய்ய ஆரம்பிக்கவுள்ளதாக ஜப்பானிய வாகன நிறுவன பிரதிநிதிகள் இலங்கை வாகன இறக்குமதியாளர்களுக்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை அரசாங்கத்துடனான கலந்துரையாடலின் போது இது தொடர்பில் சாதகமான உடன்பாடுகள் ஏற்கனவே எட்டப்பட்டுள்ளதாக அவர்கள் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தங்களின் பிரகாரம் இந்த வாய்ப்பு கிடைக்கும் என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

எவ்வாறாயினும், வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு மீண்டுமொரு சந்தர்ப்பம் வழங்குமாறு இலங்கையின் வாகன இறக்குமதியாளர்கள் பல தடவைகள் இலங்கை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும் உரிய பதில் கிடைக்கவில்லை.

இதேவேளை கொழும்பில் உள்ள ஜப்பானிய தூதுவரும் கொழும்பில் அண்மையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் சுதந்திர வர்த்தகம் தொடர்பில் கருத்து வெளியிட்டிருந்தார்.

ஐஸ் போதைப் பொருட்களுடன் நாகவில்லில் மூவர் கைது

ஐஸ் மற்றும் கஞ்சா போதை பொருட்களுடன் நேற்று இரவு நாகவில்லு பகுதியில் மூன்று இளைஞர்கள் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டனர்.

நாகவில்லு போதை ஒழிப்புக்குழுவின் நேற்றை விசேட சுற்றிவளைப்பில் நாகவில்லு பகுதியை சேர்ந்த மூன்று இளைஞர்கள் ஐஸ் மற்றும் கஞ்சா போதை பொருட்களுடன் சிக்கினர்.

ஐஸ் மற்றும் கஞ்சா போதை பொருட்களை பயன்படுத்துவதற்காகவும், அவற்றை சில்லறை விற்பனைக்கான  தயார்படுத்தலில் ஈடுபட்டுக்கொண்டிருந்த நிலையிலும் நாகவில்லு போதை ஒழிப்புக்குழுவின் விசேட சுற்றிவளைப்பில் இம்மூவரும் பிடிபட்டனர்.

குறித்த சுற்றிவளைப்பின்போது ஐஸ் போதை பொருட்களின் அளவை நிறுக்கும் இலத்திரனியல் தராசும் கைப்பற்றப்பட்டது.

கைப்பற்றப்பட்ட ஐஸ் போதை பொருட்கள் எங்கிருந்து பெறப்பட்டது என்றும், யாரினால் விற்பனை செயப்பட்டது என்ற மேலதிக விபரங்களும் நாகவில்லு போதை ஒழிப்புக்குழுவினால் பெறப்பட்டதுடன், ஐஸ் மற்றும் கஞ்சா போதை பொருட்களுடன் பிடிப்பட்ட மூவரும் புத்தளம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

மேலதிக விசாரணைகளை புத்தளம் போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை நாகவில்லு போதை ஒழிப்புக்குழுவின் நேற்றைய மற்றுமொரு விசேட சுற்றிவளைப்பில் நாகவில்லு பகுதியில் லேகியம் (குளி) வாங்குவதற்காக கல்பிட்டி பகுதியில் இருந்து வந்திருந்த இருவர் பிடிபட்டனர்.

இவர்கள் பலமுறை நாகவில்லு பகுதியில் லேகியம் (குளி) வாங்குவதற்காக வந்தவர்கள் என்பது விசாரணையின் பின்னர் தெரியவந்துள்ளது.

மேலும் கஞ்சா போதைப்பொருளுடன் நேற்றைய தினம் நாகவில்லு பகுதியில் மற்றுமொரு நபரும் புத்தளம் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

நேற்றைய தினம் போதைப்பொருட்களுடன் கைதுசெய்யப்பட்ட இந் நால்வரும் இன்று புத்தளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆன்லைன் வியாபாரிகளே மிக அவதானம்

0

இணையத்தளம் ஊடாக பொருட்களை விற்பனை செய்வதை ஒழுங்குபடுத்துவதற்கான வர்த்தமானி அறிவித்தலை, நுகர்வோர் விவகார அதிகார சபை வெளியிட்டுள்ளது.

இதற்கமைய, இணைய சந்தை தளத்தை இயக்குபவர்கள், பொருட்களை விளம்பரப்படுத்தும் போது எந்தவொரு பிரதிநிதித்துவத்தையோ அல்லது தகவல் புறக்கணிப்பையோ செய்யக் கூடாது.

அத்துடன், ஏமாற்றும், தவறாக வழிநடத்தும் அல்லது போட்டிக்கு எதிரான எந்தவொரு செயற்பாடுகளிலும் ஈடுபடக்கூடாது என அந்த வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பொருளின் உண்மை விலையானது குறித்த பொருளுக்காக, இணைய சந்தை தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விலையாகும் என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

அத்துடன், முன்பதிவை உறுதிப்படுத்தல், போக்குவரத்து மற்றும் விநியோகத்தை ஒருங்கிணைத்தல் மற்றும் முன்பதிவை இரத்துச் செய்யும் உரிமை என்பன குறித்த வர்த்தமானி மூலம் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன.

இலங்கை தொடர்பில் கனேடிய பிரதமர் அதிருப்தி

0
யுத்த வெற்றியின் 14 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நேற்று வெளியிட்ட அறிக்கை தொடர்பில் இலங்கை அரசாங்கம் மீண்டும் கனடாவுடனான இராஜதந்திரப் போரில் இறங்கியுள்ளது.

நேற்றைய தினம் கனடா பிரதமர் “14 வருடங்களுக்கு முன்னர் இலங்கையில் தமிழர் இனப்படுகொலை நினைவு தினம் மற்றும் யுத்தம் நிறைவடைந்த தினத்தை நினைவுகூரும் வகையில்” அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தார்.

இதனையடுத்து, உள்நாட்டில் நல்லிணக்கச் செயற்பாட்டிற்கு உதவாது எனக் கருதும் கனேடிய பிரதமரின் அறிக்கையை இலங்கை கண்டிப்பதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

கனேடிய பிரதமர் தனது அறிக்கையில், “இலங்கையில் 14 ஆண்டுகளுக்கு முன்பு முடிவுக்கு வந்த ஆயுதப் போரின் போது ஏற்பட்ட துயரமான உயிர் இழப்புகளை இன்று நாம் நினைவுகூருகிறோம்.

முள்ளிவாய்க்கால் உயிரிழப்புகள் உட்பட, மேலும் பலர் காணாமல் போயுள்ளனர்.

காயமடைந்தவர்கள், இடம்பெயர்ந்தவர்கள், பாதிக்கப்பட்டவர்கள், உயிர் பிழைத்தவர்கள் மற்றும் அவர்களின் அன்புக்குரியவர்கள், இந்த அர்த்தமற்ற வன்முறையால் ஏற்படும் வலியுடன் தொடர்ந்து வாழ்கிறார்கள்,” என்று குறிப்பிட்டிருந்தார்.

மோதலில் பாதிக்கப்பட்ட தமிழ்-கனேடியர்களின் கதைகள் – நான் பல ஆண்டுகளாக நாடு முழுவதும் உள்ள சமூகங்களில் சந்தித்த பலர் உட்பட – மனித உரிமைகள், அமைதி மற்றும் ஜனநாயகம் ஆகியவற்றை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ள முடியாது என்பதை ஒரு நிலையான நினைவூட்டல்.

மோதலில் பாதிக்கப்பட்ட தமிழ்-கனடியர்களின் கதைகள் உட்பட, கடந்த பல ஆண்டுகளாக நான் நாடு முழுவதும் உள்ள சமூகங்களை சந்தித்து அவர்களின் பிரச்சினைகள் குறித்து கவனத்தில் எடுத்துக் கொண்டேன்.

இதன்காரணமாகவே, கடந்த ஆண்டு மே 18 ஆம் திகதியை தமிழ் இனப்படுகொலை நினைவு தினமாக அனுசரிக்கும் பிரேரணையை நாடாளுமன்றம் ஏகமனதாக நிறைவேற்றியது.

மோதலில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிர் பிழைத்தவர்களின் உரிமைகளுக்காகவும், அத்துடன் இலங்கையில் தொடர்ந்து இன்னல்களை எதிர்நோக்கும் அனைவருக்காகவும் கனடா வாதிடுவதை நிறுத்தாது” என்று குறிப்பிட்டுள்ளார்.

பிள்ளைகளை பாடசாலை அனுப்ப வேண்டாம்!

0
நாட்டில் சிறுவர்கள் மத்தியில் இன்புளுவென்சா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருவதாக கொழும்பு சீமாட்டி சிறுவர் மருத்துவமனையின் (லேடி ரிட்ஜ்வே மருத்துவமனை) வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

இதனால், அதிக காய்ச்சல், இருமல், தலைவலி மற்றும் சுவாசப் பிரச்சினைகளால் சிறுவர்கள் பாதிக்கப்பட்டலாம் என அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த வைரஸ் தொற்று பரவல் தற்போது பாடசாலைகள், தனியார் வகுப்புகளில் அதிகம் பரவி வருகின்றது.

எனவே, தமது பிள்ளைகளுக்கு காய்ச்சல், இருமல், தலைவலி அல்லது சுவாசப் பிரச்சினைகள் இருப்பின், அவர்களை பாடசாலைகளுக்கு அனுப்பாமல் இருப்பது சிறந்தது என வைத்தியர் தீபால் பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், தமது பிள்ளைகள் நோய் வாய்ப்பட்டால் பெற்றோர் உடனடியாக அவர்களை வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதேபோல், தற்போது ஏற்படக்கூடிய காய்ச்சல் ஏனையவர்களிடமும் விரைவில் பரவக்கூடிய தன்மையைக் கொண்டதனால், வீட்டில் உள்ள ஏனையவர்கள் முகக்கவசம் அணிவது சிறந்ததாக இருக்கும் எனவும் வைத்திய நிபுணர் தீபால் பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

இன்புளுவென்சா வைரஸ் தொற்று கிட்டத்தட்ட கொவிட் தொற்றை போன்றது, அது மக்களிடையே விரைவாக பரவக்கூடியது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.