Home Blog Page 172

இலங்கை பிரதமர் இந்தியாவுக்கு வழங்கிய உறுதிமொழி!

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, இந்தியாவிற்கான தனது உத்தியோகபூர்வ விஜயத்தில், இந்தியப் பிரதமர் ஶ்ரீ நரேந்திர மோடி அவ்ர்களை புதுடில்லியில் சந்தித்தார்.

இந்த சந்திப்பின் போது இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துதல், கல்வி சீர்திருத்தங்கள், டிஜிட்டல் முயற்சிகள் மற்றும் மீன்பிடி நடவடிக்கைகள் தொடர்பில் இரு நாடுகளும் எதிர்நோக்கும் சவால்கள் தொடர்பான விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது.

இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் இலங்கை பூமியைப் பயன்படுத்த எவருக்கும் இடமளிக்கப்பட மாட்டாது என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். 

தனது இந்திய உத்தியோகபூர்வ விஜயத்தின் போது, தாம் கல்வி கற்ற டெல்லி இந்து கல்லூாிக்கு விஜயம் செய்த வேளையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். 

இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, நேற்று (16) பல இராஜதந்திர சந்திப்புகளிலும் கலந்து கொண்டார். 

இந்த விஜயத்தின் ஒரு சிறப்பு நிகழ்வாக, பிரதமர் அவர் கல்வி கற்ற டெல்லியில் உள்ள இந்து கல்லூரிக்கும் விஜயம் செய்தார். 

இங்கு கருத்து தெரிவித்த கலாநிதி ஹரிணி அமரசூரிய, 

“இந்து கல்லூரி இப்போது முதலிடத்திற்கு வந்துள்ளது. அது குறித்து பெருமைப்படுகிறேன். அற்புதம். நான் முதன்முதலில் இங்கு வந்தபோது, PEPSI இந்தியாவிற்கு அப்போதுதான் வந்திருந்தது. 

அந்தக் காலத்தில் அது ஒரு பெரிய விடயமாக இருந்தது. அந்தக் காலத்தில் நாங்கள் பேசிய விதம் நினைவிருக்கிறது. வகுப்பறைகளில் மட்டுமல்ல, குறிப்பாக வகுப்பறைக்கு வெளியே புல்வெளியில் அமர்ந்து, தேநீர் அருந்திக்கொண்டே பேசியிருந்தோம். 

இந்தியாவும் இலங்கையும் பாரம்பரியம், விழுமியங்கள் மற்றும் பரஸ்பர மரியாதை என்ற பொதுவான பாரம்பரியங்களால் பிணைக்கப்பட்டுள்ளன. 

சில சமயங்களில் நாம் ஒருவருக்கொருவர் உடன்படாமல் இருக்கலாம். ஒருவருக்கொருவர் எல்லாவற்றையும் விரும்பாமலும் இருக்கலாம். அதுதான் ஒரு குடும்பத்தின் இயல்பு. 

உண்மையான உறவுகள் அப்படித்தான் இருக்கும். நீங்கள் எப்போதும் ஒன்றாக வேலை செய்யவும், வாழவும் கற்றுக்கொள்கிறீர்கள். நாள் முடிவில் ஒருவருக்கொருவர் மரியாதை செலுத்துகிறீர்கள். 

இந்தியா எப்போதும் இலங்கையின் பயண வழியில் மாறாத பங்காளியாக இருந்து வருகிறது. எமது பொருளாதார மீட்சிக்கு ஆதரவளித்து, நெருக்கடியான காலங்களில் அத்தியாவசிய உதவிகளை வழங்கி, நாங்கள் ஸ்திரத்தன்மையையும் வளர்ச்சியையும் அடையும்போதும் எங்களுடன் நின்றது. 

2022 ஆம் ஆண்டில் இலங்கை மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டபோது, இந்தியா எமக்கு கடன் வசதிகள், எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை வழங்கியது. இவற்றை நாங்கள் ஒருபோதும் மறக்க மாட்டோம். 

அவை எங்கள் மக்களின் இதயங்களில் எழுதப்பட்டுள்ளன. இது வெறும் இராஜதந்திர ஆதரவு அல்ல. கடினமான நேரத்தில் எங்களுக்கு உதவிய ஒரு உண்மையான நண்பனின் உதவி. 

இலங்கை தொடர்ச்சியாக ஒரே நிலைப்பாட்டில் உள்ளது. எமது பூமியை இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகப் பயன்படுத்த நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். 

தற்போதும் நாங்கள் அதே கொள்கையைத்தான் கடைப்பிடிக்கிறோம். இங்குள்ள அனைத்து மாணவர்களுக்கும் நான் கூறுவது, உங்களிடம் மகத்தான ஆற்றல் உள்ளது. நீங்கள் இந்து கல்லூரியில் பெறும் கல்வி ஒரு பரிசு. 

அதே சமயம் ஒரு பொறுப்பும் கூட. அதை புத்திசாலித்தனமாகப் பயன்படுத்துங்கள். பாலங்களைக் கட்ட அதைப் பயன்படுத்துங்கள், சுவர்களை எழுப்ப அல்ல. பாக் ஜலசந்தியின் ஊடாக தெற்கு திசையைப் பாருங்கள். 

இலங்கையை ஒரு அண்டை நாடாக மட்டும் பார்க்காமல், ஒரு பங்காளராகவும் பாருங்கள். நாங்கள் எண்ணங்கள் நிறைந்த ஒரு நாடு, அதேபோல் தியாக மனப்பான்மை மற்றும் தையிரியமான மக்கள் உள்ள நாடு.” என்றார். 

இதேவேளை, பிரதமர் இன்று (17) இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். 

அத்துடன், NDTV தொலைக்காட்சியின் ஏற்பாட்டில் இன்று பிற்பகல் நடைபெறவுள்ள 2025 NDTV உலக உச்சி மாநாட்டில் உரையாற்றவும் பிரதமர் தயாராக உள்ளார். 

இந்த மாநாட்டில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் ரிஷி சுனக், அவுஸ்திரேலிய முன்னாள் பிரதமர் டோனி அபோட் உள்ளிட்ட பல விருந்தினர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.

வடக்கில் இடம்பெற்ற முதியோர் தின நிகழ்வுகள்!

வடக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் ஏற்பாட்டில், சர்வதேச முதியோர் தினம் மற்றும் முதியோருக்கான ஆரோக்கிய வாழ்வுக்கான வழிகாட்டல் முகாம் இன்று (17.10.2025) வெள்ளிக்கிழமை சிறப்புற நடைபெற்றது.

குறித்த நிகழ்வு “ஆரோக்கியமான முதுமை” எனும் தொனிப்பொருளில் காலை 9.00 மணியளவில் கிளிநொச்சி கூட்டுறவுக் கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.

வடக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் தனுஜா லுக்ஷாந்தன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில், பிரதம விருந்தினராக கடற்றொழில் அமைச்சரும் யாழ் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான இராமலிங்கம் சந்திரசேகரன் அவர்கள் கலந்து கொண்டார்.

சிறப்பு விருந்தினர்களாக வடக்கு மாகாண மகளிர் விவகாரம், புனர்வாழ்வளித்தல், சமூக சேவைகள், கூட்டுறவு, உணவு வழங்கலும் விநியோகமும், தொழிற்துறையும் தொழில் முனைவோர் மேம்பாடும் மற்றும் வர்த்தகவாணிபமும் அமைச்சின் செயலாளர் முத்துலிங்கம் நந்தகோபாலன், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுப்பிரமணியம் முரளிதரன், கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர். டி. எம். ஏ. கே. டிசாநாயக்க ஆகியோர் கலந்து கொண்டனர்.

கௌரவ விருந்தினராக வடக்கு மாகாண முன்னாள் பிரதம செயலாளர் இலச்சுமணன் இளங்கோவன் அவர்கள் கலந்து கொண்டார்.

இந்நிகழ்வில் தொற்றா நோய்களுக்கான மருத்துவ பரிசோதனைகள், ஆரோக்கியமான உணவு, தொழில்நுட்ப கருவிகளின் பயன்பாடு, உதவி உபகரணங்கள் வழங்குதல் முதலான செயற்பாடுகள் நடைபெற்றன.

மேலும் முதியவர்களின் கலை நிகழ்வுகள் மற்றும் கௌரவிப்புக்கள் முதலான நிகழ்வுகளும் சிறப்புற நடைபெற்றன.

குறித்த நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் நளாயினி இன்பராஜ், கரைச்சி மற்றும் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகங்களின் உதவிப் பிரதேச செயலாளர்கள், கைதடி முதியோர் இல்ல அத்தியட்சகர், வடக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத் தின் தலைமைப் பீட உத்தியோகத்தர்கள், மாவட்ட உத்தியோகத்தர்கள், உத்தியோகத்தர்கள் மற்றும் முதியோர்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டிருந்தனர்.

56 பேருக்கு 5மில்லியன் பெறுமதியான வாழ்வாதார உதவி!

வடக்கு மாகாண மகளிர் விவகாரம், புனர்வாழ்வளித்தல், சமூக சேவைகள், கூட்டுறவு, உணவு வழங்கலும் விநியோகமும், தொழிற்துறையும் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் வர்த்தகவாணி அமைச்சின் மூலம் கிளிநொச்சி மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 56 பேருக்கு 5மில்லியன் ரூபா பெறுமதியான வாழ்வாதார உதவிகள் வழங்கி வைக்கப்பட்டன.

அமைச்சின் செயலாளர் முத்துலிங்கம் நந்தகோபாலன் தலைமையில் கிளிநொச்சி கூட்டுறவு திணைக்கள மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் கலந்து கொண்டு உதவிகளை வழங்கி வைத்தார்.

தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்;

அடுத்த வருடத்தில் மாகாண சபை தேர்தல் நடைபெறுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம். இன்று தமிழ் கட்சிகள் ஒன்று சேர்கிறார்கள், முதலமைச்சர் பொது வேட்பாளரை களம் இறக்க உள்ளதாக எல்லாம் செய்தி வருகின்றது. இன்னும் ஒன்றையும் சொல்கின்றனர்.

தமிழர்களுக்காக போராடும் கட்சி என்று கூறிக்கொண்டவர்கள் தமிழர்களால் துரோகிகள் பட்டம் சூட்டிய கட்சிகளுடன் ஒன்று சேர்ந்துள்ளனர். மாகாண சபைக்கு முதல் நகரசபைகளை ஒழுங்காக நடாத்தி காட்டுங்கள் என அமைச்சர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

புத்தளம் மாவட்ட ஊடகவியலாளர்கள் இருவருக்கு கலாதினி விருது!

ஜூட் சமந்த

தம்பபன்னி அக்வெஸ்ஸ 3 எனும் தலைப்பில் இடம்பெற்ற புத்தளம் மாவட்டம் 2025 இலக்கிய விழா நிகழ்வு இன்று 17ஆம் திகதி மஹாவெவ முத்ராதேவி கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கயான் ஜானக மற்றும் புத்தளம் மேலதிக மாவட்ட செயலாளர் புபுத்திகா எஸ்.பண்டார தலைமையில் இவ் இலக்கிய விழா நடைபெற்றது.

இந்த இலக்கிய விழாவில் புத்தளம் மாவட்டத்தைச் சேர்ந்த 10 கலைஞர்களுக்கு கலாதினி விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது.

இதில் புத்தளம் மாவட்டத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் இருவருக்கும் குறித்த விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது.

ஊடகவியலாளர்களான எஸ்.மகாதேவன் மற்றும் ஜயரத்ன விக்கிரமாராச்சி ஆகியோருக்கும் இவ்வாறு கலாதினி விருது வழங்கி கெளரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

12 லட்சம் லஞ்சம் கோரிய அரச அதிகாரி அதிரடியாக கைது!

அரசாங்க காணியின் ஒரு பகுதியை பயிர்ச்செய்கைக்கு வழங்குவதற்காக ஒருவரிடமிருந்து 1.2 மில்லியன் ரூபாயை இலஞ்சமாக கோரி பெற்றதற்காக விவசாய ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி உதவியாளர் ஒருவர் நேற்று (16) இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டார். 

மஹவ பகுதியைச் சேர்ந்த ஒருவர் அளித்த முறைப்பாட்டை தொடர்ந்து இந்த கைது இடம்பெற்றுள்ளது. 

சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டு பயிரிடப்பட்ட சுமார் 20 ஏக்கர் அரசாங்க காணி ஒன்றில், 12 ஏக்கர் அளவில் முறைப்பாட்டாளருக்கு பயிர்ச்செய்கைக்கு வழங்குவதற்காக அந்த இடத்திற்கு சந்தேகநபரால் வரி செலுத்தப்பட்டதாக பற்றுச்சீட்டு வழங்கப்பட்டது.

தேவையான பணிகளை மேற்கொள்வதற்கு ரூ.3.5 மில்லியன் தொகை கோரப்பட்டது. 

அதிலிருந்து ரூ. 1.0 மில்லியனையும் மீதமுள்ள 2.5 மில்லியனில் இருந்து ரூ. 1.2 மில்லியனை இலஞ்சமாக கோரி பெற்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டார். 

தியலும விவசாய சேவை மையத்தின் விவசாய ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி உதவியாளர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். 

நேற்று மதியம் 12.15 மணியளவில் தனமல்வில – வெல்லவாய பிரதான வீதியில் உள்ள எதிலிவெவ நகரில் உள்ள ஒரு உணவகத்தில் வைத்து இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டார். 

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் வெல்லவாய பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

நாட்டில் 4 லட்சத்தை கடந்த தங்கம் விலை!

இலங்கை வரலாற்றில் 24 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை இன்று (17) 4 லட்சத்தை கடந்துள்ளது. 

இதன்படி 24 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 4 லட்சத்து 10 ஆயிரமாக அதிகரித்துள்ளதாக செட்டியார் தெரு தங்க சந்தை தகவல்கள் தெரிவிக்கின்றன. 

நேற்றைய தினத்துடன் (16) ஒப்பிடும் போது இதன் விலை இன்று 15 ஆயிரம் ரூபாய் அதிகரித்துள்ளது. 

அதேநேரம் 22 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை இன்றைய தினம் (17) 13 ஆயிரத்து 800 ரூபாய் அதிகரித்து 3 லட்சத்து 79 ஆயிரத்து 200 ரூபாயாக காணப்படுகிறது. 

நேற்றைய தினம்  (16)  24 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 3 லட்சத்து 95 ஆயிரமாகவும், 22 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 3 லட்சத்து 65 ஆயிரத்து 400 ரூபாயாகவும் காணப்பட்டது.

இன்று காலை மாறவில பகுதியில் இடம்பெற்ற கோர விபத்து!

ஜூட் சமந்த

பாடசாலை குழந்தைகளை ஏற்றிச் சென்ற வேன் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், மற்றொருவர் காயமடைந்துள்ளதாகவும் வென்னப்புவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

வென்னப்புவ – கிரிமதியான வீதியில் உள்ள கோரககஸ் சந்தியில் இன்று 17 ஆம் தேதி காலை 7.00 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

இறந்தவர் முன்னாள் கிராம அதிகாரி ஜே.ஏ. புஷ்பகுமார ஏகநாயக்க (வயது 70) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

விபத்தில் இறந்தவர் தனது மகளை வென்னப்புவ நகரில் இறக்கிவிடுவதற்காக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாடசாலை குழந்தைகளை ஏற்றிச் சென்ற வேன், பக்கவாட்டு வீதியில் இருந்து கவனக்குறைவாக பிரதான வீதிக்குள் நுழைந்தபோது இந்த விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மோட்டார் சைக்கிளின் பின் இருக்கையில் இருந்த காயமடைந்த இறந்தவரின் மகள் சிகிச்சைக்காக மாரவில மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வேன் ஓட்டுநரை வென்னப்புவ பொலிஸார் கைது செய்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

மதுரங்குளி ரயில் விபத்தில் இராணுவ சிப்பாய் உயிரிழப்பு!

ஜூட் சமந்த

பூஸ்ஸா இராணுவ முகாமில் பணியாற்றும் சிப்பாய் ஒருவர் மதுரங்குளிய பகுதியில் ரயிலில் மோதி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த விபத்து நேற்று 16 ஆம் தேதி மாலை மதுரங்குளிய நகருக்கு அருகில் இடம்பெற்றுள்ளது.

இறந்தவர் வர்ணகுலசூரிய அமில பிரபாத் (35) வயது என அடையாளம் காணப்பட்டுள்ளார், இவர் இலங்கை இலகுரக காலாட்படையின் பூஸ்ஸா கூடுதல் படைப்பிரிவில் பணியாற்றி வந்தார்.

அவர் மதுரங்குளிய கீர்த்திசிங்ககம பகுதியைச் சேர்ந்தவர்.

விபத்து நடந்தபோது, ​​சிப்பாய் விடுமுறையில் வீடு திரும்பிக் கொண்டிருந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சடலம் புத்தளம் தள வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மதுரங்குளிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இன்று கொழும்பில் இடம்பெற்ற கடல்சார் மாநாடு 2025!

இலங்கை ஏற்றுமதி மேம்பாட்டு வாரியத்தால் பொது மற்றும் தனியார் துறைகளைச் சேர்ந்த முக்கிய பங்குதாரர்களுடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்ட இரண்டாவது கடல்சார் மாநாடு “VOYAGE SRI LANKA 2025”, அக்டோபர் 16, 2025 இன்று கொழும்பு கிங்ஸ்பரி ஹோட்டலில் கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு அமைச்சர் திரு. சுனில் ஹந்துன்நேதியின் பங்கேற்புடன் நடைபெற்றது.

“இலங்கையின் கடல்சார் பொருளாதாரத்தின் ஆற்றலை வெளிப்படுத்துதல்” என்ற கருப்பொருளின் கீழ், கடல்சார் பொருளாதாரத்திற்கு இலங்கையின் பங்களிப்பையும், உலகளாவிய கடல்சார் மையமாக அதன் ஆற்றலையும் எடுத்துக்காட்டுவதே இந்த மாநாட்டின் நோக்கமாகும்.

புத்தாக்கம், மனித மூலதன மேம்பாடு மற்றும் சர்வதேச ஒத்துழைப்பை ஊக்குவிப்பதன் மூலம் உலகளாவிய போட்டித்தன்மை வாய்ந்த கடல்சார் மற்றும் கடல்சார் சேவைகள் துறையை வளர்ப்பதற்கு ஏற்றுமதி மேம்பாட்டு வாரியம் உறுதிபூண்டுள்ளதாக இலங்கை ஏற்றுமதி மேம்பாட்டு வாரியத்தின் தலைவர் தெரிவித்தார்.

“VOYAGE SRI LANKA 2025” கடல்சார் மாநாட்டில் பங்கேற்ற கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு அமைச்சர் சுனில் ஹந்துன்நேதி, இலங்கையின் புவியியல் இருப்பிடம் கடல்சார் தொழிலுக்கு சாதகமாக உள்ளது என்று கூறினார். இதற்கான உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்க வேண்டும் என்று அமைச்சர் வலியுறுத்தினார். கடல்சார் தொழிலின் சர்வதேச வெற்றிக்கு தேவையான கொள்கைகளை வகுக்க அமைச்சகம் பாடுபடும் என்றும் அவர் மேலும் கூறினார். கடல்சார் தொழிலில் முதலீடு செய்ய சர்வதேச சமூகம் அழைக்கப்படுவதாகக் கூறிய அமைச்சர், இதற்கான அனைத்து வசதிகளையும் தொழில்துறை அமைச்சகம் வழங்கும் என்றும் கூறினார்.

துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அனுர கருணாதிலகா, கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு அமைச்சின் செயலாளர் திலகா ஜெயசுந்தர, மேற்கு மாகாண ஆளுநர் ஹனிஃப் யூசுப், இலங்கை முதலீட்டு வாரியத்தின் தலைவர் அர்ஜுன ஹேரத், இலங்கை ஏற்றுமதி மேம்பாட்டு வாரியத்தின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி மங்கள விஜேசிங்க, ஏற்றுமதி மேம்பாட்டு வாரியத்தின் அதிகாரிகள், பிற நிறுவனங்களின் தலைவர்கள், தொழில்துறை தலைவர்கள், கூட்டாளர்கள் மற்றும் ஏராளமான இலங்கை மற்றும் வெளிநாட்டு பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் பங்கேற்றனர்.

லங்கா மரைன் சர்வீசஸ், செலான் வங்கி பிஎல்சி, லங்கா ஐஓசி பிஎல்சி, ஹேலிஸ் அட்வாண்டிஸ் லிமிடெட், இலங்கை கடல்சார் தொழில்கள் வாரியம் மற்றும் இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகம் ஆகியவை மாநாட்டிற்கு அனுசரணை வழங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

விபத்துகள் குறித்த தேசிய மாநாடு நாளை கொழும்பில்!

விபத்துகள் குறித்த தேசிய மாநாடு – 2025 நாளை (17) நடைபெற உள்ளது.

கொழும்பு தேசிய மருத்துவமனையின் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் ஒரு லட்சம் பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுகிறார்கள்.

சாலை விபத்துகளால் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 2500 பேர் உயிரிழக்கின்றனர். அந்த எண்ணிக்கையை விட பத்து மடங்கு நிரந்தரமாக ஊனமுற்றவர்களாக மாறுகிறார்கள்.

தேசிய அனர்த்த மாநாடு – 2025 (National Trauma Conference – 2025) நாளை 17-19 வரை கொழும்பு “கோல்ஃப் ஃபேஸ்” ஹோட்டலில் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜெயதிஸ்ஸ தலைமையில் நடைபெற உள்ளது.

‘அனர்த்தத்தை சமாளித்தல்: மாற்றத்திற்காக ஒன்றிணைதல்‘ என்ற கருப்பொருளின் கீழ் இந்த மாநாட்டை நடத்த தேசிய அனர்த்த செயலகம் ஏற்பாடு செய்துள்ளது.

இலங்கை அவசர சிகிச்சை முறையின் தரத்தை மேம்படுத்துதல், தற்போதைய அறிவியல் அறிவை மேம்படுத்துதல் ஆகியவற்றை இந்த மாநாடு நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்த மாநாட்டின் மூலம், நாட்டின் அவசர சிகிச்சை சேவைகள் உலகின் சமீபத்திய நிபுணத்துவத்தை அணுக முடியும், மேலும் இந்த மாநாடு இலங்கையில் அவசர சிகிச்சை துறையில் அறிவை மேலும் வளர்க்க முடியும்.

நாட்டில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நோயாளிகளில் அதிக எண்ணிக்கையிலானோர் விபத்துகளால் அனுமதிக்கப்படுகின்றனர், இதனால் குடும்பம், சமூக மற்றும் பொருளாதார பிரச்சினைகளை ஏற்படுகின்றன. மேலும் அவர்களுக்கு சிகிச்சை வழங்க அரசாங்கம் நிறைய பணம் செலவிட வேண்டியுள்ளது.

சாலை விபத்துகளால் தினமும் சுமார் 06-08 பேர் உயிரிழக்கின்றனர், மேலும் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 2500 பேர் உயிரிழக்கின்றனர், மேலும் அந்த எண்ணிக்கை பத்து மடங்கு நிரந்தரமாக ஊனமுற்றவர்களாக மாறுகின்றனர்.

மேலும், ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட 100,000 பேர் கொழும்பு தேசிய மருத்துவமனையின் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுகிறார்கள்.

2020 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 20230 ஆம் ஆண்டுக்குள் நாட்டில் சாலை விபத்துகளின் எண்ணிக்கையை 50 சதவீதம் குறைக்க வேண்டும், இது ஒரு சவாலான இலக்காகும்.

மேற்கண்ட தரவுகளின் அடிப்படையில், இந்த மாநாடு நாட்டின் அவசர சிகிச்சை சேவைகளை வலுப்படுத்தவும், மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கையைக் குறை ப்பதற்கா ன விழிப்புணர்வை ஏற்படுத்த ஒரு வாய்ப்பை வழங்கும்.

இந்த மாநாடு சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சகம், தேசிய அனர்த்த செயலகம் மற்றும் உலக சுகாதார அமைப்பு ஆகியவற்றால் இணைந்து நடாத்துகின்றது.