Monday, March 16, 2026
Sponsored advertisementspot_img
Home Blog Page 175

வத்திக்கான் சென்றார் விஜித ஹேரத்!

0

இலங்கை அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தி, நித்திய இளைப்பாறிய பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் திருத்தந்தையின் இறுதிக் கிரியைகளில் கலந்துகொள்வதற்காக வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் இன்று (25) வத்திக்கானுக்கு பயணமாகியுள்ளார்.

இன்று காலை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து எதிஹாட் விமான சேவைக்கு சொந்தமான விமானம் மூலம் அமைச்சர் அபுதாபி விமான நிலையத்திற்கு சென்று, அங்கிருந்து மற்றொரு விமானம் மூலம் வத்திக்கானுக்கு பயணிக்க உள்ளதாக திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கிடையில், நேற்று மாலை இலங்கை பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தி, ஐக்கிய மக்கள் சக்தியை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களான காவிந்த ஜயவர்தன மற்றும் ஹெக்டர் அப்புஹாமி ஆகியோர் வத்திக்கானுக்கு பயணமாகியுள்ளனர்.

இலங்கையின் கத்தோலிக்க அரசியல் அதிகாரத்தை பிரதிநிதித்துவப்படுத்தி, இந்த இரு பாராளுமன்ற உறுப்பினர்களும் பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் திருத்தந்தையின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்துவதற்காக இணைந்து கொள்ளவுள்ளனர்.

இதற்கிடையில், திருத்தந்தையின் இறுதி ஆராதனை  நடைபெறும் நாளைய தினம் (26) தேசிய துக்க தினமாக பிரகடனப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

மூண்டது இந்திய பாகிஸ்தான் போர்!

0

இந்திய – பாகிஸ்தான் எல்லை பகுதியில் பாகிஸ்தான் இராணுவம் தாக்குதலை தொடங்கியுள்ளது. ஜம்மு காஷ்மீரின் பந்திபோராவில் பயங்கரவாதிகள், இந்திய பாதுகாப்பு படையினர் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்துள்ளது.

எல்லையில் துப்பாக்கிச்சூடு நடத்திய பாகிஸ்தான் இராணுவத்திற்கு இந்திய இராணுவம் பதிலடி கொடுத்து வருகிறது. எல்லை கட்டுப்பாட்டு கோட்டில் சில இடங்களில் சண்டை நடைபெற்று வருவதால் பதற்றம் நிலவுவதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

காஷ்மீரின் பஹல்காமில் கடந்த 22ஆம் திகதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் சுற்றுலா பயணிகள் உள்பட 26 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். 

இந்த தாக்குதல் சம்பவத்துக்கு தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கமான லஷ்கர்-இ-தொய்பாவின் நிழல் அமைப்பான டி.ஆர்.எப். பொறுப்பேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கைவிடப்பட்ட வீட்டுத்திட்டம் மீண்டும் ஆரம்பம்!

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையால் வழங்கப்பட்ட வீட்டுத்திட்டத்தை பூர்த்தியாக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி, நிர்மாணத்துறை மற்றும் வீடமைப்பு அமைச்சர் அநுர கருணாதிலக கிளிநொச்சியில் தெரிவைத்துள்ளார்.

வடமாகாணத்திற்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ள நகர அபிவிருத்தி, நிர்மாணத்துறை மற்றும் வீடமைப்பு அமைச்சர் அநுர கருணாதிலக மற்றும் பிரதியமைச்சர் டி. பி. சரத் ​​ஆகியோர் கிளிநொச்சி மாவட்ட அரசாங்கதிபரை மாவட்ட செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடினர்.

குறித்த சந்திபின் பின்னர் ஊடகவியலாளரிடம் கேள்விக்கு பதிலளிக்கும் போது குறித்த விடயத்தை தெரிவித்தார்.

கிளிநொச்சி மாவட்டத்தின் மீள்குடியேற்றத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியியின் முன்னேற்றம், அறிவியல் நகர் நகர அபிவிருத்தி, மாவட்டத்தின் குடிநீர் விநியோகம் உள்ளிட்ட விடயங்களை மாவட்ட அரசாங்கதிபரிடம் இதன்போது கேட்டறிந்து கொண்டார்.

குறித்த சந்திப்பில் அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட அமைச்சின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

ஏப்ரல் 26 தேசிய துக்க தினமாக அறிவிப்பு!

0

2025 ஏப்ரல் 26 ஆம் திகதி தேசிய துக்க தினமாக அறிவிப்பு!

புனித திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மறைவையொட்டி, அவரது இறுதிச் சடங்கு நடைபெறும் 2025 ஏப்ரல் 26 ஆம் திகதியை தேசிய துக்க தினமாக அறிவிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு வெளியிட்டுள்ள அறிவித்துள்ளது.

அதன்படி, 2025 ஏப்ரல் 26 ஆம் திகதி அன்று அனைத்து அரச அலுவலகங்களிலும் தேசிய கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படுமாறும் அந்தக் கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாடசாலைகளுக்கு விடுமுறை!

0

மே 6ஆம் திகதி இடம்பெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு மே மாதம் 5 மற்றும் 6ஆம் திகதிகளில் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும் வாக்களிப்பு நிலையங்களாகப் பயன்படுத்தப்படும் பாடசாலைகள் 2025.05.04 அன்று சம்பந்தப்பட்ட கிராம அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கல்வி அமைச்சின் செயலாளர் திரு. நாலக கலுவேவாவால் ஒரு கடிதம் வெளியிடப்பட்டுள்ளது.

கல்பிட்டியில் சிக்கிய பெருந்தொகை கடத்தல் பொருட்கள்!

0

இலங்கை கடற்படையினர் நேற்று (2025 ஏப்ரல் 23) அதிகாலை கல்பிட்டி, ஆலன்குடா கடல் பகுதியிலும் புத்தளம் தொடுவாவ பகுதியிலும் மேற்கொண்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கைகளின் மூலம், சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டு வர முயற்சி செய்த பெருந்தொகை கடத்தல் பொருட்கள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.

ஏலக்காய் மற்றும் ஏலக்காய் விதைகள், ஸ்மார்ட் மொபைல் போன்கள், பெண்களுக்கான ஆடைகள், தொலைக்காட்சி பெட்டிகள், இரசாயன போத்தல்கள், குளிர்பான போத்தல்கள், எண்பது (80) புறாக்கள், ஒரு டிங்கி படகு, ஒரு வாடகை வண்டி மற்றும் நான்கு (04) சந்தேக நபர்களை கடற்படையினர் கைது செய்தனர்.

கடல் வழிகளில் கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுக்க, தீவைச் சுற்றியுள்ள கடற்கரை மற்றும் கடற்பரப்பை உள்ளடக்கிய வழக்கமான ரோந்து மற்றும் தேடல் நடவடிக்கைகளை கடற்படை மேற்கொண்டு வருகிறது.

அதன்படி, இன்று (2025 ஏப்ரல் 23) அதிகாலை கல்பிட்டி ஆலங்குடா கடல் பகுதியில் வடமேற்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் விஜய நிறுவனத்தினரால் நடத்தப்பட்ட சிறப்பு சோதனை நடவடிக்கையின் போது, சந்தேகத்திற்கிடமான டிங்கி படகொன்று சோதனை செய்யப்பட்டது. அங்கு குறித்த, இரண்டு (02) சந்தேக நபர்களையும் டிங்கி படகையும் கடற்படையினர் கைது செய்தனர், மேலும் அந்த டிங்கி படகில் இருந்து சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட இருநூற்று நாற்பது (240) கிலோகிராம் ஏலக்காய், இருநூறு (200) கிலோகிராம் ஏலக்காய் விதைகள் மற்றும் ஐம்பத்தொன்பது (59) ஸ்மார்ட் மொபைல் போன்கள் ஆகியவை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன.

மேலும், புத்தளம் தொடுவாவ பகுதியில் இலங்கை கடற்படை கப்பல் தம்பப்பண்னி மேற்கொண்ட சிறப்பு சோதனை நடவடிக்கையின் போது சந்தேகத்திற்கிடமான ஒரு வாடகை வண்டி சோதனை செய்யப்பட்டது. அப்போது, எழுபத்தைந்து (75) கிலோகிராம் ஏலக்காய், மூன்று (83) பைகள், பெண்கள் ஆயத்த ஆடைகள், ஒரு (01) தொலைக்காட்சிப் பெட்டி, எண்பது (80) இரசாயனங்கள் போத்தல்கள், ஐநூற்று அறுபத்தாறு (566) குளிர்பானங்கள் போத்தல்கள் மற்றும் எண்பது (80) புறாக்கள் ஒரு கெப் வண்டி மற்றும் இரண்டு (02) சந்தேக நபர்களை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

மேலும், இந்த நடவடிக்கைகளின் மூலம் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 26 முதல் 48 வயதுக்குட்பட்ட கல்பிட்டி மற்றும் கொழும்பு 14 பகுதியைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். கடற்படையினரால் கைது செய்யப்பட்ட நான்கு (04) சந்தேக நபர்கள், ஏலக்காய் மற்றும் ஏலக்காய் விதைகள், ஸ்மார்ட் மொபைல் போன்கள், பெண்களுக்கான ஆயத்த ஆடைகள், ஒரு தொலைக்காட்சிப் பெட்டி, ஒரு இரசாயன போத்தல்கள், ஒரு குளிர்பான போத்தல்கள், எண்பது புறாக்கள், ஒரு டிங்கி படகு மற்றும் ஒரு கெப் வண்டி ஆகியவை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கட்டுநாயக்க சுங்கத் தடுப்பு அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட உள்ளன.

திடீரென மாறிய வானிலை!

0

மேல், வடமேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் நாளை (24) அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. 

நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. 

மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மில்லிமீற்றர் வரையிலான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. 

மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் அம்பாறை மாவட்டத்திலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாகப் பலத்த காற்றும் வீசக்கூடும். 

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

ஜனாதிபதியின் மகிழ்ச்சியான செய்தி!

0

அமெரிக்காவுடனான தீர்வை வரி குறித்த பேச்சுவார்த்தைகள் வெற்றியடைந்துள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். 

இது தொடர்பிலான முடிவுகள் விரைவில் கூட்டு அறிக்கையில் அறிவிக்கப்படும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார். 

இரத்தினபுரியில் நடைபெற்ற அரசியல் கூட்டமொன்றில் கலந்து கொண்டு இந்த விடயத்தைத் தெரிவித்தார்.

வடக்கில் இடம்பெற்ற மிக முக்கிய சந்திப்பு!

வடமாகாண பேண்தகு அபிவிருத்திக்கான கொள்கை ஒத்திசைவை மேம்படுத்துவதற்கான துறைசார்ந்தவர்களின் கலந்துரையாடல் ஒன்று கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இன்று நடைபெற்றது.

குறித்த கலந்துரையாடல், சுற்றாடல் மற்றும் அபிவிருத்திக்கான நிலையம், யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா பல்கலைக்கழகங்களுடன் இணைந்து குறித்த கொள்கை திட்டத்தை தயாரிக்கவுள்ளன.

இன்றைய கலந்துரையாடலில் யாழ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கலாநிதி ரெ.சுவந்தினி, பேராசிரியர் க.கஜபதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

குறித்த கலந்துரையாடலில் கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த துறைசார்ந்த உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

கிளிநொச்சி விவசாயிகளுக்கு ஏற்பட்ட சோகம்!

சிறுபோக செய்கையில் கிளிநொச்சியில் அறக்கொட்டியான் புழுத்தாக்கம் – விவசாயிகள் பாதிப்பு.

கிளிநொச்சி மாவட்டத்தில் இந்த ஆண்டுக்கான சிறுபோக நெற்ச்செய்கை ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், அறக்கொட்டியான் புழுத்தாக்கம் பயிர்களை நாசம் செய்துவருகின்ற விடயம் விவசாயிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாவட்டத்தின் மிகப்பெரிய குளம் இரணைமடுக்குளம் உள்ளிட்ட அனைத்து குளங்களின் கீழ் சிறுபோக செய்கை ஆரம்பிக்கப்பட்டு, பயிர்கள் தற்போது முளைக்க ஆரம்பித்து வெறும் 15-25 நாட்கள் கடந்த நிலையில், அறக்கொட்டியான் புழுத்தாக்கம் பயிர்களை முற்றாக அழிப்பதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சி மாவட்டத்தின் முரசுமோட்டை, ஊரியான், பன்னங்கண்டி பகுதிகளில் குறித்த புழுவின் தாக்கம் அதிகரித்துள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். கடந்த பெரும்போக நெற்ச்செய்கையிலும் நோய்த்தாக்கம் காரணமாக தாம் பெரும் நஷ்டத்தை எதிர்நோக்கியதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர்.