Sunday, November 9, 2025
Sponsored advertisementspot_img
Home Blog Page 180

அம்பலமானது எம்.பிக்களின் பெயர்ப்பட்டியல்!

0

2005-2024 காலப்பகுதியில் ஜனாதிபதி நிதியத்தில் இருந்து ஒதுக்கப்பட்ட கொடுப்பனவுகள் தொடர்பான தகவல்களை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இன்று (17) பாராளுமன்றத்தில் வெளியிட்டார்.

இந்நாட்டின் வறுமைக்கு நிவாரணம் வழங்குதல் உள்ளிட்ட நலன்புரி நடவடிக்கைகளுக்காக இந்த நிதியத்தின் பணம் ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

“நம் நாட்டில் குழந்தைகளுக்கு உதவக்கூடிய ஒரு நிதியம் உள்ளது. ஜனாதிபதியின் நிதியச் சட்டம். அதில் எப்படி உதவுவது என்று தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.”

1 வறுமை ஒழிப்புக்காக
2 கல்வி அல்லது அறிவை வளர்க்க
3 மதத்தை வளர்ப்பதற்காக
4 நாட்டுக்கு சேவை செய்தவர்களுக்கு மானியம் வழங்குவதற்கு
5 ஜனாதிபதி அல்லது சபை எடுக்கும் முடிவுகளுக்கு அமைய நன்மைக்காக

“2005-2024 ஜனாதிபதி நிதியத்தில் இருந்து ஒதுக்கப்பட்ட பணம் தொடர்பான தகவல்கள் என்னிடம் உள்ளன.”

பி. ஹெரிசன்
பியசேன கமகே
சுமேதா ஜயசேன
மனோஜ் சிறிசேன
பி தயாரத்ன
எஸ்சி முத்துக்குமாரன
வாசுதேவ நாணயக்கார
எஸ்.பி நாவின்ன

“இந்த நபர்களின் பெயர்கள் நேரடியாக உள்ளன. இன்னும் பல பெயர்கள் உள்ளன …  

“தயாசிறி பத்மகுமார ஜயசேகரவாக இருக்க வேண்டும்.”
பியால் நிஷாந்த டி சில்வா
சுசில் பிரேமஜயந்த
இசுர தேவப்பிரிய

 ” இன்னும் இருக்கிறார்கள்…”

ஜகத்குமார –  10 இலட்சம் ரூபாய்
கே.பி.எஸ் குமாரசிறி –  953,430 ரூபாய்
ஜயலத் ஜயவர்தன – 10 இலட்சம் ரூபாய்
நாமல் குணவர்தன – 10 இலட்சம் ரூபாய்
தர்மதாச பண்டா – 10 இலட்சம் ரூபாய்
விதுர விக்கிரமநாயக்க – 15 இலட்சம் ரூபாய்
விமலவீர திஸாநாயக்க – 30 இலட்சம் ரூபாய்
லக்கி ஜெயவர்த்தனே –  16.2 இலட்சம் ரூபாய்
பி சந்திரசேகரன் – 14 இலட்சம் ரூபாய்
ஜோன் அமரதுங்க – 40 இலட்சம் ரூபாய்
ஜோசப் மைக்கல் பெரேரா – 27 இலட்சம் ரூபாய்
டி.பி.ஏக்கநாயக்க – 48 இலட்சம் ரூபாய்
டபிள்யூ.எம்.எஸ்.பொன்சேகா (சரத் பொன்சேகா அல்ல) –  55 இலட்சம் ரூபாய்
ஜயந்த வீரசிங்க – 90 இலட்சம் ரூபாய்
எலிக் அலுவிஹாரே – 22 இலட்சம் ரூபாய்
ரஞ்சித் அலுவிஹாரே – 8.6 இலட்சம் ரூபாய்
ராஜித சேனாரத்ன – 100 இலட்சம்  ரூபாய்
கெஹலிய ரம்புக்வெல்ல – 110 இலட்சம் ரூபாய்
எம்.கே.ஏ.டி.எஸ் குணவர்தன – 112 இலட்சம் ரூபாய்
ரஞ்சித் சொய்சா – 188 இலட்சம் ரூபாய்
தி மு ஜயரத்ன – 300 இலட்சம் ரூபாய்

11 வீதத்தால் மின் கட்டணத்தைக் குறைக்க முடியும்!

0

தற்போதைய நிலைமைகளின் அடிப்படையில் 11 வீதத்தால் மின் கட்டணத்தைக் குறைக்க முடியும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மின்னுற்பத்திக்காக பயன்படுத்தப்படும் எரிபொருளின் விலைகளையும் மேலும் குறைக்க முடியும் என ஆணைக்குழுவால் தயாரிக்கப்பட்டுள்ள மாற்று யோசனையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மின் கட்டணத் திருத்தம் தொடர்பில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் தயாரிக்கப்பட்டுள்ள மாற்று யோசனைகள் குறித்த பொதுமக்களின் கருத்துகளை கேட்டறியும் நடவடிக்கை இன்று(17) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இலங்கை மின்சார சபையால் சமர்ப்பிக்கப்பட்ட மின் கட்டணத் திருத்த யோசனை, பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தால் மின்னுற்பத்திக்காக வழங்கப்படும் எரிபொருளுக்கான விலை தொடர்பான அறிக்கை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் ஆராய்ந்த பின்னர் குறித்த மாற்று யோசனை தயாரிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 08ஆம் திகதி வரை எழுத்துமூலமான கருத்துகள் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளதுடன், மாகாண மட்டத்தில் 9 அமர்வுகள் மூலம் வாய்மொழி கருத்துகள் பெறப்படவுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்த முன்மொழிவு தொடர்பான எழுத்துபூர்வ யோசனைகளை info@pucsl.gov.lk என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப முடியும். 

076 427 10 30 என்ற வட்ஸ்அப் இலக்கத்திற்கும் பொதுமக்கள் தமது யோசனைகளை முன்வைக்க முடியும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு தபால் மூலமாகவும் முன்மொழிவுகளை சமர்ப்பிக்க முடியும். 

எவ்வாறாயினும், 2025ஆம் ஆண்டின் முதல் 6 மாதங்களுக்கு தற்போதுள்ள மின் கட்டணத்தை மாற்றமின்றி நடைமுறைப்படுத்த மின்சார சபை தற்போது முன்மொழிந்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதிகள் குறித்து அதிர்ச்சி தகவல்!

0

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்ட அதிகாரிகள் தொடர்பில் பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இன்று (17) பாராளுமன்றத்தில் உண்மைகளை வெளிப்படுத்தினார்.

அங்கு உரையாற்றிய அவர், முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்புக்காக அரசாங்கத்தினால் பொதுமக்களின் பணம் செலவிடப்படுவதாகவும், அந்த தொகை 1448 மில்லியன் ரூபா எனவும் தெரிவித்தார்.

“இன்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் 60 பொலிஸ் உத்தியோகத்தர்களும் 228 ஆயுதப் படை வீரர்களும் பாதுகாப்பு மற்றும் ஏனைய தேவைகளுக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு 4 இராணுவ அதிகாரிகளையும் 60 பொலிஸ் அதிகாரிகளையும் மெய்ப்பாதுகாவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு 188 ஆயுதப் படை வீரர்களையும், 22 பொலிஸாரையும் பாதுகாப்புக்காக வழங்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு 57 மற்றும் 60 இராணுவ வீரர்களும், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவிற்கு 60 பொலிஸ் உத்தியோகத்தர்களும், திருமதி ஹேமா பிரேமதாசவிற்கு 10 பொலிஸ் உத்தியோகத்தர்களும் தற்போது பாதுகாப்புக்காக கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்..”

இதன்போது, ​​அமைச்சர் மேலும் கருத்து தெரிவிக்கையில், கடந்த பதினொன்றரை மாதங்களில் அரசாங்கம் முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்புக்காக 1448 மில்லியன் ரூபாவை செலவிட்டது தொடர்பான உண்மைகளை பாராளுமன்றத்தில் வெளிப்படுத்தினார்.

“முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு 3 நிறுவனங்களின் ஊடாக பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. ஒன்று ஆயுதப்படை, பொலிஸ் மற்றும் ஜனாதிபதி அலுவலகம். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு கடந்த பதினொன்றரை மாதங்களில் ஆயுதப்படைக்கு மட்டும் 328 மில்லியன் செலவிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி அலுவலகத்தில் இருந்து 55 மில்லியனும் செலவிடப்பட்டுள்ளது. அதன்படி 11 மாதங்களில் 710 மில்லியன் ரூபா பணம் செலவிடப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆயுதப் படையைச் சேர்ந்த 6 மில்லியன், பொலிஸில் இருந்து 185 மில்லியன் மற்றும் ஜனாதிபதி அலுவலகத்தில் 16 மில்லியன் என மொத்தமாக 207 மில்லியன் செலவிடப்பட்டுள்ளது.

அத்துடன், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்காக ஆயுதப்படையினர் 258 மில்லியன் ரூபாவும், பொலிஸார் 39 மில்லியன் ரூபாவும், ஜனாதிபதி அலுவலகம் 10 மில்லியன் ரூபாவும் என மொத்தம் 307 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு, முப்படையினருக்கு 19 மில்லியன் ரூபாவும், பொலிஸாருக்கு 60 மில்லியன் ரூபாவும், ஜனாதிபதி அலுவலகத்தில் இருந்து 3 மில்லியன் ரூபாவும், இந்த மூன்று மாதங்களுக்கு 82 மில்லியன் ரூபா.

சந்திரிக்கா முன்னாள் ஜனாதிபதிகளுக்கான முப்படைகளின் செலவை முப்படைகளும் ஏற்கவில்லை. பொலிஸாருக்கு 99 மில்லியன், ஜனாதிபதி அலுவலகத்திற்கு 12 மில்லியன் மற்றும் மொத்த செலவு 112 மில்லியன் ரூபா.

முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் மனைவிக்கான செலவை முப்படைகளும் ஏற்கவில்லை. பொலிஸ் 30 மில்லியன், ஜனாதிபதி அலுவலகம் 03 மில்லியன், மொத்த தொகை 32 மில்லியன்.

இதற்கிணங்க, சபாநாயகர் அவர்களே, இந்த பதினொன்றரை மாதங்களுக்குள் மக்களின் பணமான 1448 மில்லியன் ரூபாவை அரசாங்கம் இந்த ஓய்வுபெற்ற ஜனாதிபதிகளின் செலவுகளுக்காக செலவிட்டுள்ளது. இது மிகவும் கடினமான சூழ்நிலை.”

பொதுமக்களின் கருத்துக்கள் நாளைமுதல்!

0

மின்சாரக் கட்டணத் திருத்த யோசனைக்கான பொதுமக்களின் கருத்துக்களைப் பெறும் நடவடிக்கை நாளை (17) முதல் ஆரம்பிக்கப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதன்படி ஜனவரி 08 ஆம் திகதி வரை இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இது தொடர்பான கருத்துக்களை, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, 6வது தளம், இலங்கை வங்கி வர்த்தகக் கோபுரம், கொழும்பு 03 என்ற முகவரி அல்லது info@pucsl.gov.lk என்ற மின்னஞ்சல் ஊடாகவும் பொது மக்கள் அனுப்பலாம்

அத்துடன் 076 42 710 30 என்ற வட்ஸ்அப் எண்ணிலும் நீங்கள் கருத்துகளையும் ஆலோசனைகளையும் சமர்ப்பிக்கலாம்.

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுக்கு வருகை தந்தோ அல்லது மாகாண மட்டத்தினால் ஒதுக்கப்பட்ட இடங்களுக்கு சென்றோ கருத்துக்களை சமர்ப்பிக்க முடியும் என ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

புதிய வருடத்தில் முதல் ஆறு மாதங்களுக்கு மின் கட்டணத்தை திருத்தம் செய்யாமல் பராமரிக்க வேண்டும் என மின்சார சபை பரிந்துரைத்திருந்தது.

இதன்படி, குறித்த யோசனையை ஆணைக்குழுவால் மீளாய்வு செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், பொதுமக்களின் கருத்துக்களுக்காக முன்மொழிவு அடங்கிய வரைவு காட்சிப்படுத்தப்படும்.

இலங்கை மின்சார சபையினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள மின்சார கட்டண திருத்த யோசனை தொடர்பான இறுதித் தீர்மானம் எதிர்வரும் ஜனவரி மாதம் 17 ஆம் திகதி அறிவிக்கப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

05 அமைச்சுக்களுக்கு பதில் அமைச்சர்கள் நியமிப்பு!

0

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நாட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றதன் காரணமாக 05 அமைச்சுக்களுக்கு பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி, ஜனாதிபதியின் கீழ் காணப்படும் டிஜிட்டல் பொருளாதாரம், பாதுகாப்பு அமைச்சு மற்றும் நிதி மற்றும் திட்டமிடல், பொருளாதார அபிவிருத்தி அமைச்சு ஆகிய 03 அமைச்சுக்களுக்கும், வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு மற்றும் தொழில் அமைச்சு ஆகியவற்றுக்கு பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதற்கமைய, பதில் டிஜிட்டல் பொருளாதார அமைச்சராக, டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் பொறியியலாளர் எரங்க வீரரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.

பதில் பாதுகாப்பு அமைச்சராக பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர, நியமிக்கப்பட்டுள்ளார்.

நிதி மற்றும் திட்டமிடல், பொருளாதார அபிவிருத்தி பதில் அமைச்சராக, நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும நியமிக்கப்பட்டுள்ளார்.

வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா பதில் அமைச்சராக, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமசந்திர நியமிக்கப்பட்டுள்ளார்.

பதில் தொழில் அமைச்சராக, பிரதி தொழில் அமைச்சர் மஹிந்த ஜயசிங்க  நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

தென் கோரிய ஜனாதிபதிக்கு நேர்ந்த சோகம்!

0

தென்கொரிய ஜனாதிபதி யூன் சுக் யோல் பதவி நீக்கப்பட்டுள்ளார்.

அவருக்கெதிரான குற்றப்பிரேரணை தென்கொரிய பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து அவர் பதவி  நீக்கப்பட்டுள்ளார்.

தென்கொரிய ஜனாதிபதிக்கு எதிராக முன்வைக்கப்பட்டிருந்த இரண்டாவது குற்றப்பிரேரணை மீதான வாக்கெடுப்பு பாராளுமன்றில் நேற்றும் இடம்பெற்றது.

குற்றப்பிரேரணைக்கு ஆதரவாக 204 வாக்குகள் அளிக்கப்பட்டதாகவும், இதன் மூலம் தென்கொரிய ஜனாதிபதி யூன் சுக் யோல் பதவி நீக்கப்படுவதாக அந்த நாட்டு சபாநாயகர் அறிவித்துள்ளார்.

அத்துடன், தற்போதைய பிரதமர் பதில் ஜனாதிபதியாக செயற்படுவாரெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பதில் ஜனாதிபதி நியமிக்கப்பட்டு 60 நாட்களில் தென்கொரியாவில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

குற்றப்பிரேரரணை முடிவுகள் தொடர்பில் கருத்து வௌியிட்ட யூன் சுக் யோல், தனது பயணம் தற்காலிகமாக இடைநிறுத்தப்படுவதாகவும், நாட்டுக்கான தமது பயணம் எதிர்காலத்திலும் தொடருமென தெரிவித்துள்ளார்.

யூன் சுக் யோல், தென்கொரியாவில் இராணுவ சட்டத்தை அமுல்படுத்தியமைக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டதுடன், அவருக்கு எதிராக குற்றப்பிரேரணை கொண்டுவரப்பட்டது.

முதலாவது குற்றப்பிரேரணை தோற்கடிக்கப்பட்டதுடன் இரண்டாவது குற்றப்பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டிருந்ததது. 

அத்துடன், நாட்டில் பெரும் எதிர்ப்பு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டன.

தென்கொரிய பாராளுமன்றத்திற்கு முன்னால் இன்றும்(14) பெருமளவானவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டிருந்ததுடன், ஜனாதிபதி பதவிநீக்கப்பட்டதை தொடர்ந்து ஆர்ப்பாட்டக்காரர்கள் கொண்டாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

இதேவேளை, மக்களே நாட்டில் அதிகார பலத்தை கொண்டவர்கள் என்பது இன்று நிரூபிக்கப்பட்டுள்ளதாக தென்கொரிய எதிர்க்கட்சி தலைவர் Lee Jae-myung தெரிவித்துள்ளார்.

அத்துடன், எதிர்காலத்தில் பெரும் சவால்கள் காணப்படுவதாகவும், அதனை வெற்றிக்காெள்ளும் பயணத்தை நோக்கி செல்லுமாறும் அவர் மக்களை வலியுறுத்தியுள்ளார்.

இந்த நிலையில் நாட்டில் அரசாங்கத்தின் நிலையான  செயற்பாடுகளுக்கு தனது முழுமையான ஆதரவை வழங்கவுள்ளதாக தென்கொரியாவின் பதில் ஜனாதிபதியாக பொறுப்பெற்கவுள்ள Han Duck-soo தெரிவித்துள்ளார்.

நீதி அமைச்சரின் பட்டம் தொடர்பில் புதிய சர்ச்சை!

0

பாராளுமன்ற இனையத்தளத்தில் உறுப்பினர்களின் தகவல் திரட்டில் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி கௌரவ ஹர்ஷன நானாயக்கார அவர்களின் பெயருக்கு முன்னால் குறிப்பிடப்பட்டிருந்த கலாநிதிப் பட்டம் தொடர்பாக ஊடகங்களில் வெளியிடப்படும் அறிக்கைகள் தொடர்பில் பாராளுமன்ற சட்டவாக்க சேவைகள் பணிப்பாளரும் தொடர்பாடல் திணைக்கள பதில் பணிப்பாளருமான எம். ஜயலத் பெரேரா ஊடக அறிக்கையொன்றின் மூலம் பின்வரும் விடயங்களை வலியுறுத்துகிறார்.

அமைச்சரினால் பாராளுமன்றத்துக்கு வழங்கப்பட்ட தனது தகவல்கள் அடங்கிய படிவத்தில் கலாநிதிப் பட்டம் உள்ளடங்கப்படவில்லை என்பதுடன், பாராளுமன்ற இணையத்தளத்தில் உறுப்பினர்களின் தகவல் திரட்டில் தகவல்களை உள்ளீடு செய்யும் போது ஏற்பட்ட தவறுதல் காரணமாக அமைச்சர் சட்டத்தரணி கௌரவ ஹர்ஷன நானாயக்கார அவர்களின் பெயருக்கு முன்னால் கலாநிதி எனக் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், அதற்கமைய அந்தத் தவறை நிவர்த்தி செய்வதற்கு தற்பொழுது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பெரேரா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி கௌரவ ஹர்ஷன நானாயக்கார அவர்களுக்கு ஏற்பட்ட அசௌகரியத்துக்கு வருந்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், பாராளுமன்ற இணையத்தளத்தில் உள்ள அனைத்து உறுப்பினர்களினதும் தகவல்கள் பரிசீலிக்கப்பட்டு, புதுப்பிக்கும் நடவடிக்கைகள் தற்பொழுது மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் ஜயலத் பெரேரா மேலும் தெரிவித்துள்ளார்.

மாணவர் பாராளுமன்றம் குறித்து விஷேட செய்தி!

0

கடந்த இரண்டு வருடங்களில் 200 இற்கும் மேற்பட்ட மாணவர் பாராளுமன்றங்களை நடாத்தி பாராளுமன்றத்தை மக்களிடம் நெருக்கமாக்குவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன – பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர

கடந்த இரண்டு வருடங்களில் 200 இற்கும் மேற்பட்ட மாணவர் பாராளுமன்றங்களை நடாத்தி பாராளுமன்றத்தை மக்களிடம் நெருக்கமாக்குவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார். நாட்டின் ஜனநாயகக் கட்டமைப்பைப் பாதுகாக்கும் வகையில், பாராளுமன்றத்தின் முக்கியத்துவத்தை பொதுமக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் பல்வேறு திட்டங்களை எதிர்காலத்தில் செயல்படுத்த எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

கல்வி அமைச்சில் நேற்று (11) நடைபெற்ற மேல்மாகாண மாணவர் பாராளுமன்றத்தின் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே செயலாளர் நாயகம் மேற்கண்டவாறு தெரிவித்தார். அத்துடன், பாராளுமன்றச் செயற்பாடுகள் மற்றும் அதன் பங்கு குறித்து மாணவர்களுக்கு விளக்கமளித்த செயலாளர் நாயகம், பாராளுமன்றம் எவ்வாறு செயற்படுகின்றது என்பது குறித்தும் முழுமையான விளக்கத்தையும் வழங்கினார்.

மேல்மாகாண மாணவர் பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மாணவர்களுக்குப் பாராளுமன்ற முறைமையின் நடைமுறை அனுபவத்தை வழங்கும் நோக்கில் மேல்மாகாணக் கல்வி திணைக்களம் மற்றும் இலங்கை பாராளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம் இணைந்து இந்நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது.

இந்நிகழ்வில் மேல்மாகாண பிரதான செயலாளர் தம்மிக்கா கே விஜேசிங்க, மாகாண கல்விப் பணிப்பாளர் பி.ஆர்.தேவபந்து, மேலதிக மாகாணக் கல்விப் பணிப்பாளர் அனுர பிரேமலால் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இங்கு உரையாற்றிய மேல்மாகாண பிரதான செயலாளர் தம்மிகா கே விஜேசிங்க குறிப்பிடுகையில், மாணவர் பாராளுமன்றத்தின் ஊடாக சமூகத்தில் நிலவும், மூக மற்றும் பொருளாதார பிரச்சினைகளை ஆழமாக ஆராய்ந்து அது தொடர்பான சமூக உரையாடலை உருவாக்குவதன் அவசியத்தை நினைவுபடுத்தினார்.

அதன் பின்னர், மேல்மாகாண மாணவர் பாராளுமன்றத்தின் ஆரம்ப அமர்வை ஆரம்பிக்கும் வகையில் சபாநாயகர் தெரிவு இடம்பெற்றது. அதனையடுத்து, பிரதமர் மற்றும் அமைச்சர்கள் மற்றும் அங்கத்தவர்களின் பதவியேற்பு இடம்பெற்றது. பின்னர், மாணவர் பாராளுமன்றத்தின் ஒவ்வொரு அமைச்சரும் தங்கள் அமைச்சுக்களால் செயல்படுத்த முன்மொழியப்பட்ட திட்டங்கள் குறித்து சபையில் விளக்கினர்.

இதன்போது மாணவர் பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மாணவ, மாணவியருக்கு பாராளுமன்ற செயலாளர் நாயகத்தின் தலைமையில் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

அதனையடுத்து, மேல் மாகாண மாணவர் பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மாணவர்கள் பாராளுமன்ற வளாகத்திற்கு அழைக்கப்பட்டு பாராளுமன்ற செயற்பாடுகள் மற்றும் வழிமுறைகள் தொடர்பில் மேலும் விளக்கமளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் பாராளுமன்ற பணியாட்தொகுதியின் பிரதானியும் பிரதிச் செயலாளர் நாயகமுமான சமிந்த குலரத்ன, சட்டவாக்க சேவைகள் பணிப்பாளரும் தொடர்பாடல் திணைக்கள பதில் பணிப்பாளருமான எம். ஜயலத் பெரேரா ஆகியோரும் கலந்துகொண்டனர். இதன்போது பாராளுமன்றக் குழுக்கள் தொடர்பாக சட்டவாக்க சேவைகள் பணிப்பாளரும் தொடர்பாடல் திணைக்கள பதில் பணிப்பாளருமான எம். ஜயலத் பெரேராவினால் விளக்கமளிக்கப்பட்டது. அத்துடன், பாராளுமன்ற முறைமை தொடர்பில் மாணவர்களுக்குக் காணப்படும் கேள்விகளுக்கும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டு, பாராளுமன்ற முறைமை தொடர்பில் மாணவர்களுக்குக் காணப்படும் சந்தேகங்களும் தீர்த்துவைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் மேல் மாகாண வலயப் பணிப்பளர்கள், அதிபர்கள், ஆசிரிய ஆலோசகர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

சபாநாயகர் நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து புதிய அப்டேட்!

0

சபாநாயகர் அசோக ரன்வலவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வர தீர்மானித்துள்ளதாக பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.

இன்று (12) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் இதனைத் தெரிவித்தார்.

சபாநாயகர் ஆரம்பத்தில் கலாநிதி பட்டம் மற்றும் பல்வேறு பட்டங்களை பெற்றுள்ளதாக காட்டி மக்களை ஏமாற்றியுள்ளார் என அவர் தெரிவித்துள்ளார்.

இதன்படி, சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை தனது நாடாளுமன்றக் குழுவின் ஊடாக சமர்ப்பிக்க தீர்மானித்துள்ளதாகவும், இதற்கு முழு எதிர்க்கட்சியினரும், அரசாங்கத்தின் மனசாட்சியுள்ள உறுப்பினர்களும் பங்களிப்பார்கள் என எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

சபாநாயகர் குறித்து வெளியான லேடஸ்ட் அப்டேட்!

0

கடந்த சில தினங்களாக நாட்டில் பேசும்பொருளாக மாறி இருப்பது சபாநாயகர் அசோக ரன்வலவுக்கு கிடைக்கப்பெற்ற கலாநிதி பட்டம் பற்றியதாகும்.

சபாநாயகர் அசோக ரன்வலவுக்கு இலங்கையின் எந்தவொரு பல்கலைக்கழகமும் கலாநிதி பட்டம் வழங்கவில்லை என பல்கலைக்கழக பேராசிரியர்கள் சங்கம் அண்மையில் தெரிவித்துள்ளது.

அதே நேரத்தில், சமூகத்தில் எழுந்த விவாதத்துடன், பாராளுமன்ற உத்தியோகபூர்வ இணையத்தில் இருந்து அவரது பெயருக்கு முன் இடப்பட்டிருந்த கலாநிதி பட்டமும் நீக்கப்பட்டுள்ளது மக்கள் மத்தியில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில்; சபாநாயகர் அசோக ரன்வல ஜப்பானில் உள்ள வசேடா பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்துள்ளதாக தெரிவித்த கருத்து பொய்யானது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார்.

அசோக ரன்வல என்ற நபர் தமது பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கவில்லை என ஜப்பானின் வசேடா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளதாக அவர் செய்தியாளர் சந்திப்பில் மேலும் தெரிவித்தார்.

இந்தக் கண்ணோட்டத்தில் பார்க்கும்போது, ​​திசைகாட்டியில் இருப்போர்கள் உண்மையிலேயே பேராசிரியர்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும் மக்கள் மத்தியில் எதிர்மறையான நிலைப்பாடு உருவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

நிலைமை குறித்து சபாநாயகர் அசோக ரன்வல அவர்களிடம் இதுகுறித்து கேட்டபோது, ​​இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு உரிய நேரத்தில் பதில் அளிப்பதாக தெரிவித்துள்ளதாக டெய்லி சிலோன் இணையம் தெரிவித்துள்ளது.

இந்த குற்றச்சாட்டுகளுக்கு சபாநாயகர் உரிய நேரத்தில் பதில் அளிப்பார் என அமைச்சரவை செய்தியாளர் மாநாட்டில் அமைச்சரவை அமைச்சரின் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.