Sunday, November 9, 2025
Sponsored advertisementspot_img
Home Blog Page 181

வாகன மாபியாக்களின் நரித்தந்திரம்!

0

இலங்கையில் வாகன இறக்குமதி குறித்து மாஃபியா குழு ஒன்று செயற்படுவதாக தான் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார புள்ளி விபரவியல் திணைக்களத்தின் சிரேஷ்ட பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார்.

2025 ஆம் ஆண்டு முதல் கார்களை இறக்குமதி செய்ய அரசாங்கம் அனுமதித்துள்ளதாக கூறி, பிரபல கார் இறக்குமதியாளர்கள் கார்களின் விலைகளை காட்டும் விளம்பரங்களையும் காட்சிப்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் தற்போது உள்ள வாகனங்களை குறைந்த விலையில் கொள்வனவு செய்யும் தந்திரமாக இந்த பிரசாரம் முன்னெடுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்மூலம் மக்கள் மத்தியில் வாகன இறக்குமதி செய்யப்படும் என்ற எண்ணம் ஏற்பட்டுள்ளது.

புதிய வாகனங்களை எதிர்பார்க்கும் தனியார் வாகன உரிமையாளர்கள் தாங்கள் பயன்படுத்திய வாகனங்களை குறைந்த விலைக்கு விற்கும் நிலை ஏற்படும் அபாயம் ஏற்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதுவரை வாகன இறக்குமதிக்கு அரசு அனுமதி அளிக்காத நிலையில், அனுமதி கிடைத்தால் சுங்க வரியை அதிகரித்து வாகன இறக்குமதிக்கு அனுமதி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அப்போது நாட்டில் வாகனங்களின் விலை அதிகரிப்பதுடன், குறைந்த விலையில் வாகனங்களை சேகரித்து வைத்திருக்கும் வர்த்தகர்கள் தமது வாகனங்களை அதிக விலைக்கு விற்று பெரும் இலாபம் ஈட்ட வாய்ப்பு ஏற்படும் என பேராசிரியர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலைமைக்கு ஏற்ப வாகன இறக்குமதியை கட்டுப்பாட்டின்றி அனுமதிக்க முடியாது.

பொது வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதித்து மக்களுக்கு நிவாரணம் வழங்குவதையே அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என பேராசிரியர் வசந்த அத்துகோரல வலியுறுத்தியுள்ளார்.

கண் வைத்தியர் கொடுங்கோல் அதிபராக மாறியது எப்படி?

0

சிரியா அதிபர் பஷார் அல் அசாத்தின் வாழ்க்கையில் பல முக்கியமான தருணங்கள் உள்ளன. ஆனால் அவற்றுள் அவர் வாழ்ந்த இடத்திலிருந்து ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தொலைவில் நடந்த கார் விபத்துதான் அதிமுக்கியமானது.

தனது தந்தையிடம் இருந்து அதிகாரத்தைப் பெற்று நாட்டை வழிநடத்துவதற்கு பஷார் அல் அசாத்திற்கு ஆரம்பத்தில் முன்னுரிமை அளிக்கப்படவில்லை. அவரது மூத்த சகோதரர் பஸாலுக்கே முன்னுரிமை வழங்கப்பட்டது.

கடந்த 1994ஆம் ஆண்டின் தொடக்கத்தில் டமாஸ்கஸ் அருகே நடந்த ஒரு கார் விபத்தில் பஸால் உயிரிழந்தார். அப்போது பஷார் லண்டனில் கண் மருத்துவம் படித்துக் கொண்டிருந்தார்.

பஸாலின் மரணத்தைத் தொடர்ந்து, சிரியாவின் அதிபராவதற்கு பஷார் தயார்படுத்தப்பட்டார். தற்போது அவர் நூறாயிரக்கணக்கான உயிர்களைக் கொன்ற, லட்சக்கணக்கான மக்களை இடம்பெயரச் செய்த ஒரு மோசமான அதிபராக பார்க்கப்படுகிறார்.

ஆனால், கண் மருத்துவராக இருந்த பஷார் அல் அசாத், போர்க்குற்றம் சுமத்தப்பட்ட ஒரு சர்வாதிகாரத் தலைவராக எப்படி மாறினார்?

பஷார் அல் அசாத் 1965ஆம் ஆண்டு, ஹபீஸ் அல்-அசாத், அனிசா மக்லூஃப் ஆகியோருக்குப் பிறந்தார்.

அவர் பிறந்தபோது, சிரியா, மத்திய கிழக்கு மற்றும் இதர பிராந்தியங்களில் பதற்றமான சூழல் நிலவி வந்தது. அந்த நேரத்தில், அப்பகுதிகளில் உள்ள அரசியலில் அரபு தேசியவாதம் ஆதிக்கம் செலுத்தியது. சிரியாவிலும் அதே நிலைதான்.

பஷார் அல் அசாத்தின் குடும்பம் அலாவைட் எனப்படும் சிரியாவை சேர்ந்த ஒரு பின்தங்கிய பிரிவைச் சேர்ந்தவர்கள். இந்த பிரிவைச் சேர்ந்த பலர் பொருளாதார நெருக்கடி காரணமாக அந்நாட்டின் ராணுவத்தில் சேர்ந்தனர்.

அப்போது ஹபீஸ் அல் அசாத் ஒரு ராணுவ அதிகாரியாகவும், பாத் கட்சியின் தீவிர ஆதரவாளராகவும் பிரபலமடைந்தார். அவர் 1966ஆம் ஆண்டு சிரியாவின் பாதுகாப்பு அமைச்சரானார்.

தனது அதிகாரத்தைப் பலப்படுத்தி 1971ஆம் ஆண்டு ஹபீஸ் அல் அசாத் சிரியாவின் அதிபரானார். 2000ஆம் ஆண்டு, அவர் இறந்துபோகும் வரை அவர் அதிபராகவே பதவி வகித்தார்.

அவரது ஆட்சிக்காலம் சிரியாவின் சுதந்திரத்திற்குப் பின்பு உள்ள வரலாற்றில் முக்கியமானது. எதிர்க்கட்சிகளை ஒடுக்கி, ஜனநாயக தேர்தல்களை நிராகரித்து அவர் இரும்புக்கரம் கொண்டு ஆட்சி செய்தார்.

டமாஸ்கஸ் பல்கலைக் கழகத்தில் பட்டம் பெற்ற பஷார் அல் அசாத்,1992ஆம் ஆண்டு, லண்டனில் உள்ள வெஸ்டர்ன் ஐ மருத்துவமனையில் கண் மருத்துவத்தில் நிபுணத்துவம் பெற பிரிட்டன் சென்றார்.

கடந்த 2018ஆம் ஆண்டு வெளியான A Dangerous Dynasty: The Assads என்ற பிபிசி ஆவணப்படத்தின்படி, லண்டனில் உள்ள வாழ்க்கையை பஷார் மிகவும் விரும்பினார். லண்டனில்தான் பஷார் தனது வருங்கால மனைவி அஸ்மா அல்-அக்ராஸை சந்தித்தார்.

கடந்த 1994ஆம் ஆண்டு ஜனவரி மாதம், தனது மூத்த சகோதரரான பஸல் உயிரிழந்த பிறகு பஷாருடைய வாழ்க்கையின் போக்கு அடியோடு மாறியது. சிரியாவின் அடுத்த தலைவராக அவரைத் தயார் செய்வதற்காக உடனடியாக லண்டனில் இருந்து வரவழைக்கப்பட்டார்.

அதன் பிறகு, பஷார் ராணுவத்தில் சேர்ந்தார், மக்கள் மத்தியில் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்குவதற்கான பணிகளைத் தொடங்கினார்.

ஹஃபீஸ் அல்-அசாத் 2000ஆம் ஆண்டு ஜனவரி மாதம் உயிரிழந்தார். அதையடுத்து, 34 வயதான பஷார் சிரியாவின் அதிபராக நியமிக்கப்பட்டார். இதற்காக சிரிய அரசியலமைப்பில் அதிபராவதற்கு குறைந்தபட்ச வயது தேவை 40இல் இருந்து குறைக்கப்பட்டது.

அவர் “வெளிப்படைத்தன்மை, ஜனநாயகம், வளர்ச்சி, நவீனமயமாக்கல், பொறுப்புக் கூறல் மற்றும் அரசு சார்ந்த சிந்தனை” போன்றவை குறித்துப் அதிகமாக பேசினார்.

அதிபராகப் பதவியேற்ற சில மாதங்களுக்குப் பிறகு, பஷார் அஸ்மா அல்-அக்ராஸை மணந்தார். அவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்: ஹபீஸ், ஜீன் மற்றும் கரீம்.

தொடக்கத்தில், அரசியல் சீர்திருத்தம் மற்றும் ஊடக சுதந்திரம் பற்றிய பஷாரின் சொல்லாட்சி பல்வேறு சிரிய மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தியது. அவரது தலைமை, மேற்கத்திய நாட்டில் கல்வி பயின்றது ஆகியன மாற்றத்துக்கான புதிய சகாப்தத்தைக் உருவாக்கியது.

சிரியாவில் சிறிது காலத்திற்கு சிவில் விவாதம் மற்றும் “டமாஸ்கஸ் ஸ்பிரிங்” எனப்படும் கருத்து சுதந்திரத்தைப் பற்றிய விவாதமும் நடைபெற்றது. ஆனால் 2001ஆம் ஆண்டின்போது, பாதுகாப்புப் படையினர் மீண்டும் தங்களது ஒடுக்குமுறையைத் தொடங்கி, அரசுக்கு எதிராகக் குரல் எழுப்புபவர்களைக் கைது செய்தனர்.

அதிபராகப் பொறுப்பேற்ற தொடக்கத்தில் தனியார் துறை வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் வரையறுக்கப்பட்ட பொருளாதார சீர்திருத்தங்களை பஷார் அறிமுகப்படுத்திய அதே வேளையில், அவரது உறவினரான ராமி மக்லூப்ஃபின் எழுச்சியும் காணப்பட்டது. மக்லூஃப் ஒரு பரந்த பொருளாதார சாம்ராஜ்யத்தை நிறுவினார், இது செல்வமும், அதிகாரமும் இணைந்து செயல்படுவதைக் குறிப்பதாக விமர்சகர்கள் கூறினர்.

பஷார் அல் அசாத் ஆட்சியின் முதல் பத்தாண்டு காலத்தில் இரானுடனான சிரியாவின் உறவு வலுப்பெற்றது. மேலும் கத்தார், துருக்கி ஆகிய இரு நாடுகளுடனும் சிரியா உறவுகளை வளர்க்கத் தொடங்கியது.

ஆரம்பத்தில், பஷாருக்கு ரியாத்தின் ஆதரவு இருந்தபோதிலும், சௌதி அரேபியாவுடனான உறவுகள் ஏற்றத் தாழ்வுகளைச் சந்தித்தன.

ஒட்டுமொத்தமாக, வெளியுறவுக் கொள்கையில் பஷார் அல்-அசாத் தனது தந்தையின் வழியையே பின்பற்றினார். நேரடி ராணுவ மோதல்களைத் தவிர்த்து கவனமாக உத்திகளைக் கையாண்டார்.

கடந்த 2010ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், அவரது மனைவி அஸ்மா அல்-அசாத் வோக் பத்திரிக்கைக்கு அளித்த ஒரு நேர்காணலில், அவர்களது நாடு “ஜனநாயக முறையில்” வழிநடத்தப்படுவதாக அவர் கூறினார்.

அதே நாளில், துனிசியாவை சேர்ந்த காய்கறி வியாபாரியான முகமது பௌசிஸி ஒரு பெண் காவலர் தன்னை அறைந்ததால் தீக்குளித்தார். இது துனிசியா மக்கள் மத்தியில் ஒரு கடும் எதிர்ப்பைத் தூண்டியது, இதனால் அந்நாட்டின் அதிபர் ஜைன் எல் அபிடின் பென் அலியின் ஆட்சி கவிழ்ந்தது.

இந்த எழுச்சியால் எதிர்பாராதவிதமாக எகிப்து, லிபியா, ஏமன், பஹ்ரைன், சிரியா போன்ற அரபு உலக நாடுகள் முழுவதும் புரட்சிகர இயக்கங்கள் ஏற்பட்டது.

கடந்த 2011ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில், சிரியாவில் ஒரு ஆர்ப்பாட்டம் நடந்தது. அதை அடுத்து சில நாட்களுக்குப் பிறகு தெற்கு நகரமான தாராவிலும் ஆர்ப்பாட்டங்கள் தொடங்கின. சுவர்களில் அதிபர் அசாத்தை எதிர்த்து வாசகங்களை எழுதியதற்காக குழந்தைகள் கைது செய்யப்பட்டனர்.

இதற்குப் பிறகு, சிரிய மக்களிடம் உரையாற்றுவதற்கு அசாத் இரண்டு வாரங்கள் காத்திருந்தார். நாடாளுமன்றத்தில், சிரியாவை குறிவைத்து நடத்தப்படும் “சதி” திட்டங்களை முறியடிப்பதாக உறுதியளித்தார், மேலும் பல்வேறு மக்களின் தேவைகள் பூர்த்தி செய்யப்படவில்லை என்பதையும் ஒப்புக்கொண்டார்.

தராவில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பாதுகாப்புப் படைகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டினால், ஆர்ப்பாட்டம் அதிகரித்து, சிரியாவின் பல்வேறு நகரங்களில் அசாத் ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோஷங்கள் எழுந்தன.

சில மாதங்களுக்குள், நாடு முழுவதும் அரசாங்கத்திற்கும் ஆயுதமேந்திய கிளர்ச்சிப் படைகளுக்கும் இடையே மோதல்கள் வெடித்தன.

சிரியாவில் மோதல் தீவிரமடைந்ததால், சர்வதேச சக்திகளின் தலையீட்டுக்கு மத்தியிலும், உயிரிழப்புகள் பல்லாயிரக்கணக்கில் இருந்து லட்சங்களாக உயர்ந்ததாக ஐக்கிய நாடுகள் சபையின் தரவுகள் தெரிவிக்கின்றன.

ரஷ்யா, இரான் மற்றும் இரான் ஆதரவு ஆயுதக் குழுக்கள் அசாத்தின் படைகளுடன் இணைந்து செயல்பட்டன. மற்றொருபுறம் துருக்கி மற்றும் வளைகுடா நாடுகள் ஆயுதமேந்திய கிளர்ச்சியாளர்களை ஆதரித்தன.

தொடக்கத்தில், அசாத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் ஜனநாயகம் மற்றும் அனைவருக்கும் சுதந்திரம் வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தாலும், விரைவில் அதில் மதம் சார்ந்த கோஷங்களும் எழத் தொடங்கின. மேலும் சன்னி முஸ்லிம்களின் பெரும்பான்மையைவிட அலாவைட் பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு அரசாங்கம் சாதகமாக இருப்பதாக சில எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.

பிராந்திய அளவிலான தலையீடு சமூக பிரிவினைவாதத்தை ஆழமாக்கியது. இஸ்லாமிய பிரிவுகள் அலாவைட் பிரிவுகளுக்கு எதிராக விரோதப் பேச்சுகளைத் தொடுத்தனர். ஹெஸ்பொலா தலைமையில் இயங்கும் இரானுக்கு விசுவாசமான ஷியா போராளிகள் அசாத்தின் அரசாங்கத்தை ஆதரிப்பதற்காக சிரியாவில் குவிந்தனர்.

கடந்த 2015ஆம் ஆண்டு, அசாத்தின் அரசாங்கம் சரிவின் விளிம்பில் இருப்பது போலத் தோன்றியது, அது நாட்டின் பல்வேறு பகுதிகளின் கட்டுப்பாட்டை இழந்தது. இருப்பினும், ரஷ்யாவின் ராணுவத் தலையீட்டால் நிலைமை தலைகீழாக மாறியது, அசாத் முக்கியப் பகுதிகளில் மீண்டும் கட்டுப்பாடு பெற முடிந்தது.

அசாத் ஆட்சியின் மூன்றாவது தசாப்தத்தில் சிரியாவில் மோசமான பொருளாதார நெருக்கடிகள் ஏற்பட்டபோதிலும், இந்த மிகப்பெரிய சவாலில் இருந்து அதிபர் தப்பியதாகத் தோன்றியது.

இருப்பினும், 2023ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், இஸ்ரேல் மீது ஹமாஸ் திடீர் தாக்குதலைத் தொடங்கியது, இதனால் காஸா போர் ஏற்பட்டது. அதன் விளைவுகளை லெபனானும் சந்திக்க வேண்டியதாக இருந்தது. குறிப்பாக அசாத்தின் கூட்டாளியான ஹெஸ்பொலாவை இது பெரிதும் பாதித்தது.

இந்தப் போர்ச் சூழல் ஹெஸ்பொலாவுக்கு அதன் தலைவர் ஹசன் நஸ்ரல்லாவின் மரணம் உட்படப் பெரும் இழப்புகளை ஏற்படுத்தியது.

லெபனானில் போர்நிறுத்தம் அமலுக்கு வந்த அதே நாளில், இஸ்லாமிய குழுவான ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் தலைமையிலான கிளர்ச்சிப் படைகள் சிரியாவில் திடீர் தாக்குதலைத் தொடங்கி, நாட்டின் இரண்டாவது நகரமான அலெப்போவை கைப்பற்றினர்.

தெற்குப் பகுதிகள் அரசின் கட்டுப்பாட்டில் இருந்து நழுவியதை அடுத்து அவர்கள் ஹமா மற்றும் பிற நகரங்களையும் தற்போது கைப்பற்றியுள்ளனர் .

இதேவேளை ‘இனி எதிர்காலம் நம்முடையதுதான்” என்று கூறியுள்ள `ஹயத் தஹ்ரிர் அல் ஷாம்’ தலைவர், இனி பின்வாங்குவதற்கு “இடமில்லை” என்று கூறியுள்ளார்.

ஹயத் தஹ்ரிர் அல் ஷாம் அமைப்பின் தலைவர் அபு முகமது அல்-ஜவ்லானி சிரியாவின் அரசுத் தொலைக்காட்சியில் இதைக் கூறியதாக ராய்ட்டர்ஸ் செய்தி முகமை செய்தி வெளியிட்டுள்ளது.

‘மோசமான ஆட்சியாளர்’ அதிபர் பஷார் அல் அசாத் சிரியாவை விட்டு வெளியேறிவிட்டார் எனக் கூறியுள்ள கிளர்ச்சிப் படைகள், நாடு ‘விடுவிக்கப்பட்டது’ எனவும் அறிவித்துள்ளன.

சிரியாவில் அசாத் ஆட்சி முடிவுக்கு வந்துள்ளதாகவும், அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட்டதாகவும் கிளர்ச்சிக் குழுவின் தலைவர்கள் அந்நாட்டின் அதிகாரப்பூர்வ தொலைக்காட்சி சேனல் மற்றும் வானொலியில் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சம்பளத்தை அதிகரித்து ஊழலை கட்டுப்படுத்துங்கள்!

0

அரச ஊழியர்களின் சம்பளத்தை குறைத்துவிட்டு ஊழலைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றால் அது முடியாது. சம்பளம் கணிசமான அளவு உயர்த்தப்பட்டு ஊழலை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டால் அதுவே சாத்தியமானது என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல்துறை பேராசிரியர் கோ. அமிர்தலிங்கம் தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரசாங்கம், ஊழலை கடுமையாக எதிர்க்கும் ஒரு அரசாங்கமாக இருப்பதால், இவ்வாறு கணிசமான சம்பள அதிகரிப்பை வழங்கி ஊழலை ஒழிக்க நடவடிக்கை மேற்கொள்ளும் போது அது சாத்தியமாகலாம் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

நாடாளுமன்றத் தேர்தலில் மக்களின் வாக்குகளால் 159 ஆசனங்களைப் பெற முடியாது என்பது கடந்த காலங்களில் தெளிவாக தெரிந்த விடயம். ஆனால் இம்முறை தேசிய மக்கள் சக்திக்கு கிடைக்கப்பெற்ற இந்த வெற்றி என்பது வழமைக்கு மாறான ஒன்று.

குறிப்பாக கடந்த கால ஆட்சிகளின் மீது இருந்த வெறுப்பை மக்கள் இதில் வெளிக்காட்டியிருக்கின்றார்கள். இதை உள்நாட்டு மக்கள் உட்பட வெளிநாட்டு அரசாங்கங்கள் மற்றும் முதலீட்டாளர்கள் ஆகியோர் நன்கு உணர்ந்திருக்கின்றார்கள்.

பலமான ஒரு அரசாங்கத்தை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அமைத்துள்ள நிலையில், ஒரு ஊழலற்ற, வீண் விரயமற்ற மற்றும் அதிகார துஷ்பிரயோகம் இல்லாத ஒரு அரசாங்கமாக இது நகரப் போகின்றது என்று அனைவரும் எதிர்பார்த்திருக்கின்றனர்.

குறிப்பாக அமைச்சர்களின் எண்ணிக்கை கடுமையாக குறைக்கப்பட்டுள்ளது. அத்துடன், செலவுகளை கடுமையாக குறைப்பதற்கு இந்த அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இவ்வாறான செலவுக் குறைப்புக்களைச் செய்வதன் மூலம் எங்களுடைய வரவு செலவுத் திட்டத்தில் ஏற்படும் பற்றாக்குறைகளை குறைக்க முடியும்.

அதேசமயம், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரச ஊழியர்கள் ஆகியோருக்கு சம்பளத்தை குறைவாகக் கொடுத்து ஊழலைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றால் அது சாத்தியமில்லாதது. சம்பளத்தை கணிசமாக அதிகரித்து அதன் பின்னர் ஊழலைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுமாயின் அது ஏற்றுக் கொள்ளக் கூடியது என குறிப்பிட்டுள்ளார்.

மக்கள் தொகை கணக்கெடுப்பு அதிகாரிகளினால் மக்கள் அச்சம்!

0

மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகளுக்காக வீடுகளுக்கு வரும் கணக்கெடுப்பாளர்களுக்கு தேவையான தகவல்களை வழங்குவதில் அச்சம் கொள்ளத் தேவையில்லை என மக்கள்தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சனத்தொகை கணக்கெடுப்புக்கு வரும் அதிகாரிகளுக்கு சில வீடுகளில் தகவல்கள் முறையாக வழங்கப்படுவதில்லை என்ற செய்திகள் வௌியாகியுள்ளதாக குறித்த திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அனோஜா செனவிரத்ன தெரிவித்தார்.

இருந்தபோதிலும் கணக்கெடுப்பு நடவடிக்கைகளுக்காக வீடுகளுக்கு வருகை தரும் அதிகாரிகள் தேவையற்ற விடயங்களையும், கணக்கெடுப்புக்கு அப்பாற்பட்ட கேள்விகளை வினவுவதாகவும் மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

குறிப்பாக எத்தனை கையடக்க தொலைபேசிகள் பாவிப்பதாகவும், வீடுகளில் ஏதேனும் போக்குவரத்து வாகனங்கள் இருப்பின் அதுபற்றிய மேலதிக விடயங்களை துருவித்துருவி வினவுவதாகவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.

இதனாலே மக்களுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளதாகவும், உரிய தகவல்களை அதிகாரிகளுக்கு வழங்க பயப்படுவதாகவும் தெரிவிக்கின்றனர்.

எவ்வாறாயினும், மக்கள்தொகை கணக்கெடுப்பு நடவடிக்கைகள் டிசம்பர் 23ஆம் திகதி நிறைவடையும் என எதிர்பார்ப்பதாக பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.

இந்த வருடத்திற்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு நடவடிக்கைகள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபர திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அனோஜா செனவிரத்ன மேற்கண்டவாறு தெரிவித்தார்.

வாகன இறக்குமதி தொடர்பில் வெளியான புதிய அப்டேட்!

0

வாகன இறக்குமதிக்கான காலக்கெடு தொடர்பில் சில நிறுவனங்களின் விளம்பரங்களின் நம்பகத்தன்மை குறித்து இலங்கை வாகன இறக்குமதியாளர் சங்கத்தின் தலைவர் பிரசாத் மானகே, சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

ஊடகங்களிடம் கருத்துரைத்துள்ள அவர், இதுபோன்ற அறிக்கைகள் பொதுமக்களை தவறாக வழிநடத்தும் என்று எச்சரித்துள்ளார்.

சரியான சரிபார்ப்பு இல்லாமல் இதுபோன்ற கூற்றுக்கள் கூறுவது நியாயமற்றது என்று குறிப்பிட்டுள்ளார்.

எனவே இதுபோன்ற தகவல்களை பரப்புவதற்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

தற்போதுள்ள வரி விதிமுறைகளுக்கு உட்பட்டு வாகன விலைகளை விளம்பரப்படுத்துவதையும், முன்கூட்டிய கொள்வனவு கட்டளைகளை செய்யுமாறு நுகர்வோரை வற்புறுத்துவதையும் பல நிறுவனங்கள் மேற்கொண்டு வருகின்றன.

இது வாடிக்கையாளர்களை தவறாக வழிநடத்தும் முயற்சியாகவே தாம் பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுபோன்ற விடயங்கள், தற்போது வாகனங்களை வைத்திருப்போர், தேவையற்ற அச்சத்தில் குறைந்த விலையில் தங்கள் வாகனங்களை விற்பனை செய்ய தூண்டும் என்றும், அவசர முடிவுகளை எடுக்க உந்துதலை அளிக்கும் எனவும் மானகே குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தம்மை பொறுத்தவரையில், வாகன இறக்குமதி கட்டுப்பாடுகள் படிப்படியாகவே தளர்த்தப்படும் என்றும், இதன்படி முதலில் பேருந்துகள் மற்றும் பாரவூர்திகளும், அதைத் தொடர்ந்து வான்கள் மற்றும் ஏனைய வணிக வாகனங்களுக்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்.

எனினும் இந்;த நடைமுறைகளுக்கான சரியான திகதி இன்னும் அறிவிக்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை வாகன இறக்குமதி தொடர்பில் அரசாங்கமோ அல்லது எந்தவொரு பொறுப்பான அதிகாரிகளோ இன்றுவரை உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மதுபான உரிமங்கள் தொடர்பில் தகவல் வெளியிட்ட ரணில்!

0

கடந்த அரசாங்கத்தின் போது வழங்கப்பட்ட மதுபானசாலை அனுமதிப்பத்திரங்கள் எவையும் இரகசியமானவை அல்ல எனவும், அடுத்த ஆண்டு இன்னும் 300 உரிமங்களை வழங்க ஏற்பாடு செய்திருந்தோம் என்றும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

கடந்த அரசாங்கம் மதுபான அனுமதிப்பத்திரங்களை இலஞ்சமாக வழங்கியதாக எழுந்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,

ஒவ்வொரு அனுமதிப்பத்திரத்திற்கும் அரசாங்கம் கட்டணத்தை அறவிட்டுள்ளது. அவை சட்டவிரோதமாகவோ வழங்கப்படவில்லை.

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கோ அல்லது வேறு எவருக்கோ இலஞ்சமாக மதுபான உரிமங்கள் வழங்கப்படவில்லை.

ஒவ்வொன்றும் 10, 15, 20 மில்லியனுக்கு விற்கப்பட்டது. நேரடி வரிகள் இல்லாமல் வருவாய் ஈட்டுவதற்கான வழிகள் இவை.

இந்த அனுமதிப்பத்திரங்களில் அரசாங்கத்தின் வருமானத்தில் நான்கிலிருந்து ஐந்து பில்லியன் வரை சேர்த்திருக்கலாம். நான் ஏன் யாருக்கும் இலஞ்சம் கொடுக்க வேண்டும்? இவை எதுவும் இலவசமாக வழங்கப்படவில்லை.

சில எம்.பி.க்கள் உரிமம் பெற சிலரை அனுப்பி வைத்தனர். ஆனால் நான் யாருக்கும் கொடுக்கவில்லை. அதனால்தான் யாரும் தனிப்பட்ட முறையில் பணம் சம்பாதிக்கவில்லை” என்றார்.

ஜனவரி முதல் புதிய சட்டம். ஆப்பு ரெடி!

0

எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் 12 வயதுக்கும் கீழ்ப்பட்ட சிறுவர்களை, விளம்பரங்களுக்காக பயன்படுத்த முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார மற்றும் ஊடக பிரதி அமைச்சர் வைத்தியர் அசங்க விஜேமுனி இந்த விடயத்தை நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தல் விரைவில் வெளியிடப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக 12 வயதுக்கும் குறைந்த சிறுவர் சிறுமியர் விளம்பர பிரசார நடவடிக்கைகளுக்காக ஈடுபடுத்தப்படுவதனை நாம் ஜனவரி மாதம் 1ம் திகதியுடன் நிறுத்துவோம் என அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த கால அரசாங்கங்கள் கடந்த 7 – 8 ஆண்டுகளாகவே இந்த நடைமுறையை நடைமுறைப்படுத்த காலம் தாழ்த்தி வந்ததாகத் தெரிவித்துள்ளார்.

எனினும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இந்த நடைமுறையை எதிர்வரும் 2025ம் ஆண்டு ஜனவரி மாதம் 1ம் திகதி தொடக்கம் அறிமுகம் செய்வதாகத் பிரதி அமைச்சர் அசங்க விஜேமுனி தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றில் சரமாரியாக கேள்வி எழுப்பிய கபீர் ஹாஷிம்!

0

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு 2024 ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகைக்கு நிகரான தொகையே 2025 ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களுக்கு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவிற்கும் இன்று சமர்ப்பிக்கப்பட்ட இடைக்கால கணக்கறிக்கை ஊடாக ஒதுக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் தெரிவித்துள்ளார்.

இன்று பாராளுமன்றத்தில் இடைக்கால கணக்கறிக்கை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், அவ்வாறு ஒதுக்கப்பட்ட தொகை 1.4 டிரில்லியன் ரூபாவாகும் என சுட்டிக்காட்டினார்.

“2024ஆம் ஆண்டு ஜனாதிபதியின் வரவு செலவுத் திட்டத்தின்படி ரணில் விக்கிரமசிங்கவுக்கு 1.4 டிரில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டிருந்தது.

அதேபோன்று 2025ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான 4 மாதங்களுக்கு  இடைக்கால கணக்கறிக்கையில் 1.4 டிரில்லியன் ரூபா ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.

எண் ஒன்றுதான், வித்தியாசம் இல்லை. எங்கே குறைக்கப்பட்டுள்ளது. சிஸ்டம் நோ சேன்ஞ், அநுர சேன்ஞ். எங்களுக்கு விளக்கவும்.

சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கை தடையின்றி நடைமுறைப்படுத்தப்படும் என ஜனாதிபதி தனது உரையில் தெரிவித்தார்.

அது நல்லது. IMF ஒப்பந்தத்தின் கட்டமைப்பை நாங்கள் ஏற்றுக்கொண்டாலும், அதன் உள்ளடக்கங்களில் சிலவற்றை மாற்றுவோம் என்று கூறியிருந்தோம்” என்றார்

பார் அனுமதி இரத்து செய்யப்படுமா, இல்லையா?

0

சட்ட விரோதமான முறையில் வழங்கப்பட்டுள்ளBar Permit களை உடன் இரத்து செய்வதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என பாராளுமன்றத்தில் நேற்று (04) சாணக்கியன் தெரிவித்தார்.

Bar Permit பெற்றுக் கொண்டமை தொடர்பான தகவல்களை வழங்குமாறு தான் எழுப்பிய கேள்விக்கு அமைய Chief Government Whips அவர்கள் கடந்த 03 ஆம் திகதி மாலை அந்த தகவல்களை வெளியிடுவதாக கூறியிருந்தார். அதற்கமைவாக ஆளும் கட்சியினுடைய சபைக்குரிய தலைவர் பிமல் ரத்னாயக்க அவர்கள் நேற்று மாலை வேளையில் அப் பட்டியலினை வெளியிட்டிருந்தார். 

அந்தப் பட்டியலில் Bar Permit பெற்றுக் கொண்டோருடைய பெயர்கள் மாத்திரம் காணப்பட்டதே தவிர வேறு தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. ஆகவே இவ்வாறான விண்ணப்பங்கள் வருகின்ற பொழுது பாராளுமன்ற உறுப்பினர்களால் வழங்கப்பட்ட சிபார்சு கடிதங்கள், ஏனைய விண்ணப்ப விடயங்கள் தற்போது எங்கே உள்ளதென்பதை கண்டறிவதற்கான விசாரணைகள் பொலிஸ் உத்தியோகத்தர்கள் அல்லது CID அல்லது ஜனாதிபதி செயலகத்தினால் மேற்கொள்ளப்படுகின்றதா? என்பது தொடர்பான தகவல்களை வெளியிட வேண்டும் என அவர் தெரிவித்தார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் மாத்திரம் 18 Bar Permits வழங்கப்பட்டுள்ளது. அங்கு ஒரு இலட்சத்திற்கும் அதிகமான வாக்காளர்கள் காணப்படுகின்றனர். ஆகவே 5,000 வாக்காளர்களுக்கு 1 Bar எனும் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது. 

இவ்வாறு வழங்கப்பட்டுள்ள Bar Permit களை இரத்து செய்துள்ளீர்களா? இல்லையா? என்பதற்கான பதிலை கூறுவதுடன் அவ்வாறு இரத்து செய்யாதுவிடின் வழங்கப்பட்ட Bar Permit களை உடன் இரத்து செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். Bar Permit தொடர்பிலான இந்த கேள்வியை எழுப்புமாறு மக்கள் என்னிடம் கேட்டுக் கொண்டதற்கு இணங்கவே இச் சபையிலே இக் கேள்வியை தொடுத்தேன் எனவும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்தார்.

கனடாவை விட்டு வௌியேறுமாறு அதிரடி அறிவிப்பு!

0

கனடாவில் 2025 ஆம் ஆண்டு இறுதியில் பாரிய அளவிலான புலம்பெயர்ந்தவர்கள் வெளியேற வேண்டிய நிலை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் அந்நாட்டு புலம்பெயர்தல் துறை அமைச்சர் மார்க் மில்லர் தெரிவித்துள்ளார்.

அவர்கள் வெளியேற வேண்டிய நிலைக்கு அவர்களுக்கு வழங்கப்பட்ட பல மில்லியன் தற்காலிக அனுமதிகள் காலாவதியாக உள்ளமையே காரணம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாராளுமன்ற புலம்பெயர்தல் குழு முன் விளக்கமளித்த மார்க் மில்லர்,

தற்காலிக அனுமதிகள் காலாவதியாகும் பெரும்பாலானோர் கனடாவில் இருந்து தாமாகவே வெளியேறக்கூடும் என கூறிய நிலையில், கொன்சர்வேட்டிவ் கட்சி பாராளுமன்ற உறுப்பினரான ரொம், சுமார் 4.9 மில்லியன் பேரின் தற்காலிக அனுமதிகள் காலாவதி ஆகும் நிலையில், அவர்கள் நாட்டைவிட்டு வெளியேறுவதை கனடா அரசு எப்படி உறுதி செய்ய உள்ளது என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த மில்லர்,

நமது நாட்டுக்குள் வருவோரில் பெரும்பாலானோர் தற்காலிகமாக வந்துள்ளதால், அவர்களுடைய அனுமதிகள் காலாவதியானபின் இங்கு தங்க அவர்களுக்கு உரிமை இல்லை, ஆகவே அவர்கள் தாமாகவே வெளியேறிவிடுவார்கள் என்றார்.

அப்படி தாமாக வெளியேறாதவர்களை புலம்பெயர்தல் அமைச்சகம் எப்படி கையாளப்போகிறது என ரொம் விடாமல் கேட்க, அவர்களை வெளியேற்ற கனடா எல்லைப் பாதுகாப்பு ஏஜன்சிக்கு உரிமை உள்ளது என்றார் மில்லர்.

இந்த நிலையில் தற்காலிக அனுமதி பெற்று கனடாவில் வசிக்கும் புலம்பெயர்ந்தவர்களுக்கு பெரும் சிக்கல் ஏற்படப்போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.