Saturday, March 14, 2026
Sponsored advertisementspot_img
Home Blog Page 216

நாட்டின் சுதந்திர தினம் இவர்களுக்கு கரி நாளாம்!

0

சுதந்திர தினம் தமிழர் தேசத்தின் கரிநாள் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் கொக்குவிலில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று (03) மாலை நடாத்திய ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார். 

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

சிறிலங்காவின் சுதந்திர தினத்தை தமிழ்த் தேசிய மக்கள் சுதந்திர தினமாக கருதுவது கிடையாது. சிறிலங்காவிற்கு சுதந்திரம் கிடைத்த பின்னர் கொண்டு வரப்பட்ட புதிய அரசியலமைப்பை தமிழ் மக்கள் நிராகரித்தே வந்திருக்கின்றனர்.

அந்த அரசியலமைப்புக்கள் மூன்றும் ஒற்றையாட்சி அரசியலமைப்பின் அடிப்படையில் கொண்டு வரப்பட்டதை தமிழ் மக்கள் நிராகரித்திருந்தனர். 

அதேபோன்று, இப்போதும் புதிய அரசியலமைப்பு கொண்டு வரும் நடவடிக்கைகள் தான் முன்னெடுக்கப்படுகின்றன. இவ்வாறான ஒற்றையாட்சி அரசியலமைப்பை தமிழ் மக்கள் எப்போதும் நிராகரிப்பார்கள்.

அடிமை சாசனத்தின் அடையாளமாக இருக்கின்ற ஒற்றையாட்சி அடையாளங்களை நிராகரிக்கிற அதேவேளையில் தமிழில் தேசிய கீதம் பாடுவதால் எந்தவித மாற்றமும் ஏற்படப் போவதில்லை.

இவ்வாறான நிலைமையில் சிறிலங்காவின் சுதந்திர தினத்தை கரிநாளாக பார்ப்பது எம்முடைய மரபாக இருக்கிறது. 

அந்த வகையில் சிறிலங்காவின் சுதந்திர தினத்தை தமிழ் மக்கள் கரிநாளாக அனுஷ்டித்து வருவதுடன், தமிழர் தாயக நிலப்பரப்பில் நாளை கரிநாள் போராட்டங்கள் நடைபெறவுள்ளன எனவும் அவர் தெரிவித்தார்.

இலங்கை திருநாட்டின் ஒரு பாராளுமன்ற உறுப்பினராக இருந்துகொண்டு, தேசியத்தை அவமதிக்கும் வகையில் இவ்வாறு கருத்து தெரிவித்திருப்பது பெரும்பான்மை சமூகத்தின் மத்தியில் பெரும் கோபத்தை உண்டுபண்ணியுள்ளதுடன், இனங்களுக்கிடையில் மேலும் முருகளை உண்டுபண்ணும் செயற்பாடாகவே பார்க்கப்படுகின்றது.

வெள்ளவத்தை ஜும்மா பள்ளியில் விஷேட நிகழ்வுகள்!

0

77 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் முகமாக இன்று (04) வெள்ளவத்தை ஜும்மா பள்ளிவாசலில் தேசிய கொடியேற்றத்துடன் இஸ்லாமிய சமய நிகழ்வுகள் இன்று அதிகாலை இடம்பெற்றது.

இதில் தேசிய ஒருமைப்பாட்டு பிரதி அமைச்சர் முனீர் முளப்பர் மற்றும் பிரதி சபாநாயகர் வைத்தியர் ரிஸ்வி சாலி ஆகியோர் விஷேடமாக பங்கேற்றனர்.

குறித்த நிகழ்வில் விஷேட துஆ பிரார்த்தனை இடம்பெற்றதுடன், 77 ஆவது சுதந்திர தினத்தை மையப்படுத்தி நாட்டின் ஒருமைப்பாடு, எதிர்கால முன்னெடுப்பு மற்றும் சுபீட்சம் ஆகியன பற்றியும் கலந்துரையாடப்பட்டது.

மேலும் இந்நிகழ்வில் முஸ்லிம் சமய பண்பாட்டலுவலகள் திணைக்கள பணிப்பாளர் எம். எஸ். எம் நவாஸ் உட்பட திணைக்கள உத்தியோகத்தர்கள், ஜம்மிய்யதுல் உலமா சபை அங்கத்தவர்கள், வெள்ளவத்தை ஜும்மா பள்ளிவாசலின் நிர்வாகிகள் மற்றும் பலர் பங்குபற்றியிருந்தனர்.

திடீரென உயிரிழந்த இரு வெளிநாட்டவர்கள்!

0

கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள விடுதியில் தங்கியிருந்த ஜெர்மன் நாட்டு பிரஜையும் திடீரென ஏற்பட்ட நோய் நிலைமை காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த சமயம் இன்று (03) உயிரிழந்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற இந்த சம்பவத்தில் பிரிட்டிஷ் பெண் ஒருவர் உயிரிழந்திருந்தார்.

குறித்த விடுதியில் தங்கியிருந்த ஒரு பிரித்தானிய பெண் மற்றும் ஜெர்மன் தம்பதியினருக்கும் திடீரென வாந்தி ஏற்பட்டதால், அவர்களை மருத்துவமனையில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. எனினும் 24 வயதான பிரித்தானிய பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த சம்பவம், உணவு விஷமானதால் ஏற்பட்டதா? அல்லது கொலையா? என்பதை அறிய அடுத்தக்கட்ட விசாரணைகள் நடைபெற்று வருவதுடன், அதற்காக மேலும் சில வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்ற நிலையில் ஜெர்மன் நாட்டு பிரஜையும் இன்று உயிரிழந்துள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

8 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்!

0

பாடசாலை முடிந்து வீட்டுக்கு திரும்பிய 8 வயது சிறுமி ஒருவரை கேக் கொடுத்து பாலியல் துஷ்பிரயோகம் செய்த சம்பவமொன்று இந்தியாவில் பதிவாகியுள்ளது.

இந்தியாவின் கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டம் புறநகர் பகுதியில் வசித்து வருபவர் 8 வயது சிறுமி.

மேலும் அந்த பகுதியில் உள்ள அரசாங்க பாடசாலையில் 3-ம் வகுப்பு படித்து வரும் குறித்த சிறுமி கடந்த 31-ஆம் திகதி பாடசாலை முடிந்து வீட்டுக்கு புறப்பட்ட போது, பாடசாலை வளாகத்துக்குள் புகுந்த 3 மர்ம நபர்கள், சிறுமிக்கு சாப்பிட கேக் கொடுத்துள்ளனர். பின்னர் சிறிது நேரம் சிறுமியுடன் விளையாடிய அவர்கள், திடீரென கத்தியை காட்டி சிறுமிக்கு கொலை மிரட்டல் விடுத்தனர்.

இதனால் பயந்துபோன சிறுமி செய்வதறியாது திகைத்து நின்றாள். அப்போது அந்த மர்ம நபர்கள் 3 பேரும் சிறுமியை பாடசாலை வளாகத்தில் உள்ள மறைவான இடத்துக்கு தூக்கிச்சென்று அங்கு வைத்து கத்தி முனையில் பாலியல் பலாத்காரம் செய்தனர்.

பின்னர் நடந்த விஷயத்தை யாரிடமும் சொல்லக்கூடாது என்றும், சொன்னால் கொன்று விடுவோம் என்றும் மிரட்டி சிறுமியை அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இதனால் பயந்து போன அந்த சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமையை யாரிடமும் கூறாமல் இருந்துவிட்டாள்.

இந்த நிலையில் நேற்று காலையில் சிறுமிக்கு பயங்கர வயிற்று வலியும், இரத்தப்போக்கும் ஏற்பட்டது. இதனால் பதறிப்போன சிறுமியின் சித்தி, அவளிடம் விசாரித்தார். அப்போது சிறுமி தன்னை 3 பேர் சேர்ந்து கூட்டு பலாத்காரம் செய்துவிட்ட கொடுமையை கண்ணீர் மல்க கூறினாள்.

அதையடுத்து சிறுமியின் சித்தி உடனடியாக இதுபற்றி மண்டியா டவுனில் உள்ள மகளிர் பொலிசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் பொலிசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் அவர்கள் சிறுமியை மீட்டு சிகிச்சைக்காக மண்டியா மிம்ஸ் வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

அங்கு சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து பொலிசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த அந்த மர்ம நபர்களை வலைவீசி தேடிவருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நிர்வாணமாக விருது விழாவுக்கு வந்த பிரபலம்!

0

இசை உலகில் மிகப்பெரிய விருதுகளில் ஒன்றாக கருதப்படும் கிராமி விருதுகள் 1959-ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த விருதானது உலகம் முழுவதும் சிறந்த பாடல், ஆல்பம், இசையமைப்பாளர்கள், பாடல் ஆசிரியர்கள் உள்ளிட்ட இசைக்கலைஞர்களை அங்கீகரிக்கும் விதமாக வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் 67-வது ஆண்டு கிராமி விருது வழங்கும் விழா லோஸ் ஏஞ்சல்சில் நடைபெற்றது.

இதில் பாடகர் கன்யே வெஸ்ட் மற்றும் அவரது மனைவி பியான்கா சென்சோரி உடன் கலந்து கொண்டார். அப்போது மிகவும் மெல்லிதாக உடல் பாகங்கள் முழுவதுமாக வெளியே தெரிய கூடிய உடையை பியான்கா சென்சோரி அணிந்து வந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பியான்கா சென்சோரி கிட்டத்தட்ட நிர்வாணமாக காட்சியளித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. கிட்டத்தட்ட நிர்வாணமாக வந்ததற்காக பியான்கா சென்சோரி சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.

இலங்கையில் காலூண்டும் அமீரகம்!

0

நாட்டின் துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகளுக்காக முதலீடு செய்வதற்கு தயாராக இருப்பதாக இலங்கையின் ஐக்கிய அரபு அமீரகத்தின் தூதுவர் ஹாலித் அல் அமீரி தெரிவித்தார்.

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க மற்றும் இலங்கையின் ஐக்கிய அரபு அமீரகத்தின் தூதுவருடன் அண்மையில் துறைமுக வளாகத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போது இது தொடர்பாக குறிப்பிட்டார்.

இதன்போது தூதுவர் நாட்டின் புதிய சிட்டி டெர்மினல் (கொழும்பு துறைமுக நகரத்தில் நிர்மாணிக்கப்படக் கூடிய விமான நிலைய முனையத்தின்) முதலீட்டிற்கு இணக்கம் தெரிவித்தார்.

நுரைச்சோலையில் சிக்கிய கடத்தல் பொருட்கள்!

0

நொரச்சோலை ஆலங்குடா கடற்பரப்பில் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட அதிரடி தேடுதல் நடவடிக்கையின் போது தீவுக்குள் கடத்த முயன்ற சுமார் 496 கிலோகிராம் உலர் இஞ்சி மற்றும் 515 ஜோடி காலணிகள் கைப்பற்றப்பட்டன.

இந்த நடவடிக்கையின்போது டிங்கி படகு ஒன்றுடன் 02 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சட்டவிரோதமான பொருட்களின் ஊடுருவலைத் தடுப்பதற்காக தீவின் கரையோரப் பகுதிகளில் ரோந்து மற்றும் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தபோதே குறித்த பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

இது வடமேற்கு கடற்படை கட்டளையில் SLNS விஜயா மூலம் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்த நடவடிக்கையின்போது 515 ஜோடி செருப்புகள் சுமார் 496 கிலோ எடையுள்ள 16 சாக்குகளில் மறைக்கப்பட்டிருந்ததுடன், உலர் இஞ்சி 06 பொதிகளில் மறைக்கப்பட்டிருந்தன.

இந்த கடத்தல் நடவடிக்கைக்காக பயன்படுத்தப்பட்ட டிங்கி படகும், அதனுடன் தொடர்புடைய 02 சந்தேக நபர்களையும் கற்பிட்டி கடற்படையினர் கைப்பற்றினர்.

இந்த நடவடிக்கையில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 33 மற்றும் 46 வயதுடைய கல்பிட்டியில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். 02 சந்தேக நபர்களும் கைப்பற்றப்பட்ட பொருட்களுடன் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கட்டுநாயக்க சுங்கத் தடுப்பு அலுவலகத்தில் ஒப்படைக்கப்படவுள்ளனர்.

ஆனமடுவ வைத்தியசாலைக்கு கடற்படை உதவி!

0

சுகாதார அமைச்சின் மேற்பார்வையில் இலங்கை கடற்படையின் சமூகப் பணித் திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட மருத்துவ தரத்தில் அமையப்பெற்ற சுத்திரீகரிக்கப்பட்ட குடிநீர் மையம், நேற்று (2025 பெப்ரவரி 01) ஆனமடுவ ஆதார வைத்தியசாலையின் இரத்த சுத்தீகரிப்பு (hemodialysis) பிரிவில் நிறுவப்பட்டது.

இது கடற்படையின் உயர் தொழிநுட்ப பங்களிப்புடன் இந்த சமூகப் பணித் திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட முப்பத்தொறாவது (31) மருத்துவ தர சுத்திரீகரிக்கப்பட்ட குடிநீர் மையமாகும்.

இத் திட்டத்தை ஆனமடுவ ஆதார வைத்தியசாலையின் இரத்த சுத்தீகரிப்பு (hemodialysis) பிரிவில் நிறுவுவதன் மூலம், குறித்த பிரிவில் பத்து (10) சிறுநீரக நோயாளிகளுக்கு ஒரே நேரத்தில் சிகிச்சை அளிக்க முடியும், மேலும் இருபது (20) நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க கூடிய தன்மையும் உள்ளது.

மேலும், ஆனமடுவ ஆதார வைத்தியசாலையில் நிறுவப்பட்ட மருத்துவ தரத்தில் அமையப்பெற்ற குறித்த சுத்திரீகரிக்கப்பட்ட குடிநீர் மையத்தை வைத்தியசாலைக்கு கையளிக்கும் நிகழ்வில், இந்த சமூகப் பணித் திட்டத்தின் வெற்றிக்கு தொடராக பங்களித்து வரும் அனைத்து பங்குதாரர்களும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

மதுரங்குளியில் சிக்கிய ஒரு தொகை கஞ்சா!

0

இலங்கை கடற்படை, மதுரங்குளிய காவல்துறையினருடன் இணைந்து 2025 ஜனவரி 31 ஆம் திகதி மதுரங்குளிய, நவதங்குளம் பகுதியில் நடத்தப்பட்ட கூட்டுத் தேடுதல் நடவடிக்கையின் போது, கேரள கஞ்சா ஒரு (01) கிலோகிராம் ஐநூற்று எண்பத்தைந்து (585) கிராமுடன் ஒரு சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டதுடன், ஒரு மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டது.

அதன்படி, வடமேற்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் தம்பபன்னி நிறுவனம், மதுரங்குளிய காவல்துறையினருடன் இணைந்து நடத்தப்பட்ட இந்த கூட்டுத் தேடுதல் நடவடிக்கையின் போது, ஒரு (01) கிலோகிராம் ஐநூற்று எண்பத்தைந்து (585) கிராம் எடையுள்ள கேரள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது, இதன் மொத்த மதிப்பு ஆறு (06) இலட்சத்திற்கும் அதிகமாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.

மேலும், கடற்படையினரால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கோட்டந்தீவு, பெரியபாடு பகுதியைச் சேர்ந்த 43 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். மேலும், சந்தேக நபர், கேரள கஞ்சா மற்றும் மோட்டார் சைக்கிளை மதுரங்குளி காவல் நிலையத்தில் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்க பட்டது.

இலங்கை வந்த பாக்கிஸ்தான் போர்க்கப்பல்!

0

பாகிஸ்தான் கடற்படைக் கப்பலான ‘PNS ASLAT’ இன்று (2025 பெப்ரவரி 01) காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது, மேலும் கடற்படை மரபுகளுக்கமைய இலங்கை கடற்படை கப்பலை வரவேற்றது.

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ள ‘PNS ASLAT’ என்ற Frigate (FFG) ரக கப்பல் 123 மீட்டர் நீளமும் மொத்தம் 243 உறுப்பினர்களை உள்ளடக்கியதுடன், கப்பலின் கட்டளை அதிகாரியாக கெப்டன் MUHAMMAD AZHAR AKRAM கடமைப்புறிகிறார்.

மேலும், ‘PNS ASLAT’ போர்க்கப்பல் நாட்டில் தங்கியிருக்கும் காலப்பகுதியில், கப்பலின் அங்கத்தவர்கள் தீவின் முக்கிய இடங்களை பார்வையிட பல பகுதிகளுக்குச் செல்ல திட்டமிடப்பட்டுள்ளனர்,

மேலும், ‘PNS ASLAT’ என்ற கப்பல் 2025 பெப்ரவரி 4 அன்று தீவிலிருந்து புறப்படவுள்ளது. மேலும், இலங்கை கடற்படை கப்பல் ஒன்றுடன் மேற்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான கடற்கரையில், ஒரு கடற்படைப் பயிற்சியில் (PASSEX) ஈடுபடவும் திட்டமிட்டுள்ளனர்.