Friday, September 12, 2025
Sponsored advertisementspot_img
Home Blog Page 27

நிறுவனத்தில் 30 நிமிடம் பிரேக் இதுக்கா?

ஸ்வீடனில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனம் பணியின்போது தனது ஊழியர்கள் சுயஇன்பம் செய்து கொள்ள தினமும் 30 நிமிடம் பிரேக் வழங்குகிறது. மேலும் சுயஇன்பத்துக்காக தனி அறையை ஏற்படுத்தி வழங்கி இருப்பது பலருக்கும் வியப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் தான் அதன் பின்னணி குறித்த முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளது.

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் லஞ்ச் பிரேக் இருப்பதை நாம் கேள்வி பட்டு இருப்போம். சில தனியார் நிறுவனங்களில் டீ பிரேக் கூட அதிகாரப்பூர்வமாக வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் ‛சுயஇன்பம்’ செய்து கொள்ள அலுவலகத்தில் 30 நிமிடம் பிரேக் வழங்கப்படுகிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?

ஆம், நம்பித்தான் ஆக வேண்டும். இந்த வினோத ‛பிரேக்’கை வழங்கி உள்ள நிறுவனத்தின் பெயர் எரிகா லஸ்ட் பிலிம்ஸ். இந்த நிறுவனம் ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் 40க்கும் அதிகமான ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த நிறுவனத்தின் நிறுவனராக எரிகா லஸ்ட் இருக்கிறார்.

இந்நிலையில் தான் கொரேனாா பரவலுக்கு பிறகு ஊழியர்கள் மன அழுத்தத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டு வருவதாக எரிகா லஸ்ட் உணர்ந்தார். ஏனென்றால் மனஅழுத்தத்தால் அவரும் பாதிக்கப்பட்டார். அதுமட்டுமின்றி ஊழியர்களின் மனஅழுத்தம் நேரடியாக அவர்களின் பணியை பாதித்தது.

இதனால் எரிகா லஸ்ட் ஊழியர்களின் மனஅழுத்தத்தை குறைத்து, அவர்கள் சிறப்பாக பணியாற்ற வேண்டிய சூழலை உருவாக்குவதற்கான நடவடிக்கையை தொடங்கினர். அதன் ஒருபகுதியாக தினமும் பணியின்போது ‛சுயஇன்பம்’ செய்து கொள்ள 30 நிமிடம் ‛பிரேக்’ வழங்கி வருகிறார்.

மேலும் ‛சுயஇன்பம்’ செய்து கொள்ள பணியாளர்களுக்கு தனியாக அறை ஒன்றையும் அவர் ஒதுக்கி வழங்கி உள்ளார். அந்த அறையை சுயஇன்ப நிலையம் என்று ஊழியர்கள் அழைக்கின்றனர். இதன்மூலம் ஊழியர்கள் மனஅழுத்தத்தில் இருந்து விடுபட்டு பணியை உற்சாகத்துடன் செய்வதாக அவர் கூறியுள்ளார். முதலில் இந்த சுயஇன்ப ‛பிரேக்கை’ அவர் சோதனை முயற்சியாக கொண்டு வந்தார். அவரது இந்த சோதனை முயற்சி வெற்றி பெற்ற நிலையில் தற்போது அதனை நிரந்தரமாக்கி உள்ளார்.

5 புதிய தூதுவர்கள், உயர்ஸ்தானிகர் ஒருவர் நியமனம்!

0

ஐந்து புதிய தூதுவர்கள், உயர்ஸ்தானிகர் ஒருவர் மற்றும் அமைச்சின் செயலாளர் ஆகியோரின் நியமனங்களுக்கு உயர் பதவிகள் பற்றிய குழு அனுமதி வழங்கியுள்ளது.

ஐந்து புதிய தூதுவர்கள், உயர்ஸ்தானிகர் ஒருவர் மற்றும் அமைச்சின் செயலாளர் ஆகியோரின் நியமனங்களுக்குக் கடந்த 24ஆம் திகதி பாராளுமன்றத்தில் கூடிய உயர் பதவிகள் பற்றிய குழுவில் அனுமதி வழங்கப்பட்டது.

இதற்கு அமைய, இந்தோனேசியாவுக்கான இலங்கைத் தூதுவராக செல்வி சுமதுரிகா சஷிகலா பிரேமவர்தன அவர்களின் நியமனத்திற்கு உயர் பதவிகள் பற்றிய குழு அனுமதி வழங்கியது.

அத்துடன், பிரேசில் கூட்டாட்சிக் குடியரசுக்கான இலங்கைத் தூதுவராக திருமதி. சி.ஏ.சமிந்த இனோகா கொலன்னே அவர்களின் நியமனத்திற்கும், மாலைதீவுக் குடியரசுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராக திரு. மொஹமட் ரிஸ்வி ஹசன் அவர்களை நியமிப்பதற்கும், துருக்கிக் குடியரசுக்கான இலங்கைத் தூதுவராக திரு. எல்.ஆர்.எம்.என்.பி.ஜீ.பீ கதுருகமுவ அவர்களை நியமிப்பதற்கும், நேபாளத்துக்கான இலங்கைத் தூதுவராக திருமதி. றுவன்தி தெல்பிட்டியவை நியமிப்பதற்கும், தென்கொரியக் குடியரசின் இலங்கைத் தூதுவராக திரு. மாரிமுத்து பத்மநாதன் அவர்களை நியமிப்பதற்கும் உயர் பதவிகள் பற்றிய குழு அனுமதி வழங்கியுள்ளது.

இதேவேளை, நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் செயலாளராக ஜனாதிபதி சட்டத்தரணி செல்வி. அயேஷா ஜினசேனவின் நியமனத்திற்கும் உயர் பதவிகள் பற்றிய குழு அனுமதி வழங்கியது.

கௌரவ பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய அவர்களின் தலைமையில் கூடிய உயர் பதவிகள் பற்றிய குழுக் கூட்டத்தில் குழுவின் உறுப்பினர்களான கௌரவ அமைச்சர்களான குமார ஜயக்கொடி, (கலாநிதி) அனில் ஜயந்த, சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார, (கலாநிதி) உபாலி பண்ணிலகே, சரோஜா சாவித்திரி போல்ராஜ், கௌரவ பிரதியமைச்சர் (வைத்தியர்) ஹன்சக விஜேமுனி, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான ரிஷாட் பதியுதீன், சட்டத்தரணி தயாசிறி ஜயசேகர, ஜனாதிபதி சட்டத்தரணி எம்.நிசாம் காரியப்பர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

பிரதேச சபை எதிர்க்கட்சித் தலைவர் குடும்பத்துடன் தற்கொலை!

0

யடிநுவர பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவர், அவரது மனைவி மற்றும் மகள் ஆகியோர் அவர்களது வீட்டில் சடலங்களாக மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

யடிநுவர, யஹலதென்ன பகுதியில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவரின் வீட்டில் இந்தச் சடலங்கள் கண்டு பிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர்கள் யடிநுவர பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவர் (வயது 52), அவரது மனைவி (வயது 44) மற்றும் அவர்களது மகள் (வயது 17) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

யடிநுவர பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையிலும், அவரது மனைவி மற்றும் மகளின் சடலங்கள் வீட்டின் அறைகளில் இருந்தும் கண்டு பிடிக்கப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

சம்பவம் குறித்து பேராதனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

தேசிய போட்டிக்கு தெரிவான பு/எருக்கலம்பிட்டி பாடசாலை!

பாடசாலைகளுக்கிடையிலான மாகாண மட்ட சமுக விஞ்ஞான போட்டியில் புத்தளம் எருக்கலம்பிட்டி பாடசாலை வெற்றிபெற்று தேசிய போட்டிக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளது.

பாடசாலைகளுக்கிடையிலான வடமேல் மாகாண மட்ட சமுக விஞ்ஞான போட்டி அண்மையில் குருநாகலில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.

வடமேல் மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தி ஏராளமான பாடசாலைகள் குறித்த போட்டியில் பங்குபற்றி இருந்தன.

அந்த வகையில் நடைபெற்று முடிந்த மாகாண மட்ட சமுக விஞ்ஞான போட்டியில், புத்தளம் எருக்கலம்பிட்டி பாடசாலை மாணவர்கள் மூன்று பேர் வெற்றிபெற்று தேசிய மட்ட போட்டிக்கு தெரிவாகியுள்ளனர்.

தரம் 6 பிரிவில் இடம்பெற்ற போட்டியில் புத்தளம் எருக்கலம்பிட்டி பாடசாலை மாணவன் M.A அப்துல் உமர் முதலாமிடம் பெற்றுக்கொண்டதுடன், தரம் 8 பிரிவில் M.K.M. சயான் முதலாமிடம் பெற்று தேசிய மட்ட போட்டிக்கு தெரிவாகியுள்ளனர்.

இதேவேளை தரம் 7 பிரிவில் இடம்பெற்ற போட்டியில் புத்தளம் எருக்கலம்பிட்டி பாடசாலை மாணவன் M.I.M. ராஹில் இரண்டாமிடத்தை பெற்று தேசிய மட்ட போட்டிக்கு தெரிவாகியுள்ளார்.

அந்த வகையில் குறித்த சமுக விஞ்ஞான போட்டியில் புத்தளம் எருக்கலம்பிட்டி பாடசாலை சார்பாக இரண்டு பேர் முதலாமிடம் பெற்றுருக்கொண்டதுடன், ஒருவர் இரண்டாமிடத்தை பெற்று தேசியமாட்ட போட்டிக்கு தெரிவாகி, பாடசாலைக்கும், பாடசாலை சமூகத்திற்கும் நேர்பெயரை பெற்றுக்கொடுத்துள்ளனர்.

இப்போட்டியில் 4 மாணவர்கள் கலந்துகொண்டு மூன்று மாணவர்கள் தேசியமட்ட போட்டிக்கு தெரிவாகியுள்ளமை விஷேட அம்சமாகும்.

இம் மாணவர்களின் வெற்றிக்கு பாடசாலையும், பாடசாலை சமூகமும், ஊர் மக்களும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளதுடன், தேசிய மட்ட போட்டியிலும் வெற்றிபெற வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர்.

போட்டியில் பங்குபற்றி வெற்றிபெற்ற மாணவர்களுக்கு ஈ நியூஸ் பெஸ்ட் ஊடகமும் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறது.

மாகாண சபைத் தேர்தல்களை உடனே நடத்தவும்!

0

நீண்ட காலமாக நிலுவையில் உள்ள மாகாண சபைத் தேர்தல்களை மேலும் தாமதமின்றி நடத்துமாறு பெஃப்ரல் அமைப்பு அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.

அறிக்கையொன்றை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ள, அந்த அமைப்பு இறுதியாக 2014 ஆம் ஆண்டு செப்டம்பர் 20 ஆம் திகதி ஊவா மாகாண சபைத் தேர்தல் நடைபெற்றதுடன், அதன் பின்னர் 11 வருடங்களாக எந்தவொரு மாகாணசபை தேர்தலும் நடைபெறவில்லை என சுட்டிக்காட்டியுள்ளது.

நல்லாட்சி அரசாங்கத்தில் மாகாண சபை மற்றும் தேர்தல் திருத்தச் சட்டம் ஊடாக மாகாண சபை தேர்தல் முறைமை திருத்தப்பட்டமையும், அது தொடர்பான சட்ட ஏற்பாடு மற்றும் எல்லை நிர்ணய செயற்பாடுகள் மேற்கொள்ளப்படாமையும், மாகாண சபைத் தேர்தலை தாமதப்படுத்தியுள்ளது.

தற்போதுள்ள சட்டத்தின்படி, ஒவ்வொரு ஆறு வருடங்களுக்கும் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும், எனினும், அடுத்தடுத்த அரசாங்கங்கள் தேவையான சட்ட மற்றும் நிர்வாக செயல்முறைகளை முன்னெடுக்க தவறியுள்ளன.

தற்போதைய அரசாங்கம் இந்த தேர்தல் தாமதத்துக்கு பொறுப்பல்ல என்ற போதிலும் தேர்தலை நடத்துவதிலுள்ள தடையை நீக்கி, தேர்தலை நடத்த வழிவகுப்பது அதன் பொறுப்பாகும்.

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு தேவையான சட்டத்திருத்தத்துக்காக தற்போது, இரண்டு தனிநபர் பிரேரணைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.

எனவே, விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் அது குறித்து ஆராய்ந்து, அவசியமான திருத்தங்களை மேற்கொண்டு, அடுத்த வருடத்தின் ஆரம்பத்தில் தேர்தலை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாகாண சபை முறைமை தொடர்பில் அல்லது மாகாண சபை தேர்தல் முறைமை தொடர்பில் ஏதேனும் சிக்கல் இருப்பின், அது குறித்து விரைவில் கலந்துரையாடி தீர்க்க முடியும்.

உடனடியாக தேர்தலை நடத்துவதற்காக பழைய முறைமையில் தேர்தலை நடத்த, குறுங்கால சட்டதிருத்தமொன்று பொருத்தமானது என பெஃப்ரல் அமைப்பு பரிந்துரைக்கிறது.

அத்துடன், பழைய முறைமையின் கீழ் தேர்தலை நடத்த குறுங்கால திருத்தமொன்று கொண்டுவரப்படுமாயின், பெண் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துவதற்காக, வேட்புமனுவில் 25% ஒதுக்கீட்டையும் அதில் உள்ளடக்க வேண்டும் எனவும் பெஃப்ரல் அமைப்பு கோரியுள்ளது.

முன்னாள் கடற்படைத் தளபதி கைது!

0

கைது செய்யப்பட்ட முன்னாள் கடற்படைத் தளபதி நிஷாந்த உலுகேதென்னவை எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

கடற்படை புலனாய்வு பணிப்பாளராக இருந்த காலத்தில் பொத்துஹெர பகுதியில் நடந்த ஒரு கடத்தல் தொடர்பான விசாரணை தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் இன்று (28) முன்னாள் கடற்படைத் தளபதியைக் கைது செய்தனர்.

அதன்படி, முன்னாள் கடற்படைத் தளபதி இன்று பொல்கஹவெல நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், சந்தேக நபரை 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டார்.

தாய்லாந்து, கம்போடியா இடையே முக்கிய பேச்சுவார்த்தை!

0

தாய்லாந்து மற்றும் கம்போடியா இடையே இன்று இடம்பெற்ற சமாதான பேச்சுவார்த்தைகளை தொடர்ந்து இரு நாடுகளும் நிபந்தனையற்ற போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளதாக மலேசிய பிரமர் தெரிவித்துள்ளார்.

அதன்படி, இன்று (28) நள்ளிரவு முதல் இரு நாடுகளுக்கும் இடையில் போர் நிறுத்தம் அமுலுக்கு வருகிறது. 

தாய்லாந்து மற்றும் கம்போடியா இடையேயான சமாதான பேச்சுவார்த்தைகள் மலேசியாவில் இன்று (28) நடைபெற்றன. 

மலேசியாவின் புத்ராஜயாவில் உள்ள மலேசிய பிரதமர் அன்வார் இப்ராகிமின் உத்தியோகபூர்வ இல்லத்தில், தாய்லாந்து இடைக்கால பிரதமர் பும்தம் வெச்சயாச்சை மற்றும் கம்போடிய பிரதமர் ஹுன் மனெட் ஆகியோருக்கு இடையே சமாதான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. 

இந்த பேச்சுவார்த்தையில் அமெரிக்கா மற்றும் சீனாவின் தூதர்களும் கலந்து கொண்டுள்ளனர்.

மேலும், இந்த பேச்சுவார்த்தைகளின் முடிவாக, இரு நாடுகளும் உடனடி மற்றும் நிபந்தனையற்ற போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது..

நாமல் ராஜபக்ஷவை கைது செய்ய பிடியாணை!

0

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை கைது செய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக இன்று (28) அவர் நீதிமன்றத்தில் முன்னிலையாக தவறியதன் காரணமாக பிடியாணை​ உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

எனினும், பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ நாளை (29) சீராக்கல் மனு ஊடாக நீதிமன்றத்தில் ஆஜராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகளிர் பாடசாலையொன்றில் மாணவிகளின் அட்டகாசம்!

0

தற்போது, இளைஞர்கள் போதைப்பொருளுக்கு அடிமையாகும் விகிதம் அதிகரித்து வருகின்றது. 

இந்தநிலையில், கொழும்பில் உள்ள பிரபலமான மகளிர் பாடசாலையொன்றில் பயிலும் ஐந்து மாணவிகள் போதைப்பொருளை உட்கொண்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய ஐந்து மாணவிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இதன்போது, அவர்களுக்குப் போதைப்பொருள் விற்பனை செய்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மருதானை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

9ஆம் தரத்தில் பயிலும் மாணவிகள் சிலர் போதைப்பொருளை உட்கொண்டதாகக் குறித்த பாடசாலையின் அதிபரால் வழங்கப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய ஐந்து மாணவிகளும் காவல்நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். 

காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணைகளுக்கமைய, குறித்த ஐந்து பேரில் ஒருவரே போதைப்பொருளை வழங்கியதாகத் தெரியவந்துள்ளது. 

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மருதானை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர். போதைப்பொருளினால் பல்வேறு உயிரிழப்பு சம்பவங்களும் பதிவாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

யாழ் பல்கலை வளாகத்தில் காவலாளி உயிரிழப்பு!

கிளிநொச்சி அறிவியல் நகர் யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் பாதுகாப்பு கடமையில் இருந்த காவலர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிளிநொச்சி அறிவியல் நகர் யாழ் பல்கலைக்கழக விவசாயக் பீட வளாகத்தில் பாதுகாப்பு கடமையில் இருந்த தர்மசீலன் ரகுராஜ் 34 வயதுடைய காவலர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த பாதுகாவலர் விவசாய பீடத்தின் மேல் மாடியில் இருந்து தவறி விழுந்து மரணம் ஏற்பட்டிருக்கலாம் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக கிளிநாச்சி மாவட்ட தடவியல் பொலீஸ் உத்தியோத்தர்கள் தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிபதி அவர்கள் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று பார்வையிட்டதின் பின்னர், உடல் கூற்று பரிசோதனைக்காக கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு உடல் ஒப்படைப்படவுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.