Thursday, March 26, 2026
Sponsored advertisementspot_img
Home Blog Page 37

மிருகத்தனமாக பெண்ணுக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை!

0

ஜூட் சமந்த

இரண்டு நபர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டமையால் அதிக இரத்தப்போக்கு ஏற்பட்டு மருத்துவமனையில் பெண் ஒருவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குறித்த பெண் அளித்த புகாரை தொடர்ந்து மேற்கொண்ட பரிசோதனையில் அவரது வயிற்றில் இரண்டு பாட்டில்கள் இருப்பது தெரியவந்துள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

35 வயதுடைய பெண் ஒருவர் கடந்த 9 ஆம் தேதி மாரவில ஆதார மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார், அதிக இரத்தப்போக்கு ஏற்பட்டதாக புகார் அளித்தார்.

கடந்த 1 ஆம் தேதி, தான் பணிபுரியும் உரிமையாளரின் வீட்டில் ஒரு விருந்து இருந்ததாகவும், விருந்தின் போது அதிக மதுபோதையில் இருந்த இரண்டு பேர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் அவர் மருத்துவமனைக்குத் தெரிவித்தார். மேலும், தன்னுடன் பணிபுரிந்த இரண்டு நண்பர்கள் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் அவர் கூறினார்.

மருத்துவமனை மருத்துவர்கள், நிலைமையை உறுதிப்படுத்த ஸ்கேன் எடுக்க பரிந்துரைக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.

பரிசோதனையில் பெண்ணின் வயிற்றில் இரண்டு பாட்டில்கள் இருப்பது தெரியவந்தது. இரண்டு பாட்டில்கள் எப்படி வயிற்றில் நுழைந்தன என்பதை அந்தப் பெண்ணால் விளக்க முடிந்தது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்ய மாரவில போலீசார் மேலும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பாலாவி மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பு நிறைவேற்றம்!

0

புத்தளம், பாலாவி அஷ்ரப் வீதி கொங்கிரீட் பாதையாக அபிவிருத்தி செய்யப்பட்டது.

புத்தளம் பிரதேச சபைக்குட்பட்ட பாலாவி அஸ்ரப் வீதி, சுமார் 2 மில்லியன் ரூபாய் செலவில் கொங்கிரீட் பாதையாக அபிவிருத்தி செய்யப்பட்டு மக்கள் பாவனைக்காக திறந்து விடப்பட்டுள்ளது.

இந்த வீதி அபிவிருத்திப் பணியானது, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் புத்தளம் பிரதேச சபை உறுப்பினர் M.R. சன்சைன் அவர்களின் தொடர்ச்சியான வேண்டுகோளுக்கிணங்க முன்னெடுக்கப்பட்டது.

இப்பகுதி மக்களின் போக்குவரத்து சிரமங்களைக் கருத்திற்கொண்டு, அவர் முன்வைத்த கோரிக்கையை ஏற்று, புத்தளம் பிரதேச சபையின் தலைவர் ரதிக அவர்களின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் இந்த செயற்திட்டம் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

நீண்ட காலமாக குன்றும் குழியுமாக காணப்பட்ட இப்பாதை, மழைக்காலங்களில் பொதுமக்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் பயன்படுத்துவதற்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தி வந்தது. தற்போது நவீன முறையில் கொங்கிரீட் இடப்பட்டு புனரமைக்கப்பட்டுள்ளதால், இப்பகுதி மக்களின் போக்குவரத்து நெரிசல் குறைவதோடு, சுகாதாரமான மற்றும் பாதுகாப்பான பயணச் சூழலும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமது கோரிக்கையை ஏற்று துரித கதியில் வீதியை புனரமைத்து தந்த மக்கள் பிரதிநிதிகளுக்கு அஸ்ரப் வீதி வாழ் பொதுமக்கள் தமது நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளனர்.

இதன் போது ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் புத்தளம் தொகுதி அமைப்பாளாரும், புத்தளம் மாநகர சபையின் உறுப்பினருமான ரணீஸ் பதூர்தீன் அவர்களும் கலந்து சிறபித்தமை குறிப்பிடத்தக்கது.

“ஜெட் வேகத்தில் வந்த எமன்: மாவனெல்லையில் கோர விபத்து!

0

கொழும்பு – கண்டி பிரதான வீதியின் பல்பாத பகுதியில் இன்று (09) மாலை 3.30 மணியளவில் இடம்பெற்ற சங்கிலித் தொடர் விபத்தில் லொறி உதவியாளர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

பிரேக் செயலிழந்த லொறி ஒன்று, இரண்டு பேருந்துகளை அடுத்தடுத்து மோதித் தள்ளியதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

கட்டுப்பாட்டை இழந்த லொறி, அதிவேகத்தில் சென்று முன்னால் பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்கு (இ.போ.ச) சொந்தமான பேருந்தின் பின்பக்கத்தில் பலமாக மோதியது.

அந்த வேகத்தில் இ.போ.ச பேருந்து, தனக்கு முன்னால் சென்ற தனியார் பேருந்துடன் மோதியதுடன், அருகில் இருந்த மதகில் மோதி நின்றது. எனினும், லொறி மோதிய வேகத்தில் தூக்கி வீசப்பட்ட தனியார் பேருந்து, வீதியை விட்டு விலகி அருகில் இருந்த வயலுக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் லொறியில் பயணித்த மற்றொரு நபரும், இரண்டு பேருந்துகளிலும் பயணித்த சில பயணிகளும் காயமடைந்து கேகாலை மற்றும் மாவ​னெல்லை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

“ஜெட் விமானம் போல மோதியது..” – சாரதியின் வாக்குமூலம்

விபத்துக்குள்ளான பூண்டுலோயாவிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த பேருந்தின் சாரதி இந்த அதிர்ச்சியை விவரிக்கும் போது: “நான் முன்னால் சென்ற பேருந்துக்காக வேகத்தைக் குறைத்தேன். அப்போது திடீரென பலத்த சத்தத்துடன் ஏதோ ஒன்று ‘ஜெட் விமானம்’ செல்வது போன்ற வேகத்தில் எங்களை மோதித் தள்ளியது. என்ன நடக்கிறது என்று யோசிப்பதற்குள் எல்லாம் நடந்து முடிந்துவிட்டது,” எனத் தெரிவித்தார்.

விபத்து இடம்பெற்ற போது தனியார் பேருந்தில் சுமார் 55 முதல் 60 பயணிகள் வரை இருந்துள்ளனர். நல்வாய்ப்பாகப் பலருக்குப் பாரிய காயங்கள் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

எருக்கலம்பிட்டி கிராமத்தில் பொலிஸாரின் அதிரடித் திட்டம்!

எருக்கலம்பிட்டி கிராமத்தில் போதைப்பொருள் மற்றும் குற்றச்செயல்களை ஒழிக்க பொலிஸாருடன் விசேட கலந்துரையாடல்

மன்னார், எருக்கலம்பிட்டி கிராமத்தில் அண்மைக்காலமாக அதிகரித்து வரும் போதைப்பொருள் பாவனை, சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் திருட்டுச் சம்பவங்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் மன்னார் மாவட்ட உயர் பொலிஸ் அதிகாரிகளுக்கும் பொதுமக்களுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று மொஹிதீன் பெரிய ஜும்மாஹ் பள்ளிவாசலில் இடம்பெற்ற ஜும்மாஹ் தொழுகையைத் தொடர்ந்து இடம்பெற்றது.

காட்டுப்பாவா ஜும்மா பள்ளிவாசல் தலைவரும், மன்னார் மக்கள் வங்கிக் கிளையின் முகாமையாளருமான அல்ஹாஜ் ஹக் முஹம்மது அரூஸ் அவர்களின் விசேட அழைப்பின் பேரில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், மன்னார் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், உதவி பொலிஸ் அத்தியட்சகர், குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி (Crime OIC) மற்றும் போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி (Traffic OIC) உள்ளிட்ட பல உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

கலந்துரையாடப்பட்ட முக்கிய விடயங்கள்:

  • குற்றத்தடுப்பு: கிராமத்தில் நிலவும் போதைப்பொருள் அச்சுறுத்தல், சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள் மற்றும் களவாடுதல் போன்ற விடயங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.
  • பொலிஸ் காவல் அரண் (Police Post) மேம்படுத்தல்: எருக்கலம்பிட்டி பொலிஸ் காவல் அரணுக்கு நிரந்தரமான மற்றும் தகுதியுள்ள பொறுப்பதிகாரி (OIC) ஒருவரை நியமிக்க தீர்மானிக்கப்பட்டது.
  • நிர்வாக வசதி: பொதுமக்கள் முறைப்பாடுகளை பதிவு செய்வதற்காக மன்னார் நகருக்கு செல்ல வேண்டிய அவசியமின்றி, எருக்கலம்பிட்டியிலேயே தரம் உயர்த்தப்பட்ட பொலிஸ் நிலையம் ஊடாக சேவைகளைப் பெற்றுக்கொள்ள வழிவகை செய்வது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

இந்த நிகழ்வில் இரண்டு பள்ளிவாசல் நிர்வாகத்தினர், எருக்கலம்பிட்டி ஜமாத்தினர், ஜனாஸா பவுண்டேஷன் மற்றும் ஜமியத்துல் உலமா சபை உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்துகொண்டு கிராமத்தின் பாதுகாப்பு குறித்து தமது கருத்துக்களை முன்வைத்தனர்.

இந்த ஆரோக்கியமான கலந்துரையாடலின் மூலம் எருக்கலம்பிட்டி கிராமத்தில் அமைதியான மற்றும் பாதுகாப்பான சூழலை உருவாக்க முடியும் எனப் பொதுமக்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

“வீழ்ந்த இடத்தில் வாழ்வு தொடக்கம்! குருநாகலில் வீடமைப்புப் புரட்சி.”

0

‘இலங்கையை மீண்டும் கட்டியெழுப்புதல்’ திட்டத்தின் கீழ், பேரிடரால் முழுமையாக சேதமடைந்த வீடுகளுக்கான இழப்பீட்டுத் தொகை வழங்கும் நிகழ்வு மற்றும் புதிய வீடுகள் கட்டுமானத் திட்டத்தின் தொடக்க விழா குருநாகல் மாவட்டத்தின் நிகவெரட்டிய பிரதேச செயலகத்தின் விதிக்குலிய கிராமத்தில் நடைபெற்றது.

‘இலங்கையை மீண்டும் கட்டியெழுப்புதல்’ திட்டத்தின் கீழ் மக்களின் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்ப தொடங்கப்பட்ட முக்கிய திட்டங்களில் ஒன்றாக இந்த வீடுகளை கட்டும் 5M திட்டம் கௌரவ ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக மற்றும் வடமேற்கு ஆளுநர் திஸ்ஸ வர்ணசூரிய தலைமையில் நடைபெற்றது.

குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால, விவசாயம் மற்றும் கால்நடை வளங்கள் பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன மற்றும் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், வடமேற்கு தலைமைச் செயலாளர், குருநாகல் மாவட்ட செயலாளர் ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்

2026 ஆம் ஆண்டு இலங்கை வரலாற்றில் அதிக எண்ணிக்கையிலான வீடுகள் கட்டப்படும் ஆண்டாக மாறும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

வடமேற்கு மாகாண ஆளுநர் ஊடகப் பிரிவு

உலக சந்தையில் இலங்கையின் ஆடைத் துறை இனி ‘கிங்’!

0

ஜனவரி 01 முதல் பிரித்தானியாவுக்கான இலங்கையின் ஆடை ஏற்றுமதிக்கு வரிச்சலுகையுடன் கூடிய அனுமதி தொடர்பான அறிவித்தலொன்றை பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ளது.

பிரித்தானியாவின் வளர்ச்சியடைந்துவரும் நாடுகளுக்கான வர்த்தகத் திட்டத்தின் (DCTS) சீர்திருத்தங்கள் தற்போது நடைமுறைக்கு வந்துள்ளதுடன், தாராளமயமாக்கப்பட்ட வர்த்தக விதிகள் 2026 ஜனவரி 1 முதல் அமுலுக்கு வரும் வகையில், பிரித்தானியாவுக்கான இலங்கையின் ஆடை ஏற்றுமதிக்கு வரிச்சலுகையுடன் கூடிய அனுமதி தொடர்பான அறிவித்தலொன்றை பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயம் நேற்று (08) வெளியிட்டுள்ளது.

அதன்படி, உற்பத்தியாளர்கள் தற்போது 100% வரையிலான மூலப்பொருட்களை உலகளாவிய ரீதியில் பெற்றுக்கொள்ள முடிவதுடன், பிரித்தானியாவிற்கான பூச்சிய வரிச் சலுகையையும் (Zero Tariffs) தொடர்ந்து பேண முடியும் என்றும், புதிய ஏற்பாடுகளின் கீழ் இலங்கையிலிருந்து பிரித்தானியாவுக்கான ஆடை ஏற்றுமதி கணிசமாக அதிகரிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

தாராளமயமாக்கப்பட்ட வர்த்தக விதிகளின் கீழ், இலங்கை ஆடை உற்பத்தியாளர்கள் பிரித்தானிய சந்தைகளில் முன்னெப்பொழுதும் இல்லாத வகையிலான அணுகலைப் பெறுகின்றனர். இந்த மாற்றங்கள், உற்பத்தியாளர்கள் ஆடைகளுக்கான மூலப்பொருட்களை உலகின் எந்தவொரு நாட்டிலிருந்தும் 100% வரை பெற்றுக்கொள்வதற்கும், தேவேளை பிரித்தானிய சந்தைக்கான வரிச்சலுகை அனுமதியைத் தொடர்ந்து பேணுவதற்கும் வழிவகுக்கின்றன.

இரண்டு குறிப்பிடத்தக்க உற்பத்திச் செயல்முறைகள் இலங்கையிலேயே நடைபெற வேண்டும் என்ற முந்தைய விதியை நீக்கி, தற்பொழுது குறைவான செயலாக்கத் தேவைகளே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.

தாராளமயமாக்கப்பட்ட இந்த விதிகள், இலங்கையின் ஏனைய அனைத்து ஏற்றுமதிகளுக்கும் பொருந்தக்கூடிய வகையில் 18 நாடுகளைக் கொண்ட ஆசிய பிராந்தியக் கூட்டமைப்பு உருவாக்கப்படுவதையும் உள்ளடக்கியுள்ளன.

இது இலங்கை உற்பத்தியாளர்கள் பிராந்தியக் கூட்டாண்மை நாடுகளிலிருந்து மூலப்பொருட்களைப் பெற்றுக்கொள்வதற்கும், அதேவேளையில் முன்னுரிமை வரிச் சலுகைகளைத் தொடர்ந்து பேணுவதற்கும் வழிவகுக்கின்றது என்றும் அவ்வறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“பெற்றோருக்குச் சுமையில்லை; பிள்ளைகளுக்குத் துயரில்லை!

0

பெற்றோருக்கு சுமையோ, பிள்ளைகளுக்கு துயரமோ கொடுக்காத கல்வி முறையை நாட்டில் உருவாக்குவோம் – ஜனாதிபதி

பெற்றோருக்கு சுமையையும் பிள்ளைகளுக்கு துயரத்தையும் கொடுக்காத ஒரு கல்வி முறையை நாட்டில் உருவாக்கப்போவதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.

நாட்டின் மாணவர் தலைமுறைக்கு சர்வதேசத்தை வெல்லக்கூடிய நவீன கல்வி முறை அவசியம் என்றும், கிராமிய பிள்ளைகளை வறுமைச் சுழற்சியில் இருந்து மீட்கக்கூடிய ஒரே வழி கல்வி மட்டுமே என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். பொய்ப் பிரச்சாரங்களுக்கு அடிபணியாமல், நாட்டுக்குத் தேவையான கல்வி மறுசீரமைப்பு செயல்முறையைத் தொடர்ந்து முன்னெடுத்து, மாணவர்களுக்கு சிறந்ததொரு எதிர்காலத்தை உருவாக்க நடவடிக்கை எடுப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

அநுராதபுரம் மாவட்டத்தின் ராஜாங்கனை, தலாவ, நொச்சியாகம, மகாவிலச்சிய, பதவிய, கெபிதிகொல்லாவ, மிஹிந்தலை, ரம்பேவ ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் அனர்த்தங்களினால் முழுமையாக சேதமடைந்த வீடுகளுக்கு இழப்பீடு வழங்கும் நிகழ்வு இன்று (09) ராஜாங்கனை வெவே விகாரைக்கு அருகில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இதனைத் தெரிவித்தார்.

அனர்த்தத்தின் பின்னர் மக்களின் வாழ்வாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதற்காக ஆரம்பிக்கப்பட்ட ‘Rebuilding Sri Lanka’ திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் பிரதான திட்டங்களில் ஒன்றாக இந்த ‘PROJECT 5M’ வீடமைப்புத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அனர்த்தத்தினால் வீடுகளை இழந்த, அதே இடத்தில் மீண்டும் வீடுகளை நிர்மாணிக்க அனுமதி பெற்ற குடும்பங்களுக்கு முதற்கட்டமாக இழப்பீடு வழங்கப்பட்டது.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, மக்கள் ஆணை வழங்கிய எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் அதேவேளை, அனர்த்தத்திற்குப் பிறகு இருந்த நிலையை விடவும் ஒரு சிறந்த நாட்டையும், மக்கள் வாழ்வையும் கட்டியெழுப்பும் திட்டத்தை அரசாங்கம் தற்போது வெற்றிகரமாகச் செயல்படுத்தி வருவதாகக் குறிப்பிட்டார்.

வீடுகளை நிர்மாணிக்கும் பணிகளை அடையாளப்படுத்தும் வகையில் வீடொன்றிற்கு அடிக்கல் நாட்டிய ஜனாதிபதி, அதனைத் தொடர்ந்து நடைபெற்ற பயனாளிகளுக்கு காசோலைகளை வழங்கும் நிகழ்விலும் இணைந்து கொண்டார்.

வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க, வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் சுசில் ரணசிங்க, வடமத்திய மாகாண ஆளுநர் வசந்த ஜினதாச,பிரதேச மக்கள் பிரதிநிதிகள், அநுராதபுர மாவட்டச் செயலாளர் ரஞ்சித் விமலசூரிய, பிரதேச செயலாளர்கள் உள்ளிட்ட அரச அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

காரமுனை மக்களின் காணிகள் தொடர்பில் ஹிஸ்புல்லாஹ் காட்டம்!

“மட்டக்களப்பு மாவட்டத்தின், வாகரை வடக்கு காரமுனையில் பரம்பரையாக வசித்த மக்களின் காணியை விடுவிப்பதற்கு தேவையான எந்தவிதமான நடவடிக்கைகளும் இதுவரைக்கும் வாகரை பிரதேச செயலகத்தால் மேற்கொள்ளப்படவில்லை” என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் பிரதித்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் (07) நிலையியல் கட்டளை 27இன் கீழ் 2இல் விசேட கூற்றை முன்வைத்தே இதனை அவர் தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

“மட்டக்களப்பு மாவட்டத்தின் காரமுனை, 211G வாகரை வடக்கு பிரதேச செயலகத்துக்குட்பட்ட மாங்கணி தெற்கு கிராம சேவையாளர் பிரிவில் காணப்படுகின்ற ஒரு கிராமம். இது கிட்டத்தட்ட 200 வருடம் பழமையானது. இருந்த போதிலும் உள்நாட்டிலே ஏற்பட்டு யுத்த சூழ்நிலை காரணமாக அவர்களின் பூர்வீக மண்ணை விட்டு வெளியேற்றப்பட்டார்கள். அதனால் அம்மக்களின் ஆவணங்களும் தொலைந்து விட்டன.

அவர்கள் வெளியேற்றப்பட்டபோதும் தமது சொந்த வீடுகளை, வாழ்வாதாரத்தை முற்றிலும் இழந்தார்கள். அவர்களின் வாழ்வாதாரமாக அப்போது விவசாயம், கால்நடை வளர்ப்பு, மேட்டு நிலப் பயிர் செய்கை போன்றவற்றை மேற்கொண்டு வந்தார்கள். மேலும் தமது அன்புக்குரியவர்களின் பல உயிர்களையும் இழந்தனர்.

இலங்கையில் ஏற்பட்ட ஏற்பட்டு யுத்தத்தின் பின்னர் 2009ஆம் ஆண்டளவில் தாம் பூர்வீகமாக வாழ்ந்த காரமுனை கிராமத்திலே மீண்டும் அவர்கள் வசிக்கச் சென்றார்கள்.

1956ஆம் ஆண்டு விவசாய நிலங்களுக்குக் வழங்கப்பட்ட ஒப்பந்தங்களுக்கு உறுதி வழங்க நடவடிக்கை எடுப்பதாகக் கூறி 1983 ஆம் ஆண்டு வாகரை பிரதேச செயலகத்தினால் மீள பொதுமக்களிடம் அந்த ஒப்பந்தங்கள் பெற்றுக் கொள்ளப்பட்டவுடன் அவற்றைப் பெற்றுக் கொண்ட அதிகாரி பற்றுச் சீட்டும் வழங்கப்பட்டுள்ளது.

இதுவரைக்கும் புதிதாக விவசாய நிலங்கள் ஒப்பந்தங்கள் வழங்கப்படவில்லை.
அண்ணளவாக, 700 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாயக் காணி காணப்படுகின்றது.

காரமுனை மக்கள் 2011, 2012, 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டு அண்ணளவாக 100க்கும் மேற்பட்டவர்கள் காணிக்கச்சேரிக்கு விண்ணப்பித்தும் இதுவரையும் அவர்களுக்கு காணிக்கச்சேரி நடத்தப்படவில்லை.

வாகரை பிரதேச செயலகத்தால் இதுவரைக்கும் சுமார் ஒன்பது காணிக்கச்சேரிகள் நடத்தப்பட்டு 3,450 பேருக்கு காணி அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளது.

காணி அனுமதிப்பத்திரம் இன்மையினால் பிரதேச செயலகத்தின் தத்தமது நிர்வாக ரீதியான தேவைகளை நிறைவு செய்வதற்கும், அரசு உதவிகளைப் பெறுவதற்கும் பல்வேறுபட்ட அசௌகரியங்களை பரம்பரை பரம்பரையாக எதிர்கொண்டு வாழ வேண்டிய ஒரு துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

மின்சாரத்தைப் பெற்றுக்கொள்ளவேண்டுமாயின் அதற்காக கையொப்பம் பெறுவதற்கு பல மாத காலம் பிரதேச செயலகத்துக்கு அலையவேண்டியுள்ளது. வாகரை பிரதேச செயலாளர் இம்மக்களின் காணி தொடர்பாக இதுவரை எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

யுத்தக்காலத்தில் மக்கள் வேளாண்மை பயிர்ச் செய்கைக்குட்படுத்தப்பட்ட காணி என்று அடையாளப்படுத்தி வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் காணப்படுகின்ற சுமார் 2000 ஏக்கர் காணியை விடுவிப்பதற்கு தேவையான நடவடிக்கையை பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் எடுத்தப்பட்டதாக அறிய முடிகின்றது.

ஆனால், பரம்பரையாக காலம் காலமாக யுத்தத்துக்கு முன் வசித்த, அபிவிருத்தி செய்யப்பட்ட மக்களின் காணியை விடுவிப்பதற்கு தேவையான எந்தவிதமான நடவடிக்கைகளும் இதுவரைக்கும் வாகரை பிரதேச செயலாளரால் மேற்கொள்ளப்படவில்லை.

இந்தச் சபையிலே இதுகுறித்து நான் கேள்வி எழுப்பியபோது காணி ஆணையாளர் ஊடாக ஒரு விசேட குழுவை நியமித்து காணிப் பிரச்சினைகளுக்குத் தீர்வு பெற்றுத் தருவதாக காணிப் பிரதியமைச்சர் பதிலளித்திருந்தையும் நான் நினைவு கூறுகிறேன் என பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

பேலியகொடவில் ரகசியமாக நடந்த ‘பிசினஸ்’

0

ஜூட் சமந்த

மசாஜ் பார்லர் என்ற போர்வையில் நடத்தப்பட்டு வந்த விபச்சார விடுதியை சுற்றி வளைத்த பேலியகொட போலீசார் 5 சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.

பேலியகொட, புலுகஹஹந்தியா பகுதியில் நேற்று 8 ஆம் தேதி இரவு இந்த சோதனை நடத்தப்பட்டது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில் விபச்சார விடுதியின் மேலாளரும் அடங்குவதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 25 முதல் 40 வயதுக்குட்பட்டவர்கள் என்றும், அவர்கள் வெள்ளவத்தை, கிரிமதியாவ, ஹொரண, கடவத்தை மற்றும் நீர்கொழும்பு ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

பேலியகொட போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நொறுங்கிய முச்சக்கர வண்டி.. துடிதுடித்த ஓட்டுநர்!

0

ஜூட் சமந்த

முச்சக்கர வண்டியும் டிப்பர் லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முச்சக்கர வண்டி ஓட்டுநர் உயிரிழந்ததாக ஹெட்டிபொல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

வாரியபொல – சிலாபம் வீதியில் உள்ள கிரத்தலான பகுதியில் கடந்த 8 ஆம் திகதி மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் உயிரிழந்தவர் முச்சக்கர வண்டியின் ஓட்டுநரான ஹெட்டிபொல பகுதியைச் சேர்ந்த 41 வயதுடையவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

விபத்தில் காயமடைந்த முச்சக்கர வண்டி ஓட்டுநர் மற்றும் டிப்பர் லாரி ஓட்டுநர் இருவரும் ஹெட்டிபொல மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஆபத்தான நிலையில் இருந்த முச்சக்கர வண்டி ஓட்டுநர் குளியாப்பிட்டிய போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு, அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

ஹெட்டிபொல பொலிஸாரின் போக்குவரத்துப் பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.