Thursday, February 6, 2025
Sponsored advertisementspot_img
Home Blog Page 49

முரளியின் வாழ்க்கை சரித படத்தால் வெடித்த சர்ச்சை

0
இலங்கை சமூகத்தையும், உலக மக்களையும் திரும்பி பார்க்க வைக்கும் மலையக தமிழன் என்று வசனத்தை மாற்றியமையுங்கள்.

தடை செய்யப்பட்ட வார்த்தை பிரயோகத்தை பயன்படுத்த வேண்டாம் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன், கிரிக்கெட் போட்டியாளர் முத்தையா முரளிதரனை வலியுறுத்தியுள்ளார்.

கிரிக்கெட் போட்டியாளர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை சரிதம் என்ற அடிப்படையில் வெளிவரவுள்ள திரைப்படத்தின் முன்னோட்ட காணொளியில் இடம்பெறும் சர்ச்சைக்குரிய சொற்பிரயோகம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் இந்த கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.

இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி மலையக தமிழர் மத்தியில், தடைசெய்யப்பட்ட வார்த்தையை உங்கள் திரைப்பட முன்னோட்ட காட்சியில் (ட்ரேலரில்) பயன்படுத்த வேண்டாம்.

அந்த வார்த்தையை நானே நேரடியாக தடை செய்து காட்டியுள்ளேன். கதையம்சத்துக்கு தேவை என என்னிடம் கதைவிட வேண்டாம்.

நானே ஒரு கதாசிரியர். எனக்கு இது பற்றித் தெரியும். குறிப்பிட்ட இடத்தில் “நாட்டை திரும்பி பார்க்க வைத்த மலையக தமிழன்” என்று இடுங்கள். சரியாக வரும்” என்று நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் சுட்டிக்காட்டியுள்ளார்.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அறிவிப்பு

0
2022 மற்றும் 2023 ஆம் கல்வியாண்டுக்காக 45 ஆயிரம் மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதற்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் செப்டெம்பர் 14ஆம் திகதி முதல் ஏற்றுக்கொள்ளப்படும் என அந்த ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

அது தொடர்பான விண்ணப்பம் மற்றும் அறிவுறுத்தல் கையேடுகளை அங்கீகரிக்கப்பட்ட புத்தக விற்பனை நிலையங்களில் பெற்றுக்கொள்ள முடியுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

மாறப்போகிறதா இந்திய நாட்டின் பெயர்?

0

இந்தியாவின் பெயரை பாரத் என மாற்றப்படுவதாக பல நாட்களாக பேச்சு அடிப்பட்டு வந்த நிலையில், மக்கள் இதை பெரியதாக எடுத்துக்கொள்ளாமல் கடந்து போன நிலையில் இன்று காலை இந்தியாவின் பெயரை பாரத் என ஜனாதிபதியின் அதிகாரப்பூர்வ ஜி20 கூட்டத்தின் சிறப்பு விருந்து அழைப்பிதழ்கள் இடம்பெற்று இருந்தது மக்கள் மத்தியில் பெரும் விவாதத்தை உருவாக்கியது.

இந்த செய்தி டிவிட்டரில் காட்டுத்தீ போல பரவிய நிலையில் பலர் கடுமையான கருத்துக்களை முன்வைத்த நிலையில், பலர் வழக்கம் போல் இந்த விஷயத்தையும் மீம் போட்டு கலாய்க்க துவங்கியுள்ளனர். இதனால் இந்திய டிரென்டிங்கில் பாரத் என்ற ஹேஷ்டேக் கீழ் பல மீம்கள் டிரெண்டான நிலையில் அதில் சிலவற்றை இங்கு தொகுத்துள்ளோம்.

டிவிட்டரில் பிரபல செய்தியாளரான முகமது ஜூபைர் தனது டிவிட்டரில் இந்தியா டுடே பத்திரிக்கையாளர் பாரத் பெயர் மாற்றம் குறித்த தகவல் பதிவிட்ட நிலையில் முகமது ஜூபைர், இந்தியா டுடே பத்திரிக்கை பெயரை கூட மாற்ற முடியாது பாரத் டுடே என்ற பெயர் ஏற்கனவே எடுத்துக்கொள்ளப்பட்டு உள்ளது என பெயர் மாற்றத்தில் வரும் பிரச்சனைகளை கிண்டலாக தெரிவித்தார்.

எருக்கலம்பிட்டி மண்ணுக்கு மற்றுமொரு மகுடம்

0

அல்ஹம்துலில்லாஹ்.. எருக்கலம்பிட்டி மண்ணுக்கு மற்றுமொரு மகுடம் கட்டார் நாட்டில்

மன்னார் எருக்கலம்பிட்டி முதலாம் வட்டாரத்தைச் சேர்ந்த அல்ஹாஜ் முஹம்மது இப்றாஹிம் அன்வர் (Iffath Pharmacy), ஹாஜியானி வதூதா அன்வர் (ஓய்வு பெற்ற ஆசிரியை) ஆகியோரின் இளைய புதல்வன் முஹம்மது நபார் அவர்கள் இன்று 2023-09-04 கட்டார் நாட்டின் அரசாங்கத்தினால் கெளரவிக்கப்பட்டுள்ளார்கள்.

கட்டார் நாட்டின் அரசாங்க உத்தியோகத்தில் நீண்ட காலம் சிறந்த சேவையாற்றியமைக்காக அவருக்கு இந்த கெளரவ விருது வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

இவர் Qatar Energy நிறுவனத்தில் பத்து வருடங்களுக்கும் மேலாக தனது சேவையினை வழங்கி வந்துள்ளதுடன், அவரின் சிறப்பான சேவையின் மூலமாக இந்த விருதினை பெற்றுள்ளமை பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இவர் B.Sc Agri (EUSL), M.Sc in OM (UOP) , PGD போன்ற பல கல்விசார் பட்டங்களையும் பூர்த்தி செய்திருப்பது கல்வியின் முக்கியத்துவத்தை எமது இன்றைய இளைய தலைமுறையினருக்கு ஒரு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.

இவர் எட்டிய இந்த கல்லை பாராட்டி ஊரின் பல முக்கியஸ்தர்களும் தமது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அவருக்கு எமது e-News First சார்பாக வாழ்த்துக்களை தெரிவிப்பதில் இரட்டிப்பு மகிழ்ச்சி அடைகின்றோம்.

ஹீத் ஸ்ட்ரீக் தனது 49வது வயதில் காலமானார்

0

ஜிம்பாப்வேயின் முன்னாள் கிரிக்கெட் கேப்டனும், நாட்டின் அனைத்து நேரங்களிலும் முன்னணி விக்கெட்டுகளை வீழ்த்தியவருமான ஹீத் ஸ்ட்ரீக், கல்லீரல் மற்றும் பெருங்குடல் புற்றுநோயுடன் போராடி தனது 49 வயதில் காலமானார்.

“செப்டம்பர் 3, ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில், எனது வாழ்க்கையின் மிகப் பெரிய அன்பும், என் அழகான குழந்தைகளின் தந்தையும், தனது கடைசி நாட்களை தனது குடும்பத்தினரால் சூழ விரும்பிய அவரது வீட்டிலிருந்து தேவதூதர்களுடன் அழைத்துச் செல்லப்பட்டார் என்று அவரது மனைவி நாடின் ஸ்ட்ரீக் தெரிவித்துள்ளார்.

தென்னாப்பிரிக்காவில் உள்ள ஜோகன்னஸ்பர்க் மருத்துவமனையில் மே மாதம் முதல் வாரந்தோறும் சிறப்பு சிகிச்சை பெற்று வருவதாக ESPN தெரிவித்துள்ளது.

ஒரு சிறந்த வேகப்பந்து வீச்சாளர் மற்றும் திறமையான பேட்ஸ்மேன், ஸ்ட்ரீக் 1990 களின் பிற்பகுதியிலும் 2000 களின் முற்பகுதியிலும் கிரிக்கெட்டின் பெரிய நாடுகளுக்கு எதிராக போட்டியிட்ட ஜிம்பாப்வே அணிகளில் முக்கிய உறுப்பினராக இருந்தார்.

இருப்பினும், அவரது கிரிக்கெட் வாழ்க்கை 2021 இல் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) ஊழல் எதிர்ப்பு சட்டத்தை மீறியதற்காக எட்டு ஆண்டுகள் தடை செய்யப்பட்டபோது அவமானத்தில் முடிந்தது.

பெயர் குறிப்பிடப்படாத இந்தியர் ஒருவருக்கு வீரர்களின் தகவல் மற்றும் தொடர்பு விவரங்களைத் தெரிவித்ததற்காகவும், பிட்காயினில் $35,000 உள்ளிட்ட கட்டணத்தை ஏற்றுக்கொண்டதற்காகவும் ஐசிசியால் அவருக்கு எட்டு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது.

ஸ்ட்ரீக் தனது செயல்களுக்கான பொறுப்பை ஏற்றுக்கொண்டார், ஆனால் அவர் ஒருபோதும் மேட்ச் பிக்சிங்கில் ஈடுபடவில்லை என்று கூறினார்.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் போட்டிக்கான டிக்கட் 1 லட்சமா?

0
எதிர்வரும் சனிக்கிழமை (02) கண்டி பல்லேகல மைதானத்தில் நடைபெறவுள்ள இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான ஆசிய கிண்ண போட்டிக்கான நுழைவுச் சீட்டுகளின் விலை 96,000 ரூபாயாக உயர்வடைந்துள்ளது.

பிரதான மைதானத்தின் மேல் தளத்தில் உள்ள இருக்கைக்களுக்காகவே இந்த அளவில் கட்டணம் அறவிடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

எவ்வாறாயினும் நாளை மறுதினம் (31) நடைபெறவுள்ள இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான போட்டிக்கான நுழைவுச் சீட்டு விலைகள் அவ்வளவு உயர்வாக நிர்ணயிக்கப்படவில்லை.

இலங்கை மற்றும் பங்களாதேஷ் போட்டிக்கான நுழைவுச் சீட்டின் விலை ரூ.1600, ரூ.6400 மற்றும் ரூ.11,200 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பல்லேகல மைதானத்தில் போட்டிகளை காணக்கூடிய பார்வையாளர்களின் எண்ணிக்கை 25,000 ஐ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில், 6,000 பார்வையாளர்களுக்கு மட்டுமே இருக்கை வசதி உள்ளது.

மேலும் 15,000 முதல் 16,000 பார்வையாளர்கள், இருக்கை வசதிகள் இல்லாத பிரதான ஓட்ட எண்ணிக்கை பதாதை அருகிலும், எதிரே அமைந்துள்ள புல் மைதானத்தில் போட்டிகளைப் பார்க்க முடியும்.

மேல் தளத்தில் ஆசனம் ஒன்றின் விலை 96,000 ரூபா எனவும் பிரதான விளையாட்டு மண்டபத்தில் இவ்வாறான 1000 ஆசனங்கள் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், பிரதான விளையாட்டு அரங்கின் கீழ் தளத்தில் ஒரு இருக்கையின் விலை 40,000 ரூபாவாகும், அத்தகைய இருக்கைகள் 5000 உள்ளன.

ஆசன வசதியோ அல்லது கூரை பாதுகாப்போ இல்லாமல், புல் மீது அமர்ந்து அல்லது நின்றபடி போட்டியைக் காண ஒரு நுழைவுச் சீட்டின் விலை 9,600 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போட்டிக்கான ரூ.96,000 விலையில் இருந்த 1,000 நுழைவுச் சீட்டுகளில் நேற்று (27) மாலை வரை விற்கப்பட்ட நிலையில், 58 நுழைவுச் சீட்டுகள் மட்டுமே எஞ்சியுள்ளன.

40,000 ரூபாய் விலையுள்ள 5,000 நுழைவுச் சீட்டுகளில், 1,029 நுழைவுச் சீட்டுகள் மீதமுள்ளன.

கிட்டத்தட்ட 16,000 புல் மைதான நுழைவுச் சீட்டுகளில் 11,600 மீதம் உள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் நுழைவுச் சீட்டுகளை விற்பதற்காக நியமிக்கப்பட்ட அதிகாரப்பூர்வ இணையதளம் தெரிவித்துள்ளது.

இந்த நுழைவுச் சீட்டுகள் அனைத்தும் இணையத்தள பதிவின் ஊடாக விற்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எவ்வாறாயினும், மைதானத்தின் நுழைவாயிலில் போட்டி ரசிகர்களை சோதனையிட பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் பிரதிநிதிகள் குழுவொன்று இலங்கைக்கு பிரசன்னமாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பெண் ஒருவரின் மூளையில் 3 அங்குல புழு உயிருடன்

0
உலகில் முதன்முதலாக, அவுஸ்திரேலிய பெண் ஒருவரின் மூளையில் இருந்து 8 செமீ (3 அங்குலம்) புழு உயிருடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆண்டு கென்பெராவில் அறுவை சிகிச்சையின் போது இங்கிலாந்தில் பிறந்த பெண் ஒருவரின் சேதமடைந்த முன் மடல் திசுக்களில் இருந்து “சரம் போன்ற அமைப்பு” வெளியேற்றப்பட்டது.

அதன்பின்னரே குறித்த அமைப்பு புழு என்று கண்டறியப்பட்டது.

சத்திரசிகிச்சை அரங்கில் இருந்த ஒவ்வொருவருக்கும் இது அதிர்ச்சியாக இருந்தது என்று அறுவைச் சிகிச்சை நிபுணர் சஞ்சய சேனாநாயக்க கூறியுள்ளார்.

அத்துடன் விலங்குகளிடமிருந்து மக்களுக்கு பரவும் நோய்கள் மற்றும் தொற்று நோய்களின் பெரும் ஆபத்தை இது எடுத்துக்காட்டுகிறது என்று அவர் எச்சரித்துள்ளார்.

குறித்த பெண், தான் வாழ்ந்த இடத்திற்கு அருகில் உள்ள ஏரிக்கரையில் கீரைகளை சேகரித்த போது இந்த புழு அவரிடம் தொற்றியிருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

இந்த நிலையில் வயிற்று வலி, இருமல், இரவு வியர்த்தல் மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற நோய் அறிகுறிகள் அவருக்கு ஏற்பட்டன.

அத்துடன் இது மறதியை அதிகரித்து மன அழுத்தத்தையும் ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில், நோயாளி 2021 ஜனவரி மாத பிற்பகுதியில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பின்னர் ஸ்கேன் செய்ததில் “மூளையின் வலது முன் மடலில் ஒரு வித்தியாசமான காயம்” கண்டறியப்பட்டது.

இந்த நிலையில் 2022 ஜூன் மாதத்தில் குறித்த பெண்ணுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட போதே, அவரின் நோய்க்கான காரணம் கண்டறியப்பட்டது.

இதேவேளை, குறித்த சம்பவம் மருத்துவ ரீதியாக ஒரு வரலாற்றை உருவாக்கினாலும் பாதிக்கப்பட்ட பெண் நன்றாக குணமடைந்து வருவதாக பிபிசி செய்திச் சேவை தெரிவித்துள்ளது.

உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி காட்டிக்கொடுக்கப்பட்டதா?

0

2011 ஆம் ஆண்டில் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி தோற்கவில்லை மாறாக காட்டிக் கொடுக்கப்பட்டது என்று தெரிவித்த முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே, அப்போதிருந்த தேர்வுக் குழுவின் உயர் அதிகாரியொருவரின் 2013 ஆம் ஆண்டின் சொத்து விபரங்களை ஆராய்ந்தால் அதனை உறுதிப்படுத்திக்கொள்ள முடியும் என்று தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (25) நடைபெற்ற இலங்கை கிரிக்கெட் தொடர்பான சபைஒத்திவைப்பு வேளை விவாதத்தில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்த அவர்மேலும் தெரிவிக்கையில்,

2011 ஆம் ஆண்டின் உலகக் கிண்ண போட்டியில் நாங்கள் தோல்வியடையவில்லை. காட்டிக் கொடுக்கப்பட்டுள்ளோம் என்ற நிலைப்பாட்டிலேயே நான் இப்போதும் இருக்கின்றேன். இதற்கு தேவையான சாட்சிகள் உள்ளன.

அதன்படி நாங்கள் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. 2011 காலப்பகுதியில் தேர்வுக் குழுவில் இருந்த உயர் அதிகாரியின் 2013 சொத்து விபரங்களை எடுத்துப் பார்த்தால் அவை சிக்கும்.

இதேவேளை போட்டி காட்டி கொடுப்புகள் இப்போதும் நடக்கின்றன. கடந்த காலங்களில்vகாலியில் நடந்த சம்பவங்கள் அதனை காட்டுகின்றன. இதன்படி விளையாட்டுத்துறையில் பெரும் ஊழல் மோசடிகள் உள்ளன. அது தற்போதைய எல்.பி.எல் வரையில் வந்துள்ளன” என்றார்.

இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு கொரோனா

0

ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான பயிற்சி போட்டியில் பங்குபற்றிய இலங்கை அணி வீரர்களான அவிஷ்க பெர்னாண்டோ மற்றும் குசல் ஜனித் பெரேராவுக்கு கொவிட்-19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் இலங்கை அணியின் ஏனைய வீரர்களுக்கும் கொவிட்-19 தொற்று ஏற்படும் அபாயம் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

13போட்டிகள் கொண்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் எதிர்வரும் 30ம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

அதன்படி இலங்கை அணியானது எதிர்வரும் 31ம் திகதி தனது முதலாவது போட்டியில் பங்களாதேஷ் அணியை எதிர்கொள்ளவுள்ளது.

இவர்கள் இருவரும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் ஏனைய வீரர்களுக்கு மேற்கொள்ளப்படும் பரிசோதனையில் அவர்களுக்கு தொற்று இருப்பது உறுதிசெய்யப்படும் பட்சத்தில் பங்களாதேஷ் அணியுடனான போட்டியானது இரத்து செய்யப்படும் அல்லது போட்டிகள் பிற்போடப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது

நோய் அறிகுறிகளுடன் மேலும் 7 கைதிகள் வைத்தியசாலையில்

0

இனங்காணப்படாத நோய் காரணமாக காலி சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மேலும் 3 கைதிகள் இன்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

காலி சிறைச்சாலையில் இரு கைதிகள் உயிரிழந்தமைக்கான காரணம் தெரியவந்துள்ளதாக மேலதிக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில்,  இவர்கள் இருவரின் உயிரிழப்புக்கும்  பற்றீரியா தொற்றே காரணம் என தெரியவந்துள்ளது.

நோய் அறிகுறிகளுடன் மேலும் 7 கைதிகள் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இச்சம்பவம் தொடர்பாக  அறிக்கையைப் பெறவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். காலி சிறைச்சாலையில் தற்போது 1,023 கைதிகள் உள்ளனர்.