Thursday, February 6, 2025
Sponsored advertisementspot_img
Home Blog Page 50

குப்பைகளோடு வீசப்பட்ட 8 பவுண் தங்க நகைகள்

0

யாழ் – சாவகச்சேரி நகரசபை எல்லைக்குட்பட்ட மண்டுவில் வட்டாரத்தில் வசிக்கின்ற குடியிருப்பாளர் ஒருவரினால் வீதியில் குப்பைகளோடு வீசப்பட்ட சுமார் பதினைந்து லட்சம் ரூபா பெறுமதியான 8 பவுண் தங்க நகைகள் நகராட்சி மன்ற குப்பை மேட்டிலிருந்து சுகாதாரப் பகுதியினரால் பாதுகாப்பாக மீட்கப்பட்டு உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் இன்று மதியம் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது,

சாவகச்சேரி மண்டுவில் வட்டாரத்தில் வேலுப்பிள்ளை வீதியில் வசிக்கும் குடியிருப்பாளர் ஒருவர் தனது வீட்டில் உள்ள சுமார் 8 பவுண் பெறுமதியான நகைகளை கொள்ளையர்களிடம் இருந்து பாதுகாக்கும் நோக்கில் பழைய துணி ஒன்றில் கட்டி குப்பைகள் போல வீட்டிலேயே பாதுகாத்து வந்துள்ளார்.

இந்நிலையில் அண்மையில் அவரது வீட்டை சுத்தம் செய்கின்ற பொழுது குறித்த நகைகளும் குப்பைகளோடு குப்பைகளாக கட்டப்பட்டு வீதியில் கொட்டப்பட்டிருந்தன.

இந்நிலையில் இன்றைய தினம் மண்டுவில் வட்டாரத்தில் வழமையான கழிவகற்றும் நடவடிக்கையில் சாவகச்சேரி நகராட்சி மன்ற சுகாதாரப் பகுதியினர் ஈடுபட்டிருந்தனர்.

இதன்போது குறித்த வீட்டில் முன்னால் இருந்த குப்பைகளும் சுகாதார தொழிலாளர்களால் அகற்றப்பட்டு உழவியந்திரத்தில் நகராட்சி மன்றத்திற்கு சொந்தமான குப்பைகள் தரம் பிரிக்கின்ற இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டு கொட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில் வீட்டிலிருந்த நகைகள் காணாமல் போனதையடுத்து நிலைமையை உணர்ந்த உரிமையாளர் குப்பைகளோடு நகைகளும் வீதியில் கொட்டப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் வீதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிரீவி கேமராக்களை சோதனையிட்டுள்ளார்.

அப்பொழுது இன்று காலை அப்பகுதியில் நகராட்சி மன்ற கழிவகற்றும் வாகனம் மூலம் கழிவுகள் அகற்றப்பட்டிருந்தமை அவதானித்துள்ளார்.

இதை அடுத்து உடனடியாக சாவகச்சேரி நகராட்சி மன்றத்துக்கு சென்று பிரதம நிர்வாக அதிகாரி செ.அனுசியாவிடம் நிலைமை தொடர்பாக தெரியப்படுத்தியுள்ளார்.

தேடுதல் நடவடிக்கை

குப்பையில் வீசப்பட்ட 15 லட்சம் ரூபாய் பெறுமதியான தங்க ஆபரணங்கள் - உரியவர்களிடம் ஒப்படைத்த சாவகச்சேரி சுகாதாரத் தொழிலாளி | Gold Ornaments Handed Over Health Worker

இதையடுத்து உடனடியாக செயற்பட்ட நகராட்சிமன்ற நிர்வாக அதிகாரி மற்றும் நகராட்சி மன்ற சுகாதார மேற்பார்வை உத்தியோகத்தர்களான பா.தயாகரன், மற்றும் பா.நிஷாந்தன் ஆகியோர் நகராட்சி மன்ற கழிவு சேகரிக்கும் இடத்திற்கு வெளியிலிருந்து உள்ளேயும் உள்ளே இருந்து வெளியேயும் எவரையும் அனுமதிக்காத வண்ணம் செயற்பட்டு சுகாதார தொழிலாளர்களைக் கொண்டு தேடுதலை மேற்கொண்டனர்.

இதன்போது குறித்த குடியிருப்பாளர் பழைய துணியில் கட்டி குப்பைகளோடு குப்பையாக வீதியில் வீசிய சுமார் 8 பவுண் நகைகள் குடியிருப்பாளரின் முன்னிலையிலேயே சுகாதார தொழிலாளியான சண்முகம் தமிழ்சனால் மீட்கப்பட்டு உடனடியாகவே உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டது.

சுகாதார அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை

0

எனக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி கொண்டுவந்திருக்கும் நம்பிக்கையில்லா பிரேரணையை தோற்கடிப்பதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர்கள் பலரும் ஆதரவளிக்க இணக்கம் தெரிவித்துள்ளார்கள் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தனவுக்கு கையளித்திருக்கும் நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பாக குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்த  கருத்துக்கள் 

ஐக்கிய மக்கள் சக்தியினால் சபாநாயகருக்கு கையளித்திருக்கும் நம்பிக்கையில்லா பிரேரணையை தோற்கடிப்பதற்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் எனக்கு ஆதரவளிப்பதற்கு இணக்கி இருக்கிறார்கள்.

ஏனெனில் நம்பிக்கையில்லா பிரேரணையில் தெரிவிக்கப்பட்டிருக்கும் காரணங்கள் அனைத்தும் உண்மைக்கு புரம்பானவை என்பது தற்போது விஞ்ஞான ரீதியில் ஒப்புவிக்கப்பட்டுள்ளது.

நம்பிக்கையில்லா பிரேரணைக்கு உள்வாங்கி இருக்கும் பிரதான குற்றச்சாட்டான தரமற்ற மருந்து கொண்டுவந்தமை மற்றும் மருந்து ஒவ்வாமை காரணமாக  நோயாளர்கள் மரணித்தார்கள் என்ற விடயங்கள் தற்போது சர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட விசேட வைத்திய நிபுணர்களின் பங்குபற்றலுடன் நியமிக்கப்பட்டிருக்கும் தொழிநுட்ப குழுவினால் நிராகரிக்கப்பட்டிருக்கின்றன.

அத்துடன் குறித்த குற்றச்சாட்டுக்கள் அடிப்படையற்றவை எனவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் எனக்கு அறியத்தந்தார்கள்.

அதனால் எனக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை விரைவாக விவாதித்து வாக்களிப்பதற்காக சபாநாயகரிடம் திகதி ஒன்றை பெற்றுக்கொள்ளுமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிடம் கேட்டுக்கொள்கிறேன்.

நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்று முன்வைக்கப்பட்டால் அதற்கு முன்னுரிமை வழங்குவது பாராளுமன்றத்தின் சம்பிரதாயமாகும்.

எதிர்க்கட்சித் தலைவர் அந்த சம்பிரதாயத்தை மீறி நம்பிக்கையில்லா பிரேரணையை விவாதத்துக்கு எடுத்துக்கொள்வதை காலம் கடத்தி வருகிறார்.

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் மருந்துகளில் நூற்றுக்கு 90வீதம் இந்தியாவில் இருந்தே இறக்குமதி செய்யப்படுகிறது.

அதனால் தரமற்ற மருந்து வகைகளை சுகாதார அமைச்சு இறக்குமதி செய்திருப்பதாக எதிர்க்கட்சியின் குற்றச்சாட்டு உண்மைக்கு புறம்பானது என உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது என்றார்.

பரவுது புது கொரோனா

0

உருமாற்றம் அடைந்த புதிய வகை கொரோனா கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.

சீனாவில் 2019 இறுதியில் துவங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி ஸ்தம்பிக்க வைத்தது. இதன் காரணமாக உலகளவில் 69 கோடி பேர் பாதிக்கப்பட்டனர். 69 லட்சம் பேர் உயிரிழந்தனர். பின் துவக்கத்தில் ஏற்பட்ட கொரோனாவில் இருந்து பீட்டா, காமா, டெல்டா, ஒமைக்ரான் உள்ளிட்ட பல்வேறு வகை உருமாறிய கொரோனா வைரஸ் உருவாகி உலகளவில் பாதிப்பை ஏற்படுத்தியது. 2023 முதல் உலகளவில் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்ததால் கொரோனாவுக்கு பிறப்பிக்கப்பட்ட ‘சர்வதேச சுகாதார அவசரநிலையை’ உலக சுகாதார நிறுவனம் திரும்ப பெற்றது.

இந்நிலையில் பிஏ.2.86 என்ற மரபணு மாறிய கொரோனா கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்காவின் நோய் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை மையம் (சி.டி.சி.) தெரிவித்தது.

மேலும் இது அமெரிக்கா, டென்மார்க், இஸ்ரேல் நாடுகளில் பதிவாகியுள்ளது. இதன் பாதிப்பு வீரியம் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் குறித்து கண்காணித்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.

இதை உறுதி செய்த உலக சுகாதார நிறுவனம் இது ‘கண்காணிப்பு நிலையில்’ உள்ளது. இதன் தீவிரம் குறித்து அறிய மேலும் தகவல் தேவைப்படுகிறது என தெரிவித்துள்ளது.

காதல் ஜோடியின் லீலையால் எரிந்த குருநாகல் மலை பகுதி

0

குருநாகல் எத்துகல மலையைப் பார்க்கச் சென்ற காதல் ஜோடி வீசிய தீக்குச்சியால் எத்துகல பாதுகாப்பு வனப்பகுதியின் சுமார் மூன்று ஏக்கர் நிலப்பரப்பு எரிந்து நாசமாகியுள்ளது.

 

பொலிஸாரால் கைது செய்யப்பட்ட காதர்கள் இருவரையும் எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க குருநாகல் நீதவான் நீதிமன்றம் (19) உத்தரவிட்டுள்ளது.
குருநாகல் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எத்துகல மலை உச்சியில் உள்ள புத்தர் சிலையை பார்வையிடுவதற்காக காதலர்கள் நேற்று காலை சென்றுள்ளனர்.
குறித்த இளைஞனின் சட்டைப் பையில் தீப்பெட்டி ஒன்று காணப்பட்டதையடுத்து குறித்த யுவதி, அது தொடர்பில் காதலனிடம் விசாரித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பின்னர், சிறுமி தீப்பெட்டியில் இருந்த இரண்டு தீக்குச்சிகளை கொளுத்தி, அப்பகுதியில் வீசியதால் தீப்பிடித்துள்ளது.
இதனைக் கண்ட பிரதேசவாசிகள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து, குருநாகல் மாநகரசபை ஊழியர்களின் உதவியுடன் தீ அணைக்கப்பட்டுள்ளது.
தீயினால் அழிவடைந்த பிரதேசம் 03 ஏக்கர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தீப்பரவலை தொடர்ந்து கீழ் பகுதிக்கு ஓடிய காதலர்கள் இருவரையும் பொலிஸ் அதிகாரிகள் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட காதலர்கள் 24 மற்றும் 20 வயதுடைய மாத்தளை மற்றும் மஹவ பிரதேசத்தில் சேர்ந்தவர்களாவர்.
குறித்த இளைஞர் இராணுவ வீரர் என பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட இருவரும் குருநாகல் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்

கடனை மீளப்பெற சென்றவர் உயிரிழப்பு

0
கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கடனை மீள பெற வந்த இருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு, ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மஹரகம, நாவின்ன பிரதேசத்தில் நேற்று (19) காலை இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் தலகல, கிரிவந்துடுவ பகுதியைச் சேர்ந்த 58 வயதுடையவர் எனவும், உயிரிழந்தவர் நாவின்ன பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவருக்கு கடன் வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இறந்தவர் கடன் தொகையை வசூலிப்பதற்காக மற்றொரு நபருடன் முச்சக்கர வண்டியில் கடனாளியின் வீட்டிற்கு சென்றுள்ளார்.

இருவரும் வந்து கடனாளியின் வீட்டின் மூடியிருந்த கேட்டை திறக்க முற்பட்டதுடன், அப்போது கடன் வாங்கிய வீட்டின் உரிமையாளர் கூரிய ஆயுதம் ஒன்றை கொண்டு வந்து இருவரையும் தாக்கி காயப்படுத்தியுள்ளார்.

பின்னர் காயமடைந்த இருவரும் தாங்கள் வந்த அதே முச்சக்கரவண்டியில் ஹோமாகம வைத்தியசாலைக்கு சென்றுள்ளனர்.

சந்தேகநபருக்கு வழங்கப்பட்ட கடன் தொகையை பெற்றுக் கொள்ள உயிரிழந்தவர் வந்த போதே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

கொலையை செய்த 60 வயதுடைய சந்தேக நபர் ஹோகந்தர பிரதேசத்தில் இருந்து தப்பிச் சென்ற வேளையில் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மஹரகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தற்கொலை செய்துகொண்ட பல்கலை மாணவர்

0

கிளிநொச்சி விவேகாநந்த நகர் பகுதியில் பல்கலைக்கழக மாணவர் ஓருவர் தமது வீட்டிலேயே உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

நேற்று இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காவல்துறை தெரிவித்தது.

மொரட்டுவை பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டு, கணிதப்பிரிவில் அவர் பயின்று வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தநிலையில், நீண்ட காலமாக, மன அழுத்தத்தால் பாதிப்படைந்திருந்த நிலையில், அவர் அதற்கான சிகிச்சை பெற்று வந்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

இதனால், அவர், உயிரை மாய்த்துக்கொண்டிருக்கலாம் என காவல்துறை சந்தேகித்துள்ளது.

சம்பவம் தொடர்பில், கிளிநொச்சி காவல்துறை விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது.

குறித்த மாணவன், 2020ம் ஆண்டு உயர் தரப்பரீட்சையின், கணிதப்பிரிவில் கிளிநொச்சி மாவட்டத்தில் முதலாம் இடத்தையும், தேசிய மட்டத்தில் 85ம் இடத்தினையும் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இது கோட்டாபயவின் ஆட்சி அல்ல: ரணிலின் ஆட்சி

0

திரைமறைவில் நடக்கும் ஆட்சிக் கவிழ்ப்புச் சூழ்ச்சிகள் – சதித்திட்டங்களை மக்கள் ஒருபோதும் ஆதரிக்கமாட்டார்கள் என அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

சமகால அரசியல் நிலவரம் தொடர்பில் கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “இது கோட்டாபயவின் ஆட்சி அல்ல. இது ரணிலின் ஆட்சி.

எந்தச் சதித்திட்டங்களுக்கும் இங்கு இடமில்லை. மக்களுக்காகவே நாட்டை பொறுப்பேற்றேன். அதிபர் பதவியை ஏற்றேன்.

எந்தத் தடைகள் வந்தாலும் மக்கள் பலத்துடன் அதனைத் தகர்த்தெறிந்து நாட்டை வங்குரோத்து நிலையிலிருந்து முழுமையாக மீட்டெடுப்பேன்.

நாட்டில் பொருளாதார மறுமலர்ச்சியை ஏற்படுத்துவேன். கஷ்டப்படும் மக்கள் மீண்டெழுவார்கள். மக்களின் அனைத்து பிரச்சினைகளுக்கும் அவர்களின் பிரதிநிதிகளுடன் பேசி தீர்வு காண்பேன். என தெரிவித்துள்ளார்.

மேலும், மீண்டெழுந்து வரும் நாட்டை மீண்டும் இருண்ட யுகத்துக்குள் கொண்டு செல்லத் திரைமறைவில் நடக்கும் ஆட்சிக் கவிழ்ப்புச் சூழ்ச்சிகள் தவிடுபொடியாகும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

7 குழந்தைகளை வேண்டுமென்றே கொன்ற தாதி

0

வைத்­தி­ய­சா­லை­யொன்றில் 7 சிசுக்­களை வேண்­டு­மென்றே கொலை செய்­தமை தொடர்­பான வழக்கில் பிரித்­தா­னிய தாதி ஒருவர் குற்­ற­வாளி என இங்­கி­லாந்தின் மென்­செஸ்டர் கிறவுண் நீதி­மன்றம்  நேற்­று­முன்­தினம் தீர்ப்­ப­ளித்­துள்­ளது.

33 வய­தான லூசி லெட்பி எனும் இப்பெண், 2015 ஜூன் மற்றும் ஒக்­டோபர் மாதங்­க­ளுக்கு இடையில் 5 குழந்­தை­க­ளையும் 2016 ஜூன் மாதம் மேலும் இரு குழந்­தை­க­ளையும் பல்­வேறு முறை­களில் லூசி லெட்பி கொலை செய்தார் எனவும் மேலும் 6 குழந்­தை­களை கொல்­வ­தற்­கான முயற்­சி­களில் ஈடு­பட்டார் எனவும் குற்­றச்­சாட்­டுகள் சுமத்­தப்­பட்­டி­ருந்­தன.

ஊசி மூலம் காற்றை செலுத்­தியும், பல­வந்­த­மாக பால் கொடுத்தும், இன்­சுலின் மூலம் நஞ்­சூட்­டியும் வேண்­டு­மென்றே அவர் குழந்­தை­களை கொலை செய்தார் என குற்றம் சுமத்­தப்­பட்­டி­ருந்­தது.

இங்­கி­லாந்தின் செஸ்டர் நக­ரி­லுள்ள, கவுன்டஸ் செஸ்டர் வைத்­தி­ய­சா­லையில் 2011ஆம் ஆண்டு முதல்  தாதி­யாக லூசி லெட்பி பணி­யாற்­றினார்.

2015, 2016 காலப்­ப­கு­தியில்  வழக்­குத்­துக்கு மாறான எண்­ணிக்­கையில் சிசுக்கள் உயி­ரி­ழப்­பது மற்றும் உடல்­நலக் குறைவால் பாதிக்­கப்­ப­டு­வது போன்ற சம்­ப­வங்கள் தொடர்­பாக பொலி­ஸா­ரிடம் முறைப்­பாடு செய்­யப்­பட்­டது.

2017 ஆம் ஆண்டில் பொலி­ஸா­ர் விசா­ர­ணையைத் தொடங்­கினர். மேற்­படி சம்­ப­வங்கள் இடம்­பெற்ற நாட்­களில் குறித்த வைத்­தி­ய­சாலை அறையில் தாதி லூசி லெட்பி பணியில் இருந்தமை தெரி­ய­வந்­தது.

 

2018 ஆம் ஆண்டு அவரை பொலிஸார் கைது செய்­தனர்.

கடந்த ஒக்­டோபர் மாதம் நீதி­மன்ற விசா­ர­ணைகள் ஆரம்­ப­மா­கின.

இந்­திய வம்­சா­வளி மருத்­துவர் ரவி ஜெயராம் இது தொடர்­பாக கூறு­கையில், குழந்­தை­களின் உடலில் ஒட்சின் குறையும் போது, லூசி லெட்பி, எதையும் செய்­யா­மல், குழந்­தை­களை இறக்­க­விட்டார் என்­பதை என்னால் உறு­தி­யாகச் சொல்ல முடியும்’ என்றார்.

தன்­மீ­தான குற்­றச்­சாட்­டு­களை லூசி லெட்பி நிரா­க­ரித்தார். எனினும், 7 சிசுக்­களை கொன்­றமை, 6 சிசுக்­களைக் கொல்ல முயன்­றமை சந்­தே­கத்­துக்கு இட­­மின்றி  நிரூ­பிக்­கப்­பட்­டுள்­ள­தாக நீதி­மன்றம் நேற்­று­முன்­தினம் தெரி­வித்­துள்­ளது.

நவீன பிரிட்டனின் மிக மோசமான சிறுவர் தொடர் கொலையாளி என லூசி லெட்பி வர்ணிக்கப்படுகிறார்.

லூசி லெட்பிக்கான தண்டனை நாளை திங்கட்கிழமை அறிவிக்கப்படும் என நீதி­மன்றம் தெரிவித்துள்ளது.

இம்ரான் கானை சிறையில் வைத்து கொள்ள சதி

0
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானுக்கு, ஊழல் வழக்கில் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

இதையடுத்து பஞ்சாப் மாகாணத்தில் உள்ள அட்டாக் சிறையில் அடைக்கப்பட்டார்.

அவர் தனது சிறை தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ளார்.

இந்தநிலையில், சிறையில் இம்ரான்கான் உணவில் விஷம் கலந்து கொல்லப்படலாம் என்று அவரது மனைவி புஷ்ரா பீபி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பஞ்சாப் மாகாண உள்துறை செயலாளருக்கு எழுதியுள்ள கடிதத்தில்,

எனது கணவரின் பாதுகாப்பு குறித்து கவலை அடைந்துள்ளேன். அட்டாக் சிறையில் அவருக்கு விஷம் கொடுக்கப்படலாம். எனது கணவரை எந்த நியாயமும் இன்றி அட்டாக் சிறையில் அடைத்துள்ளனர். அவரை ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறைக்கு மாற்றுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டப்படி அவரை அடியாலா சிறைக்கு மாற்ற வேண்டும்.
அவரது சமூக மற்றும் அரசியல் அந்தஸ்துக்கு ஏற்ப சிறையில் பி-கிளாஸ் வசதிகளை வழங்க வேண்டும். கடந்த காலங்களில் இம்ரான்கான் மீது இரண்டு கொலை முயற்சிகள் நடந்தன. ஆனால் இதுவரை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. அவரது உயிருக்கு இன்னும் ஆபத்து உள்ளது. அட்டாக் சிறையில் என் கணவர் விஷம் கொடுத்து கொல்லப்படலாம் என்ற அச்சம் உள்ளது.
எனவே வீட்டில் சமைத்த உணவை சிறையில் அவர் சாப்பிட அனுமதிக்க வேண்டும். அவருக்கு 48 மணி நேரத்துக்குள் அனைத்து வசதிகளும் வழங்கப்பட வேண்டும். ஆனால் 12 நாட்கள் ஆகியும் இன்னும் வசதிகள் வழங்கப்படவில்லை. சிறை விதிகளின்படி அவருக்கு தனியார் வைத்தியரிடம் பரிசோதனை செய்ய உரிமை உண்டு. அவருக்கு வசதிகள் செய்து கொடுக்காதது பற்றி விசாரணை நடத்த வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.

ரூஹுல் ஹக்கிற்கு கட்டாய விடுமுறை

0

சர்ச்சைக்குரிய பல பிரேதப் பரிசோதனைகளை மேற்கொண்டதற்காக பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ள கொழும்பு சட்ட வைத்திய அதிகாரி ரூ ஹுல் ஹக்கை கட்டாய விடுமுறையில் அனுப்புவதற்கு சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலை சிறுநீரக அறுவை சிகிச்சைக்கு பின்னர், உயிரிழந்த மூன்று வயது சிறுவனின் பிரேத பரிசோதனை மற்றும் வர்த்தகர் தினேஷ் ஷாஃப்டரின் பிரேத பரிசோதனைகளை அவர் மேற்கொண்டிருந்தார்.

இலங்கை மருத்துவ சபையினால் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில், அவர் இந்த பிரேத பரிசோதனைகளை முன்னெடுத்திருந்தாக முன்னதாக தெரிவிக்கப்பட்டது

அத்தோடு, கடந்த வருடம் டிசம்பர் மாதம், அவர் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டதாக இலங்கை மருத்துவ சபையின் தலைவர் பேராசிரியர் வஜிர திஸாநாயக்க தெரிவித்தார்.