Sponsored Advertisement
HomeLocal Newsதீர்மானம் குறித்து அதிருப்தி அடைந்த மாவை!

தீர்மானம் குறித்து அதிருப்தி அடைந்த மாவை!

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் இலங்கை தமிழரசு கட்சி ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ள நிலையில், இது தொடர்பில் தனக்கு எதுவும் தெரியாது என அக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

கட்சியின் நிலைப்பாடு தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கும் போதே இதனை கூறினார். இதன்போது கட்சியின் நிலைப்பாடு, இதுவரை தனக்கு உத்தியோகபூர்வமான அறிவிப்புகள் எதுவும் கிடைக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், இதனை தமிழரசுக் கட்சியின் உத்தியோகபூர்வமான அறிவிப்பு என்று ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் திட்டவட்டமாக அறிவித்தார்.

மேலும், இது ஒரு சிலரின் தனிப்பட்ட முடிவு எனவும் கூறியுள்ளார். இந்த கூட்டத்தில் கட்சியின் முக்கியஸ்தர்களான நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் மற்றும் நாடளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் நிர்மலநாதன் பங்கேற்கவில்லை என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

மேலும், கட்சியின் முக்கியஸ்தர்களான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் யோகேஸ்வரன் மற்றும் ஸ்ரீநேசன் ஆகியோரும் கலந்துகொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில், இலங்கை தமிழரசு கட்சி, எதிர்கட்சி தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளருமான சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளது என, இன்று வவுனியாவில் நடைபெற்ற அக்கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக, கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

அத்துடன் தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரனுக்கு ஆதரவளிப்பதில்லை எனவும் அவரை போட்டியிலிருந்து விலகுமாறு கோருவதற்கும் இதன்போது தீர்மானிக்கப்பட்டதாகவும் எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version