Saturday, September 13, 2025
Sponsored advertisementspot_img
Home Blog Page 36

கல்வி அமைச்சின் முக்கிய அறிவித்தல்!

0

2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகளை மீள் பரிசீலனை செய்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

இதன்படி இன்று (14) முதல் எதிர்வரும் ஜூலை 28 ஆம் திகதி வரை குறித்த விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில், மொத்தம் 237,026 மாணவர்கள் க.பொ.த உயர்தரத்திற்குத் தகுதி பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

துமிந்த திசாநாயக்கவுக்கு விடுதலை!

0

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்கவை கடுமையான நிபந்தனைகளுடன் பிணையில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

கொழும்பு ஹெவ்லொக் சிட்டி குடியிருப்பு வளாகத்தில் வசிக்கும் பெண்ணொருவரின் பயணப் பையில் இருந்து கண்டு பிடிக்கப்பட்ட தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி தொடர்பில், முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் மே மாதம் 23ஆம் திகதி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். 

அதன்படி, இன்று (14) துமிந்த திசாநாயக்க நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, 250,000 ரூபா ரொக்கப் பிணையிலும், தலா 5 மில்லியன் ரூபா பெறுமதியான இரு சரீரப் பிணைகளிலும் அவரை விடுவிக்குமாறு கொழும்பு பிரதான மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன உத்தரவிட்டார்.

கிளிநொச்சியில் இடம்பெற்ற முக்கிய கலந்துரையாடல்!

பெண்கள் மற்றும் சிறுவர்கள் தொடர்பாக கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும், அரச உத்தியோகத்தர்களுக்குமான கலந்துரையாடல் ஒன்று கிளிநொச்சி, முல்லைத்தீவு பிரதி பொலிஸ்மா அதிபர் ஜே.ஏ.சந்திரசேன தலைமையில் கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

குறித்த கலந்துரையாடலில், கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்கதிபர் (காணி) நளாயினி இன்பராஜ், மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் சிசிர மெத்தர தந்திரி, உதவிப்பொலிஸ் அத்தியட்சகர் சமரக்கோன், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டத்தில் பெண்கள் மற்றும் சிறுவர்கள் தொடர்பாக கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள், சிறுவர் மற்றும் பெண்கள் தொடர்பாக மாவட்ட செயலகங்கள் மற்றும் பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

குறித்த கலந்துரையாடலில் பெண்கள் மற்றும் சிறுவர்கள் தொடர்பாக சமூகத்தில் எழுந்துள்ள சவால்கள் மற்றும் பாதுகாப்புக்கள் தொடர்பாக விரிவாக அறையப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அரச ஊழியர்கள் சரமாரியாக பணி நீக்கம்!

0

அமெரிக்க அரச ஊழியர்களில் 1,300 பேரை பணி நீக்கம் செய்ய ஜனாதிபதி ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார். 

அமெரிக்க ஜனாதிபதியாக, கடந்த ஜனவரி மாதம் 2 ஆம் முறையாக டொனால்ட் ட்ரம்ப் பதவி ஏற்றது முதல் பல்வேறு நிர்வாக சீர்திருத்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். 

இந்நிலையில், அமெரிக்க வௌியுறவுத்துறையில் உள்ள 1,300 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார். 

அதன்படி, அமெரிக்காவில் உள்நாட்டு பணிகளில் ஈடுபட்டு வந்த 1,107 பணியாளர்கள், வௌிநாட்டு பணிகளை மேற்கொண்டு வந்த 246 பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், நிர்வாக மறுசீரமைப்பின் ஒரு பகுதியாகவே இவர்கள் பணி நீக்கம் செய்யப்படவுள்ளதாக அமெரிக்க செய்திகள் தெரிவிக்கின்றன.

வவுனியாவில் போலீசாருக்கு எதிராக திரண்ட மக்கள்!

0

வவுனியா கூமாங்குளம் பகுதியில் நேற்று (11) இரவு போக்குவரத்து பொலிஸார் துரத்திச்சென்றமையால் நபர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகியுள்ளதாகவும், இதனால் அப்பகுதி மக்கள் பொலிஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டமையால் அந்தப்பகுதியில் பெரும் அமைதியின்மை ஏற்பட்டது. 

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், 

நேற்று இரவு10 மணியளவில் கூமாங்குளம் மதுபான விற்பனை நிலையம் அமைந்துள்ள வீதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் பொலிஸார் வந்துள்ளனர். 

இதன்போது அவ்வீதியால் மோட்டார் சைக்கிளில் வந்துகொண்டிருந்த நபர் ஒருவரை துரத்திச்சென்றதுடன் அவரது வாகன சக்கரத்தில் (சில்லில்) தடி ஒன்றினால் தடையினை ஏற்படுத்தியதாக ஊர்மக்கள் தெரிவிக்கின்றனர். இதனால் நிலை தடுமாறி கீழே வீழ்ந்த குறித்த நபர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

இதனை அவதானித்த இளைஞர்கள் மற்றும் ஊர்மக்கள் ஆத்திரமடைந்து பொலிஸாரின் இரண்டு மோட்டார் சைக்கிள்களையும் ஒரு வாகனத்தையும் சேதப்படுத்தினர். அடாவடியான இச்செயற்பாட்டிற்கு நீதி கிடைக்கவேண்டும் என தெரிவித்ததுடன் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை நீண்டநேரமாக சிறைப்பிடித்து வைத்தனர். இதனால் குறித்த பகுதியில் குழப்பநிலை ஏற்ப்பட்டது. 

உயிரிழந்தவரின் சடலத்தை அகற்றுவதற்கு மறுப்பு தெரிவித்த இளைஞர்கள் நீதிபதி இங்கு வரவேண்டும் வந்த பின்னரே சடலத்தை அகற்ற அனுமதிப்போம் என தெரிவித்தனர். 

இதனால் பொலிஸாருக்கும் இளைஞர்களுக்கும் இடையில் கடும் வாக்குவாதம் இடம்பெற்றது. இளைஞர்களின் செயற்பாட்டினால் தடுமாறிய பொலிஸார் நிலமையை கட்டுப்படுத்த முடியாமல் திணறினர். 

இந்த நிலையில் வவுனியா சிரேஸ்டபொலிஸ் அத்தியட்சகர் சம்பவ இடத்திற்கு வருகைதந்ததுடன், இந்த மரணத்தை கொலை வழக்காக பதிவுசெய்து அதனுடன் தொடர்புடையை சந்தேகநபர்களை விசாரிப்பதாக தெரிவித்ததுடன், சடலத்தை அகற்றுவதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு தெரிவித்திருந்தார். 

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள் பொலிஸார் மீது நம்பிக்கை இல்லை நீதிபதி இங்கு வரவேண்டும் என விடாப்பிடியாக நின்றனர் . இதனால் குறித்த பகுதியில் கலவரம் ஒன்று ஏற்ப்படுவதற்கான நிலைமை ஏற்பட்டிருந்தது. 


இந்த நிலையில் திடீர் மரண விசாரணை அதிகாரி சம்பவ இடத்திற்கு வருகைதந்து மரணம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்தார். இதனையடுத்து பொதுமக்களின் கடும் எதிர்ப்பிற்கு மத்தியில் சடலம் அந்த பகுதியில் இருந்து அகற்றப்பட்டு பொலிஸாரின் வாகனத்தில் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டது. இதற்கு எதிர்ப்பினை வெளியிட்ட பொதுமக்கள் பொலிஸாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

உயிரிழந்தவர் கூமாங்குளம் பகுதியை சேர்ந்த இராமசாமி அந்தோணிப்பிள்ளை வயது 58 என்று தெரிவிக்கப்படுகின்றது. அவரது சடலத்திற்கு அருகில் பொலிஸார் ஒருவரின் பெயர் பொறிக்கப்பட்ட இலட்சனை ஒன்றும் காணப்படுகின்றது 

குறித்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெருமளவான பொலிஸார் குவிக்கப்பட்டதுடன் விசேட அதிரடிப்படையினர், கலகதடுப்பு பொலிஸாரும் வரவழைக்கப்பட்டிருந்தனர்.

மன்னாரில் இடம்பெற்ற சர்வதேச கூட்டுறவு தின விழா!

நூற்று மூன்றாவது (103) சர்வதேச கூட்டுறவு தின விழா நேற்று மன்னார், அடம்பன் பலநோக்கு கூட்டுறவு சங்க மண்டபத்தில், மன்னார் மாவட்ட கூட்டுறவு சபை தலைவர் திரு.ரினீஸ் பெர்னாண்டோ தலைமையில் கடந்த 08.07.2025 அன்று வெகு விமர்சைக இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் பிரதம அதிதியாக மாகாண கூட்டுறவு ஆணையாளர் திரு. திருலிங்கநாதன் அவர்களும், சிறப்பு அதிதியாக மன்னார் மக்கள் வங்கிக் கிளையின் முகாமையாளர் ஜனாப். ஹக் முகம்மது அரூஸ் அவர்களும் கலந்துகொண்டனர்.

கூட்டுறவு திணைக்களத்தில் 25 வருடங்கள் மகத்துவமிக்க சேவையை வழங்கிய ஊழியர்கள் கெளரவிக்கப்பட்டதுடன், நினைவுச்சின்னங்களும் வழங்கி வைக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில், சர்வதேச கூட்டுறவு தினம் பற்றியும், மன்னார் மாவட்டத்தில் இயங்கிவரும் கூட்டுறவு சங்கங்களின் செயற்பாடுகள் குறித்தும் மன்னார் மக்கள் வங்கிக் கிளையின் முகாமையாளர் ஜனாப். ஹக் முகம்மது அரூஸ் அவர்கள் சிறப்புரையாற்றியிருந்தார்.

இதேவேளை மன்னார் மக்கள் வங்கிக் கிளையின் முகாமையாளர் ஜனாப். ஹக் முகம்மது அரூஸ் அவர்களின் சேவையை பாராட்டி பொன்னாடை போர்த்தி, நினைவுச்சின்னம் வழங்கி கெளரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை ஜனாதிபதியின் பெயரையே மாற்றிய ட்ரம்ப்!

0

அமெரிக்காவுக்கு எதிராக இலங்கை தமது வரியை அதிகரிப்பதற்குத் தீர்மானித்தால், அதற்கு நிகராக தங்களின் 30 சதவீதம் என்ற புதிய வரி அதிகரிக்கப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார். 

இலங்கையிலிருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் சகல பொருட்களுக்கும் 30 சதவீத புதிய வரியை அறிவித்து, ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுக்கு நேற்று ட்ரம்ப் கடிதம் அனுப்பியுள்ளார். 

இதேவேளை குறித்த கடிதத்தில், இலங்கையின் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் பெயரை, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தற்செயலாகத் தவறாக எழுதியமை, சமூக ஊடகங்களில் அதிகமாகப் பேசப்பட்டு வருகிறது. 

இலங்கை ஏற்றுமதிகளுக்கு 30 சதவீத வரி விதிப்பை அறிவிக்கும் கடிதம், நேற்று இலங்கை உட்பட்ட 6 நாடுகளுக்கு அனுப்பப்பட்டது. 

இந்தக் கடிதத்திலேயே ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவை, டொனால்ட் ட்ரம்ப், ‘அருண’ குமார திசாநாயக்க என்று குறிப்பிட்டுள்ளார். 

2025 ஜூலை 9 திகதியிட்டு வெள்ளை மாளிகையின், அதிகாரபூர்வ கடிதத் தலைப்பில் இந்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. 

இந்த தவறைச் சுட்டிக்காட்டி, சமூக ஊடகங்களில் கருத்துக்கள் வெளியாகி வருகின்றன.

அதிகரித்தது பால் மாவின் விலை!

0

இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால் மா பொதி ஒன்றின் விலை 100 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. 

பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் இதனை தெரிவித்துள்ளது. 

அதேபோல், 01 கிலோ பால் மா பொதி ஒன்றின் விலை 250 ரூபாவால் அதிகரித்துள்ளது.

இதேவேளை குறித்த இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால் மாவின் விலை கடந்த வாரமே அதிகரித்துள்ளதாகவும், புதிய விலையில் தாம் கொள்வனவு செய்யவில்லை எனவும் விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பகிடிவதை குறித்து உயர் நீதிமன்றின் அதிரடி உத்தரவு!

0

பல்கலைக்கழகங்களில் பகிடிவதையை தடுக்க தயாரிக்கப்பட்ட வழிகாட்டுதல்களை கண்டிப்பாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவிற்கு உயர் நீதிமன்றம் இன்று (09) உத்தரவிட்டது. 

இந்த வழிகாட்டுதல்களை செயல்படுத்த தேவையான நிதி, தொழில்நுட்ப ஆதரவு மற்றும் வசதிகளை வழங்குமாறு கல்வி மற்றும் உயர்கல்வி அமைச்சருக்கும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. 

2020 ஆம் ஆண்டில் பகிடிவதை காரணமாக உடலுடன் மூளையிலும் காயங்கள் ஏற்பட்டதால் பாதிக்கப்பட்ட முதலாம் ஆண்டு மாணவரான பசிந்து ஹிருஷான் டி சில்வா தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை விசாரித்த உயர் நீதிமன்றத்தின் நீதியரசர்களான ஷிரான் குணரத்ன, பிரியந்த பெர்னாண்டோ மற்றும் சோபித ராஜகருணா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த உத்தரவுவை பிறப்பித்தது. 

இந்த உத்தரவுகளை செயல்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து விசாரிக்க ஜனவரி 14 ஆம் திகதி வழக்கை அழைக்குமாறு  உயர் நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டது.

நாகவில்லு பாடசாலையில் “க்ளீன் ஸ்கூல்” வேலைத்திட்டம்!

ஒவ்வொரு அதிபரும் தமது பாடசாலையில் Clean Sri Lanka திட்டத்தை முழு நாட்டிற்கும் முன்னுதாரணமாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும், Clean Sri Lanka என்பது நாட்டில் உள்ள அனைவரினதும் வாழ்க்கை முறையாக (lifestyle) மாற வேண்டும் என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அண்மையில் தெரிவித்தார்.

Clean Sri Lanka என்பது வெறுமனே சுத்தம் செய்வது மட்டுமல்ல. Clean Sri Lanka என்பது நாம் வாழும் சூழலை, நமது சிந்தனை முறை, அணுகுமுறைகள் மற்றும் நடத்தைகளுடன் சேர்த்து தூய்மையாக வைத்திருப்பது பற்றியதாகும் என தெரிவித்திருந்தார்.

அந்த வகையில் இன்றைய தினம் (09.07.2025) புத்தளம் மாவட்டத்தின் சகல பாடசாலைகளிலும் Clean Sri Lanka திட்டத்தை தழுவிய “க்ளீன் ஸ்கூல்” வேலைத்திட்டம் இன்று காலை 8 மணி முதல் மதியம் 1 மணிவரை நடைபெற்றது.

அந்த வகையில் புத்தளம் எருக்கலம்பிட்டி முஸ்லீம் மகா வித்தியாலயத்திலும் குறித்த “க்ளீன் ஸ்கூல்” வேலைத்திட்டம் பாடசாலை அதிபர் ஜனாப் S.M. ஹுசைமத் தலைமையில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.

பாடசாலை வளாகம் முழுமையாக துப்பரவு செய்யப்பட்டதுடன், குறிப்பாக டெங்கு நுளம்புகள் பெருகும் அபாயம் உள்ள பகுதிகள் இனம்காணப்பட்டு முற்றாக சுத்தம் செய்யப்பட்டது.

மாணவர்கள், ஆசிரியர்கள் என அனைவரும் மிகவும் மும்முரமாக குறித்த சிரமதான பணியில் ஈடுபட்டதுடன், ஆரோக்கிய வாழ்வுக்கான உணவுகள் அடங்கிய பதாதைகளும் காட்சிப்படுத்தப்பட்டன.

பாடசாலை மாணவர்கள் மத்தியில் அதிகரித்துள்ள போதை பாவனையை முற்றாக கட்டுப்படுத்தும் நோக்குடனும், ஆரோக்கியமான வாழ்வுக்கு, சிறந்த உணவு பழக்க வழக்கங்களின் முக்கியத்துவம் குறித்தும் இதன்போது மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.