Saturday, September 13, 2025
Sponsored advertisementspot_img
Home Blog Page 38

தேர்தல் ஆணைக்குழுவின் சேவைகள் இடைநிறுத்தம்!

0

தேர்தல் ஆணைக்குழுவின் சேவைகள் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளன. 

இன்று (07) முதல் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக, ஆணைக்குழுவின் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக தேர்தல் ஆணைக்குழு வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

அதன்படி, வாக்காளர் பதிவு தகவல்களைச் சரிபார்த்தல், இணையவழி பதிவு, வாக்காளர் அறிக்கைகளைப் பெறுதல் மற்றும் ஏனைய மாவட்டங்களுடனான அனைத்து இணைவழி சேவைகளும் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை குறித்து நடிகர் சத்யராஜ் ஓபன் டோக்!

0

யாழ்ப்பாணம் – செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் இருந்து பல என்புக்கூடுகள் மீட்கப்பட்டிருக்கின்றன. 

இதனைப் பார்க்கும்போது மிகவும் வேதனையாகவும், கோரமாகவும் கோபமாகவும், அதிர்ச்சியை அளிக்கக்கூடிய வகையிலும் இருக்கிறது என தென்னிந்திய பிரபல நடிகர் சு.சத்தியராஜ் தெரிவித்துள்ளார். 

மேலும் கண்டுபிடிக்கப்பட்ட அனைத்து என்புக்கூடுகளும் தமிழர்களுடையதாகத்தான் இருக்கும் என்பதை அனைவரதும் ஆணித்தரமான கூறுகின்றனர். 

ஏனெனில் அந்தப் பகுதியானது யுத்த காலப் பகுதியில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதியாக கூறப்படுகிறது. 

மேலும் அந்த மயானத்தில் கடந்த காலத்தில் உடலங்கள் எரிக்கப்பட்டனவே தவிர புதைக்கப்படுவதில்லை. 

அங்கு தாயினதும், சேயினதும், இளைஞர் – யுவதிகளதும் பெரியவர்களினதும் என்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன. சிறுவன் ஒருவன் புத்தகப்பையுடன் புதைக்கப்பட்டிருக்கின்றமை கொஞ்சம் கூட மனிதாபிமானம் அற்ற செயல். 

இந்த நிலையில் குறித்த செயல்களை செய்தவர்களிடமே நீதியை கேட்டால் அது கிடைக்காது. அதனால் சர்வதேச நீதிமன்றத்திற்கு இந்த பிரச்சினையை கொண்டு செல்ல வேண்டும். 

இந்த கொடூரமான செயலை உலக நாடுகள் அனைத்தினதும் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். 

அதற்கு தமிழர்கள் ஒன்றுபட வேண்டும் என்றும் நடிகர் சத்தியராஜ் தெரிவழத்துள்ளார்.

பொரளையில் விசேட போக்குவரத்து திட்டம்!

0

நாளை பொரளையில் விசேட போக்குவரத்து திட்டம் – பொரளை பொலிஸ் பிரிவு

கார்டினலின் குருத்துவ வாழ்க்கையின் 50வது ஆண்டு விழாவைக் குறிக்கும் வகையில், 2025.07.07 ஆம் திகதி பொரளை பொலிஸ் பிரிவில் உள்ள கொழும்பு பேராயர் மாளிகையில், பிரமுகர்கள் உட்பட ஏராளமான அழைக்கப்பட்ட விருந்தினர்களின் பங்கேற்புடன் ஒரு விசேட நிகழ்வு இடம்பெற உள்ளது.

அதன்படி, அன்றைய தினம் ஏற்படக்கூடிய போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் பொருட்டு, பொரளை பொலிஸ் பிரிவில் உள்ள வார்டு பிளேஸ், கின்சி சாலை சந்தியிலிருந்து நந்ததாச கொடகொட சந்தி வரை கனரக வாகன நுழைவு 07.07.2025 அன்று மாலை 03.00 மணி முதல் இரவு 09.00 மணி வரை கட்டுப்படுத்தப்படும் என்று பொலிஸ் கூட பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெங்கு ஆபத்தான 121 பாடசாலைகள் அடையாளம்!

0

நாடு முழுவதும் நடத்தப்பட்டு வரும் விசேட நுளம்பு கட்டுப்பாட்டு வாரத்தில் கடந்த மூன்று நாட்களில் நுளம்புகள் பெருகக்கூடிய இடங்களுடன் கூடிய 121 பாடசாலைகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. 

08 மாவட்டங்களின் அதிக ஆபத்துள்ள சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகளில் மூன்று நாட்களாக இந்த விசேட நுளம்பு ஒழிப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டதாக அதன் வைத்திய நிபுணர் அனோஜா தீரசிங்க தெரிவித்துள்ளார். 

இதன்போது 229 பாடசாலைகள் ஆய்வு செய்யப்பட்டதில், 29 பாடசாலைகளில் நுளம்பு குடமிகளுடன் கூடிய இடங்கள் அடையாளம் காணப்பட்டதாக அவர் தெரிவித்தார். 

இது மிகவும் ஆபத்தான சூழ்நிலை என்பதால், பாடசாலைகளில் இந்த சூழ்நிலையைத் தவிர்ப்பதில் அதன் அதிகாரிகளும் சம்பந்தப்பட்ட தரப்பினரும் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் வைத்திய நிபுணர் அனோஜா தீரசிங்க கூறினார். 

தேசிய நுளம்பு கட்டுப்பாட்டு வாரத்தின் ஆறாவது நாளான நேற்று (05) 19,774 வளாகங்கள் ஆய்வு செய்யப்பட்டதாக தேசிய டெங்கு ஒழுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. 

இதன்போது நுளம்புகள் இனப்பெருக்கம் செய்யக்கூடிய இடங்களாக அடையாளம் காணப்பட்ட வளாகங்களின் எண்ணிக்கை 5,085 என்றும், நுளம்பு குடமிகள் காணப்பட்ட வளாகங்களின் எண்ணிக்கை 567 என்றும் வைத்திய அனோஜா தீரசிங்க குறிப்பிட்டார்.

அமெரிக்க வெள்ளத்தில் இதுவரை 43 பேர் பலி!

0

அமெரிக்காவில், வெள்ளத்தில் சிக்கி, 15 குழந்தைகள் உட்பட 43 பேர் உயிரிழந்தனர். முகாமில் இருந்து 27 பெண்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவின், தென்- மத்திய டெக்சாஸ் மாகாணத்தின், மலைப் பகுதியில் அமைந்துள்ள கெர் கவுன்டியில் நேற்று முன்தினம் பலத்த காற்றுடன் திடீரென கனமழை கொட்டியது. இதனால் குவாடலுாப் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

குவாடலுாப் நதியில் 45 நிமிடங்களில் 26 அடி அளவுக்கு நீர்மட்டம் உயர்ந்து, கரையில் இருந்த குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது. இதில் 15 குழந்தைகள் உட்பட 43 பேர் உயிரிழந்தனர். மேலும் குவாடலுாப் ஆற்றங்கரையோரம் இருந்த கிறிஸ்துவ கோடைக்கால முகாமில் தங்கியிருந்தவர்களில், 27 பெண்கள் மாயமாகி இருப்பதாகத் தெரியவந்துள்ளது.

வெள்ளம் ஏற்பட்ட போது முகாமில் 700 பெண்கள் இருந்துள்ளனர். இறந்தவர்களில் 3 குழந்தைகள் உட்பட 8 பேர் இன்னும் அடையாளம் காணப்படவில்லை. கெர் கவுன்டியின் சராசரி ஆண்டு மழைப்பொழிவில் மூன்றில் ஒரு பங்கு மழை அதாவது, 30 செ.மீ., மழை ஒரே இரவில் பெய்துள்ளதே நிலைமை மோசமாக காரணம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஜானதிபதி ட்ரம்புக்கு எலன் மாஸ்க் வைத்த ஆப்பு!

0

‘அமெரிக்கா கட்சி’ என்ற பெயரில் கட்சி தொடங்கியுள்ள தொழிலதிபர் எலான் மஸ்க், அமெரிக்கர்கள் உண்மையான அரசியல் மாற்றத்தை விரும்புகிறார்கள் என தெரிவித்துள்ளார்.

தேசிய அளவில் பரவலான வேட்பாளர்களை நிறுத்துவதற்குப் பதிலாக தேர்ந்தெடுக்கப்பட்ட சில முக்கிய இடங்களில் மட்டுமே கவனம் செலுத்த உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்தக் கட்சி, 2 அல்லது 3 செனட் இடங்கள் மற்றும் 8 முதல் 10 ஐக்கிய அமெரிக்க சார்பாளர்கள் அவை மாவட்டங்களில் மாத்திரமே கவனம் செலுத்தும் என அவர் கூறினார். 

கட்சியின் நிர்வாகம், வேட்பாளர்கள், நிதி விபரங்கள் உள்ளிட்டவை இன்னும் வெளியிடப்படவில்லை எனவும், 2026 ஆம் ஆண்டு தேர்தல்களை இலக்குவைத்து இந்த கட்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

”மானியங்கள் இல்லையென்றால், மஸ்க் கடையை மூடிவிட்டு தென் ஆப்ரிக்காவுக்குத் திரும்ப வேண்டியிருக்கும். அதன் பின் ராக்கெட் ஏவ முடியாது. செயற்கைக்கோள் அல்லது மின்சார கார் உற்பத்தி இருக்காது” என டிரம்ப் கூறியிருந்தார். இந்த சூழலில் டிரம்பை எதிர்த்து எலான் மஸ்க் புதிய கட்சியை தொடங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

செம்மணியில் இருந்து வெளியாகும் மர்மங்கள்!

0

செம்மணி – சித்துபாத்தி மனிதப் புதைகுழியில் இருந்து இதுவரை 42 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் – அரியாலை சித்துபாத்தி இந்து மயான மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் 10 ஆவது நாளாக யாழ்ப்பாண நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ.ஆனந்தராஜாவின் முன்னிலையில் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது புதிதாக அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்பட்ட இடத்திலும் ஒரு மனித மண்டை ஓடு அடையாளம் காணப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் முதலாம் மற்றும் இரண்டாம் கட்ட அழ்வுகளின் போது இதுரை 45 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஹீரோ ஆகிறார் சின்ன தல ரைனா!

0

கிரிக்கெட் வீரர்கள் சினிமாவில் நடிப்பது ஒன்றும் புதிதில்லை. ஏற்கெனவே சடகோபன் ரமேஷ், ஹர்பஜன் சிங், டுவைன் பிராவோ, ஸ்ரீசாந்த், இர்பான் பதான் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இவர்கள் வரிசையில் அடுத்து வருகிறார் இந்திய கிரிக்கெட் அணி, மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரரான சுரேஷ் ரெய்னா. இவர் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமாகிறார்.

இன்னும் டைட்டில் வைக்கப்படாத இந்த படம் கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகிறது. சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். அறிமுக இயக்குனர் லோகன் இயக்குகிறார். இவர் நாயகனாக அறிமுகாகும் படத்தின் அறிவிப்பு விழா சென்னையில் நடந்தது. கிரிக்கெட் வீரர் ஷிவம் துவே சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். ஆம்ஸ்டர்டாம் நகரில் குடும்பத்துடன் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் ரெய்னா, வீடியோ கால் மூலம் நிகழ்ச்சியில் பேசினார்.

 ”சினிமா எனக்கு பிடிக்கும். கதாநாயகனாக களமிறங்குவது மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழகம் எனக்கு பிடித்த இடம். இங்கு நிறைய ஆசீர்வாதங்களையும், அற்புதங்களையும் கண்டுள்ளேன். தமிழ் படத்தில் நடிப்பது எனக்கு பெருமையும் கூட. கதை எனக்கு பிடித்திருந்ததால் உடனடியாக ஒப்புக்கொண்டேன். இனிமே தான் ஆட்டம் ஆரம்பம்” என்றார்.

தமிழ் சினிமாவில் இதற்கு முன்பு முன்னாள் கிரிக்கெட் வீரர்களான சடகோபன் ரமேஷ், ஹர்பஜன் சிங், இர்பான் பதான் போன்றோர் நடித்துள்ளனர். இவர்களில் ஹர்பஜன் சிங் 2021ல் வெளிவந்த ‘பிரண்ட்ஷிப்’ என்ற படத்தில் கதாநாயகனாக நடித்தார். ஆனால், அந்தப் படம் பெரிய கவனத்தைப் பெறவில்லை. அதற்கடுத்து அவர் திரைப்படங்களில் நடிப்பதைவிட்டு விட்டார்.

இந்திய அணியின் முன்னாள் கேப்டனான எம்எஸ் தோனி, தயாரிப்பு நிறுவனம் ஒன்றை ஆரம்பித்து முதல் படமாக தமிழ்ப் படமான ‘எல்ஜிஎம்’ என்ற படத்தைத் தயாரித்தார். 2023ல் வெளிவந்த அந்தப் படம் ஓடவில்லை. அதற்கடுத்து திரைப்படம் தயாரிப்பதை நிறுத்தி வைத்துள்ளார் தோனி.

ஹர்பஜன், தோனி ஆகியோருக்கு தமிழ் சினிமாவில் கிடைக்காத வெற்றி, சுரேஷ் ரெய்னாவுக்குக் கிடைக்கட்டும் என வாழ்த்துவோம்.

செலுத்திய VAT வரியை மீள செலுத்த நடவடிக்கை!

0

வெளிநாட்டினர் செலுத்திய வரியை திருப்பிச் செலுத்துவதற்காக, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் ஒரு கருமபீடம் ஒன்று நிறுவப்பட்டுள்ளது. 

கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி மற்றும் தொழில் அமைச்சர் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் அனில் ஜயந்தவின் ஆகியோரின் தலைமையில் திறக்கப்பட்டது. 

தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகாரசபை மற்றும் கைத்தொழில் அமைச்சு ஜனாதிபதியிடம் முன்வைத்த முன்மொழிவைத் தொடர்ந்து இது நிறுவப்பட்டுள்ளது. 

இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்குள் பொருட்களை கொள்வனவு செய்யும் போது செலுத்தும் பெறுமதி சேர் வரியை திரும்ப வழங்குவதே இதன் நோக்கமாகும். 

அதன்படி, 50,000 ரூபாவுக்கும் அதிகமான VAT வரியை செலுத்தி, 90 நாட்களுக்கு மேல் இலங்கையில் தங்கியுள்ள சுற்றுலாப் பயணிகள், இந்த கரும பீடம் மூலம் செலுத்திய VAT வரியைப் பெற முடியும். 

சுற்றுலாப் பயணிகள் இலங்கைப் பொருட்களை வாங்குவதை ஊக்குவிப்பதற்காகவும், இலங்கையில் வரி அறவிடுவதை நெறிப்படுத்துவதற்காகவும் இந்த சேவை தொடங்கப்பட்டுள்ளது.

கல்பிட்டியில் சிக்கிய கடத்தல் பொருட்கள்!

0

கற்பிட்டி, வத்தலங்குண்டு பகுதிக்கு அப்பால் உள்ள கடல் பகுதியில் இலங்கை கடற்படை நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்டு, கடற்படையின் நடவடிக்கைகளினால் கடத்தல்காரர்களால் கடலில் கைவிடப்பட்ட தொண்ணூற்றொன்று (91) கிலோகிராம் உலர்ந்த இஞ்சி (ஈரமான எடை) மற்றும் இருநூற்று முப்பத்தெட்டு (238) ஜோடி காலணிகள் கடற்படையினரால் 2025 ஜூலை 03 அன்று கைப்பற்றப்பட்டன.

கடல் வழிகள் ஊடாக கடத்தல் உட்பட சட்டவிரோத நடவடிக்கைகளை எதிர்த்து தீவைச் சுற்றியுள்ள கடல் மற்றும் கடற்க்கரைகளை உள்ளடக்கி கடற்படை வழக்கமான ரோந்து மற்றும் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றது.

அதன்படி, கற்பிட்டி, வத்தலங்குண்டு பகுதிக்கு அப்பால் உள்ள கடல் பகுதியில் வடமேற்கு கடற்படை கட்டளையின் விரைவு நடவடிக்கை படை தலைமையகத்தால் நடத்தப்பட்ட இந்த சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, குறிப்பிட்ட கடல் பகுதியில் இருந்த ஐந்து (05) சந்தேகத்திற்கிடமான பொதிகள் சோதனை செய்யப்பட்டன. கடற்படையினரால் மேற்கொள்ளபடும் நடவடிக்கையினால், சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வர முயற்சிக்கும் போது கடத்தல்காரர்களால் குறிப்பிட்ட கடல் பகுதியில் கைவிடப்பட்ட தொண்ணூற்று ஒரு (91) கிலோகிராம் (ஈரமான எடை) உலர்ந்த இஞ்சி மற்றும் இருநூற்று முப்பத்தெட்டு (238) ஜோடி காலணிகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன.

மேலும், இந்த நடவடிக்கையின் போது கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட உலர்ந்த இஞ்சி மற்றும் காலணிகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கட்டுநாயக்க சுங்கத் தடுப்பு அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டன.